இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
ஆப்கான் நாடாளும் தலிபான் துணை ஆளுநரான ,
நிசார் அகமது அஹ்மதியை ,பட்காக்ஷான் மாகாணத்தில்
வைத்து போட்டு தள்ளியது நாங்கள் தான் என ஐஎஸ்ஐஎல்
பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது .
செவ்வாய்கிழமையன்று கார் வெடிகுண்டு வெடித்ததில்,
நிசார் அஹ்மத் அஹ்மதியும் ,அவரது ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்,மேலும்
ஆறு பொதுமக்கள் காயமடைந்தனர்.
இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
ISIL பயங்கரவாதிகள் தலிபான் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர் ,, இதில் வடக்கு பால்க் மாகாண கவர்னர் மார்ச் மாதம் அவரது அலுவலகத்தில் ,நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ,பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் உள்ளக கட்டமைப்பில் பல ஓட்டைகள் உள்ளதையும் ,
சிவில் நிர்வாகாத்தை கட்டி காப்பாற்ற முடியாது, திண்றிய வண்ணம் உள்ளது .
பலமான அமைப்பாக தன்னை உருவாக படுத்தி கொண்டாலும் ,வீழ்த்த பட்ட முக்கிய மூளைகள் ,இழப்பு ,பெரும் இழப்பு என படுகிறது .
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு
ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (07) நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், 29 வயதான குறித்த ரஷ்ய பிரஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிளாஸ்டிக்கை தவிர்க்க கிராம மக்கள் உறுதிமொழி
பிளாஸ்டிக்கை தவிர்க்க கிராம மக்கள் உறுதிமொழி
பிளாஸ்டிக் பொருட்களாலும் நெகிழிப் (பொலித்தீன்) பொருட்களாலும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளைத் தவிர்க்கும் முகமாக, அப்பொருட்களைத் தமது அன்றாடப் பாவனையில் இருந்து தவிர்ந்து
கொள்வதற்கு, கிராம மக்கள் உறுதிபூண்டிருப்பதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
வாகரை, பால்சேனை கடற்கரையில் பிளாஸ்டிக் உட்பட நெகழிகளையும் இன்னும் பிற உக்காத பொருட்களையும் திண்மக் கழிவுகளையும் அகற்றி, கடற்கரையைத் துப்புரவு செய்யும் சிரமதானப் பணி செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது.
பிளாஸ்டிக்கை தவிர்க்க கிராம மக்கள் உறுதிமொழி
பால்சேனை, நாகபுரம் ஆகிய கிரமங்களின் மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடற்கரையோர சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
‘வீஎபெக்ற்’ (We Effect) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் இறுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை அன்றாட வீட்டு உபயோகத்தில் இருந்து தவிர்ப்போம் எனும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்
பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஜயவா்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.
பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் புதன்கிழமை மாலை (07) இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
உக்ரைனில் குளக்கட்டு உடைக்க பட்ட நிலையில் ,டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள ,இரண்டாயிரம் வீடுகள் ,வெள்ளத்தில் மிதக்கின்றன , இந்த பகுதியில் வசித்து வரும்,மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து ,
அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
ரஷ்யா படைகள் தொடர் முனேற்றதை தடுக்க ,
மேற்கொள்ள பட்ட ,தற்காலிக தடுப்பு யுத்தத்தால் ,மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
மக்களை காப்பாற்ற என கோரி நடத்த படும் போராட்டத்தில் ,
அதே மக்களை பணயமாக வைத்து நடத்த படும் இவ்விதமான சம்பவங்கள் ,
ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நிலைக்கு
ஏற்படுத்துச்செல்லும் என்பதாகி காலம் காண்பிக்க போகிறது .
இவ்வாறான தொடர் சம்பவங்கள் நீடித்தால் ,
அது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தும் ,
அதன் மூலம் ,மக்கள் கொந்தளிப்பு ,அல்லது அவர்கள் பாதுகாப்பான,
இடங்களை நோக்கி நகரும் நிலையை ஏற்படுத்தும் ,
அவ்விதமான செயல் நோக்குகளில் ஒன்றாக ஆய்வுக்குள் உள்ளடக்கம் பெறுகிறது .
துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்
துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக்கில் உள்ள துருக்கி ராணுவ தளம் ராக்கெட் தாக்குதலுக்கு நடத்த பட்டுள்ளது ,தாக்குதல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள துருக்கிய இராணுவம் ,அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .
குருதீஸ் போராளிகளே இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலை ,
நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குருதீஸ் போராளிகள் தாயாக பகுதிகளை ஆக்கிரமிக்கும் ,இன அழிப்பு நடவடிக்கையில் ,துருக்கி ஈடுபட்டு வருவதாக, பாதிக்க பட்ட குருதீஸ் மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்
தமது முகாம் தாக்குதலை அடுத்து ,போராளிகள் வாழ்விடங்கள்
மீது விமனா தாக்குதலை துருக்கி ஆரம்பித்துள்ளது .
குருதீஸ் தலைவர் அப்துல்லா உஜாலான் துருக்கி சிறையில் அடைக்க பட்ட பின்னர் ,அந்த அமைப்பின் போராட்டம் அமெரிக்கா ,சார்புடன் அதி வளர்ச்சி பெற்றமை,இங்கே குறிப்பிட தக்கது.
சீனா ஈரானின் புதிய ஏவுகணை கொதிக்கும் இஸ்ரேல்
சீனா ஈரானின் புதிய ஏவுகணை கொதிக்கும் இஸ்ரேல்,திசை மாறும் அரசியல் பலம் ,
அணுகுண்டு தயாரிக்கும் சவூதி ஈரான் உதவி பீதியில் இஸ்ரேல்
அணுகுண்டு தயாரிக்கும் சவூதி ஈரான் உதவி பீதியில் இஸ்ரேல்,அடித்து களைத்து போன அமேற்குலக நாடுகளும் அடிவாங்கி களைத்து போன மத்திய கிழக்கு நாடுகளும் ,மீள தாக்கும் நிலைக்கு செல்லும் களம் அமைய பெற்றுள்ளது .
இலங்கையில் உலக நாடுகளின் கழிவுகள்
இலங்கையில் உலக நாடுகளின் கழிவுகள்
இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளன . சீனா இந்தியா பங்களாதேஸ் மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை – சீன கருத்தரங்கில் கலந்து கொண்ட ருகுணு பல்கலைகழகத்தின் கலாநிதி டேர்னி பிரதிப்குமார இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையின் கடற்கரைகளில் 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பல நாடுகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் இதில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை
நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இந்த சுற்றறிக்கையின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்
புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
அத்துடன் நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எவருக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்ததாகவும், சபையில்
எதிர்க்கட்சித் தலைவர், பிரதமருக்கு சவால் விடுத்து தேர்தலொன்று நடத்தினால் 2/3 அல்லது 5/6 ஆக இருந்தாலும் தம்மால் பெருன்பான்மையை எடுத்துக் காட்டலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து, இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும், சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
பிணவறையில் உயிருடன் வந்த நபர்
பிணவறையில் உயிருடன் வந்த நபர்
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவம் 288 பேர் பலியானர்கள். உயிரிழந்தவர்களை அடையாளம் போது பல சிக்கல்கள் எழுந்தது. அதன் போது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிய அடைய செய்தது.
ரயில் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் தான், உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டன.
அந்த வகையில் சடலங்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்றன. அதன் போது உடல்களை பரிசோதிப்பதற்கு
பிணவறையில் உயிருடன் வந்த நபர்
சென்ற மீட்பு படையினரின் காலை யாரோ பிடித்துள்ளனர். அப்போது தெரிய வந்தது சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் இருந்துள்ளார் .
உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று விசாரணையில் தெரியவந்தது.
மெல்ல எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார். பின்பு இவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
வங்கிக்குள் புகுந்த நாகம் 5 மணி நேர போராட்டம்
வங்கிக்குள் புகுந்த நாகம் 5 மணி நேர போராட்டம்
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டதுடன் பொலிஸாரின்
உதவியுடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றிய சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் வங்கி பூட்டிய நிலையில் மாலை 4 மணிக்கு வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது. இதை அடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடினார்.
பின்பு வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து அங்கிருந்து பாம்பை அகற்ற பொலிஸாருடன் இணைந்து முயற்சித்தும் பயனளிக்காத நிலையில், பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்தும் அவர்களால் அதனை பிடிக்கும் முயற்சி கைகொடுக்காத போதும் இரவு 9 மணி வரை 5 மணித்தியால போராட்டத்தின் பின்னர் பாம்பை பிடித்தாக பொலிஸார் தெரிவித்தனர்
தயரான ஏவுகணை சீனா ஈரானால் பதட்டத்தில் இஸ்ரேல்
தயரான ஏவுகணை சீனா ஈரானால் பதட்டத்தில் இஸ்ரேல்துரத்த படும் மேற்கு நாடுகள்
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது! (PHOTO)
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கொழும்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி, மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற நாளை பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

இன்று பாராளுமன்றத்தில் மருதங்கேணி விவகாரம் தொடர்பில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட எம்.பி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மருதங்கேணி அழைத்து வர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

இதேவேளை, மருதங்கேணியில் கடந்த 2 ஆம் திகதி சிவில் உடையில் வந்த பொலிசார் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பிஸ்ரல் காட்டி மிரட்டியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்
ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்
ஈரான் இராணுவத்தினரால் மிக உருமறைப்பு செய்ய பட்டு ,
இரகசியமாக வங்கி வந்த ,ஏவுகணை மற்றும் ,கெமிக்கதாசிகள் விமான தயாரிப்பு ஆயுத தொழில் சாலையை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது .
சிரியா அலப்போவில் உள்ள ஈரான் இரகசிய ஆயுத தளம் முற்றாக ,
அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல், செய்மதி படஙக்ளுடன் வெளியிட்டு ,
ஈரானை சீண்டி பார்த்துள்ளது .
இஸ்ரேல் இந்த கூற்று தொடர்பாக,
ஈரான் இதுவரை எவ்வித தகவலையும் வழங்க வில்லை ..
ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்
ஈரான் குட்ஸ் படையில் உள்ள,சிரியா படைகளிற்கு ,ஏவுகணை ,
மற்றும் ட்ரான் தயாரிப்புக்களை
ஈரான் பயிற்சியளித்து ,அதனை உற்பத்தி செய்து வருகிறது .
இஸ்ரேல் எல்லையின், எல்லை அருகே உள்ள சிரியா பகுதியில் ,
இந்த ஆயுதங்களை தயாரித்து ,சிரியா மற்றும் ,
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் வழங்கி வருகிறது .
இந்த ஆயுதங்கள் யாவும் எமது நாட்டுக்கு எதிராக ,
திசை திருப்ப படும் என ,கருதும் ,இஸ்ரேல்
அவ்வாறான ஆயுத தளங்களை ,தேடி தேடி அழித்து வருவதை ,
இந்த தாக்குதல் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது .
இஸ்ரேல் ராடார்களை உடைத்தெறியும் ஈரானின் புதிய ஏவுகணை
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள் பலரும் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
சைவர்களுடைய வழிபாடுகளில் நேர்த்திக்கடன் முக்கியம் பெறுகின்றது. தங்களுக்கு நேரும் துன்பங்கள், ஆபத்துக்கள் இந்த நேர்த்திக்கடன் மூலம் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கையும் கூட.
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

நேற்றைய தினம் வற்றாப்பளை கண்ணகைத்தாயின் பொங்கல் விழாவாகும். உப்பு நீரிலே விளக்கெரியும் புதுமைகள் நிறைந்த கண்ணகைத்தாய்க்கு தமிழர்களின் வீரம் செறிந்த போராட்ட அமைப்பு வானூர்தி மூலம் பூத்தூவிய வரலாற்று பெரு நிகழ்வின் பின் நேற்று இரண்டு பெண்கள் பறவைக்காவடி எடுத்து தமது நேர்த்திக்கடனை நேர்த்தியாக நிறைவேற்றினார்கள்.
ஆயிரக்கணக்கான விசேட பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள் வேறு பணியில்
ஆயிரக்கணக்கான விசேட பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள் வேறு பணியில்
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களின் பாதுகாப்பிற்காக விசேட பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள் 5,400 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தான் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ள விடயங்களை கருத்தில் கொண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.















































