பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை இன்றைய தினம் (24) தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.

அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் , குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

தாய் , தனது குழந்தையின் சடலத்துடன் , நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து , அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து ,அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.

பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.

மனிதாபமானமின்றி , குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம்


எரியும் எதிரிகள் துறைமுகம் வெடித்த யுத்தம் ,
பல மில்லியன் இழப்பு விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,பலத்த இழப்பு ,
இரு தரப்புக்கும் இடையில் வெடித்த கடும் யுத்தம் .

ஈரான் விமானகள் தாக்குதல் எரியும் இலக்குகள் video
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video

ஈரான் விமானங்கள் தாக்குதல் எரியும் இலக்குகள் video

ஈரான் இராணுவத்தின் su 24 விமானங்கள் நடத்திய அகோர வான்வெளி தாக்குதல் ஊடாக இலக்குகள் பற்றி எரிகிறது .


எதிரிகள் தாக்குதல்கள் நடத்த முற்படும் வேளை ஈரான் நடத்திய மிரட்டும் தாக்குதல் .காணொளி பாருங்கள்


ஈரான் விமானகள் தாக்குதல் எரியும் இலக்குகள் video

https://youtu.be/c7tKeITvDJg
எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு


எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு

எரியும் விமானம் தளம் 12 விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம் மக்கள் வெளியேற்றம் , இன்றைய இலங்கை செய்திகள் |இன்றைய உலக செய்திகள் | காலை தலைப்பு |மாலை |மதியம் |இரவு தலைப்பு |எதிரி நியூஸ் |எதிரி இணையம் |Morning News | lunch News

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

மரண விசாரணையின் பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.

உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலம் திங்கட்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளது.

டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்தும், கொஸ்லாந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் முற்பகல் 9. 40 மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

மேலும் சுண்ணாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(23) நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.

ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்

ஈரான் அதிரடி நடவடிக்கை பறக்கும் விமானங்கள் வெடிக்கும் குண்டுகள்

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

புலிகளின் தலைவர் பிரபாகரனால் வடக்கு கிழக்கிலே முதலாவதாக சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் படுகொலை யாழ். முன்னாள் மேஜர் அல்பிரட் துரையப்பா இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரவிஸ்டம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூறுவரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ

ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்

ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்


ஈரான் முகாம் மீது தாக்குதல் பலர் மரணம்

https://youtu.be/TnD9xVCd0jM
யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video
Posted in சமையல் சமையல் cook

யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video

யாழ்பாணத்து கறி மிளகாய் தூள் video

யாழ்பாணத்து கடை சுவையில் மிளகாய் தூள் செய்வது எப்படி .
அதற்கு தேவையான பொருட்கள் என்ன …?

வாங்க நம்ம சமையல் கலை நிபுணர் வாசுகி அவர்கள் செஞ்சு அசத்துறாங்க .

மிக சுலபமாக செய்து அசத்துங்க மக்களே .கடை சுவையில் தரமான ,ஈஸியான மிளகாய் தூள் .

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop vis
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa

லண்டனில் வேலை விசா பெற்று மாதம் ஒன்றுக்கு எட்டு லட்சம் ரூபாய்களை சம்பாதிக்க இலக்குவன் வழி .

பல தமிழர் கடைகள் இப்பொழுது லங்கையில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைக்கின்றனர் .

அவ்வாறு அழைக்கும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடர்பான ,விபரங்கள் காணொளியில் உள்ளது பாருங்கள் .

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது.

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இலங்கையில் சீன எரிபொருள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சீன எரிபொருள்

இலங்கையில் சீன எரிபொருள்

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக வெளிப்படுத்தினார்.

அதன்படி, இரண்டு ஏற்றுமதிகளும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஆகஸ்ட் முதல் விலை சூத்திரத்தின் கீழ் அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளாதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சர்கியூலர் வீதியுள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கத்திகள் மற்றும் குண்டாந்தடிகளுடன் புகுந்தவர்கள், அங்கிருந்தவர்களை வீட்டுக்குள் சிறைப்பிடித்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அத்துடன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

இதனால், யுவதி பலியானதுடன், காயமடைந்த 9 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்குள் உள்நுழைந்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த வீடு பற்றியெறிந்துள்ளது. இதனால், வீட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாத்திமா சம்மா சப்தீர் (வயது 21 என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

எதிரி எல்லைக்குள் நுழைந்த 37 விமானங்கள் கப்பல்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எதிரி எல்லைக்குள் நுழைந்த 37 விமானங்கள் கப்பல்கள்

எதிரி எல்லைக்குள் நுழைந்த 37 விமானங்கள் கப்பல்கள்

கடும் ஏவுகணை தாக்குதல் விமானங்கள் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கடும் ஏவுகணை தாக்குதல் விமானங்கள் வீழ்த்தல்

கடும் ஏவுகணை தாக்குதல் விமானங்கள் வீழ்த்தல்