ரயில் தடம்புரள்வு
Posted in இலங்கை செய்திகள்

ரயில் தடம்புரள்வு

ரயில் தடம்புரள்வு

ரயில் தடம்புரள்வு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின ரயில் இன்று (29) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டது.

இன்று காலை 11.10 மணியளவில் இந்த ரயில் தடம் புரண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ரயிலின் இன்ஜின் பகுதி தடம் புரண்டுள்ள நிலையில், ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில்

இந்தியாவின் தூய்மையான நகரில் ரணில் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தினங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் தரவரிசைப்படி இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக கருதப்படுகிறது

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நாளுக்கு அர்ச்சுனா போக மறுத்தது ஏன்

மாவீரர் நாளுக்கு அர்ச்சுனா போக மறுத்தது ஏன்


மாவீரர் நாளுக்கு அர்ச்சுனா போக மறுத்தது ஏன் | கொதிக்கும் மக்கள் |Dr Archchuna|Mp அர்ச்சுனா

video

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி ,கடந்த தினம் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுய் வன்னி மைந்தனின் ,vanni forex live எனும் டிக் டாக் ஊடக நேரலை செய்யப்பட்டது .

இதன் பொழுது முதலாவதாக கலந்து கொண்ட இந்த சிறுமி சத்திய சில்வியா நோர்வே – எங்கிருந்தாலும் ,,,எனும் தேச பாடல் ஒன்றை பாடி அசத்தி இருந்தார் .

குழுமி இருந்த மக்கள் பாராட்டை பெற்றதுடன் மீளவும் ஒருமுறை பாடும் படி கேட்க பட்டதை அடுத்து அந்த அந்த பாடலை சில்பியா மீளவும் துணிந்து அழகுற பாடினார் .

கடல் கடந்து வருகைதந்து ,இந்த வெளிநாட்டு மண்ணில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் எமது தேசிய கனவை சுமந்து இந்த சிறுவர்கள் பயணிப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .

அந்த வகையில் நேரலைக்கு வந்து இந்த தேசிய பாடலை பாடி சென்ற அந்த அற்புக குரலுக்கு சொந்தமான சில்பியாவையம் அவரது தந்தாய் ,மாற்றும்

பாடல் பாடிய எஸ், செல்வன்,வாணி ,பிரகாஷ் ,பீகே ,எஸ்,ஜேகே தம்பதிகள் ,ஏனையவர்களுக்கும் கவிதைகள் பாடிய சுலோஜனா ,வாணி, வெற்றி மாறன், அருள்நிலா வாசன் ,முகுந்தன் ஆகிய அணைத்து உறவுகளையும் எதிரி இணையமும் வாழ்க வாழ்கவென வாழ்த்தி கொள்கிறது .

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு

சீரற்ற வானிலையால் 20 மாவட்டங்களில் பாதிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் தொடர்ந்தும் காணப்படுவதாக என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுறு ஓயா மற்றும் மகாவலி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதால் வெள்ள நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.டபிள்யூ.ஏ.சக்குரா தில்தாரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

அரசாங்கத்தின் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு ,புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாரெனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் 75 வருட உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு, கடல்சார் அலுவல்கள்,டிஜிட்டல் மயமாக்கம்,அரச துறை நவீனமயப்படுத்தல்,தொழில் கல்வி, வலுசக்தி உள்ளிட்ட துறைகளில் அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (கிளீன் ஸ்ரீலங்கா) வேலைத்திட்டத்தை பாராட்டிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகள் லலிதா கபூர் ( Lalita Kapur ) ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப் பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43682 பாதிப்பு யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 43,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிக்கையிட்டுள்ளது.

இரவு 7.30 வரையிலான நிலவரப்படி 12,970 குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.

மாவட்டத்தில் 66 பாதுகாப்பு இடைத்தங்கல் முகாம்களில் 1,634 குடும்பங்களை சேர்ந்த 5ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமைக்கு திரும்பி ஏ-9 வீதியின் போக்குவரத்து
Posted in இலங்கை செய்திகள்

வழமைக்கு திரும்பி ஏ-9 வீதியின் போக்குவரத்து

வழமைக்கு திரும்பி ஏ-9 வீதியின் போக்குவரத்து


சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது அந்த வௌ்ளநீர் வடிந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சீமானை விமர்சித்த காளியம்மாள்.. கடுப்பில் சீமான்
Posted in சீமான் பேச்சு

சீமானை விமர்சித்த காளியம்மாள்.. கடுப்பில் சீமான்

சீமானை விமர்சித்த காளியம்மாள்.. கடுப்பில் சீமான்

video

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்
Posted in இலங்கை செய்திகள்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

கொட்டும் மழையில் தயாரான மாவீரர் நாள் பிரம்மாண்ட திடல்

video

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்

யாழில் மீண்டும் தே‌சியப்பாடலுடன் ஏறிய கொடி தடை தகர்த்து உணர்வுடன் கூடிய மக்கள்

video

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள் 
Posted in இலங்கை செய்திகள்

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள் 

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள் 

தடையின்றி பல பகுதிகளிலும் பிரமாண்டமாக மாவீரர் நாள்

video

https://www.youtube.com/watch?v=W_z39IU4gf4
மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில்
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில்

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில்

மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நல்லூரில் ,இடம்பெற்ற மிக பெரும் நினைவு நாள் ,வரலாறு காணாத சிறப்பு நிகழ்வாக இது காணப்படுகிறது.

video

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
Posted in சீமான் பேச்சு

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை இடம்பெற்றுள்ளது .தமிழ் தேசிய தலைவன் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டு ,சிறப்பு மிகு எழுச்சி நிகழ்வாக இடம்பெற்றது .


சீமான் நெருப்பு பேச்சை முழுமையாக கேட்க காணொளியை பார்க்க

video

மீண்டும் பதிகின்றேன்
Posted in கவிதைகள்

மீண்டும் பதிகின்றேன்

மீண்டும் பதிகின்றேன்

தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

நீறாகிப் போன நினைவுகள்
Posted in கவிதைகள்

நீறாகிப் போன நினைவுகள்

நீறாகிப் போன நினைவுகள்

நீறாகிப் போன நினைவுகள் எல்லாம்
இன்று நட்ட மரம்போல
எழுந்து நிமிர்ந்து நிற்குமய்யா உங்கள் பெயரை சொன்னால்….

விழுந்து படுத்த
கிழடுகள் கூட இன்று
நாட்டு நடப்பென்னவென்று
தலைப்புச் செய்தியை தேடுமய்யா உங்கள் பெயரின்
நினைவுக்கு பின்னால்…..

எழுந்து ஓடமுடியாத ஒற்றைக் காலை
இழந்தவரும்
ஏதோ
ஓர்மம் கொண்டு
சாதிக்கத் துடிக்கின்றார்
நம்ப முடியவில்லை என்னால்….

பழுத்த உதிர்ந்த இவைகளுமின்று
சொல்வது என்ன
நாம் சருகாகிப் போனாலும்
மண்ணுக்கு உரமாவோம்

மீண்டும் மீண்டும்
மன்னா உமது பெயர்
சொல்லும்
கார்த்திகை மலராவோம்

சாத்தியமான சத்தியம்
என்று விடுதலை தேடி
விரைந்து ஓடும்
மேகத்தைப் போல

உலகமெங்கும்
பரந்து கிடக்குது

மேதகு புகழ்

தெளிந்த நீல
வானத்தைப் போல…..

வணக்கம் சொல்லி
வாழ்த்துகள் சொல்ல
இங்கு வார்த்தைகள்
எல்லாம் மலர்களாய்
மாறும் மாயமென்ன

கார்த்திகை
இருபத்தாறு
கடவுள் அமைத்து வைத்த
காலத்தின் மேடையில்
என்றும்
காட்சியின் நாயகன்

எழுவது இன்று என்று
எழுந்து நின்று
தொழுவது
அகிலம் எங்கும்
தமிழனின் கரம்

வாழ்ந்து பார்த்தது
எங்கள் வரம் 💐🙏
26/11/2024

அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை |வன்னி மைந்தன் டிக் டக் முடக்கம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை |வன்னி மைந்தன் டிக் டக் முடக்கம்

அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை |வன்னி மைந்தன் டிக் டக் முடக்கம்

வன்னி மைந்தன் இரண்டாவது புதிய டிக் டாக்கில் இணைய கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள் மக்களே .

இதில் அழுத்துங்க டிக் டாக் செல்ல

வீடியோ

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தமிழீழ தேசிய தலைவர் இன்று பிறந்த நாள் ,இன்று எழுபத்தாவது பிறந்த .

மண்ணையும் மக்களையும் காக்க தன்னை தந்த அற்புத தலைவன் .இன்று இல்ல பொழுதிலும் அவர் நினைவுகள் எமது நெஞ்சத்தில் ஆழ வேரோடி கிடக்கிறது .

முப்படை கட்டி தமிழ் ஆண்ட மன்னவன் ,இவன் எங்கள் தேசத்தின் தலைமகன் ,நாளை ஒரு நாளில் எங்கள் மண் ஆழ வரமாட்டானா என்ற ஏக்கத்தோடு தமிழர் தேசம் ஏங்கி கிடக்கிறது .

அத்தகை பெரும் புகழ் கொண்ட எங்கள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் இன்று அவரை வாழ்த்தி வணங்குகிறோம் .

பிரபாகரன் எங்கள் வழிகாட்டி