இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்

Spread the love

இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்

ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அர்மீனியா – அஜெரி இடையிலான மோதலில் 23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
அர்மீனியா அஜெரி இடையே மோதல்

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள்

அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அசர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில், நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அசர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய

படைகள் அசர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அசர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக்

மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *