Posted in இலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையங்களில் புகைத்தல், மதுபானம் போன்றவற்றுக்கு தடை

வாக்களிப்பு நிலையங்களில் புகைத்தல், மதுபானம் போன்றவற்றுக்கு தடை

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இரவு வேளையில் தங்கியிருக்கும்

தேர்தல் அதிகாரிகள் புகைத்தல், மதுபானம் பாவித்தல் வேறு எந்தவித

போதைப் பொருட்கள் மற்றும் லைற்றர் முதலானவற்றை எடுத்துச்செல்லுதல்

முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு உறுதி

செய்யப்பட்டிருப்பதனால் தேர்தல் கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்

மற்றும் வாக்காளர்கள் இது தொடர்பில் எந்தவித அச்சத்தையும்

ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்கள்

      கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்கள்

      கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 107 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் இன்று செவ்வாய் கிழமை (04.08.2020) கொண்டு செல்லப்பட்டன.

      நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்

      பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் .கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை தேர்தல்

      நடவடிக்கைகளுக்காக 1745 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

      ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 92ஆயிரத்து 264 பேர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் அஞ்சல் மூல

      வாக்காளர்களின் எண்ணிக்கை 3590.மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 107. மாவட்டத்தின் வாக்கெண்ணும்

      நிலையங்களின் எண்ணிக்கை 14 .மாவட்ட தேர்தல் பிரிவுகளின் எண்ணிக்கை 01.மாவட்டத்தில் போட்டியிடும் முழு வேட்பாளர்களின்

      எண்ணிக்கை 330.மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சை கட்சிகளின் எண்ணிக்கை 33. தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 07

          Posted in இலங்கை செய்திகள்

          கட்சி தாவிட தயராகும் அரசியவாதிகள் – கைமாற தயராகும் கோடிகள்

          கட்சி தாவிட தயராகும் அரசியவாதிகள் – கைமாற தயராகும் கோடிகள்

          இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் இம்முறை அதி சவால் நிறைந்த ஒன்றாக அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது

          உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ வேளையில் தேர்தலை மூன்று காலில் நின்று கோட்டா ஆடம் பிடித்து நடத்துகிறார் ,

          இதற்கு காரணம் வரும் மாதங்களில் ஐநாவில் வெளிவரவுள்ள மகிந்த தமிழ் இன படுகொலைகள் நிகழ்ச்சி நிரலாகும்


          அதற்காக தற்போது மக்களின் அதி செல்வாக்கை பெற்றுள்ளதாக காண்பிக்கும் கோட்டபாய அதே மக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வித்து கொள்ள நினைக்கின்றார்

          அவரது இந்த சிந்தனையில் இம்முறை பெரும் இடிவிலும் நிலை உள்ளதாக கணிக்க முடிகிறது ,பலகோடிகளை செலவு செய்து

          ஊடகங்கள் முதல் தேர்தல் பரப்புரையை புரிந்து வரும் மகிந்தா கட்சிகள்


          தமது தனிப்பெரும்பனை ஆட்சியை தக்க வைத்து கொள்ள தீர்மானிக்க பட்டுள்ள வெற்றியார்களை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளக நகர்வுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

          முடிவுகள் எதிராக மாறும் பட்சத்தில் இரண்டாவது கட்சி தாவும் செயல் முறை திட்டத்தை நகர்த்தும் நிலையில் ஆளும் கோட்டா அரசு ஈடும் என்பதை அடித்து கூறலாம்

          அமைச்சு பதவி மற்றும் ,பல கோடிகள் என பேரம் பேச படும் நிலை இங்கே தோற்றம் பெறுகிறது

          அரசியல் வியாபாரிகளுக்கு இப்பொழுது நல்ல உழைப்பு ,இது அவர்கள் பணம் சம்பாதிக்கும் நேரமாகும் ,மக்களே கொரனோவில்

          வாக்களிப்பு நிலையங்களுக்ஸ் செல்லாதீர்கள் உங்கள் ,உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்

          • வன்னி மைந்தன் –
              Posted in இலங்கை செய்திகள்

              வென்ற பின்னர் கோட்டாவுக்கு எம் ஆதரவு – சுமந்திரன் சம்பந்தர் பேச்சு – கொதிப்பில் தமிழர்கள்

              வென்ற பின்னர் கோட்டாவுக்கு எம் ஆதரவு – சுமந்திரன் சம்பந்தர் பேச்சு – கொதிப்பில் தமிழர்கள்

              இலங்கையில் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தல் முடிவுற்றதும் ,அதன்

              தமிழர் அரசியல் தீர்வு பிரச்சனையை முன் வைபத்தறகாக வெளியில்

              இருந்து ஆளும் நல்லாட்சி மைந்தர் கோட்டாபாயவுக்கு ஆதரவை வழங்க உளளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளனர்

              இவர்கள் இருவரும் தமிழர் தேசிய அரசியலை முன்னிலை படுத்தி தொடர் கொச்சை படுத்தும் நிகழ்வுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

              புலிகள் கேட்பதை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என மகிந்த பகிரங்கமாக

              தெரிவித்த நிலையில் இவர்கள் தமது ஆதரவு மகிந்தஹா ,கோட்டாவுக்கே என அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

              சம்பந்தன் ,சுமந்திரன் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலையும் அவர்களை

              நேசிக்கும் தமிழர்களையும் கொச்சை படுத்துவதில் முனைப்பு காட்டி நகர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                  பிரிட்டன் அமைச்சர் மின் அஞ்சலை கைக்கிங் செய்து தகவலை திருடிய ரஷியா

                  பிரிட்டன் அமைச்சர் மின் அஞ்சலை கைக்கிங் செய்து தகவலை திருடிய ரஷியா

                  பிரிட்டனின் மிக முக்கிய அமைச்சராக விளங்கி வரும் Jeremy Corbyn னது மின் அஞ்சலை கைக்கிங் செய்து அதற்குள் இருந்து

                  பரிமாறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ரஷியா நாட்டு கைக்கர்கள் திருடி சென்றுள்ளனர்
                  மேற்படி சம்பவம் பிரிட்டன் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  பிரிட்டன் கொரனோ நோயிற்கு கண்டு பிடித்த மருந்தை கூட மேற்படி நபர்கள் கைக்கிங் செய்து திருடி சென்று அதே போன்ற

                  மருந்து ஒன்றை தாம் கண்டு பிடித்து விட்டதாக ரசியா அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      2020 பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்க தகுதி

                      2020 பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்க தகுதி

                      பாராளுமன்ற தேர்தலில் இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

                      இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் 12 இலட்சத்து 12 ஆயிரத்து 655 பேரும், வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 872 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

                      வடக்கு, கிழக்கில் 29 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 85 அரசியல் கட்சிகள் 112 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 1,768 வேட்பாளர்கள்

                      போட்டியிடுகின்றனர். வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வன்னி

                      மாவட்டத்தில் 06 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

                      கிழக்கில் 16 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1033 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இதில் 49 அரசியல் கட்சிகளும் 70 சுயோட்சைக் குழுக்களும் உள்ளடங்குகின்றன.

                      இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 22 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

                      இதேபோன்று திகாமடுல்ல மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 20 அரசியல் கட்சிகள், 34 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 540 பேர் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 4

                      ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை கொரோனா வைரஸ் காரணமாக வாக்களிக்கச்

                      செல்பவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பு

                      நிலையங்களுக்கு சிறுவர்களை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்

                          வாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்

                          நாளை (5) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                          மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று (4) காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்லும் பணி ஆரம்பமானது. 12,985

                          வாக்களிப்பு நிலையங்களுக்காக 71 மத்திய நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மத்திய

                          நிலையங்களுக்கு வாக்கும் பெட்டிகளை அனுப்பும் பணி இன்று மாலைக்குள் பூர்த்தி அடையவுள்ளது.

                          நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பான ஒத்திகை இன்று தேர்தல் மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

                          வாக்குப் பெட்டிகளுக்களுக்கான பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்க

                          பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

                          இம்முறை பொது தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை பிரதிநித்துவப்படுத்தி 7,456 பேர் போட்டியிடுகின்றனர்.

                          இதேவேளை பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10,500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                          பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிததார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய நபர்கள் கைது

                              பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய நபர்கள் கைது

                              தலா 5 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

                              கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

                              மேலும் அவர்கள் வந்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

                              மேலும் 2 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணை மேற்கொண்டி வருகின்றனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்

                                  நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்

                                  2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                                  அதனடிப்படையில் வியாழக்கிழமை காலை 7 மணி மற்றும் 8 மணிக்கு மாவட்ட ரீதியில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                  நாடளாவிய ரீதியில் 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                  சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயோட்சை குழுக்கள் சார்ப்பில் பிரதிநிதிகளை முன்வைக்க முடியும் தெரிவிக்கப்படுகின்றது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      புதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்

                                      புதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்

                                      2020 பொது தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் புதிய பாராளுமன்றத்திற்கான

                                      கூடல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                      இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

                                      இதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வியாழக் கிழமை புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

                                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                          என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

                                          என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

                                          அகமெல்லாம் கோடையது
                                          அக்கனியாய் கொதிக்கிறது
                                          விழியேனோ மார்கழியாய்
                                          விழுந்தேனோ நனைகிறது

                                          நெஞ்சேனோ நித்தம் – உன்
                                          நினைவால் துடிக்கிறது
                                          கத்தும் கடல் அலை போல
                                          கரை தேடி அலைகிறது

                                          பகல் எல்லாம் தேடுகிறேன்
                                          பாலை வனம் ஆகிறது
                                          இறுதி போர் முற்றுகையாய்
                                          இதயம் ஏன் இருக்கிறது …?

                                          நான் இட்ட முத்தத்தை
                                          நகல் எடுத்து இன்று வை
                                          நான் இறந்த பின்னாலே
                                          நாளும் நீ ருசித்து வை

                                          ஒன்றாக இருக்கையிலே
                                          ஓராயிரம் சண்டைகள்
                                          ஒருமையில வாடையில
                                          உனை வாட்டும் தனிமைகள்

                                          காரணங்கள் ஏதுமின்றி
                                          கல் எறிந்தாய் நெஞ்சமதில்
                                          விட்டெறிந்து நீ போனாய்
                                          விழுந்து விட்டேன் நோயதினில்

                                          பிணம் எடுக்கும் வேளையில
                                          பிரண்டழுவாய் நீ மட்டும்
                                          பின்னே வந்த மாதங்களில்
                                          என்னை மறப்பாய் நீ முற்றும்

                                          மறத்தல் தான் வாழ்வினிலே
                                          மனதிற்கு நின்மதி
                                          மரண ஓட்டம் தான்
                                          மனிதனின் தலை விதி

                                          எதை எடுப் பாய் எதை எறிவாய்
                                          எண்ணிப் பாய் நீ தான்
                                          என் மனதில் உள்ளவற்றை
                                          எழுதிவிட்டேன் மன்னிப்பாய் ..!

                                          வன்னி மைந்தன்
                                          ஆக்கம் -03-08-2020

                                          Posted in சினிமா

                                          துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி

                                          துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி

                                          பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

                                          வீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி
                                          கங்கனா ரணாவத்
                                          ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்

                                          தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா குற்றம்சாட்டியது சர்ச்சையானது. இந்நிலையில் மணாலியில் உள்ள

                                          கங்கனாவின் இல்லத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

                                          இதுகுறித்து கங்கனா கூறியதாவது: “இரவு 11.30 மணிக்கு எனது அறையில் நான் படித்துக்கொண்டு இருந்தபோது எனது வீட்டின் அருகில் இரண்டு முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 8

                                          வினாடி இடைவெளியில் 2 முறை சுட்டனர். வீட்டின் பின்புறத்தில் இருந்து யாரோ சுட்டுள்ளனர். எனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம்.

                                          கங்கனா ரணாவத்

                                          சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மகன் குறித்து நான் கருத்து தெரிவித்ததற்காக கூட இத்தகைய மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். சத்தம் கேட்டதும்

                                          பாதுகாவலர்கள் சென்று தேடியபோது யாரும் இல்லை. உள்ளூரில் யாருக்காவது பணம் கொடுத்து இப்படி செய்து இருக்கலாம்.

                                          சுஷாந்த் சிங்கையும் இப்படித்தான் மிரட்டப்பட்டு பயமுறுத்தி இருக்க வேண்டும். யார் எப்படி என்னை மிரட்டினாலும் சரி, அஞ்ச

                                          மாட்டேன் தொடர்ந்து கேள்வி கேட்பேன்” என்றார். இதையடுத்து கங்கனா வீட்டில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்

                                              Posted in உலக செய்திகள்

                                              சிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்

                                              சிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்

                                              ஆப்கானிஸ்தான் Nangarhar மாகாணத்தில் உள்ள சிறை சாலைக்குள் புகுந்த ஆயுத தாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி இருபத்தி ஒன்பது பேர் பலியாகினர் .,மேலும் ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                              காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                              ஆயுத தாரிக்கும் ,இராணுவத்தினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி சண்டைகள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                                              தாலிபான்கள் ஐநூறு பேர் விடுதலை செய்ய பட்டதன் பின்னர் நடந்த பெரும் தாக்குதல் சம்பவமாக இது பார்க்க படுகிறது

                                              சிறைச்சாலை மீது ஆயுத
                                              சிறைச்சாலை மீது ஆயுத
                                                  Posted in உலக செய்திகள்

                                                  27 வயது யானை பலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                                                  27 வயது யானை பலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                                                  அமெரிக்கா St. Louis மிருக காட்சி சாலையில் வசித்து வந்த

                                                  இருபத்தி ஏழு வயதுடைய யானை ஒன்று
                                                  இறந்துள்ளது ,

                                                  மேற்படி யானையின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                                  உரிய முறைப்படி யானை அடக்கம் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                                  வயது யானை பலி
                                                  வயது யானை பலி
                                                      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                                      பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது

                                                      பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது

                                                      அவுஸ்ரேலியா North Queensland. பகுதியில் ஆறு வயது பெற்ற மகனை

                                                      கொன்ற தந்தை ஒருவர் கொலை குற்ற சாட்டில் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                                                      கைதானவர் தொடர் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவரது குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறும் என எதிர்பார்க்க படுகிறது

                                                      மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                      பெற்ற மகனை கொன்ற தந்தை
                                                      பெற்ற மகனை கொன்ற தந்தை
                                                          Posted in உலக செய்திகள்

                                                          இஸ்ரேல் விமானங்கள் சிரியாவில் கடும் தாக்குதல்

                                                          இஸ்ரேல் விமானங்கள் சிரியாவில் கடும் தாக்குதல்

                                                          சிரியா Golan எல்லை பகுதியில் இஸ்ரேல் அரச இராணுவ

                                                          விமானங்கள் நடித்திய திடீர் தாக்குதலில் சுமார் ஐவர் பலியாகியுள்ளனர்

                                                          லெபனான் நாட்டு போராளிகளை , இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                                          இதில் இறந்தவர்களில் முக்கிய தளபதிகள் அடங்கும் என இஸ்ரேல் பரப்புரை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                              Posted in சினிமா

                                                              வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி

                                                              வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி

                                                              பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜூலி, வட இந்திய தொழில் அதிபரை காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

                                                              வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி?
                                                              ஜூலி


                                                              பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம்

                                                              படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.

                                                              ஜூலி

                                                              இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்

                                                              பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த போலியான

                                                              செய்தியை பரப்புவது கேவலமானது. ஒருவரை அவதூறு செய்யும் இதுபோன்ற செயலை ஊக்குவிக்க வேண்டாம். ஊடகங்களில் எனது

                                                              திருமணம் குறித்து வெளியாகும் தகவல்கள் போலியானவை” என்று கூறியுள்ளார்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  தேச துரோகி சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் video

                                                                  தேச துரோகி சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் video

                                                                  எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

                                                                  சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

                                                                  முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்று எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அடிக்கடி கூறுவதாக குறிப்பிட்டி பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஒரு இனச்சுத்திகரப்பு என்று சொன்னால், ஒரு இனத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகச் செல்வது

                                                                  இனச்சுத்திரகரிப்பு அல்ல. அந்த இனத்தை demonization of ethnics groups எனச்செய்வதுதான் இனச்சுத்திகரிப்பு. பொஸ்னியாவை எடுத்துப்பார்தால், முஸ்லீமக்களை விரட்டுப் போது, பள்ளிவாசல்களை தாக்கினாhர்கள், அந்த சமூகத்துக்கு எதிரான எதிர்ப்பினை காட்டினார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை முஸ்லீம்மக்களுக்கு எதிரான அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை எனக் குறிப்பிட்டார்.

                                                                  மேலும் பாதுகாப்பு கருத்தியே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள் எனச்சுட்டிக்காட்டிய அந்த சம்பவம் இடம்பெற்றது எனக் குறிப்பிட்டதோடு, அந்தநேரத்தில் பல முஸ்லீம் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார்கள். பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் முஸ்லீம் பெயர்களை கொண்டவர்களாக இருந்தார்கள் எனத் தெரிவித்தார்.

                                                                  எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டார்கள் என்ற கருத்துக்கு எந்தவிதமான சட்டத்தின்படியோ, தார்மீககோட்பாட்டின் படியோ பொருந்தாது. இவ்வாறான கருத்துக்களை எம்.ஏ.சுமந்திரன் கூறுவது தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது. இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                                                                  மேலும் இந்த ஊடக சந்திப்பில் சிறிலங்காவின் நடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 

                                                                  சர்வதேச தளத்தில் தமிழ்தேசியத்திற்காக போராடகூடியவர்களை தெரிவு செய்யுங்கள் !!” சிறிலங்கா பராளுமன்றத்திலோ, அத ன் அரச கட்டமைப்பினுள்ளோ தமிழ தேசிய பிரச்னைக்கு தீர்வு காண இயலாது”
                                                                  1. சிறிலங்காவின் நாடாளுமன்றம் சட்டபூர்வமாகவோ அல்லது தார்மீகரீதியாகவோ தமிழர் தேசத்தை ஆளுகை செய்வதற்கு அருகதையோ தகுதியோ அற்றது.

                                                                  2. 1972ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டங்கள் எவையும் தமிழர் தேசத்தின்; பங்குபற்றலுடனும் சம்மதத்துடனும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த அரசியலமைப்பு சட்டங்கள் சிங்கள தேசத்தால் தமிழர் தேசத்தின் மீது

                                                                  திணிக்கப்பட்டவை. தமிழர் தேசம் தனது இறைமையினை என்றும் சிங்கள அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்ததில்லை.

                                                                  3. சிறிலங்கா உண்மையில் ஒரு ஜனநாயக நாடல்ல. அது ஒரு இனநாயக நாடு. சிங்கள இனத்தின் மேலாண்மையினை தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நிலைநிறுத்தும் இயந்திரமாகவே சிறிலங்கா அரசு இயங்குகிறது. சிறிலங்கா அரசின் அங்கங்களான

                                                                  நாடாளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் போன்ற அனைத்து அலகுகளிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் இறுகிப் புரையோடிப் போயுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதன் ஊடாக

                                                                  சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் சக்தி தமிழர்களுக்கு இதுவரை இருந்தது இல்லை. இனி மேல் இருக்கப் போவதும் இல்லை.

                                                                  4. தற்போதய சிறிலங்கா அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களினது மொத்த எண்ணிக்கை 225 ஆகும். இதில் தமிழர் பிரதேசங்களுக்குரிய ஆசனங்களின் எண்ணிக்கை மொத்தம் 23.

                                                                  இதன்படி தமிழர்களின் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் தொகையில் பத்தில் ஒரு வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சக்களின் கட்சி

                                                                  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெறமுடியாது போனாலும் கூட மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்கள கட்சிகளுக்குடையதாகவே இருக்கும்.

                                                                  5. குடியுரிமைச்சட்டம், தனிச் சிங்களச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என தமிழர்களுக்கு எதிரான பல சட்டங்கள், தமிழர்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்த நிலையிலேயே தான் சிங்கள ஆட்சியாளர்களால்

                                                                  நிறைவேற்றப்பட்டன. அந்;நேரத்தில் தமிழர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. தமிழர்கள் அமைச்சர்களாகவும், இரண்டு முறை

                                                                  எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் கூட இருந்திருக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர்களால் தமிழர்களின் நலன் சார்ந்து எதனையுமே செய்ய முடியவில்லை.

                                                                  6. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதன் மூலம் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. சிறிலங்காவின்

                                                                  அரசகட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது என்பதனை உய்த்தறிவது என்பது ஒன்றும் கடினமான விடயமல்ல.

                                                                  7. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசியலில் தமிழர்களுக்கு ஒரு காத்திரமான பங்கு

                                                                  இல்லாமை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியமான ஒரு காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

                                                                  8. இப் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது, தமிழர்கள் சிறிலங்காவின் நாடாளுமன்றத்; தேர்தலில் ஏன் போட்டியிட

                                                                  வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ் வினா எழுவது நியாயம்

                                                                  எனினும் இரண்டு தந்திரோபாயக் காரணங்களுக்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

                                                                  9. முதலாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை

                                                                  வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை நோக்கி எமது அரசியல்

                                                                  பெருவிருப்புக்களை வெளிக்காட்டுவதற்கான ஒரு கருவியாக நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தையும் தமிழர் தேசம் கையாள வேண்டும்.

                                                                  10. இரண்டாவது காரணம்: சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோர் போட்டியிடத் தவறின் சிறிலங்காவின் சிங்களக் கட்சிகளும், இக்

                                                                  கட்சிகளது அடிவருடிகளும் தமிழர் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்லும் நிலை உருவாகும். இந் நிலை உருவாகுவதனைத் தவிர்த்தல் தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்ற நோக்குநி;லையில் நன்மையானதே.

                                                                  11. இந்தத் தேர்தலில் தமிழர்களின் தேசிய அரசியல் பரப்பானது சாதி, மத பேதங்களுடன் பிளவுபட்டுவிடுமோ என்ற

                                                                  அச்சத்தினையும் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப் பேதங்களையெல்லாம் கடந்ததுதான் விடுதலை அரசியல் என்ற தெளிவுடன் நமது மக்கள் செயலாற்றுவார்கள் என்பது எமது நம்பிக்கை.


                                                                  12. 1985ல் இருந்து எமது தேசிய இனப் பிரச்சனை கொழும்பைக் கடந்து திம்புவுக்கு சென்றது. பின்னர் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களதும், மக்களதும் உயிர்த்தியாகத்தினாலும், அளப்பரிய

                                                                  அர்பணிப்புக்களாலும், வீரத்தினாலும் அது திம்புவில் இருந்து தாய்லாந்து, ஜெனீவா, நோர்வே, சுவிஸ், ஜேர்மனி என்று அனைத்துலக அரசியல் வெளியினை நோக்கி சென்றுள்ளது.

                                                                  13. இன்று சிறிலங்கா அரசின் திட்டமி;டப்பட்ட தமிழின அழிப்பு அனைத்துலகப் பேசுபொருளாகியுள்ள இந் நிலையில் தேர்வு

                                                                  செய்யப்படும் தமிழர் பிரதிநிதிகள் இந்த சர்வதேச தளத்தில் எமது தேசிய அரசியல் பெருவிருப்பினை கொள்கையாகவும், செயற்பாடாகவும் கொண்டு செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவு.

                                                                  இதனால் தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை இனம் கண்டு மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிவு

                                                                  செய்யப்படும் பிரதிநிதிகள் பின்வரும் நிலைப்பாடுகளைக் கொண்டியங்குவோராக இருத்தல் வேண்டும்.

                                                                  அ – ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு தமிழர் தேசம் என்ற அங்கீகாரத்துடன் –  தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஒரு

                                                                  பொதுவாக்கெடுப்பு மூலமே காணப் படவேண்டும். இவ் விடயம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்ணணி, முன்னாள் நீதியரசர், வட மாகாண முதலமைச்சர்

                                                                  சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஆகிய கட்சிகளது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருவதாக உள்ளது.

                                                                  ஆ – இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசும் அதன் அரசியல், இராணுவ தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

                                                                  இ – நடந்தேறிய சர்வதேசக் குற்றங்கள் ‘systemic crime ‘ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்கள் எனும்போது அவை தனிநபர்களாலோ, ஒரு குறிப்பிட்ட

                                                                  இராணுவப் பிரிவினாலோ புரியப்பட்டவை அல்ல. முhறாக இவை சிறிலங்கா என்ற ‘அரசு’ செய்த குற்றங்களாகவே உள்ளன. எனவே சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால்

                                                                  இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு செல்லத் தமிழர் பிரதிநிதிகள் பாடுபடுவேண்டும்.

                                                                  ஈ – சர்வதேச தளத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் உறுதியாக ஈடுபடவேண்டும்.

                                                                  உ. தாயகத்தில் தமிழர் தேச நிர்;மாணத்தை உறுதியாக மேற்கொள்ளக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

                                                                  தேர்தலுக்குப் பின்னர் உருவாகக் கூடிய நிலைமைகள்:
                                                                  தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழர்களின் தேசிய அடையாளத்தினைச் சிதைத்து, தமிழ் மக்களை ‘சிறிலங்கன்’ என்ற அடையாளத்துடன் சிங்களத்துடன் கரைக்கும் முயற்சிகளில்

                                                                  தீவிரமாக ஈடுபடக் கூடிய நிலைமைகள் உள்ளன. இம் முயற்சியினை வெற்றிகரமாகச் செயற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கையில் தந்திரமான யதார்த்தத்தினைக்

                                                                  கடைப்பிடித்து பலம் மிக்க அனைத்துலக அரசுகளுடன், அவர்களின் நலன்களுடன் அனுசரித்துப் போகும் ‘சமரசமான’ நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமைகளும் உள்ளன. சர்வதேச சக்திகளும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதனை விடத் தமது

                                                                  நலன்களின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் சமரச நிலைiயில் உறவாடுவதனையே விரும்புவார்கள்.

                                                                  இத்தகையதொரு நிலை உருவாகாமல் தடுப்பதில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பிரதிநிதிகளுக்குப்

                                                                  பெரும் பொறுப்பு உண்டு. அரசுகளுடன் நமது உரிமைகளுக்காகச் செயற்படுவது என்பது நித்திரை கொள்பவனை எழுப்பும் வேலை

                                                                  அல்ல, மாறாக நித்திரை கொள்வது போல நடிப்பவனை எழுப்பும் வேலை என்ற புரிதலுடன் இவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

                                                                  சிறிலங்கா அரசுடன் தமது நலன்களை அடைந்து கொள்ளும் இலக்குடன் அனைத்துலக அரசுகள் தமிழர்; தேசத்தின் நலன்களைப் பலிகொடுக்க முயலும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றை

                                                                  எதிர்த்து உறுதியாகச் செயலாற்றக் கூடியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுவது அவசியம்.

                                                                  அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டை நாம் அறிந்தவர்கள் என்பதனை அவ் அரசுகளுக்கு உணர்த்திக் கொண்டு, அதேசமயம் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி

                                                                  கொடுக்காமல், அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும்  இணைக்கக் கூடிய

                                                                  அரசதந்திரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். செயலாற்ற வேண்டும்.

                                                                  தமிழீழத் தேசியத் தலைவர் கூறியவாறு எந்தவொரு அரசியல் முன்னெடுப்புக்கும் பலம் அவசியமானது. எனவே சர்வதேச

                                                                  தளத்தில் அரசியலை மேற்கொள்வதற்கு அரசதந்திரத்துடன் மக்கள் சக்திகளை வலுவாக அணிதிரட்டக் கூடியவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

                                                                  தேர்தலுக்குப் பின்னர் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாரிய அரசியல் செயற்பாட்டுக்கான பொறுப்பும் தமிழர் தேசத்துக்கு உண்டு. சிறிலங்காவின் தேர்தல் அரசியல்

                                                                  மாயைகளுக்குள் தலையைப் புதைக்காமல், நாம் ஒரு தேசமாக நிமிர்ந்து நிற்க உதவும் தமிழ் தேசிய பேரியக்கம் ஒன்று

                                                                  கட்டியெழுப்பப் படவேண்டும். அதனை நோக்கிய முன்னெடுப்பைத் தமிழர் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும்

                                                                  https://www.youtube.com/watch?v=HncUNQ60H5E&feature=youtu.be
                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

                                                                  இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

                                                                  இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் இன்று காலை 6.00 மணி வரையில் 08 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

                                                                  கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில,; இந்த எட்டு பேரில் ஒருவர்

                                                                  கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவரென்று அடையகளங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                  ஏனைய 07 பேரும் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர் முப்படையினரால் நடத்தப்படும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்வர்கள்.

                                                                  இதற்கமைவாக கந்தக்காடு போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்றைய தினம் வரை

                                                                  கொவிட் 19 தொற்று நோயாளர் எண்ணிக்கை 601 என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                                  புனர்வாழ்வு பெற்று வருகின்ற கைதிகள் – 482
                                                                  பணியாளர் சபையின் உறுப்பினர்கள் -66


                                                                  அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் -05
                                                                  குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் 44
                                                                  வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட் 19 வைரஸ் நோயாளர் -01


                                                                  கொவிட் 19 தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை -601

                                                                  இன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த 07 பேர் முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                                                                  மேலும் இன்றைய தினம் டோஹாவில் இருந்து 13பேரும் சென்னையில் இருந்து 29 பேரும் ஜப்பானில் இருந்து ஒருவரும்

                                                                  இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்வுள்ளனர்.

                                                                  இன்றைய தினம் (03) இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 55 பேர்

                                                                  தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                  இதற்கமைவாக புனானி மத்திய நிலையத்pல் 52 பேரும் ஹோட்டல் ஜெட்வினில் ஒருவரும் கற்பிட்டி ருவல மத்தியத்தில் இருவருமாக இவ்வாறு வீடு திரும்புகின்றனர்.

                                                                  இதுவரையில் (03.08.2020) 29,121 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

                                                                  முப்படையினாரால் நடத்தப்படும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 2294 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                                                                  இதேவேளை நேற்றைய (02) தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,210 ஆகும். இலங்கையில் இதுவரையில் 162,090 பேருக்கு பி.சி.ஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                                                                  இதேவேளை இன்றைய தினம் (03) காலை 6.00 மணியளவில் 75 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து

                                                                  சென்றுள்ளனர். இவர்களுள்ள 06 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடடிற்கு வந்த பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

                                                                  இருந்தவர்கள். ஏனைய 69 பேரும் உள்நாட்டில் அடையாங்காணப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      புதுக்குடியிருப்பில் கள்ள வாக்கு சீட்டுடன் கோட்டா கட்சி உறுப்பினர் கைது

                                                                      புதுக்குடியிருப்பில் கள்ள வாக்கு சீட்டுடன் கோட்டா கட்சி உறுப்பினர் கைது

                                                                      முல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி

                                                                      வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள்

                                                                      ஜனநாயக கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                                                      இது தொடர்பில் தெரியவருகையில்,

                                                                      புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுடன் கட்சி ஆதரவாளர்கள்

                                                                      நடமாடுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய

                                                                      தகவல் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                                                      ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவரும் கட்சியின் ஆதரவாளர்

                                                                      ஒருவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவரும், ஸ்ரீலங்கா

                                                                      பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவருமாக நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

                                                                      சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்