34 ஆண்டுகள் கடற்படை சேவையில் இருந்து விடை பெற்றார் உயர் அதிகாரி
34 ஆண்டுகள் கடற்படை சேவையில் இருந்து விடை பெற்றார் உயர் அதிகாரி
ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல நேற்று (04) 34 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
நேற்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த
அதிகாரிக்கு பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அதன்பின் அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை
வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி வீதியின் இருபுறமும்
உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்களினால் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.
1986 ஆம் ஆண்டில் கடற்படைக்கு சேர்ந்த ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல,
தனது பதவி காலத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை
கட்டளைகளில் துணைத் தளபதியாகவும், கடற்படை நல இயக்குநர், கடற்படை
தகவல் தொடர்பு மற்றும் இயக்குநர் பொது சேவைகள் போன்ற மூத்த பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதியிடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை
புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள்
நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே பார்க்கிறோம். இதன் மூலம் இந்நாட்டில் நிலவி வரும் அரசியல், சமூக, கலாச்சார,
பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளுக்கான வழிகளை புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.
இந்நிலையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் மற்றும் முஸ்லிம்
மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. எனினும்,
இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய பிரதிநிதி இடம்பெறாமை
எமக்கு கவலை தருகிறது. இது தற்செயலாக ஏற்பட்ட இடைவெளி என நாம் கருதுகின்றோம்.
எனவே தங்களால் நியமிக்கப்பட்டுள்ள குழுவில், சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்ய தகுதி
வாய்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படி வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக்கொள்வீர்களாயின், தகுதி வாய்ந்த பிரதிநிதிகளின்
பெயர்களை தங்கள் பரிசீலனைக்காக சிபாரிசு செய்யவும் நான் தயாராக இருகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் எழுத்து மூல கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்
தீப்பற்றியுள்ள கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல் பகுதியில்
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள MV New Diamond கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 35 கடல் மைல்களுக்கு அபபால் உள்ள கடல்
பகுதிக்கு இழுத்துச் செல்ல முடிந்துளளதாக இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு தனது Twitter பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று முன்தினம் தீ பற்றிக்கொண்ட
இந்த கப்பலில் எரிபொருள் கலஞ்சிய பிரிவில் எரிபொருள் ஒழுக்கு ஏற்படவில்லை என்றும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது
போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ் பட நடிகை ராகிணி திவேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரபரக்கும் போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது
ராகிணி திவேதி
ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்தவர் ராகிணி திவேதி. ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அர்ஜுன் ஜோடியாக மெய்காண் படத்தில் நடித்தார். இந்த படம்
வெளியாகவில்லை. கன்னடத்தில் சங்கர் ஐ.பி.எஸ், கெம்பே கவுடா, வில்லன் பங்காரி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி
நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
ராகிணி தற்போது போதை பொருள் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற டி.வி. நடிகை அனிகா உள்பட 3 பேரை போலீசார் கைது
செய்து விசாரித்ததில் கன்னட திரையுலகினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருட்களை அவர் விற்று வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷும் கன்னட சினிமாவில் போதை பொருள் பழக்கம் இருப்பது உண்மைதான் என்றார்.
போதை பொருள் பயன்படுத்தும் 16 பேரின் பட்டியலையும் போலீசில் ஒப்படைத்தார்.
ராகிணி திவேதி
இந்த நிலையில் நடிகை ராகிணியின் நெருக்கமான நண்பர் ரவி என்பவரை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே நடிகை ராகிணி தரப்பில் ஆஜரான வக்கீல், சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி
நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப் பட நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடைபெறுகிறது. வீட்டில்
சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ராகினியை கைது செய்துள்ளனர். இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்
பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்
பார்க்கில் அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியதாக கோமாளி நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… கோமாளி நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்
சம்யுக்தா ஹெக்டே
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை
பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து வருவார். இதற்கென்று தனி
ரசிகர்கள் உண்டு. ஆனால், இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை மூலம் பகிர்ந்த தகவல் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சம்யுக்தா ஹெக்டே
ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உடை குறித்து
அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார்.
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா என்று சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்
சூர்யா
மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன. விஜய்யின்
திருமண நாளுக்கு போஸ்டர், மாஸ்டர் எப்போது வரும் என போஸ்டர், மாஸ்டர் ஓடிடியில் வரக்கூடாது என போஸ்டர், என தினமும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் அஜித் ரசிகர்களும், வலிமை திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் எந்த தளத்திலும்
காண மாட்டோம் என உறுதிமொழியை ஏற்று அதை போஸ்டராக அடித்து ஒட்டினர். இந்நிலையில் சூர்யா ரசிகர்களும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
சூர்யா போஸ்டர்
செப்டம்பர் 5 ஆம் தேதி சூர்யா திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகும் நிலையில், சேகுவாரா போல சூர்யாவை சித்தரித்து
‘திரையுலகை ஆண்டது போதும்… தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே…!’ என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டதுடன், தமிழக
சட்டமன்றத்தின் படத்தையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா -பீதியில் கட்சி
சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா -பீதியில் கட்சி
சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது.
அதனடிப்படையில் சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே 8 கிரவுண்டு இடத்தை
சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, அந்த இடத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை சார்பில், ‘பினாமி தடுப்பு
சட்டத்தின் கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இந்த இடம் மட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சிறையில்
இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-
வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சினையை நாங்கள் சட்ட ரீதியாக
எதிர்கொள்வோம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டை சசிகலாவின் பினாமி சொத்து என்று வருமான வரித்துறையினர் எப்படி சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை.
ஏனென்றால் அந்த இடம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
இந்த இடம் 2013-2014-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சசிகலா பங்குதாரராக இருக்கிறார். ஒருவர் பங்குதாரராக
சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்து, அவரது சொத்தாக எப்படி மாறும்?
இந்தியாவில் எத்தனையோ கம்பெனிகள் உள்ளன. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராக சேருவார்கள்.
அப்படி சேர்ந்தால் அந்த கம்பெனியின் சொத்தை அவரது சொத்து என்று எப்படி கூற முடியும்?
ஒருவர் தான் செலவு செய்த பணத்திற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றால்தான் வருமான வரித்துறையினர் நுழைய
முடியும். இதில் பங்குதாரர் மீது தவறு என்றால் ‘ரிஜிஸ்திரார் ஆப் கம்பெனி’ என்ற துறைதான் நடவடிக்கை எடுக்க முடியும். வருமான
வரித்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு சட்டம் இடம் கொடுக்காது. எங்களது பதிலை 90 நாட்களுக்குள் உரிய அதிகாரியிடம் சமர்ப்பிப்போம். அந்த பதிலை ஏற்காத பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்துக்கு செல்வோம்.
நான் சசிகலாவின் வக்கீலாக சொல்ல விரும்புவது அவருக்கோ அல்லது எங்களுக்கோ இதுவரை வருமான வரித்துறை நோட்டீஸ்
நகல் கிடைக்கவில்லை. சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சசிகலா கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம்.
கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை
குறைப்பு சலுகையை பெற முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று கர்நாடக சிறை விதியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எனவே 43 மாத காலம் சிறைவாசம் முடிவடைந்து உள்ள சசிகலா, 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் தண்டனை
குறைப்பு சலுகை பெற தகுதி உடையவர் ஆகிறார். எனவே இந்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் அவர் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்
உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்
உலக பணக்கார பெண்கள் பட்டியலில் ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம் பிடித்துள்ளார். விவாகரத்து மூலம் கிடைத்த பணத்தால் இந்த இடம் கிடத்துள்ளது.
உலக பணக்கார பெண்கள் பட்டியல்: ‘அமேசான்’ தலைவரின் முன்னாள் மனைவி முதலிடம்
மெக்கென்சி ஸ்காட்
2020-ம் ஆண்டுக்கான உலக பணக்கார பெண்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்கென்சி ஸ்காட் முதலிடம் பிடித்துள்ளார்.
50 வயதாகும் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 6 ஆயிரத்து 800 கோடி டாலராகும். இவர் ‘அமேசான்’ நிறுவன சி.இ.ஓ.-வும் உலக
பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவருமான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி ஆவார்.
மெக்கென்சி ஸ்காட் தனது கணவர் ஜெப் பெசோசுடனான 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து
பெற்றபோது அவரிடம் இருந்த ‘அமேசான்’ நிறுவன பங்குகளில் 4 சதவீத பங்குகளை பெற்றார்.
அவற்றின் அப்போதைய மதிப்பு ரூ.3500 கோடி டாலர் ஆகும். தற்போது அந்த பங்கு மதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால்
மெக்கென்சி ஸ்காட்டின் சொத்து மதிப்பும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
விவகாரத்து மூலம் கிடைத்த பணத்தால் மெக்கென்சி ஸ்காட் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்த பணக்காரர்களில் அவர் 12-ம் இடத்தில் உள்ளார்.
உலக பெண்கள் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த லோரியால், அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர்
பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டாலர் சொத்துடன் 2-ம் இடத்தில் உள்ளார்.
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலினால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
கிழக்கு கடலில் தீப்பற்றியுள்ள கப்பலின் தற்போதைய நிலையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பல் நேற்று தீ
பற்றிக்கொண்டமை. தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கடற்படையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தீ பற்றிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் பட்சத்தில், அதிலிருந்து சுற்றாடலை
பாதுகாக்க சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எரிபொருளை உறிஞ்சக் கூடிய கருவிகளை பயன்படுத்துவதற்கும், தெற்காசிய பிராந்திய நாடுகளின் உதவிகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கப்பலில் ஏற்பட்ட தீ எண்ணெய் களஞ்சியசாலையை நோக்கி பரவுவதை தடுக்க முயற்சி செய்து வருவதாக கடற்படை அறிவித்துள்ளது.
தீயை அணைப்பதற்கு எட்டுக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இழுவைக் கப்பல்கள் மூன்றும்
அடங்குவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டீ சில்வா குறிப்பிட்டார்.
இந்தக் கப்பலிலுள்ள இரண்டரை இலட்சம் பீப்பாக்களுக்கு மேலான எரிபொருட்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
தீ பரவியுள்ள ஆவு நேற னுயைஅழனெ கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ்
வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ்
வடக்கு விவசாயிகள் சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்ற
நிலையில், அவர்களுக்கு தேவையான உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கடந்த புதன் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த விடயம்
தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் சுமார் 200
ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்செய்கைக்கு விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும்
வகையில் உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
குறித்த திட்டம் வடக்கில் வெற்றியளிக்குமாயின், உருளைக் கிழங்கு இறக்குமதியை கணிசமான அளவு குறைத்து அந்நியச் செலாணியை மீதப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் உருளைக் கிழங்கின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தீன்பண்டங்களை உற்பத்தி செய்யும் சர்வதேச தரத்திலான
தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை வரவேற்ற ஜனாதிபதி, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான
ஒத்துழைப்புக்களை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் வடக்கு விவசாயிகளின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் தேவையான உருளைக்
கிழங்கு விதைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி 5 இராணுவ சிப்பாய்கள் காயம்
மின்சாரம் தாக்கி 5 இராணுவ சிப்பாய்கள் காயம்
திருகோணமலை – சீனக்குடா விமான படை முகாமில் மின்சாரம் தாக்கிய நிலையில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சீனக்குடா விமான படை முகாமில் நிகழ்வொன்று இடம்பெற உள்ளதாகவும் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளுக்காக இவர்கள்
ஏணியை எடுத்துச் சென்றபோது மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து ஐந்து விமான படை வீரர்களையும்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வரும் தர்மேந்திரா (24 வயது), விக்ரமசிங்க
(26 வயது), ரத்னசிறி (31 வயது), பிரதீப் குமார (31 வயது), திலகசிறி (39 வயது) எனவும் தெரியவருகின்றது.
இரு காவல்துறை அதிகாரிகள் கைது – நடந்தது இதுதான்
இரு காவல்துறை அதிகாரிகள் கைது – நடந்தது இதுதான்
இலங்கையில் இரு உயர் பதவிகளை கொண்ட காவல்துறை அதிகாரிகள்
கடமை நேரத்தில் மது போதையில் காணப்பட்டதால் அவர்கள் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்
காவல்துறையினர் இரண்டாயிரத்து ஐநூறு இரகசிய உளவுத்துறையினரால்
கண்காணிக்க படுவதுடன் ,லஞ்சம் மற்றும் முறைகேடாக செயல் பட்டால்
அவர்கள் கைது செய்ய படுவதுடன் இரு நாளுக்குள் பதவி விலக்க
படுவார்கள் என கோட்டா அறிவித்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
ரணில் மீது கடும் விசாரணை ..? சிறை செல்வாரா ..?
ரணில் மீது கடும் விசாரணை ..? சிறை செல்வாரா ..?
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில்
விக்கிரமசிங்க தற்பொழுது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னணியில் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டும் வரும் இபவர் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என அஞ்ச படுகிறது
42 மாலுமிகள் 6000 பசுக்களுடன் நடுக்கடலில் மூழ்கிய கப்பல்
42 மாலுமிகள் 6000 பசுக்களுடன் நடுக்கடலில் மூழ்கிய கப்பல்
ஜப்பான் அருகே 42 மாலுமிகள், 6000 பசுக்களுடன் சரக்கு கப்பல் ஜப்பான் அருகே நடுக்கடலில் மூழ்கியது.
42 மாலுமிகள், 6000 பசுக்களுடன் நியூசிலாந்திலிருந்து சீனா நோக்கி புறப்பட்டது
சரக்கு கப்பல். ஜப்பானின் தென்மேற்கு கடல்பகுதியின் அமாமி ஒஹிமா தீவு அருகே பயணித்தது.
அப்போது, கடும் புயல் வீசியதால், கப்பலின் இன்ஜின் பகுதியை ராட்சத அலை தாக்கியதில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்து மூழ்கியது.
இதில் பயணித்த மாலுமிகளில் 39 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்,
இரண்டு பேர் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள், இரண்டு பேர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் கப்பலுடன் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது.
புயல் தா்க்கிய போது ஒரு மாலுமி மட்டும் கடலில் குதித்து உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திலுள்ள விசேட அம்சங்கள்
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திலுள்ள விசேட அம்சங்கள்
நேற்றைய தினம் வர்த்தமானி அறிவிப்பின மூலம் வெளியான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூல வரைபில், 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம்,
பாராளுமன்றத்தின் பதவிக் காலம் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கபபட்டள்ளது.
அதேவேளை ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக
வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தில்
இருந்த 10 பேரைக்கொண்ட அரசியல்யாப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை அமைக்கப்படவுள்ளது
19ஆவது திருத்தத்தில் அரசியல் யாப்புப் பேரவையில் பத்து அங்கத்தவர்கள் இருந்தபோதும் புதிய பாராளுமன்ற பேரவை ஐந்து
அங்கத்தவர்களைக்கொண்டதாக மாத்திரமே இருக்கும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,சபாநாயகர், பிரதமரின் பிரதிநிதி மற்றும்
எதிர்க்கட்சித்தலைவரின் பிரதிநிதி ஆகியோரே புதியபாராளுமன்ற பேரவையின் ஐந்து அங்கத்தவர்களாக இடம்பெறுவர்.
அரசியல்யாப்பு பேரவையில மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பேரவையில் இவர்கள் இடம்பெறமாட்டார்கள்
20ஆவது திருத்தத்தில் சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 20 ஆவது திருத்தத்தில் அது தொடர்பில் சில
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20 ஆவது
திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும்
அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.
19 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் 20
ஆவது திருத்தத்தில் திருத்தப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35-இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது. ஆனால், 20 ஆவது
அரசியலமைப்பு திருதத்திற்கு அமைய, பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று , பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக 20 ஆவது அரசியலமைப்பு திருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் என்ற வரையறை 20 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தத்தில்
அதிகபட்சமாக 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து 20ஆவது திருத்தத்தில்
இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எந்த அமைச்சையும் தன்வசம் கொண்டிருக்க முடியாது எனும் 19ஆவததிருத்தச் சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி
எத்தனை அமைச்சு பொறுப்புக்களையும் கொண்டிருக்க முடிவதுடன் நிறுவனங்களையும் தமது நிருவாகத்தின் கீழ் கொண்டிருக்கலாம்
சட்ட மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக் கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக 10 பல்கலைக்கழகங்கள் – பீரீஸ் அதிரடி அறிவிப்பு
தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக இன்றும் 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய
அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து
தெரிவித்தார். சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது
குறித்தும், இது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2025 நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி-கோட்டா முழக்கம்
2025 நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி-கோட்டா முழக்கம்
பொது மக்களுக்கான நீர் வழங்கும் திட்டங்கள் உயர் தரத்துடன்…
• வீதிகளை நிர்மாணித்தல் நீர்வழங்கல் அமைச்சுடன் ஒன்றிணைந்து…
2025 நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின்
எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
ஆறுகள்இ நீர்நிலைகள் மற்றும் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதேசங்களை சுத்தம் செய்து புனர்நிர்மாணம் செய்வதற்கு விசேட
கவனத்தை செலுத்திஇ இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள்
தொடர்பாக நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
‘அனைவருக்கும் நீர்’ சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதியாகும்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் 47 இலட்சம் குடும்பங்களுக்கு நீரை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளின் மூலம் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதோடுஇ அதற்காக 40இ000 கிலோமீற்றர்கள் நீர் குழாய்கள் புதிதாக பதிக்கப்படவுள்ளது. இதுவரை நீர்வழங்கலுக்கு செலவிடப்பட்ட செலவினங்களில் அரைவாசி நிதியை பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. நீரோடைகள்இ நீரூற்றுக்களை இனங்காணல் அவற்றை அபிவிருத்தி செய்தல் இவ்வேலைத்திட்டத்தின் படிமுறைகளாகும். நீரூற்றுக்களை பாதுகாப்பதற்காக மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் முழு நீர் வழங்கலில் 45மூ வீதம் நீர்க் கசிவின் மூலம் வீணாக்கப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களில் புதிதாக நீர்க்குழாய்களை பொருத்துவதன் மூலம் அதனை 15மூ வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. நீரை பாதுகாப்பதற்காக நீர்க் கசிவுள்ள இடங்களை இனங்கண்டு புதிதாக நீர்க்குழாய்களை பொருத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் உயர் தரத்தில் சுத்திகரிக்கப்பட்டு வீடுகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி தனது அவதானத்தை செலுத்தினார்.
நீர்க்குழாய்களை பொருத்தும்போது பாதைகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அதன் மூலம் தேசிய சொத்து அழிவடைவதை
தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்வழங்கல் சபை ஒன்றிணைந்து அபிவிருத்தித்திட்டங்களை
செயற்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கு அவசியமான
செலவினத்தை 30மூ வீதம் வரை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
மழை நீரை சேகரித்தல் மற்றும் நாட்டில் உள்ள குளங்கள்இ நீர்த் தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல்இ புதிதாக குளங்கள் மற்றும் நீரை தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகளை
நிர்மாணிப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. நீர்ப்பற்றாக்குறை உள்ள பிரதேசங்களுக்கு நீரை கொண்டு செல்வதற்கு புதிய கால்வாய்கள் மற்றும் குழாய்களை
கொண்டமைந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் புதிய நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஇ இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின்
செயலாளர் பீ.பி.ஜயசுந்தரஇ அமைச்சுஇ இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்இ துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருடன் பொது மக்கள் நீர் வழங்கல்
செயற்திட்டத்தின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 386 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (03) காலை 06 மணிமுதல் இன்று (04) அதிகாலை 05 மணிவரையான
காலப்பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 177 சந்தேக நபர்கள் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த
குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் 118 செயலிகளைதடை செய்யும் இந்தியா குமுறும் சீனா
சீனாவின் 118 செயலிகளைதடை செய்யும் இந்தியா குமுறும் சீனா
உலகில் முதன்மை வல்லரசாக மாற்றம் பெற்று வரும் சீனாவின் ஆதிக்கம்
உலக மக்களை கட்டி போட்டுள்ளது ,இதில் டிக் டாக் பிரபலமான சமூக வலைத் தளமாகும் ,
இது உள்ளிட்ட சுமார் நூற்றி பதினெட்டு செயலிகளை தாம் தடை செய்ய உள்ளதாக இந்தியா மீள இன்று அறிவித்துள்ளது
இதனால் சீனா இந்தியாவுக்கு இடையில் முறுகல் நிலை உக்கிரம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
வாயில் ஏற்படும் துர்நாற்றம் இந்த நோயின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். எனவே வாய்துர்நாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.
வாய் துர்நாற்றம்… இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்..
வாய் துர்நாற்றம்
அழகான முகத்துடன் பிரகாசமான பல் வைத்திருப்பதும் சிறப்பு. ஆனால் துர்நாற்றம் என்றால் யாரும் உங்களுடன் பேச விரும்ப
மாட்டார்கள். இது உடல்நலம் தொடர்பான வேறு சில காரணங்களால் ஏற்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, வாயின் வாசனையும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். நீங்களும் இந்த
பிரச்சனையுடன் போராடுகிறீர்களானால், கெட்ட மூச்சுக்கு என்ன காரணம், கெட்ட மூச்சுடன் அதை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்?
வாய்வழி தொற்று, துரித உணவை அதிகமாக பயன்படுத்துதல், வாய் வறட்சி அல்லது எந்தவிதமான போதைப்பொருள் உள்ளிட்ட மோசமான வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன.
நம் வாயில் உள்ள உமிழ்நீர் நம் வாயை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது பல நோய்களிலிருந்து பற்களையும்
பாதுகாக்கிறது. இருப்பினும், வாயில் உமிழ்நீர் இல்லாதது பற்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
-நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். எதையாவது சாப்பிட்ட பிறகு அது மிகவும் துர்நாற்றம்
வீசுகிறது என்று நீங்கள் நினைத்தால், முதலில் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- புகைபிடித்தல் பல வழிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தால், அது உங்கள் பிரச்சினையை இரட்டிப்பாக்கும்.
- உண்மையில் சிகரெட் அல்லது புகைபிடித்தல் உங்கள் வாயில் ஒரு துர்நாற்றத்தை உண்டாக்கி உங்கள் வாயை உலர வைக்கும். இது உங்கள் துர்நாற்றத்தை மோசமாக்கும்.
- உங்கள் வாயிலிருந்து வாசனை வருகிறதென்றால், சைனஸ், வாய் அல்லது தொண்டை தொடர்பான கடுமையான பிரச்சினை
- உங்களுக்கு இருக்கலாம். சைனஸ் நோய்த்தொற்றுகள், உடலில் நீரின் பற்றாக்குறை, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, உங்கள்
- மேல் அல்லது கீழ் சுவாசக் குழாயில் தொற்று மற்றும் டான்சில்ஸ் இதன் விளைவாக வரலாம். இதன் பாக்டீரியா உங்கள் வாயின் வாசனையை ஏற்படுத்தும்.







