40 மணித்தியாலமாக எரியும் அமெரிக்கா விமான தாங்கி கப்பல் -59 பேர் பாதிப்பு – வீடியோ
Diego கடல் படை தளத்தில் தரித்து நின்ற Bonhomme Richard, என்ற கப்பல் திடீரென பற்றி எரிகிறது ,.40 மணித்தியாலமாக எரியும் அமெரிக்கா விமான தங்கி கப்பல் -59 பேர் பாதிப்பு – வீடியோ
அமெரிக்காவின் மிதக்கும் விமான தாங்கி கப்பல் ஒன்று கடந்த
நாப்பது மணித்தியாலங்காக பற்றி எரிந்த வண்ணம் உள்ளது
விமானத்தின் இரண்டாவது உள்ளடுக்கு மாடியில் பற்றி பிடித்த
தீயினை அணைக்க முடியாது கடற்படையினர் தினறிய வண்ணம் உள்ளனர் .
இதில் நச்சு வாயுக்கள் எதுவும் கசிவு ஏற்படவிலை எனவும் அவ்விதமாக ஏதுவும் இந்த கப்பலில் ஏற்படுத்த படவில்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்த கப்பலில் இவ்வேளை பணியில் இருந்து 59 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
அதிக மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் இவர்கள் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேலும் ஐந்து பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கப்பலில் இருந்து வெடி பொருட்களும் வெடித்து சிதறியுள்ளதாக எதிரி நாடுகள் சூளுரைத்துள்ளன
ஈரான் கப்பல் மீது இவ்விதமான சம்பவம் நிகழ்ந்து இரு மாதத்தில் அமெரிக்கா கப்பல் இவ்விதமான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது
இது லேசர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
கடற்படைத் தளபதி பிரதமரை சந்திப்பு
கடற்படைத் தளபதி பிரதமரை சந்திப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று (ஜூலை 13, 2020) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்
பாரம்பரிய சந்திப்பு நேற்று (ஜூலை 13, 2020) நடைபெற்றது. பிரதமர் கடற்படைத் தளபதியுடன் நல்லுறவு உரையாடி, கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலம் வாழ்த்தினார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், இந்த நிகழ்வைக் குறிக்கும்
வகையில் கடற்படைத் தளபதியும் பிரதமருக்கும் இடையே நினைவு பரிசும் பரிமாற்றப்பட்டது.

செல்லுபடியான காலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு நிவாரண காலம்
செல்லுபடியான காலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு நிவாரண காலம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது தேவையற்ற குளப்பநிலைக்கு அப்பால் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் தலையெடுப்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சந்தேகத்தின் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து
திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்தில் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் ஒன்றுகூடும் அடிப்படையில் தேவையற்ற நெருக்கடி நிலை ஏற்படுவதாக அவதானிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (13) மாத்திரம் சுமார் 3500 பேர் வெரஹர அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும் 1300 பேருக்கு மாத்திரமே நாளாந்தம் சேவைகள் வழங்கப்படுகின்றன.
வெரஹர அலுவலகத்தில் இடம்பெற்ற நெருக்கடி நிலை தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் காரணங்களைக் கோரியுள்ளார்.
வெரஹர அலுவலகத்தின் ஊடாக வானக அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கு அமைவாக நாளாந்த சேவையை
வழங்கக்கூடியளவு வரையறுக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன் பயனாளிகளான பொதுமக்களிடம் நாம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுவரையில் 2020 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன் கீழான மோட்டார் வாகன கட்டளைகள் மூலம் 2020.03.16 தொடக்கம் 2020.06.30 வரையிலான காலப்பகுதியில் செல்லுபடியான காலம்
நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக செல்லுபடியான காலம் நிறைவடையும் தினம் தொடக்கம் 06 மாதங்களுக்கு மேலதிக நிவாரண காலம் மற்றும் 2020.07.01 தொடக்கம் 2020.09.30
வரையிலான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக சாரதி
அனுமதிப்பத்திரம் நிறைவடையும் தினம் தொடக்கம் 03 மாத நிவாரண காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தேவையான வகையில் தொடர்ந்தும் இந்த காலம் நீடிக்கப்படவேண்டும் என்று அவதானிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு
போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
வாகன அனுமதிப்பத்திரத்தை 1 நாள் சேவையின் கீழ்
பெற்றுக்கொள்வதற்காக ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுர மாவட்ட அலுவலகங்களின் வசதிக்கு அமைவாக இந்த இடங்களுக்கு செல்ல முடியும்.
பொதுவான சேவையின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஏனைய அனைத்து மாவட்ட மோட்டார்
வாகன போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் வசதிகள் மற்றும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிற்றோம்.
அனைவரும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய ஒருமித்த நாடு உருவாக்கப்படும்- மகிந்த
அனைவரும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய ஒருமித்த நாடு உருவாக்கப்படும்- மகிந்த
அரச துறையை செயலற்றதாக்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்த தீர்மானங்களை மாற்றி தமது ஆட்சிக் காலத்தில் அரச துறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ, லூனாவ களப்பு வளாகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பலமான அரச துறை ஒன்று காணப்பட வேண்டியதன் மதிப்பு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் போதும் மற்றும் ஆரோக்கியமான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதுமே மக்களுக்கு புரிந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்து குறைவான வசதிகளுக்கு மத்தியில் அரச பணியாளர்கள் ஆற்றியது சாதாரணமானதொரு பணியல்ல எனத் தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் அரச துறையை மேலும் பலப்படுத்துவதாக கூறினார்.
அத்துடன், அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய, அனைத்து மதத்தவர்களும் தமது மதத்தை சுதந்திரமாக பின்பற்றக்கூடிய ஒருமித்த நாடு ஒன்றை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பௌத்தத்திற்கு முதலிடம் வழங்குவதன் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாம் அனைவரும் வெவ்வேறு இனத்தவர்கள் என்ற ரீதியிலும், வெவ்வேறு மதத்தவர்கள் என்ற ரீதியிலும், ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கான கௌரவம் மதத் தலைவர்களையும், மக்களையுமே சாரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தமது ஆட்சிக் காலத்தில் விகாரை, பள்ளிவாசல்கள், கோவில்கள் என்பவற்றின் அபிவிருத்தி இன, மத, பாகுபாடு பாராது வடக்கு, தெற்கு, கிழக்கு ,மேற்கு என பிரதேச பேதமின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதுபோன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை நினைவு கூர்ந்த பிரதமர், எதிர்காலத்தில் புதிய அரசாங்கம் ஒன்றின் ஊடாகவும் அவ் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்
காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்
காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்
மாத்தறை ஹக்மன, கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் பொலிஸாரின்
மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டி ரன்ன பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ரன்ன, கட்டகடுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பொலிஸ்
சார்ஜன்ட்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது
செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சிக்கு விஜயம்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சிக்கு விஜயம்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (13) மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடினார்.
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!
உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!
இயக்குநர்-நடிகர் சேரன் 1997-ஆம் ஆண்டில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டபோது நெகிச்சியுடன், சூப்பர் ஸ்டாரை பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான அருணாசலத்தின் வெற்றி விழா சந்திப்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
அப்போது, இயக்குநர் சேரன் மேடைக்கு அழைக்கப்பட்டு, ‘பொற்காலம்’ போன்ற ஒரு படத்தை இயக்கியதற்காக பாராட்டப்பட்டார்.
ரசிகர் ஒருவரின் இந்த ட்விட்டர் இடுகையைப் பார்த்த இயக்குனர் சேரன், “மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர்
சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே..C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற
பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்..” என நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார்.
மேலும் “அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர.. நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும்
அப்படியேதான் இருக்கிறது.. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்தபோது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என
என்னையறியாமல் என்னுள்ளம் வேண்டியது.. காரணம் அந்த மனிதத்தன்மை..” என்று சேரன் பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து போன்ற
வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். தமிழ் சினிமாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பல குடும்பச் சித்திரங்களை
கொடுத்ததில் அவருக்கு பெரிய பங்கு உண்டு. மேலும், சொல்ல மறந்த கதை, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் என
கதாநாயகனாக கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக ‘ராஜாவுக்கு செக்’ என்ற திரைப்படம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதற்கிடையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்-3′ நிகழ்ச்சியிலும் பங்குபெற்றது குறிப்பிடத்தக்க

சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை நீக்கியதற்கு சீமான் கண்டனம்!
சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை நீக்கியதற்கு சீமான் கண்டனம்!
இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு
வடிவமே! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தற்காலப்பேரிடர் சூழலிலும் தனது ஒற்றைமயமாக்கல் நடவடிக்கைகளை வீரியமாய்ச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் நீட்சியாகவே தற்போது பாடத்திட்டத்தில் கைவைத்து, இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்புத் தூண்களாக இருக்கிற சனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றைப் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது. பள்ளியில் பயிலும் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து சனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை குறித்த சிந்தனைகளையே அகற்ற முயலும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கும் பேராபத்தாகும்.
9ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயக உரிமைகள் எனும் பாடமும், 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், சாதி, சமயம், இயக்கங்கள்,
போராட்டங்கள், சனநாயகத்திற்கு எதிரான சவால்கள் உள்ளிட்டவைகளும், 11ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து
குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகளும், 12ஆம் வகுப்புப்
பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான
வெளியுறவுக்கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்நாடு கொண்டிருக்கிற பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை எனும் மகத்தானக்கோட்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதைத் தடுக்கும்வகையில் அவற்றைப்
பாடத்திட்டத்திலிருந்தே அப்புறப்படுத்தும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் ஒற்றைமயக்காலின் மற்றொரு வடிவமே! மக்களாட்சிக்கும், சனநாயகத்திற்குமே ஊறு விளைவித்து
இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பையே ஒவ்வொரு நகர்வின் மூலமாகத் தகர்க்க முயலும் பாஜக அரசின் படுபாதக
நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கெதிராக தேசிய இனங்களும், மாநிலக் கட்சிகளும், சனநாயக
ஆற்றல்களும் அணிதிரண்டு அதனை முறியடிக்க வேண்டியது தற்காலத்தின் பெருங்கடமையாகிறது.
தந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்
தந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார், தமிழ் சினிமா இழந்துவிட்ட ஒரு நிகரற்ற எழுத்தாளர் அவர். காஞ்சிபுரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த
முத்துக்குமார் சிறு வயதில் தாயை இழந்தவர். எழுத்தின் மீது கொண்ட காதலால் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான திரு
. பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் என்ற
திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு பாடலாசிரியராக அறிமுகமானார்.
உன் பேர் சொல்ல ஆசை தான், எங்கள் வீட்டில் எல்லா நாலும் கார்த்திகை தொடங்கி எந்திரன் 2.0 படத்தில் ரம்யமாய் ஒலித்த
புல்லினங்காள் என்ற பாடல் வரை 200கும் அதிகமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான
தங்க மீன்கள் திரைப்படத்தில் வெளியான “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடலின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு சைவம் என்ற படத்தின் வந்த “அழகே, அழகே” என்ற பாடலுக்கும் இவர் தேசிய விருது பெற்றார். மஞ்சள் காமாலை
நோயினால் பல நாட்கள் அவதிப்பட்டு வந்த முத்துக்குமார் மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி
உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை பின்வருமாறு…
என் தந்தை.
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்,
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்.
என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்,
அவர் எங்கள் காட்டில் சிங்கம்.
என் தந்தையின் வரிகள் முத்து,
அவர்தான் எங்களின் சொத்து.
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்.
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா,
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா.
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா,
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா.
-மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்…

இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!
இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை கூகுள்
நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர், “இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்க 10 பில்லியன் டாலர் முதலீட்டை நாங்கள செய்ய உள்ளோம். பிரதமர் நரேந்திர
மோடியின் கனவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
மேலும் அவர், “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே எங்களது நடவடிக்கை பிரதிபலிக்கிறது” என்றுள்ளார்.
அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த 75,000 கோடி ரூபாய் முதலீடானது இந்தியாவில் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள
கூகுள், ஈக்வட்டி முதலீடுகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை டிஜிட்டல் வசமாக மாற்ற இந்தத் திட்டமானது 4 வகையில் கவனம் செலுத்தும். முதலாவது, ஒவ்வொரு
இந்தியனுக்கும் அவனது தாய் மொழியிலேயே, மிகவும் மலிவான விலையில் தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டாவது, இந்தியாவின் தனிப்பட தேவைக்கு ஏற்றது போல செயல்பாடுகளில் ஈடுபடுவது. மூன்றாவது, டிஜிட்டல்
பரிமாற்றத்துக்குத் தயாராகும் வியாபரங்களுக்கு துணைபுரிவது. நான்காவது, சமூக நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் ஏஐ
உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது. குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது” என விளக்கியுள்ளது.
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பெரும் தாக்கம் குறித்துப் பேசியுள்ள கூகுள், “நம் சுகாதாரம் குறித்தும் பொருளாதாரம்
குறித்தும் எழுந்துள்ள சவால்கள், இனி நாம் எப்படி வேலை பார்ப்பது மற்றும் எப்படி வாழ்வது என்பது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.
எனவே எங்கள் இலக்கானது, அடுத்து வரும் கண்டுபிடிப்பு அலையில் இந்தியா பயனடைவதை மட்டும் உறுதி செய்யாமல்,
அதை முன்னின்று வழிநடத்துவதிலும் துணை புரிவோம்,” எனக் கூறியுள்ளது.
நெல்சன் மண்டேலாவின் மகள் திடீர் மரணம்
நெல்சன் மண்டேலாவின் மகள் திடீர் மரணம்
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன்
மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா மருத்துவமனையில் காலமானார்.
நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்
ஜிண்ட்சி மண்டேலா
தென் ஆப்பிரிக்காவில், இன வெறியை எதிர்த்துப் போராடியவர் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் காலமானார்.
இவரது மனைவி வின்னி மண்டேலாவும் இன வெறியை எதிர்த்துப் போராடி உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டில் வின்னி காலமானார்.
இந்நிலையில், நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்சி மண்டேலா (59), ஜோகனஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்
காலமானார். அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
ஜிண்ட்ஸி மண்டேலா டென்மார்க் நாட்டின் தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு
பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு திறப்பது தள்ளி வைப்பு
பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளமை பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இருப்பினும் பொது மக்கள் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களாக பொது மக்கள் சுற்றுலாப்பயணங்களில் ஈடுபடவில்லை. தம்மைப்போன்று ஏனையோரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நாடு திறக்கப்பட்டமை பொருளாதாரத்தைப் போன்று தமது வாழ்வாதார தேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கே ஆகும். இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பொது தேர்தலை நடத்துவதைப் போன்று ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு நடைமுறையில் அதிகாரம் வழங்குவது மிக முக்கியமானதாகும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அநுராதபுரம், ,ராஜாங்கனை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மரண நிகழ்வு மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தான நிகழ்வு சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை மீறிய வகையில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.
இதனூடாக இந்த பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அனில் யாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகர் ஊடாக ராஜாங்கனை பிரதேசத்தில் நடைபெற்ற தான நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தற்பொழுது இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் 12 பேர் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிக்காத இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு உள்ள சூழ்நிலைக்கு இது சிறந்த உதாரணமாகும் என்று தெரிவித்த வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் பொது மக்கள் தேவையற்ற வகையில் செயற்படுகின்றனர். இது தொடர்பில் பொது மக்கள் மீண்டு சிந்திப்பது மிக முக்கியமானதாகும்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் வருவோரின் எண்ணிக்கை அதிகம் – யாழ்அரசாங்க அதிபர்
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் வருவோரின் எண்ணிக்கை அதிகம் – யாழ்அரசாங்க அதிபர்
யாழில் இரண்டாவது கொரோனா அலையினை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும் சுகாதார
திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கொரோனாஅபாயம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் , யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் ஆரம்பத்தில் 16 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது 14 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில்
மூன்று குடும்பம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துக்குச் சென்று வந்தவர்கள் என்ற அடிப்படையிலும், ஒரு குடும்பம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வருகை தந்தவரின் குடும்பம் என்ற
அடிப்படையிலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் மொத்தமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 14 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் யாழ்மாவட்டத்தில் கொரோனா தொற்றினை தடுக்கும் செயற்பாடானது சுகாதார திணைக்களம் ஏனைய திணைக்களங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
பொதுமக்களுடைய செயற்பாட்டின் மூலமே யாழில்கொரோனாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம் தற்பொழுது இது சமூகத் தொற்றாக உருவாக கூடிய அபாயம்
காணப்படுவதாக உணரப்படுகின்றது.
இந்த நிலையில் இரண்டாவது அலையாக அதாவது முன்னரோடு ஒப்பிடும்போது நாளாந்தம் அறிக்கையிடப்படுகின்ற புள்ளி
விவரங்களைப் பார்க்கும் போது நோயாளர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே காணப்படுகின்றது.
யாழ் குடாநாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் மிகவும் விழிப்பாக இருந்து இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . சுகாதார பிரிவினரின்
சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்த்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
பாடசாலைகளுக்கு இன்றிலிருந்து ஒரு கிழமைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்கள் யாவும் சீராக இயங்கி வருகின்றன. எனினும் தேவையுடையவர்கள் மட்டும்
அலுவலகங்களுக்கு வருகைதந்து தங்களுடைய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் . அதே வேளையில் ஏனைய பொது
தொடர்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் தமது அன்றாட
தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் அரசாங்க அதிபர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில் இன்னுமொரு அபாயம் யாழ்ப்பாண மாவட்டத்திலே காணப்படுகின்றது. தற்போது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ் குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக
காணப்படுகின்றது. அதாவது நேற்று முன்தினம் கூட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்குரிய சட்ட நடவடிக்கை பொலீஸ் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க வேண்டும். அதாவது உங்களுடைய உறவினர்களோ அல்லது உங்களுக்கு
தெரிந்தவர்களோ இவ்வாறான விடயங்களை அறிந்திருந்தால் அது தொடர்பில் அருகில் உள்ள கிராம சேவையாளர் அல்லது போலிசார் அல்லது அதற்குரிய அதிகாரிகளுக்கு உடனடியாக
தெரியப்படுத்துங்கள். மேலும் எங்களுடைய யாழ் குடாநாட்டை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது பொதுமக்களுடைய கைகளில் தான் தற்போது இருக்கின்றது சுகாதார சுகாதார
துறையினரின் அறிவுறுத்தலுக்கு ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனை பின்பற்றுவதன் மூலமே
யாழ்ப்பாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேலும் தெரிவித்தார்.
ரயில்,பேருந்துகளில் உணவுகள் ,பொருட்கள் விற்க தடை – கோட்டா அரசு சாதனை
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அனைத்து அரச மற்றும் தனியார் பஸ்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சில நடமாடும் வியாபாரிகளால் சுகாதார முறைகளை பின்பற்றாது விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து
போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ரயில்வே திணைக்களத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரயிலில், நடமாடும் வியாபாரிகள் பிரவேசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சில நடமாடும் வியாபாரிகளால் தனியார் மற்றும் ,லங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் உணவு
பொருட்கள், குடிநீர் போத்தல்கள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே அவர்களால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட ,த்தகைய வியாபார
நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அகையால், உடனடியாக ,ந்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு
அறிவுறுத்தியுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, ,ந்த நிலைமையைகட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.
அதன்படி, சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வாக்களிக்க
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை நாளை (14) மற்றும் நாளை மறுதினங்களில் (15) அரச பணியாளர்களுக்கும், 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார்
மற்றும் முப்படையினரும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இவ் திகதிகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் 20ஆம், 21ஆம் திகதிகளிலும் தபால் மூலம் வாக்களிப்புக்க முடியும்.
கடல்வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்றவர்கள் கடல்படையால் கைது
கடல்வழியாக இலங்கைக்குள் நுழைய முயன்றவர்கள் கடல்படையால் கைது
2020 ஜூலை 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் தொண்டமனாறுக்கு வடக்கே கடல்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல்
நடவடிக்கையின் போது கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற 04 நபர்களுடன் ஒரு டிங்கியைக் இலங்கை கடற்படை கைது செய்தது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை யாழ்ப்பாணத்தின் தோண்டமன்னாறு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் இந்த டிங்கியைக் கண்டது. இவர்களில் இருவர் இந்தியாவில் இருந்து
குடியேற முயன்ற இலங்கையர்கள் என்றும் மற்றைய இருவர் ஜூலை 10 ஆம் திகதி பருத்தித்துறை வழியாக சர்வதேச
கடல்களுக்கு ஐ.எம்.பி.எல் கடந்து புலம்பெயர்ந்தோருக்கு போக்குவரத்து வழங்குவதற்காக பயணம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த இருவரும் வல்வெட்டித்துறை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் முந்தைய குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் முன்னாள் விடுதலைப்
புலிகளின் உறுப்பினர், அவர் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21-52 வயதுக்கு உட்பட்டவர்கள்.
அதிக இலாபம் பெற வேண்டுமானால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் – ஜனாதிபதி
அதிக இலாபம் பெற வேண்டுமானால் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் – ஜனாதிபதி
விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமையளித்து அதிக இலாபம்
ஈட்டுவதற்கு முயற்சிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
மிளகு மீள் ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே விதைகள், தூள் அல்லது வேறு ஆக்கப்பெற்ற பொருட்களாக பொதியிடப்பட்ட மிளகை ஏற்றுமதி செய்யுமாறு ஜனாதிபதி
அவர்கள் விவசாயிகளுக்கு தெரிவித்தார். பெறுமதி சேர்க்கும் முறைமையை பின்பற்றி அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று(12)
இரண்டாவது நாளாகவும் கண்டி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஹசலக்கவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
உடுதும்பர ஹசலக்க நவரத்ன விளையாட்டரங்கிலும் ஹசலக்க சந்தை வளாகத்திலும் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இடைத்தரகர்களிடம் அகப்பட்டு விடாது நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் கிராமவாசிகளிடம் தெரிவித்தார். மினிப்பே பிரதேசவாசிகள்
முகங்கொடுத்துள்ள குடிநீர் பிரச்சினை குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்.
ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்பதற்கான வசதிகளைக்கொண்ட பாடசாலை ஒன்று ஹசலக்க பிரதேசத்தில் இல்லாமையினால் பிள்ளைகள் எதிர்நோக்கும்
கஷ்டங்கள் குறித்தும் மக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும்
நடவடிக்கை நாளை (14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை கூறினார்.
நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும்
இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை
தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த
அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐ.தே.க.வால் உறுதிப்படுத்த முடியாது- மகிந்த
அரச ஊழியர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பும் கடமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் யுகம் மீண்டும் உருவாக இடமளிக்க போலதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தமது ஆட்சி காலத்திலேயே அரச ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதன் காரணமாகவே கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த முடிந்தாகவும், அரச ஊழியர்களின் எதிர்காலத்தை ஐக்கிய தேசிய கட்சியால் உறுதிப்படுத்த முடியாது எனவும் கூறினார்.
யுத்தத்திற்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டதாக தெரிவித்த பிரதமர், கடந்த அரசாங்கம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தேவையற்ற அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது
காவல்துறை அதிரடி வேட்டை 993 பேர் கைது
இலங்கையில் காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல்
நடவடிக்கையில் சுமார் 993 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் பலவேறு குற்ற செயல்களில்
ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது







