உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்

உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்

உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம் ,
தொடரும் கடும் யுத்தம் ,
உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம் .


உன்னால் துடிக்கும் இதயம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் துடிக்கும் இதயம்

உன்னால் துடிக்கும் இதயம்

எழுதாத காகிதத்தில்
எழுதி வைத்த நினைவுகளை
எடுத்து படிக்கையில
ஏங்கி மனம் துடிக்குதே

புதைத்து வைத்த ஆசைகளை
புரட்டி எடுத்து பார்க்கையில
கண்ணீர் மட்டும் பரிசாச்சே
கல்லாகி மனம் போச்சே

தோகை மயில் ஆடையில-உன்
தொங்கும் கூந்தல் தெரியுமடி
பாடி குயில் போகையில – உன்
பாட்டு ஒலிக்குமடி

எனெக்கெனவே நீ ஆக்கி
எடுத்து வந்த உணவுகளோ
இன்று நினைத்தாலும் ருசிக்குதடி
இன்றும் மனம் தேடுதடி

கை பேசி இல்லா காலத்தில – உன்
கை வரைந்த கடிதங்களை
தூசி தட்டி படித்தே
தூரிகையால் வரைகிறேன்

தொலையாமல் நெஞ்சுக்குள்
தொல்லை தருகிறாய்
தொடர்பு இன்றி பிரிந்தாலும் – தினமுனை
தொட்டு தொட்டே பேசுகிறேன் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-04-2023

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி
Posted in உலக செய்திகள்

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி

பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி

வட இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ,
லூதியானாவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் இறந்தனர்
மற்றும் 11 பேர் காயமடைந்தனர் .

ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதியில் ,
தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இந்த வெடிப்புக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்

ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்

ஈரான் உளவுத்துறை தளபதி படு கொலை,
விமானங்கள் சேதம் ,தொடரும் போர் பதட்டம் ,

ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்


பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

11 வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 11 வயது பிக்கு

2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி தேரர் மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது அறைகளில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உபாந்த டி சில்வா தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் படுகொலை

பெண் ஒருவர் படுகொலை

மிஹிந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கொலையாளி பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரமடலாவ பகுதியில் நேற்று (29) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் தனது தாயாருடன் வீட்டில் தங்கியிருந்ததாகவும், தாய் அருகில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து, குறித்த பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

51 வயதான தொரமடலாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த 47 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்

உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் (Sky diving) இலங்கையில் அண்மையில் இடம்பெற்றிருந்தது..

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் இந்த சாகச விளையாட்டு நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில், உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற ஸ்கை டைவிங்

அதன்படி, இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தனர்.

கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர்.

இந்த செயற்திட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் எனவும் அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இலங்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
Posted in இலங்கை செய்திகள்

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சூடானில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட 14 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த குழுவினர் நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர்களை வரவேற்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்பில், சவுதி அரசாங்கத்தின் ஆதரவுடன், குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளனர்.

சூடானில் இருந்து 14 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சூடான் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமான சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூடானில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் இரண்டாவது குழு சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இரண்டாவது குழுவில் 6 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடான் துணை இராணுவத்திற்கும் மற்றும் சூடான் இராணுவத்துக்கும் இடையே மோதல் கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்று வருகின்றது.

பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன.

வன்முறை மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்

ரஷ்ய இராணுவம் உக்ரைனும் கிழக்கு கேர்சன் பக்மூட்
உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து கடுமையன
ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தியது .

ரஸ்யாவின் தாக்குதலில்
கேர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல எரிந்த வண்ணம் உள்ளன
,கட்டடங்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
டசின் கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து உள்ளனர் .

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்

தொடர்ந்து மூர்க்கதானமான பழி வாங்கும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .


பக்மூட் வீதியை கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பை நடத்தி ரஷ்ய அதனை கைப்பற்றுவதற்கு அதிக
தொலைவில் உள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .

தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம் ,
இஸ்ரேல் தலைநகர் அருகில் நடந்த பயங்கரம் ,அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,

வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்

அனுமதிப்பத்திரமின்றி மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சாவகச்சேரிக்கு மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு குறித்த மாடுகள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஏ9 வீதி ஊடாக மாடுகளை ஏற்றி பயணித்த கப் வாகனத்தை பளை பொலிசார் முகமாலை பகுதியில் இடை மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்போது குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி மாடுகள் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் அறுவர் கைது

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி மற்றம் உதவியாளர் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றி சென்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 மாடுகளில் ஒரு மாடு பசு என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

என் ஆசை நிறைவேறுமா ….?
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் ஆசை நிறைவேறுமா ….?

என் ஆசை நிறைவேறுமா ….?

ஈழ மண்ணில் கால் பதிக்க
இதயம் துடிக்கிறதே
இயலா நிலையால் இன்று
இதயம் கொதிக்கிறதே

நான் வாழ்ந்த வீட்டினில
நாலு நொடி உறங்கேனோ
நான் வளர்ந்த அயலுடனே
நாலு மொழி பேசேனோ

கனவுகளை நெஞ்சடக்கி
கண்ணீரில் துடிக்கிறேன்
கால் பதிக்கும் நாள் வருமா
கடவுளிடம் கேட்கிறேன்

கொள்ளை தரும் அழகுடனும்
கொஞ்சி விளையாடும் காற்றுடனும்
கொஞ்ச நேரம் விளையாட
கொஞ்சும் காலம் வருமா

நெஞ்சுக்குள் உள்ளாருடன்
நெருங்கி உறவாட
நினைவுகளை தரை இறக்கி
நிமிர்ந்து உரையாட

காலம் ஒன்று வருமா
கண்ணீர் துயர் தீருமா
கல்லறை உறங்கு முன்னே – அக்
காலம் மிளிருமா …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-04-2023

இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு

இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு

இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு,
ஈரான் ஹிஸ்புல்லாவை பழிவாங்கிய இஸ்ரேல் ,போர் பதட்டம் அதிகரிப்பு .

இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு

இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு


டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது
Posted in உலக செய்திகள்

டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது

டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது

T-90 போர் டாங்கிகளின் இயந்திரங்களை திருடியதாக ரஷ்ய
ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 2021 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில் (சுமார் £ 200,000)
மதிப்புள்ள ஏழு V-92S2 இன்ஜின்களைத் திருடியதாக கர்னல்
அலெக்சாண்டர் டெனிசோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது

தெற்கு இராணுவ மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆதரவுக்கு பொறுப்பான அதிகாரி,கடந்த மாதம் தெற்கு ரஷ்யாவில் ரோஸ்டோவ் அருகே கைது
செய்யப்பட்டார் மற்றும் “டாங்கிகளில் நிறுவப்படும்
உதிரிபாகங்களைத் திருடியதாக” குற்றம் சாட்டப்பட்டார்.

போரின் 14 மாதங்களில் ரஷ்யா கிட்டத்தட்ட 2,000
டாங்கிகளை இழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,

இந்த டாங்கிகளின் இயந்திரம் ரஷ்ய இராணுவத்தில்
சிறந்த மற்றும் சக்திவாய்ந்த இயந்திரமாக பயன் பாட்டில் உள்ளது குறிப்பிட தக்கது .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

வடகொரியாவை அழிக்க தென்கொரியாவுக்கு அணு குண்டு வழங்கும் அமெரிக்கா

வடகொரியாவை அழிக்க தென்கொரியாவுக்கு அணு குண்டு வழங்கும் அமெரிக்கா

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து
ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது .

இவ்வேளை தென்கொரியாவுடன் அமெரிக்கா புதிய ,
ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது .

அதில் வட கொரியாவை விட திறன் வாய்ந்த அணுசக்தி
,அணுகுண்டு தொழில் நுப்படங்களை வழங்கிட இணக்கம்
தெரிவிக்க பட்டுள்ளது .

இதன் மூலம் தென்கொரியாவை வைத்து வடகொரியாவை அழித்திட
அமெரிக்கா புதிய நிகழ்ச்சி நிரலின் கீழ்
திட்டங்களை நடைமுறை படுத்த படுவதை
இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

இவ்விதமான ஒப்பந்தங்கள் மேலும் கொரியாவில் பதட்டத்தையும் ,
பாதுகாப்பு தன்மையை சீர் குலைக்கும் என,
வடகொரியாவின் அதிபர் கிம்மின் சகோதரி தெரிவித்து
பர பரப்பை கிளப்பியுள்ளார்

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை

முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் மரணக் கிரியைகள் மற்றும் அந்தியோட்டிக் கிரியைகள் செய்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் ஐய்யர் கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்டுள்ளன.

இந்தச் சம்பவம், இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஐய்யர், மனைவி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த உறவினர் என மூவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, கொள்ளையர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, ஐய்யரின் மனைவியையும் வயதான உறவினரையும் கை, கால்களை கட்டி, வாயும் கட்டி வைத்துவிட்டு, ஐய்யர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஐய்யர் விழுந்துள்ளார்.

வீட்டுக்குள் நுளைந்த இரு சந்தேகநபர்களும் முகத்துக்கு துண்டுகளை கட்டி, கையில் வாள், பொல்லுகள் கொண்டுவந்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்தார்.

ஐய்யர் விழுந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த ஐய்யரின் 15 பவுன் நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் (அண்ணளவாக) கொள்ளையர்கள் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

முல்லைத்தீவில் மரணக்கிரியைகள் செய்பவர் கொலை

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மனைவி மற்றும் வயதான உறவினர் ஆகியோர் அதிகாலையில் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் அவற்றை அவிழ்த்து, வீட்டின் முற்றத்துக்கு வந்து பார்த்தபோது, ஐய்யர் நிலத்தில் குப்புற விழுந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

அச்சமடைந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாத நிலையில், வீட்டிற்கு முன்னால் உள்ள கடைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். கடைக்காரர், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் துப்பறியப்பட்டுள்ளன.

இதன்போது வீட்டிலிருந்த ஐய்யரின் மனைவி மற்றும் மனைவியின் உறவினரான ஒருவரும் பொலிஸாரின் விசாரணைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.

ஐய்யரின் உடலை, மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் முல்லைத்தீவு பொலிஸாரை அவர் பணித்துள்ளார்.

இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம், முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் வீடு எரிப்பு ரங்கா சந்தேகநபர்

ரணில் வீடு எரிப்பு ரங்கா சந்தேகநபர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தேவையான திருத்தங்களைச் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கிணங்க, யார் வேண்டுமானாலும் எழுத்துமூலமான கருத்துக்களை சமர்ப்பிக்கலாம் எனவும் விடயங்கள் குறித்து கலந்துரையாடலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பணவீக்கம் வீழ்ச்சி

இலங்கை பணவீக்கம் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சுட்டெண்ணின் படி, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 50.3 சதவீதமாக பதிவாகி இருந்தது.

மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 30.6 சதவீதமாக குறைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 37.6 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

6 இலங்கையர்கள் சூடானில் இருந்து வௌியேற்றம்

சூடான் குடியரசில் இருந்து வெளியேற்றப்பட்ட 06 இலங்கையர்களின் 2வது தொகுதி ஜித்தா கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்தது.

ஜெட்டாவில் உள்ள இலங்கையின் பதில் தூதரகம் இதனை உறுதி செய்துளளது.