வனிதாவின் நான்காவது கணவருக்கு நெஞ்சு வலி
வனிதாவின் நான்காவது கணவருக்கு நெஞ்சு வலி
நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் குறித்து நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு
காரணத்திற்காகவே இந்த சோதனை கொடுத்துள்ளார். நிச்சயம் அதிசயம் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன். எங்களின் காதல்
வலிமையானது. எங்களை கைவிடாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்.
திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரமோ ஒரு அச்சிடப்பட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உணர்வு பூர்வமானது.
உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், விவாகரத்தும் வெறும் பேப்பராக இருக்கலாம்.
பீட்டர் பால், வனிதா
பீட்டர் பால், குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், அவரது உடல் நலனிலும், எங்கள்
வாழ்க்கை நலனிலும் அக்கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி கடன் பட்டுள்ளேன். வாழ்க்கை மிகவும் குறுகியது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் வனிதா.
கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்
கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்
கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் தனிமையில் இருந்த நண்பணுக்கு நடிகர் விஜய் தேடிச்சென்று உணவளித்தாராம்.
கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்
விஜய்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்களில் நடிகர் சஞ்சீவும்
ஒருவர். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சஞ்சீவ் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி
இருக்கும் மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து ருசீகர தகவல் ஒன்றை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
எனக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தெரிந்தது. அதனால் எனது மனைவி மற்றும் குழந்தைகளை
உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தனிமையில் இருந்தேன்.
சஞ்சீவ், விஜய்
அப்போது விஜய்யிடமும் இதுபற்றி சொன்னேன். அடுத்த 15 நிமிடத்தில் எனக்காக மதிய உணவு கொண்டு வந்தார் விஜய்.
எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் விஜய்யை நேரில் சென்று பார்க்கவில்லை.
எனது வீட்டு செக்யூரிட்டியிடம் அவர் உணவை கொடுத்துவிட்டு சென்றார்” என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்டு விமானங்களை துரத்திய ரசியா போர் விமானங்கள் -பால்டி கடலில் நடந்த பர பரப்பு
மூன்று நாட்டு விமானங்களை துரத்திய ரசியா போர் விமானங்கள் -பால்டி கடலில் நடந்த பர பரப்பு
ரசியாவின் Sukhoi Su-27 fighter jet ரக அதிவேக தாக்குதல் விமானங்கள் பால்டி கடல் பகுதியில்
கூட்டு ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜெர்மன் ,நோர்வே அமெரிக்கா விமானங்களை வழிமறித்து மிரட்டி சென்றன
நோர்வேயின் விமானத்தய் தொடர்ந்து துரத்தி வந்த ரசிய விமானங்கள் அதனை மிரட்டி சென்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரசியாவின் இந்த அத்துமீறல் வழிமறிப்பு செயல் பாடுகள் நாடுகளுக்கு இடையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்
மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்
90 சதவிகிதம் மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்
எஸ் பி பாலசுப்பிரமணியம்
கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து
எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அதில் கூறியுள்ளார்.
ஐ எஸ் மீது கடும் தாக்குதல் – ஆயுத கிடங்கு -முகாம்கள் தாக்கி அழிப்பு -327 பேர் பலி
ஐ எஸ் மீது கடும் தாக்குதல் – ஆயுத கிடங்கு -முகாம்கள் தாக்கி அழிப்பு -327 பேர் பலி
சிரியாவின் எல்லை பகுதியில் தளம் அமைத்து மீள போராடி வந்த ஐ எஸ் உலக பயங்கரவாத இயக்கம் மீது ரசியா மற்றும் சிரியா அரச
இராணுவம் இணைந்து நடத்திய வான்வழி தொடர் தாக்குதலில் ஒரு
வாரத்தில் மட்டும் சுமார் 327 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17 சிறிய முகாமக்கள் ,ஐந்து ஆயுத கூடங்கள் ,ஐந்து நில கீழ்
சுரங்க பாதைகள் என்பன முற்றாக அழிக்க பட்டுள்ளன
துல்லியமான உளவு தகவல்கள் மூலம் நடத்த பட்ட தாக்குதலில்
குறித்த தீவிரவாத அமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து தேடி அழிக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடியதாக புதிதாக 2,600 இடங்கள்.
சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடியதாக புதிதாக 2,600 இடங்கள்.
சுற்றுலாத்தொழில் துறைக்காக இதுவரையில் பயன்படுத்தப்படாத மற்றும் சுற்றுலா தொழில் துறையை கவரக்கூடிய 2,600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர்
பிரசன்ண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை திறந்து துற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரும்
சந்தர்பத்தில் இந்த 2,600 சுற்றுலா இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானத்தின் மூலம் ஒரே முறையில் ஆகக்கூடிய
சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரக்கூடிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்
மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்
சிரியாவின் Idlib and Latakia பகுதியில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட மனித வெடிகுண்டு தகத்தலை அடுத்து
தற்பொழுது ரசியாவின் மிகையொலி போர் விமானங்கள் குறித்த
எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில்
ஈடுபட்டுள்ளன
இதனால் மேற்படி கள நிலவரம் தற்போது இறுக்கமான நிலைக்கு
சென்றுள்ளது ,இந்த விமானங்கள் திடீர் பறத்தல் மிக பெரும் கூட்டு
தாக்குதல் ஒன்றுக்கு ரசியா ,சிரியா இராணுவம் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது
இதனால குறித்த களமுனை பகுதியில் போர் பதட்டம் நிலவுகிறது
லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்
லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்
லெபனானின் தெற்கு எல்லையோர பகுதியில் இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் இருபது
பொஸ்பரஸ் நச்சு கொத்து குண்டுகளை வீசியுள்ளது என அந்த போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது
செவவாய்க்கிழமை சுமார் இருபதுக்கு மேற்பட்ட இந்த குண்டு
வீச்சை இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தியுள்ளது
உலகில் தடை செய்ய பட்ட குண்டுகளை இங்கே வீசியுள்ளதன் மூலம்
இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தின் அதி உச்ச கோர இனவெறியை இது அம்பல படுத்தியுள்ளது
இஸ்ரேல் வழங்கிய இவ்விதமான குண்டுகளையே புலிகள் மீது இலங்கை
அரச பயங்கரவாத இரானுவம் வீசியது ,இதில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகியமை இங்கே குறிப்பிட தக்கது
அது போன்ற மிக பெரும் இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும்
நோக்கில் இஸ்ரேல் அரச பயங்கரவாதம் இந்த செயலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா விமானம – சீனா கடும் எச்சரிக்கை
சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா விமானம – சீனா கடும் எச்சரிக்கை
சீனாவின் வடக்கு எல்லையோர வான் பகுதிக்குள் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்து சென்றுள்ளது
இதனை கண்ணுற்ற சீனா இராணுவத்தினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அங்கிருந்து விலக மறுத்தால் சுட்டு வீழ்த்த படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அதன் பின்னர் அங்கிருந்து குறித்த விமானம் தப்பித்து சென்றுள்ளது
,மேற்படி சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
சீனாவுடன் வலிந்து தாக்குதலில் அமெரிக்கா அரச பீடம் ஈடுபட்டுள்ள
நிலையில் ,இந்த இராணுவ அத்து மீறல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
சீனாவுடன் போரினை தொடுக்க போவதாக அமெரிக்கா அதிபர் நகர்வு
இடம்பெற்ற வண்ணம் உள்ளதை இவ்விதமான செயல் மீளவும் இடித்துரைக்கின்றன
வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வனூர்தி – தீயில் எரிந்து இறந்த விமானி
வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வனூர்தி – தீயில் எரிந்து இறந்த விமானி
அமெரிக்கா Mount Hood தேசிய காட்டு பகுதியில் திடீரென தீ பற்றி கொண்டது இதனை அணைக்க உலங்கு வானூர்தியில் பொடிகளை
தூவி கொண்டிருந்த பொழுது வானூர்தி தீடிரென அதே தீ பரவிய பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது விமானி பலியாகியுள்ளார்
இதனை அடுத்து தீயணைப்பு படையினர் தீயினை அனைத்து
விமானியை மீட்க சென்ற போராட்டத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்
ஒருவரும் பலியாகியுள்ளார்
தொடர்ந்து தீ பரவிய வண்ணம் உள்ளது, இதனை கட்டு அப்துத்த முடியாது
வீரர்கள் திணறி வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி
மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி
அமெரிக்கா மியான்மி பகுதியில் காவல்துறை ஊழியராக பணிபுரியும் கணவரின் காரில் சிக்கிய மனைவி 33 பாகை வெப்பத்தில் சிக்கி இறந்துள்ளது அம்பலமாகியுள்ளது
ரோந்து பணியில் ஈடுபட்ட கணவரின் காரின் பின்புற ஆசனத்தில்
வீற்றிருந்த மனைவி கணவர் காரினை பூட்டி சென்ற நிலையில்
அந்த கார் கதவினை திறக்க முடியாது அதற்குள் சிக்கி இறந்துள்ள
செயல் இடம்பெற்றுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர் .இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
பொலிஸ் வேட்டை – 410 பேர் திடீர் கைது
பொலிஸ் வேட்டை – 410 பேர் திடீர் கைது
மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 410 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (25) காலை 06 மணிமுதல் இன்று (26) அதிகாலை 05
மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 198 சந்தேக நபர்கள் ஹேரோய்ன் வியாபாரத்துடன்
தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்மலானையில் உள்ள நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றில்
இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீட்டில் வைத்து மைத்திரி விசாரணை – சிறை செல்வாரா ..?
வீட்டில் வைத்து மைத்திரி விசாரணை – சிறை செல்வாரா ..?
முன்னாள் ஜனாதிபதியும் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட மைத்திரி ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம்
பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
அவர் அங்கு வைத்து தொடர் விசாரணைக்கு உட்படுத்த பட்ட வண்ணம் உளளார்
இவர் விசரண்சிங்க்ளின் பின்னர் கைது செய்ய படுவார் என்ற பதட்டம் நிலவி வருகிறது
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் 2 கட்டங்களாக திறக்க நடவடிக்கை
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் 2 கட்டங்களாக திறக்க நடவடிக்கை
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் இரண்டு கட்டங்களாக வாரத்தில் ஐந்து நாட்களிலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 2 ஆம் திகதி முதல்
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் காலை 7.30
மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
செப்ரெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பநிலை வகுப்புக்கள் உட்பட
அனைத்துப் பாடசாலைகளும் வழமை போன்று இடம்பெறும் எனவும்
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
கொரோனா வைரசின் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் தற்கியிருந்த 426 இலங்கையர்கள் நாடு திரம்பியுள்ளனர்.
கட்டார், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து
இலங்கையர்கள் இன்று காலை மத்தளை மற்றும் கட்டுனாயக்க
விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனில் இருந்து 102 பேரும், ஐக்கிய
அரபு எமிரேட்டில் இருந்து 23 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு
வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்
கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 228 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.
இதுவரையில் 32,816 பேர் தமக்கான தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை
கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனியில் இருந்து 102 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து 23 பேரும் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் .100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு
மாஸ்டர் .100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு
மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாக கூறப்படுகிறது.
ஓ.டி.டி. வலையில் சிக்குமா மாஸ்டர்? ரூ.100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு
விஜய்
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும்,
வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட
படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
விஜய்
சூரரைப் போற்று படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ள நிலையில், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படமும் அவ்வாறே வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில்
தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.70 கோடியில் இருந்து
ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாகவும் கூறப்படுகிறது.
தியேட்டர் அதிபர்களோ திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக விஜய்யின் மாஸ்டரை திரையிட்டு ரசிகர்களை மீண்டும்
தியேட்டருக்கு இழுக்கும் திட்டத்தில் உள்ளார்கள். மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாவதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா
நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா
கொரோனா வைரஸ் பிரச்சனையால் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
கொரோனா வைரஸ் பிரச்சனையால் எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வீட்டிலேயே
முடங்கியுள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகருக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன்
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக கூறியிருப்பதுடன், கொரோனாவை போகுமாறு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
படப்பிடிப்புகள் இல்லாததால் இருவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,
நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று கருப்பினத்தவர் மீது போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் கடந்த மே மாதம் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து
நெரித்துக்கொன்ற சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மினசோட்டாவின் அண்டை மாகாணமான விஸ்கான்சினில் நேற்று முன்தினம் ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை போலீசார் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜேக்கப் பிளேக், வேனுக்குள் ஏற முயற்சிக்கும்போது,
அவரை ஆயுதங்கள் ஏந்தி பின்தொடர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு,
பின்னாலிருந்து சுட முயற்சிக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 முறை சுடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜேக்கப் பிளேக் உயிருக்கு ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
பிலிப்பைன்சில் பாரிய குண்டு வெடிப்பு-7 ராணுவம் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்சில் பாரிய குண்டு வெடிப்பு-7 ராணுவம் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்சில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்ஸ் தொடர் குண்டு வெடிப்பு
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் அபு சயாப் என்கிற பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள் அங்கு மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ முயற்சித்து
வருகின்றனர். இதனால் அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அட்டூழியம்
காரணமாக தெற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை
முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார்
சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு
நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.
இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே இந்த குண்டு வெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஜோலோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் முன்பு பெண் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த 2 குண்டு வெடிப்புகளில் ராணுவ வீரர்கள் போலீசார் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ஜோலோ நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் பலியானார். எனினும் இந்த குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அபு சயாப் பயங்கரவாதிகளே இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே ஜோலோ நகர் முழுவதும் பாதுகாப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.








