லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டன் லூசியத்தில் 10 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
லண்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்னம் உள்ளனர்
மீளவும் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ,இவ்வாறான
எச்சரிக்கை விடுக்க பட்ட நிலையில் கடந்த சில தினங்களில் மட்டும்
சுமார் 10 பேர் லூசியம் பகுதியில் மட்டும் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,மக்களை
மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்க பட்டுள்ள பொழுதும் ,அலட்சிய
போக்கில் மக்கள் செல்வதை வீதிகளில் அவதானிக்க முடிகிறது
,அதுபோலவே பேருந்துகளில் முகக்கவசம் அணியதும் செல்கின்றனர்
இவ்வாறு சென்றால் அவர்களுக்கு காவல்துறையினரால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு
லண்டனில் Lewisham முதல் Catford வரை விசேட சைக்கிள் வீதி அமைப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
பொது போக்குவரத்துக்கள் பயன்பாடு பாதிக்க பட்டுள்ளது ,அதிக
மக்களை காவிய படி பேரூந்துகள் உள்ளிட்டவை செல்ல முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது
அதனை தடுக்கும் முகமாக அவசர அவசரமாக லண்டன் மேயரின் உத்தரவின் அடிப்படையில்
லூசியம் முதல் கட் போர்ட் Lewisham , Catford வரையான பகுதியில் விசேட பாதுகாப்பு நிறைந்த மிதிவண்டி சாலைகள் அமைக்க படுகின்றன
இவ்வாறு அமைக்க படும் சாலை ஊடாக மக்கள் போக்குவரத்து அதிகரிப்பதுடன் ,
டிலிவரி செய்பவர்களுக்கும் வாகன நெரிசல் இன்றி பயணிக்கும் அரிய வாய்ப்பும் கிட்டுகிறது
பல லட்சம் பவுண்டுகள் செலவில் இந்த விசேட சாலை அமைக்க படுகிறது
.குறித்த விசேட திட்டமானது ,குறித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திரும்ப முடியாத படி ஒருவழி சாலைகள் அமைக்க படுகின்றன மக்களே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்


பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு
பிரிட்டனில் ஏழு நாள் 100 மணித்தியாலம் வேலை செய்த போலீஸ் அதிகாரி -குவியும் பாராட்டு
பிரிட்டனில் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் காவல்துறை
கான்ஸடபிள் தர அதிகாரி ஒருவர் வாரம் ஒன்றில் நூறு மணித்தியாலங்கள் பணி செய்து சாதனை படைத்துள்ளார்
நாள் ஒன்றுக்கு சரா சரியாக பதின் நான்கு அரை மணித்தியாலங்கள் செலவு செய்துள்ளார்
பேரிடர் கால பகுதியில் மக்களை காப்பாற்ற கடுமையாக பணி புரிந்த இவருக்கு பாராட்டுக்குள் குவிந்த வண்ணம் உள்ளது

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்
பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்
கடந்த தினம் மதியம் ஒன்று நாப்பது மணியளவில் வேகமாக வந்த
அவுடிராக கார் ஒன்று Coventry , Foleshill Road வழியேவந்த
பெண்ணை மோதித் தள்ளியது
வேகாமாக வந்த கார் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இந்த அகோர சம்பவம் இடம்பெற்றுள்ளது
நாற்பத்தி ஒன்பது வயது பெண்மணி உடல் முழுவதும் பலத்த அடிகாயங்களுக்கு
உள்ளான நிலையில் ,குறிப்பாக தலையில் பலமான காயங்களுடன்
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார்
தற்போது வரை இவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்
குறித்த காரினை செலுத்தி வந்த இருபது வயதுடைய ஆண் சாரதி மற்றும்
அந்த காருக்குள் ஒன்றாக கூடி வந்த பதினாறு வயது இளம் பெண் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர்
சாரதியின் அலட்சிய போக்கும் ,அதிவேகமுமே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்,சிறு காயங்களுக்கு உளள பெண் மருத்துவமனையில் இருந்து வீடு சென்று ள்ளார்
ஏனையவர்கள் தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்
ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்
ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு
அதுதான் ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.
ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம் என்ன?
ரத்தம் உறையாமை நோய்
கையில் சிறிய காயம் ஏற்படுகிறது. உடனே ரத்தம் வழிகிறது. சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடுகிறது, அல்லவா?
அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், அதுதான் ரத்தம் உறையாமை நோய்.
ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்புகூட ஏற்பட்டுவிடும்.
இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாகப் புள்ளி
விவரங்களும் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய்
ஏற்படலாம். எனவே, இதைப் பரம்பரை நோய் என்றும் கூறுகிறார்கள்.
ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே
இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உடலில் எங்கும்
காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக்
காரணமும் இல்லாமல்கூட ரத்தக் கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள்.
இந்த நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?
பிறந்த குழந்தைக்குத் தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது
காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிறத் தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம்
உறையாமை நோய் இருக்கலாம். இந்நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை
நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் மட்டுமே இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது, மருத்துவர்களின் அறிவுரை.
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?
பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?
முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும்
முகப்பருவிற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல
காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.
பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச்
சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். “அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம்
உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின்
அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான
பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை
தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.
தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தோலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள்
ஏற்படும். “காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது
இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.
எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்.
சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு
சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு
உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் ஆயுத ,அரசியல் ,பொருளாதாரம் தற்போது பல நாடுகளை மிரள வைத்து வருகிறது
தொடர்ச்சியாக தாமே 2050 இல் வல்லரசாக திகழ்வோம் என கங்கணம் கட்டும் சீனா முக்கியமான நாடுகளின்
உளவுத்துறைக்குள் புகுந்து முக்கிய நபர்களை விலைக்கு வாங்கி அந்த நாடுகளின் உளவு தகவல்களை திருடி வருகிறது
இவ்விதம் அமெரிக்காவின் வெளியாக மற்றும் உள்ளக உளவுத்துறை நபர்களுக்கு பல லட்சம் டொலர்களை வழங்கி
அமெரிக்கா இராணுவ விடயங்களை கடத்தி கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது
அமெரிக்காவினால் தயாரிக்க பட்ட முக்கிய ஆயுத உற்பத்தி இரகசிய
ஆவணங்கள் சீனாவின் கைகளுக்கு மாறியது எப்படி என்ற தேடுதலில் அமெரிக்கா உளவுத்துறை தீவிரமாக செயல் பட்டது
இதன் பொழுது மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
கைதானவர்கள் தாம் சீனாவிடம் பணத்தை பெற்று கொண்டதாக ஒப்பு கொண்டுளள்னர் .மேலும் இவர்கள் என்னவெல்லலாம்
வழங்கினார்கள் என்ற விபரத்தை கேட்டு அமெரிக்கா இராணுவ மையம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது
எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், தனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததாகவும் அதை மறுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம்
வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி திறமையாக செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி கருத்து பதிவிட்டு
இருந்தார். இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. பா.ஜனதா கட்சியில் சேர அவர் முடிவு செய்து விட்டதாகவும் பேசினர்.
கங்கனா ரணாவத்
இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், ‘எனக்கு பா.ஜனதா கட்சி எம்.பி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க முன்வந்தது. நான்
ஏற்கவில்லை. எனது தாத்தா காங்கிரஸ் கட்சியில் 15 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்து இருக்கிறார். பா.ஜனதா கட்சியில்
சேரப்போகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை. நடிப்பின்
மீதுதான் ஆர்வம். ஆனாலும் எனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன்” என்று கூறியுள்ளார்
காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்
காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…. விரைவில் தொழிலதிபரை மணக்கும் காஜல்?
காஜல் அகர்வால்
2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி
கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ்
பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக
உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அவரைப்பற்றி அவ்வப்போது திருமண வதந்திகள் வந்துள்ளன.
இதற்கு அவர் பல முறை மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அவருக்கு திருமண நிச்சயதார்த்தம்
நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று கூறிய காஜல் அகர்வால்,
விரைவில் திருமணம் நடக்கும் என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
காஜல் அகர்வால்
இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அந்த விழாவில் தெலுங்கு தயாரிப்பாளரான
பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர்
தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2.20 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
உலக அளவில் 2.20 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
சிகிச்சை பெறும் நோயாளிகள்
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு
மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து 1.47 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.76 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை
பெறுபவர்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதி ரவிச்சந்திரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: கைதி ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய பரபரப்பு கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரன், தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை கவர்னருக்கு
அனுப்பி 2 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய இசைவு இன்னும் கிடைக்கப்பெறாததால் 29 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சிறையில் வாடுகிறேன்.
தற்போது எங்கள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவுடன் சற்றும் தொடர்பில்லாத பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்ற பிறகுதான் அரசின் பரிந்துரை
குறித்த முடிவு எடுக்கப்படும் என கவர்னர் செயலகம் தெரிவித்திருப்பதாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி
சட்டசபையிலும், கடந்த மாதம் 29-ந் தேதி சென்னை ஐகோர்ட்டிலும் தெரிவித்துள்ளது. கவர்னரின் இந்நிலைப்பாடு, தங்கள் தலைமையிலான தமிழக அரசின் கொள்கை முடிவினை
நடைமுறைப்படுத்த விடாமல் காலவரையின்றி தள்ளிப்போடும் நோக்கிலானது.
அரசியல் சட்டப்பிரிவு 161 மற்றும் 163-ஐ தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் அதிகார வரம்புக்குள் அடங்குவதை மறுதலித்து கவர்னர் என்ற ஒற்றைப்பதவியின் வரம்புக்குள்
தன்னிச்சையாக மாற்றிக்கொண்டதாகும். சுருங்கக்கூறின் கவர்னர், அரசியல் சாசன பிரிவு 163-ன்கீழ் தமிழக அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படி
செயல்படாமல், தன்னிச்சையாக இவ்விஷயத்தில் நடந்து கொண்டு இருப்பது தங்கள் தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை செல்லாக்காசாக்கி விட்டதற்கு ஒப்பானதாகும்.
எனவே தமிழக அரசு 9.9.2018 அன்று எடுத்த கொள்கை முடிவினை உறுதியாகவும், உடனடியாகவும் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசின் கொள்கை முடிவினையும், கவர்னர் குறிப்பிடும் பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் விசாரணையையும்
தொடர்புபடுத்த இயலாது. ஏனெனில் விடுதலை அறிவிக்கப்பட்ட 7 பேரும் சுப்ரீம் கோர்ட்டு அளித்த இறுதித்தீர்ப்பின்படி தண்டனை அனுபவித்துவிட்டனர். விடுதலைக்கான தகுதியை உரிய
சட்டவிதிகளின்கீழ் எப்போதோ அடைந்துவிட்டனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு சிறைவாசிகளின் விடுதலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு இவ்வாறே செய்தது. அதன்படி
குறைந்தபட்சம் தங்கள் அரசின் நிர்வாக அரசாணை மூலம் நான் உள்ளிட்ட 7 பேருக்கு தற்காலிக ஏற்பாடாக, இடைக்கால
நிவாரணமாக, தண்டனை நிறுத்தி வைப்பு பரோல் அல்லது விடுமுறை வழங்குவதற்கு ஏதுவாக சிறை விதிகளில் உரிய திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதேபோல தமிழக கவர்னருக்கும் ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்
தூத்துக்குடி மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும்
ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி
அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை
கொண்டாடினர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் முழு விவரம் இன்று பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய நபர் கைது – பதவி பறிப்பு
பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய நபர் கைது – பதவி பறிப்பு
இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் லஞ்சம் ஒழிக்க படும்
என்ற கொட்டு முரசு முன் வைக்க பட்டது
லஞ்சம் வாங்கும் அனைவரையும் 2500 சிறப்பு இரகசிய புலனாய்வாளர்கள் கண்காணிப்பார்கள் என அறிவிக்க பட்டது
அதன் அடிப்படையில் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு
இரண்டு லட்சம் லஞ்சம் வழங்கியவர் கைது செய்ய பட்டுள்ளதுடன்
.காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுளளார்
இவரது பதவி பறிக்க பட்டு வீட்டுக்கு துரத்த படுவார் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கையில் புதிதாக கொண்டுவரப் படும் சட்டம்
இலங்கையில் புதிதாக கொண்டுவரப் படும் சட்டம்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த பலத்துடன்
எதிர்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பதவியும்
பசில் ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு திருத்தைத்தை கொண்டுவருவதாயின்
தாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை எனவும் அவ்வாறு இல்லாவிடின்
தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரில் காயமடைந்து -காணமல் போனவர்கள் வீடுகளுக்கு சென்று மருந்து வழங்கும் இராணுவம்
நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று இலங்கை கடற்படை மருந்து விநியோகம்
யுத்தத்தின் போது உயிரிழந்த, காயமடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்கள் அத்துடன் ஓய்வு பெற்ற
மற்றும் சேவையிலிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் மருந்துகள்
விநியோகிக்கும் புதிய முறை ஒன்றினை இலங்கை கடற்படை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கொழும்பு கடற்படை வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுவருவோர் அவர்களின்
மருந்துப்பொதிகளை தமது வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களது வீடுகளுக்கு சென்று
விநியோகிக்கப்படுகிறது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் ஆலோசனைகளுக்கு அமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கடற்படை வைத்தியசாலை நாட்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக
நோய், கர்ப்ப நோய் மற்றும் கண், தோல், நரம்பியல் நோய் மற்றும் மன நோயாளிகள் ஆகியோருக்கு மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி
இவ்வாறான திட்டமொன்றை இலங்கை கடற்படையினரால் முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பலர் பயனடந்தனர்.
மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு
மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு
பொருளாதாரத்தின் உரிமையை மக்கள் அடைந்துகொள்ளும் மக்கள் மைய பொருளாதார பொறிமுறை ஒன்றுக்காக இம்முறை இராஜாங்க அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பட்டார்.
இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் குறித்து மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பத்திக், கைத்தரி, ஆடைகள் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலுக்காக இராஜாங்க அமைச்சொன்றை உருவாக்குவதற்கான காரணங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொவிட் 19 காரணமாக பாரிய சிக்களுக்கு ஆளாகியுள்ள ஏனைய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தாது முன்னோக்கி செல்ல முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆடைக் கைத்தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 43 வீதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இதன் மூலம் ஏற்றுமதி வருமானத்துக்கு வருடாந்தம் 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறுகின்றது. தொழில் வழங்கும்போதும் மற்றும் பிரதேச அபிவிருத்தியின் போதும் ஆடைக் கைத்தொழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது. அதனை வலுப்படுத்தும் முகமாக பத்திக் மற்றும் கைத்தறி உட்பட உள்நாட்டு ஆடை உற்பத்தியை மேம்படுத்துவது அரசின் பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
பத்திக் மற்றும் கைத்தறி கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் செயற்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
‘சலுசல’ போன்ற நிறுவனங்கள் மூலம் பத்திக் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ.ஜயசுந்தர, திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல ஆகியோர் உள்ளிட்ட பத்திக், கைத்தறி ஆடை, உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் சார்ந்த நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இறுதி போர் இடம்பெற்ற – நந்திக்கடல் புனரமைப்பு ஆரம்பம்
இறுதி போர் இடம்பெற்ற – நந்திக்கடல் புனரமைப்பு ஆரம்பம்
நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட கரிசனையின் அடிப்படையில் கடந்த பல மாதங்களாக
முன்னெடுக்கப்பட்டு வந்த நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட கள ஆய்வுப் பணிகள் நேற்று முன்தினம் (16.08.2020) இடம்பெற்றன.
கடற்றொழில் திணைக்களம், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், வன வளத் திணைக்களம் ஆகியவற்றின்
அதிகாரிகளும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இறுதிக் கட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில்
வட்டுவாகல் பாலத்தை அண்மித்துள்ள நந்திக் கடல் முகத்துவாரப் பகுதியில் குவிந்து கிடக்கின்ற கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், குறித்த முதற்கட்டப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யுத்தம் மற்றும் தமிழ் தலைமைகளின்
அக்கறையீனம் காரணமாக கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தூர்வாரி புனரமைக்கப்படாத நிலையில் சுனாமி போன்ற இயற்கை
அனர்த்தங்களினாலும் யுத்தத்தினாலும் நந்திக்கடலில் குவிந்து கிடக்கும் கழிவுப் பொருட்களும் சேற்று படுக்கைகளும்
நந்திக்கடலின் இயற்கை சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மீன், இறால் போன்ற கடலுணவுகளின் உற்பத்தி குறைவடைந்தமையினால், குறித்த நீர்நிலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
பாதிப்பினை எதிர்கொண்டன. குறித்த விடயம், கடந்த வருட இறுதியில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களினால் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் பலனாக நந்திக்கடல் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்சார தடை – நடந்தது என்ன..? – விசாரணையில் விசேட குழு
நேற்று இடம்பெற்ற மின்விநியோக சீர்குலைவு பற்றி ஆராய்வதற்காக
நியமிக்கப்பட்ட குழு இன்று காலை கூடவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்று நண்பகல் 12.30 அளவில் நாடு முழுவதிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.
கெரவலப்பிட்டி உப மின் நிலையத்தின் விநியோக வலைப்பின்னலில்
ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணம் எனக் கருதப்படுகின்ற நிலையில்
குழுவொன்றை நியமித்து உண்மையைக் கண்டறியுமாறு மின்வலு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தச் சீர்குலைவு காரணமாக வீதிப் போக்குவரத்துச் சமிக்ஞைகள் இயங்காமல்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் ரெயில் சேவைக்குப் பாதிப்பு
ஏற்படவில்லை எனவும் ரெயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் மின்விநியோக வலைப்பின்னல் சீர்குலைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு- உங்கள் பெயர் உள்ளதா பாருங்க
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு- உங்கள் பெயர் உள்ளதா பாருங்க
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண
சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில்
குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என
ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் கீழ் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி
அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக
ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
Jaffna District
Selected List
Delft : https://drive.google.com/file/d/1Vq8QiJbJGCA3QCl7EVDNBTEUE-yOpDLM/view?usp=sharing
Island_North_Velanai : https://drive.google.com/file/d/1BedGYaHXZrTHuVsUqafaK4CYb1h6nXNq/view?usp=sharing
Island_South_kytes : https://drive.google.com/file/d/1uVgv3avcnEQrUTvfhh8nNDIuycORJ0_7/view?usp=sharing
Jaffna : https://drive.google.com/file/d/1FnQWPLZs1Nnn2JZqTN5WZGwPnBhb5UyY/view?usp=sharing
Karainagar : https://drive.google.com/file/d/1iEXbMVdr2TK6VoMOZR5VhlxBpNE7iqyN/view?usp=sharing
Nallur : https://drive.google.com/file/d/1BauwJFNPX9s-z15PxyWKaeegZizX0Njm/view?usp=sharing
Thenmarachchi_Chavakachcheri : https://drive.google.com/file/d/1q9NetpkS5v8rNHLqcFWz4ISM0L2h3Xlh/view?usp=sharing
Wadamarachchi_East : https://drive.google.com/file/d/1J9JJIHr80H_FDQr8IrGPY_gA17MWoPLG/view?usp=sharing
Wadamarachchi_North : https://drive.google.com/file/d/12DDERx_CUKDx69g68oRy5BLOuyjZXxSU/view?usp=sharing
Wadamarachchi_South : https://drive.google.com/file/d/1sHN1gvom1QEEfxl49TI9FURC7QsoEOlj/view?usp=sharing
Walikamam East : https://drive.google.com/file/d/1B71pt0SkAI-NnMSA8PTyAE1u1m_T9jtW/view?usp=sharing
Walikamam North : https://drive.google.com/file/d/1WCn_K54P9eTP4373bM5ovgUWpivKKyjD/view?usp=sharing
Walikamam West : https://drive.google.com/file/d/1o8slAceFrNRdFeumPFO0I3lJ0pUHjN0o/view?usp=sharing
Walikamam South : https://drive.google.com/file/d/1f5J5WhU7EY8r56hnfg0YBI1RRDROUDZd/view?usp=sharing
Walikamam West : https://drive.google.com/file/d/1wAwVvJCfz3qChk10x1xRA345iYC6ILu_/view?usp=sharing
Pending List : https://drive.google.com/file/d/1WDSSg1ljxgzgewbK2jtjUmfctJrlVWV0/view?usp=sharing
Rejected List : https://drive.google.com/file/d/1_CJ-cAAoFVB1JGfZHecQmTXL1pAvQA2M/view?usp=sharing
Kilinochchi District
Selected List
Kandavalai : https://drive.google.com/file/d/1bsslYpRbGKj4SfAnWbFcszQko76uz-FQ/view?usp=sharing
Karachchi : https://drive.google.com/file/d/1vblcf1sT3V3gcFMoud9oHCbv-x-WFfJe/view?usp=sharing
Pachchileippali : https://drive.google.com/file/d/1hMao8iZbuMoxvFxMQUzP7rSEsnrIn6Ju/view?usp=sharing
Punakari : https://drive.google.com/file/d/18M2hA9b4omuDccNixiv5PwVq0idvXKK7/view?usp=sharing
Pending List : https://drive.google.com/file/d/1fnmh3f9dNdk9hIKAlofvhbXzGwYGK0BA/view?usp=sharing
Rejected List : https://drive.google.com/file/d/17bzRvoPUuatwscSdjOM_pBxEIex_d61m/view?usp=sharing
Mulathivu District
Selected List
Manthei East : https://drive.google.com/file/d/189-33RNtmatdSyJ4turI7i_j8WaedLan/view?usp=sharing
Maritime Pattu : https://drive.google.com/file/d/1k0FgzTMzCwZpYb-sP6408YAm1c6jl6uA/view?usp=sharing
Oddusudan : https://drive.google.com/file/d/1g3dN8oemzSrt70AK9fnUSytZFkPu7Fff/view?usp=sharing
Puthukkudiyiruppu : https://drive.google.com/file/d/1TptYynG1juTistrWC0KeKLDleCmswPXf/view?usp=sharing
Thunukkai : https://drive.google.com/file/d/1-9TeCVQ23Nv7b4tbZSuwIW0Wpt417_Gh/view?usp=sharing
Welioya : https://drive.google.com/file/d/1FogUMcVkKJdBAp8XDRdGhwjigZAxC2vP/view?usp=sharing
Pending List : https://drive.google.com/file/d/18O74vkwC9lUdf7lThbOPvzAWgdRDCb9D/view?usp=sharing
Rejected List : https://drive.google.com/file/d/1uP52py2YLBJq3uPecj8s_EUgTbfNMaI8/view?usp=sharing
Gampaha District
Selected List
Attanagalla : https://drive.google.com/file/d/1_qr0NtO19fAFhU7T7kTwV9okyl7QbJds/view?usp=sharing
Biyagama : https://drive.google.com/file/d/1xJ_h6P5r8qnJfbtlFYlH9UWVHteZgSva/view?usp=sharing
Divulapitiya : https://drive.google.com/file/d/1A-yVv3wd1I9AI91ZFdjUpI53D3LvGEeb/view?usp=sharing
Dompe : https://drive.google.com/file/d/11AV4XEsFU-L8l7YTBKOh-mkuAbrEJ3E5/view?usp=sharing
Gampaha : https://drive.google.com/file/d/17fa3dOlYJ10IhVP1LthDuB5O9QAsTBev/view?usp=sharing
Ja-Ela : https://drive.google.com/file/d/1BWg-54_8eaAxtTwc5E25mYD2qkCJwVOd/view?usp=sharing
Katana : https://drive.google.com/file/d/16CZlku_Y7rUKn76kCxbftrSz-Lblreij/view?usp=sharing
Kelaniya : https://drive.google.com/file/d/1Tymi664jEq2Vh9lQCD_muTfE_G_kecnN/view?usp=sharing
Mahara-Kadawatha : https://drive.google.com/file/d/18HclSWEfeXgA82TvN22gos9SswNGXo42/view?usp=sharing
Meerigiama : https://drive.google.com/file/d/1_Z4ktyf4973-CnmJrxTEblxUmkRJWlzy/view?usp=sharing
Negambo : https://drive.google.com/file/d/1rOq4s5cf0ggLZ349Fgg8DSQZpBPPOIm1/view?usp=sharing
Wattala : https://drive.google.com/file/d/1gDDPmlbHG3yH13e_aUOHubDJA-dqvCzi/view?usp=sharing
Minuwangoda : https://drive.google.com/file/d/1n0sXopIuhu_pj0kpH-Zh0B1Q5F4KzthA/view?usp=sharing
Pending List : HTTPS://drive.google.com/file/d/1nALvC0rfJiyQkqpbwLwPB8ew3jPKt77j/view?usp=sharing
Rejected List : https://drive.google.com/file/d/1_nlWKbp8R25oxckonCYOmc5vIIaDYBkk/view?usp=sharing
யாழில் காவல்துறை மீது அகோர தாக்குதல்- 2 போலீசார் காயம்
யாழில் காவல்துறை மீது அகோர தாக்குதல்- 2 போலீசார் காயம்
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குற்றவியல் சட்டத்தின் கீழ்
கைது செய்ய சென்ற போலீசார் மீது போலீசார் திடீர் தாக்குதலை நடாத்தியுள்ளனர்
இதனால் காயமடைந்த இரு காவல்துறை ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது







