Tag: மின்சாரம் தாக்கி 5 இராணுவ
Posted in இலங்கை செய்திகள்
மின்சாரம் தாக்கி 5 இராணுவ சிப்பாய்கள் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 04/09/2020 Leave a Comment on மின்சாரம் தாக்கி 5 இராணுவ சிப்பாய்கள் காயம்
மின்சாரம் தாக்கி 5 இராணுவ சிப்பாய்கள் காயம்
திருகோணமலை – சீனக்குடா விமான படை முகாமில் மின்சாரம் தாக்கிய நிலையில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சீனக்குடா விமான படை முகாமில் நிகழ்வொன்று இடம்பெற உள்ளதாகவும் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளுக்காக இவர்கள்
ஏணியை எடுத்துச் சென்றபோது மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து ஐந்து விமான படை வீரர்களையும்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வரும் தர்மேந்திரா (24 வயது), விக்ரமசிங்க
(26 வயது), ரத்னசிறி (31 வயது), பிரதீப் குமார (31 வயது), திலகசிறி (39 வயது) எனவும் தெரியவருகின்றது.






