ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?
ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?
ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
ஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து
விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார்
என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.
ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும்
தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை.
மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது
முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.
முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு
மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.
85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு
பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக
வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.
எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.
வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க
வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க
இந்த சூப் குடித்தால் குடல் புழுக்கள் நீங்கும். வயிற்றில் புண், கிருமித் தொற்று இருந்தால் சரியாகும். பசியைத் தூண்டி, செரிமான ஆற்றலைக் கொடுக்கும். உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
வயிற்றில் புண், கிருமித் தொற்றை குணமாக்கும் வேப்பம்பூ கொள்ளு சூப்
வேப்பம்பூ கொள்ளு சூப்
தேவையான பொருட்கள் :
வேப்பம்பூ – 4 டீஸ்பூன்,
கொள்ளு – 50 கிராம்,
மிளகு – 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 2,
அன்னாசிப் பூ – 5 கிராம்,
நல்லெண்ணெய் – 25 மி.லி,
கடுகு, மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
பூண்டு – 50 கிராம்.
வேப்பம்பூ கொள்ளு சூப்
செய்முறை:
கொள்ளுவை நன்றாக வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
நல்லெண்ணெயில் வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரை, நன்றாகக் கொதிக்கவிடவும்.
இதில் மஞ்சள் தூள் சேர்த்து, கொள்ளுப் பொடியைக் கட்டி இல்லாமல் கரைத்துச் சேர்க்கவும்.
வயிற்றில் புண் கிருமித் தொற்றை குணமாக்க இதை பண்ணுங்க
இதில், வறுத்த வேப்பம்பூ, உப்பு சேர்க்க வேண்டும்.
மிளகு, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ இவற்றை நன்றாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பூண்டு, அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையைக் கொதிக்கும் சூப்பில் கொட்டி, கலக்கி இறக்கவும்.
சத்தான வேப்பம்பூ கொள்ளு சூப் ரெடி.
தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா விஜய்?
தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா விஜய்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஊரடங்கு காரணமாக
இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த
படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.
விஜய்
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவெனில், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான ‘தளபதி’
படத்தின் தலைப்பை இந்த படத்துக்கு வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் குறித்து
இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை
வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், தன்னுடைய வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்திருக்கிறார்.
வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை… வைரலாகும் வீடியோ
கீர்த்தி பாண்டியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது
சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ’தும்பா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி பாண்டியன் விவசாய பணிகளை செய்து அதை தனது
சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு
ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார்.
கீர்த்தி பாண்டியன்
அதை வீடியோ பதிவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், கீர்த்தி
பாண்டியனின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த இளம் நடிகையின் வீர செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு
விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தமிழ்
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
கொரோனா பிரச்னையால் பொருளாதார ரீதியாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனது
சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
விஜய் ஆண்டனி
தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதால் நடிகர் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என்
தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் பெப்சி தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான
பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்” என்று கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்
அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே கொரோனா தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின்
பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம் – நிபுணர்கள் கவலை
கொரோனா வைரஸ் பரிசோதனை
வாஷிங்டன்:
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். தடுப்பூசியை
பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும், இது தனது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்புகிறார். அங்குள்ள
அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனையை எட்டி உள்ளது.
இதற்கிடையே தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும்
மூன்றாவது கட்ட சோதனை முடிவதற்கு முன்பே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
எனவே அக்டோபர் மாதத்திலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு, மாகாண கவர்னர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், கொரோனா தடுப்பூசியை வினியோகிப்பதற்காக மெக்கசன் கார்ப்பரேஷன் நிறுவனம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், தடுப்பூசியை
சுகாதார துறை, ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்வதற்கான அனுமதி கோரி அந்த நிறுவனத்திடம் இருந்து மாநிலங்களுக்கு விரைவில் விண்ணப்பங்கள் வரும் என்றும், அதற்கு தயாராக
இருக்குமாறும் கூறி உள்ளார். மேலும் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து நவம்பர் 1-ந் தேதிக்குள் முழு அளவில் மக்களுக்கு
தடுப்பூசியை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
கொரோனா தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் இரு முறை போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே, ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின்
பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள். மூன்றாவது கட்ட
பரிசோதனையை நடத்தாமலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றால், அந்த மருந்தின் செயல்பாடு பற்றிய
முழு தகவலும் எப்படி தெரியும்? என்று பிலடெல்பியா குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் பால் ஆப்பிட் கேள்வி எழுப்பி உள்ளார்.
தடுப்பு மருந்து வேலை செய்யுமா? முழு அளவில் பாதுகாப்பானதுதானா? என்பது தெரியும் முன்பே அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இருப்பது மிகுந்த கவலை
அளிப்பதாக பேய்லர் பல்கலைக்கழக துணை வேந்தர் பீட்டர் ஹோட்டஸ் தெரிவித்து இருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதை ‘அக்டோபர் ஆச்சரியம்‘ என்றுதான் கூற
வேண்டும் என்று மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம் கூறி உள்ளார்.
என்றாலும் இதுவரை நடத்தப்பட்ட 2 கட்ட பரிசோதனைகளின் மூலம், பெரிய அளவில் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும்
எழவில்லை என்றும், தேவையான நோய் தடுப்பு சக்தியை தடுப்பூசி வழங்கி இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறி இருப்பதாக மருத்துவ இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.
சனோபி மற்றும் கிளாஸ்கோஸ்மித்லைன் மருந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், மனிதர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் ஆரம்பகட்ட
பரிசோதனையின் முடிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும், அடுத்ததாக தடுப்பூசியை அமெரிக்காவில் 11 இடங்களில் 440
பேருக்கு செலுத்தி பரிசோதிக்க தீர்மானித்து இருப்பதாகவும், அதன் முடிவு டிசம்பர் மாத தொடக்கத்தில் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
கண்ணீர் விட்ட சந்திரிக்கா
மரமொன்றை அடியோடு வெட்டினாலும் அதன் வேர்கள் பரவியிருந்தால், அம்மரம் மீண்டும் முளைக்குமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,
அதற்குச் சில காலமெடுக்கும்; அதுவரையிலும் நான், உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தொடர்பில் தெரியாது. ஆனால், இளைஞர்களை ஒன்றிணைத்து, மரத்துக்கு உயிர்கொடுப்பேன்” என்றார்.
அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்து ஒரே கட்சி; நாட்டுக்காகப் பல நல்ல விடயங்களைச் செய்த கட்சியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
எனத் தெரிவித்த அவர், அவ்வாறானதொரு கட்சியின் தலைவிதியை எண்ணி, மனவருத்தம் அடைகின்றேன் என்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு நேற்றாகும் (02). அதனையொட்டி, தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் இன்றைய நிலையை எண்ணும்போது, படுக்கையில் இருந்து காலையில் எழும்புவதற்கே தோன்றவில்லை. இதற்குச் சில வேளைகளில் நானும் பொறுப்புக்கூற
வேண்டியவளாகின்றேன். காரணம், நான் செய்ததுக்காக அல்ல; செய்யாமல் விட்ட விடயங்களுக்காகவே பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
எனது தந்தை, கட்சியை உருவாக்கினார். தாய், அதற்கான சட்டங்களை உருவாக்கி கட்சியைப் பலப்படுத்தினார். அதனை நான், முன்னோக்கிக் கொண்டு சென்று பலப்படுத்தினேன். 2007ஆம் ஆண்டிலிருந்து கட்சியுடன் இணைந்து, அரசியலை
முன்னெடுக்குமாறு அழைப்புகள் பல வந்தன. அப்போது, பல கனவுகளுடன் நாட்டின் நிலையைக் கருத்தில்கொண்டு 2015ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்கு வந்தேன். இதற்கமைய பெரிய
கூட்டணியை உருவாக்குவோமெனத் தீர்மானித்து, கூட்டணியையும் உருவாக்கி, பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். நல்லாட்சியின் 100 நாள் வேலைத்திட்டமும் இதில்
உள்ளடங்குவதாகத் தெரிவித்த அவர், நாட்டுக்காகக் கட்சி முன்னெடுத்த அனைத்தும், எம்மால் அதிகாரத்துக்கு கொண்டுவரப்பட்ட தனியொருவரால் அழிக்கப்பட்டன என்றார்.
தனக்குப் பின்னால் வந்த இரண்டு தலைவர்களும் கட்சியின் அழிவுக்குப் பொறுப்பு கூறவேண்டும். ஒருவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழித்து, அவருக்குத் தேவையான இலங்கையில்
பிரபலமான கெசினோக்காரர்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள் இருவர், பெரிய சூதாட்டக்காரர்கள், கசிப்புக் காரர்களைக் கொண்டு வந்தார்; அவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார்.
அவர்களுக்குப் பெரிய பதவிகளையும் வழங்கி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றால் இதுதான் என்ற பிம்பத்தைக் காண்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, கட்சியின் செயற்பாடுகளை நிறுத்தமாறு தன்னிடமே தெரிவித்ததுடன், தன்னையும்
கட்சியிலிருந்து தூரமாக்கினர் என்றார். ஆனால், இந்தக் கட்சியை முழுமையாக அழிக்க முடியாது என்றார்.
தூர நோக்கு, பலம்மிக்க சிந்தனை, சிரேஷ்ட உறுப்பினர்களின் இரத்தத்தால் வளர்க்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட இக்கட்சியை அழிக்க முடியாது.
மரமொன்றை அடியோடு வெட்டினாலும், மரத்தின் வேர் பரவியிருந்தால் அது முளைக்கும்; ஆனால், அதிக நாள்கள் எடுக்கும். அதுபோலவே, எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியெனும் இந்த மரமும்
முளைக்கும். அப்போது, நான் உயிருடன் இருப்பேனோ தெரியாது. ஆனால், இந்த மரத்துக்குப் பலம் சேர்ப்பதற்குத் தேவையான இளைஞர் சமூகத்தை உருவாக்க ஒத்துழைபேன் என்றார்
புதிய அரசியலமைப்பை உருவாக்க 09 பேர் கொண்ட குழு
புதிய அரசியலமைப்பை உருவாக்க 09 பேர் கொண்ட குழு
புதிய அரசியலமைப்பு வரைவினை உருவாக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா குழுவின் தலைவராவார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
நீதித்துறையுடன் தொடர்புடைய ஏனைய 8 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளை ஒழிக்க இந்தியா விடுமா ..?
மாகாண சபைகளை ஒழிக்க இந்தியா விடுமா ..?
மாகாண சபை முறைமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய சரியான முறையெனத் தெரிவித்த முன்னாள் எம்.பி.
ஹிருணிகா பிரேமசந்திர, மாகாண சபை முறையை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவால் முடியாது என்றார்.
இலங்கைக்குள் மாகாண சபை முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறிக்கொண்டாலும் இந்தியா ஒரு முறை சீற்றமடைந்தால், இவர்கள் அடங்கிடுவர் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
அரசாங்கம், 13ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு, மாகாண சபை முறையை முற்றாகத் துடைத்தெறிய முயற்சிப்பதாகக்
கூறிக்கொண்டிருந்தாலும், இந்தியாவைப் பகைத்துக்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே 13ஆவது திருத்தத்தை அமல்படுத்த வேண்டுமென்ற இணக்கப்பாடு இந்தியாவுடன் எட்டப்பட்டதெனத் தெரிவித்த அவர், மாகாண
சபைகள் அவசியமில்லை எனக் கூறும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர போன்றவர்கள், நாட்டில் தேசிய பிரச்சினை இன்றும் முடிவுக்கு வரவில்லை என்பதை மறந்துவிட்டனர் என்றார்.
எவ்வாறாயினும், மக்கள் மத்தியில் பிரச்சினையொன்று நிரந்தரமாகவே இருக்க வேண்டுமென்ற நோக்கம், நாட்டின்
அரசியல்வாதிகளுக்கு உள்ளதெனவும், அவ்வாறான பிரச்சினைகள் நீடித்தால் மாத்திரமே அவர்களால் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் சாடினார்.
எவ்வாறாயினும், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியமென்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள்
சக்தி உள்ளதெனத் தெரிவித்த அவர், அதனூடாக நாட்டின் சகல மாகாணங்களுக்கும் ஒரே அளவிலான அதிகாரப் பகிர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
1980களில் ஏற்பட்ட இனக்கலவரங்களைப் போன்று, புதிய கலவரங்களைத் தோற்றுவிக்கவே மாகாண சபை முறைமையை
நீக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவெனச் சாடிய அவர், மாகாண சபைகள் முறைமை ‘வெள்ளை யானை’ ஆவதற்கு
அதன் பணியாளர்களும் அதற்குத் தெரிவான உறுப்பினர்களுமே காரணமென்றும் சாடினார்.
கிழக்கு மாகாண ஆளுனருடன் மகிந்தா சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கும், பிரதமர் மஹிந்த
ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று (2020.09.02) அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் பிரதமருக்கு
தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை
விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை
மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள்
பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்து கொண்டார்.
13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து அமைச்சரவையில் ஒரு சொல்லேனும் பேசப்படவில்லை
13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து அமைச்சரவையில் ஒரு சொல்லேனும் பேசப்படவில்லை
13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒரு சொல்லேனும் பேசப்படவில்லை
என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று காலை
நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரவையில் விடயமொன்றில் தீர்மனம் மேற்கொள்வதற்கு நீண்ட நாள் செல்லக்கூடும், ஆனால் 20 ஆவது அரசியல் அமைப்பு
திருத்தம் குறித்து அமைச்சரவையில் விரைவாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து பேச்சப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் அமைச்சரவையில் ஆராயப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் 3 வாரத்தின் பின்னர்
சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனே இது நிறைவேற்றப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது.
இந்த திருத்தத்திற்கு எதிராக எவராவது நீதி மன்றம் சென்றால் மேலும் 3 வார காலம் செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பு விரிவாக ஆராயப்படாமல் அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றாது.
சகல தரப்பினரும் கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். புதிய அரசியல் யாப்பு
வகுப்பது ஒருவிடயம். இதற்கு பிரசித்திபெற்ற யாப்பு சட்டத்தரணி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவே இதனை ஆராயும் என்று தெரிவித்த அமைச்சர் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து விளக்கமளிக்கையில்
முன்னைய அரசாங்கமும் சர்வதேசமும் இது குறித்து திருப்தி கொண்டிருக்கவில்லை.
நாட்டின் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்க வேண்டுமா? சபாநாயகரிடம் இருக்கவேண்டுமா? என்ற இழுவறி நிலை
நிலவியது. இதனால் நாட்டை முன்னெடுக்க முடியாதிருப்பதாக முன்னால் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காகவே அரசியல் யாப்பில் 20 ஆவது திருத்தத்தை மேற்கொண்டு நாட்டை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம், 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு திருத்தம் ஆகியவற்றை
மேற்கொள்வதற்காக மக்கள் அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளனர்.
எந்த சந்தர்ப்பத்திலும் 3 இல்2 பெரும்பான்மையை பெறமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜயவர்தன தெளிவாக
தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த பொது தேர்தலில் மக்கள் இந்த நிலைப்பாட்டை புறந்தள்ளி சமகால அரசாங்கத்திற்கு 3 இல் 2 பெரும்பான்மையை வழங்கியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்திலும் புதிய அரசியல் யாப்புக்காக யாப்பு ஒன்று வரையப்பட்டுள்ளது. அதிலிருந்த சில விடயங்களில் கவனம் செலுத்த முடியும் அல்லவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்
அந்த யாப்பு திட்டத்தில் நாட்டை சமஸ்டியாக பிரிப்பதற்கான விடயங்கள் உண்டு அதனால் அதனை எற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்
இலங்கை கடலில் எரியும் வெளிநாட்டு கப்பல்
இலங்கை கடலில் எரியும் வெளிநாட்டு கப்பல்
பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு
அப்பால் உள்ள கடலில் எரிபொருளுடன் வந்த கப்பலொன்றில் தீ பற்றிக்கொண்டது.
MT நியூ டைமைன் கப்பலில் உள்ள ஊழியர்களை மீட்பதற்கு தேவையான
நடவடிக்கையை கடற்படை மேற்கொண்டிருப்பதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் இந்தியாவை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பணியாளர்களை மீட்கும் பணியை திருகோணமலை கடற்படை முகாமில்
இருந்து 2 கப்பல்களும், ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமில் இருந்து
ஒரு கப்பலும் சம்பந்தப்பட்ட கடற்பிரதேசத்திற்கு சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த கப்பலை அவதானிப்பதற்காக குறிப்பிட்ட கடல் பிரதேசத்தில்
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளர்.
இஸ்ரேல் இராணுவ அடாவடி – கழுத்தை நெரிக்கும் பயங்கரம்
இஸ்ரேல் இராணுவ அடாவடி – கழுத்தை நெரிக்கும் பயங்கரம்
பாலஸ்தீனத்தை சேந்த மக்கள் அமைதிவழி போராட்டத்தை நடத்தினர் ,இதில் போராட்டம் நடத்திய
நபர் ஒருவரை வீழ்த்தி அவரது கழுத்தில் காலால் நெரித்து அவரை கொலை செய்யும் நிலைக்கு அழைத்து சென்ற பின்னர் இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன
இது இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக அந்த மக்கள் மீள போராடும் செயலுக்கு வழி அமைத்து கொடுக்கும் செயலாக பார்க்க முடிகிறது
சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் ஏவுகணை தாக்குதல்
சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் கடும் ஏவுகணை தாக்குதல்
மத்திய சிரியாவின் மிக முக்கிய நான்கு இராணுவ நிலைகளை இலக்கு
வைத்து இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன ,இதில்
சிரியா அரச இராணுவத்திற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ரசியா படைகள் களத்தில் உள்ள பொழுதும் சிரியா இஸ்ரேல் மேற்கொள்ளும்
இந்த தாக்குத சிரியா படைகளிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பகுதிக்கு அருகில் ஈரான் இராணுவ நிலைகள் உள்ளமை இங்கே
சுட்டி காட்ட தக்கது ,எனினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபாரங்ககள் தெரியவரவில்லை
ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்
ஒரே நாளில் லண்டனுக்குள்கடல்வழியாக நுழைந்த 409 அகதிகள்
பிரிட்டனுக்கும் கடல்வழியாக சுமார் 409 அகதிகள் சிறிய ரக பாடகுகள் மூலம் உள்நுளைந்துள்ளனர்
இவர்களது வரவை அவதானித்த கடலோர காவலடையினர் அவர்களை
கடல் எல்லையில் வழிமறித்து கைது செய்தனர்
கறுப்பின
மக்களே அதிகம் இவ்விதம் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைந்துள்ளனர்
மிகவும் ஆபத்தான கடல்வழியில் சிரிய மிதக்கும் படகுகளில் உள்நுளைந்துள்ளது குறிப்பிட தக்கது
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை தடுக்க பிரிட்டன் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்ற பொழுதும் அகதிகள்
நூற்றுக்கணக்கில் நுழைந்து வருவது பெரும் நெருக்கடியை அரசுக்கு ஏற்படுத்தியுள்ள்து குறிப்பிட தக்கது

ஜெர்மன் விமானத்தை வானில் இடைமறித்த ரஷியா விமானங்கள்
ஜெர்மன் விமானத்தை வானில் இடைமறித்த ரஷியா விமானங்கள்
பால்டிக் கடல் பகுதியில் ஊடுருவிய ஜெர்மன் விமானத்தை
ரசியாவின் Sukhoi-27 fighter ஜெட் விமானம் இடைமறித்து விரட்டியது
தமது எல்லை பகுதிக்குள் ஊடுருவிய ஜேர்மனிய விமானங்களையே
தாம் கண் காணித்ததாக ரசியா தெரிவித்துள்ளது
ஜெர்மனோ அத்துமீறி ரசியா தமது வான்வெளியில் குறுக்கிடுவதாக குற்றம்
சுமத்துகிறது ,நேட்டோ படைகள் பால்டிக் கடல் பகுதியில் கூட்டாக பயணித்து
வருகின்றனர் ,ரசியாவின் ஊடுருவலை கண்காணிக்கவே அவர்கள் அந்த பகுதியில் நடமாடி வருகின்றனர்
அவ்வாறான அவர்கள் நடவடிக்கையை ரசியா நேரடியாக சென்று மிரட்டி
செல்லும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க
முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க
இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில்
பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இளம் வயதிலேயே முகச்சுருக்கமா? கவலைய விடுங்க… இத டிரை பண்ணுங்க…
இளம் வயதிலேயே முகச்சுருக்கமா?
இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வறட்சியான தேகம், எண்ணெயில்
பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள். காய்ச்சி
ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும்.
காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும். கேரட் சாறு, தேன் ஒரு டேபிள் ஸ்பூன் கேரட்
சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும்.
20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும். பப்பாளி, பாதம் எண்ணெய் பப்பாளிப்பழம்
முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும்.
பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக
முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.
வைட்டமின் ஈ முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம்
கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து
முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
ஆரஞ்ச் ஜூஸ் முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு
தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தண்ணீர் குடிங்க தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும்
குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள்
மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது
எஸ்.பி. பாலசுப்ரமணியம் எழுதிய 3 வார்த்தைகள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு
மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தேறிவருவதற்கான
அறிகுறிகள் தெரிகிறது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியுள்ளார்.
சரண், எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பி உடல்நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95 சதவீத சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற் போது
சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில விஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் பேனா,
பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘லவ் யூ ஆல்’ என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார்.
லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்சுகள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள்
என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார். இவரின் இந்த எழுத்து குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்
பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்
நடிகை பூர்ணிமா பாக்யராஜின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்
பூர்ணிமா பாக்யராஜின் தாயார்
தமிழ் சினிமாவில் நடிகர், டைரக்டர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா என புகழ்பெற்றவர் பாக்யராஜ். கடந்த 1984 -ம் ஆண்டு
பிரபல நடிகையான பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமாவின் தாயார் சுப்புலட்சுமி ஜெயராம். இவருக்கு வயது 85.
பூர்ணிமாவின் தாயார்
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
சுப்புலட்சுமி ஜெயராமின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. இவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
ஜனாதிபதி ஆளும் காலத்தை அதிகரிக்க கோட்டா அரசு திட்டம் – மாற்ற படவுள்ள சட்டம்
ஜனாதிபதி ஆளும் காலத்தை அதிகரிக்க கோட்டா அரசு திட்டம் – மாற்ற படவுள்ள சட்டம்
இலங்கையில் அளவும் இரத்த வெறி பிடித்த கோட்டா ஆட்சியில் ஆளும்
ஜனாதிபதிகள் காலத்தைநீடிக்கும் நிலையான சட்ட மாற்றத்தை ஏற்படுத்த கோட்டா முயற்சித்து வருகிறார்
விரைவில் கடந்த கால ஆட்சியில் ஏற்படுத்த பட்ட மாறுதல்கள் மாற்ற
பட்டு புதிய ஆட்சி கால் ஆயூலை நீடிக்கும் வகையிலான சட்ட மாற்றங்கள் ஏற்படுத்த படவுள்ளது
இது சர்வாதிகார ஆட்சிக்கு உரித்தான முறையில் அமைய பெறவுள்ளதாக எதிர்பார்க்க படுகிறது .
தனித்து ஆட்சி அமைத்துள்ள கோட்டா அரசு தாம் நினைத்த படி எதனையும் செய்திடும் நிலையில் உள்ளனர் என்பதே இங்கே கவனிக்க தக்கது







