Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

போருக்கு தயாராகுங்கள்-இராணுவத்திற்கு கட்டளை -பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்

போருக்கு தயாராகுங்கள்-இராணுவத்திற்கு கட்டளை -பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்

போருக்கு தயாராக இருக்கும்படி சீன வீரர்களை (பி.எல்,ஏ) அதிபர்

ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

போருக்கு தயாராகுங்கள்: வீரர்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்


ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40-வது ஆண்டு நிறைவை

நினைவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் குவாங்டாங் மாகாணத்தில்

உள்ள ராணுவ தளத்திற்கு சென்றார். அங்கு இருந்த வீரர்களிடம் மனதையும்

சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள் என அழைப்பு விடுத்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கோள் காட்டி ஆங்கில டி.வி.ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 12-ம்தேதி (திங்கட்கிழமை) இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை

குறைக்கும் வகையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை

நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 13-ம் தேதி சீன அதிபர் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில்

இருந்த விலக விரும்புகிறது. அமெரிக்கா தைவானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்று

தெரிவித்துள்ளது. இதனை மனதில் வைத்துதான் ஜின்பிங் பேசியிருப்பார் என கருதப்படுகிறது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரோனா தாக்கினால் காது கேட்காது – பிரிட்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால் காது கேட்காது – பிரிட்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனாவால் காது கேட்கும் திறன் இழப்பு – இங்கிலாந்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கும், ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி பாதிக்கும் என

கண்டறியப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இப்போது கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக

போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன் பல்லைக்கழக கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில், கொரோனா வைரசால் ஏற்படுகிற பக்க விளைவு,

செவித்திறன் இழப்பு என்றும், அதே நேரத்தில் உடனடியாக சரியான ஸ்டீராய்டு சிகிச்சை எடுக்கிறபோது, மீண்டும் கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தாக்கியபோது, பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து, ஸ்டீராய்டு

மருந்துகள் அளித்தும், ரத்தம் செலுத்தியும் அவர் குணம் அடைந்தார். ஆனால் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தன.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், வைரசால் ஏற்படுகிற அழற்சியும், உடலில் ரசாயனங்கள் அதிகரிப்பும் காது கேட்காமல் செய்து விடுகிறது என தெரிவித்தனர்.

Posted in உலக செய்திகள்

காரில் கிலோ கணக்கில் கஞ்சா -அதிர்ச்சியில் பொலிஸ் – கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்

காரில் கிலோ கணக்கில் கஞ்சா -அதிர்ச்சியில் பொலிஸ் – கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்

ஆந்திராவில் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக சென்ற போலீசார், விபத்தில் சிக்கிய காரில் 140

கிலோ கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு உதவச்சென்ற போலீஸ் – காரில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி
விபத்துக்குள்ளான கார்

ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து

ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதிய விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் விபத்துக்குள்ளான காரில்

இருந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக உடனடியாக சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், போலீசார் வருவதற்கு முன்னரே விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பிச்சென்றதால் சந்தேகமடைந்தனர். இதையடுத்து, விபத்துக்குள்ளான காரை சோதனை செய்தனர்.

அப்போது காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கார் விபத்துக்குள்ளானதால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பிச்சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, விபத்துக்குள்ளான காரையும், அதில் இருந்த 140 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம்

தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் கிலோ கணக்கில் கஞ்சா
காரில் கிலோ கணக்கில் கஞ்சா
Posted in உலக செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்- 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள்

ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருக்கலாம்

என அஞ்சப்படுகிறது.விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்காபூல்:


ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு

பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு

ஹெலிகாப்டர்களில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.


சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில்

ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ராணுவ ஹெலிகாப்டர்கள்
ராணுவ ஹெலிகாப்டர்கள்
Posted in உலக செய்திகள்

வரிக்கட்ட மறுத்த ரஜினிக்கு -எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

வரிக்கட்ட மறுத்த ரஜினிக்கு -எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி

நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக ரஜினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

மாநகராட்சி சொத்து வரி நோட்டீஸ்: ரஜினி மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபம்


சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த

நோட்டீசை ரத்து செய்யக்கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து

வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது என அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரஜினி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் சொத்து வரி நோட்டீசுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Posted in இலங்கை செய்திகள்

மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலி

மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலி

பலாங்கொடை பின்னவல, வலவேவத்த பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து

வீழ்ந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வலவேவத்த அரச தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறத்து கொண்டிருந்த

பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த அவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்

லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்

இலங்கையில் இருந்து லண்டனுக்கு ஸ்பான்சர் மூலம் வருகை தந்த தமிழ்

இளம் பெண் ஒருவர் ,கணவருடன் இணைந்து 14 நாட்களுக்கு வீட்டில் சுயதனிமை படுத்தி தங்கி இருக்க மறுத்து ,வெளியில் நடமாடியுள்ளார் .

இதனை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட்டுள்ளனர் .இவர்களை கண்காணித்து வந்தவர்களினாலே இந்த அபராத தொகை விதிக்க பட்டுள்ளது ,.

தற்பொழுது அமூல் படுத்த பட்ட சட்ட பிரகாரம் ஆறு பேருக்கு மேல் விழாக்களில் நபர்கள் கூட முடியாது ,மேலும் அயலவர்கள்

,அயல் வீட்டாருடன் உறவாடவோ ,செல்லவோ முடியாது என்ற விதிகள் ,

உள்ளது ,இதனை அலட்சியம் செய்து உலாவும் நம்ம தமிழர்கள் இவ்விதம் சிக்கி தவித்து வருகின்றனர்

அதுபோலவே பத்துமணிக்கு பின்னர்உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த தமிழர் கடை ஒன்றுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது .

இக்காலத்தில் அரசு விதித்துள்ள விதிகளை மீறி செயல்படின் அது கிரிமினல்

குற்றமாகிறது ,அவ்விதம் பாதிக்க பட்ட சில தமிழர்கள் கருத்துக்கள் இவ்விதமாக உள்ளனவாம் .

கடந்த தினம் நோயின் தாக்குதலில் சிக்கி 141 பேர் பலியாகியுள்ளனர் ,

ஆபத்தின் அபாயத்தை உணர மறுப்பவர்கள் ,..இவ்விதம் சிக்கிதவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது ,

மக்களே எச்சரிக்கை ,அரசு கூறும் விதிகளை பின் பற்றுங்கள் ,குளிர்காலத்தில்

நோயின் தாக்குதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரத்தை கடக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

நத்தார் தினத்திற்கு முன்பாக நாடு முழுமையாக அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறும் என்றே எதிர் பார்க்க படுகிறது ,

லண்டன் மாநகரம் அதிக நோயாளர்களை கொண்ட இரண்டாவது புள்ளியில்

நிற்கிறது ,இதனை அடுத்து சில சிட்டிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க

பட்டு அடித்து மூட படவுள்ளதாக லண்டன் மேயர் அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

    Posted in இலங்கை செய்திகள்

    பரீட்சைக்கு தோற்றிய மாணவனுக்கும் கொரோனா

    பரீட்சைக்கு தோற்றிய மாணவனுக்கும் கொரோனா

    இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்த, திவுலப்பிட்டிய

    பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்

    பரிசோதனையின்போதே, தொற்று இருப்பது

    உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, திவுலப்பட்டிய பொதுச் சுகாதாரப் பரி​சோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    இரத்மலான வைத்திய மத்திய நிலையமொன்றுக்கு பூட்டு

    இரத்மலான வைத்திய மத்திய நிலையமொன்றுக்கு பூட்டு

    இரத்மலான- கிரிவத்துடுவ பிரதேச வைத்திய மத்திய நிலையமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், அங்கு

    கடமையாற்றிய வைத்தியர் உள்ளிட்ட மூவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி ​அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர், இந்த வைத்திய மத்திய

    நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுள்ளதாலேயே குறித்த வைத்திய மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் ​தொழில்புரியும் நண்பரொருவரின் திருமணத்தில்

    கலந்துகொண்டதுடன், 12ஆம் திகதி இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    ரிஷாத் பதியுதீனை 6 பொலிஸ் குழுக்கள் தேடி வேட்டை

    ரிஷாத் பதியுதீனை 6 பொலிஸ் குழுக்கள் தேடி வேட்டை

    முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனை தேடி 6 பொலிஸ் (சீ.​ஐ.டி)

    குழுக்கள் விரைந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கு 6 பொலிஸ்

    (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

    Posted in இலங்கை செய்திகள்

    ஊரடங்கு சட்டம் – மேலும் 11 பேர் கைது

    ஊரடங்கு சட்டம் – மேலும் 11 பேர் கைது

    சில இடங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்

    ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில்

    கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் இதுவரையில் கைது செய்யப்பட்டோர்

    எண்ணிக்கை 135 ஆகும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகன தெரிவித்தார்

    Posted in உலக செய்திகள்

    சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா

    சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா

    கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு உருவாகியிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது.

    அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தடம் பதித்த கொரோனா நோய்த் தொற்றால் தற்போது 6.50 லட்சத்துக்கும் மேற்பட்டோhர்

    பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    செய்யப்பட்டுள்ளது. அதில் 3,441 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களாக நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால்,

    கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என கருதப்படுவதால், முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதுகுறித்த ஆய்வை முன்னெடுப்பதாகத் தெரிவித்தது.

    இதற்கமைய, சென்னையில் 421 பேருக்கும், கோவையில் 428 பேருக்கும், திருவண்ணாமலையில் 410 பேருக்கும் ரத்த மாதிரிகள்

    சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில, சென்னையில் 141 (33.4 சதவீதம்), கோவையில் 31 (7.2 சதவீதம்), திருவண்ணாமலையில்

    35 (8.5 சதவீதம்) பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் தானியங்கி வீதி சமிக்ஞைகள்

    கொழும்பு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் தானியங்கி வீதி சமிக்ஞைகள்

    கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்கள் சிலவற்றில் தெரிவு செய்யப்பட்ட வீதிகளில் தானியங்கி வீதி சமிக்ஞை முறை இன்று

    காலை 6.00 மணி தொடக்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான உத்தேச திட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.

    இந்த வீதிகளில் இதற்கு முன்னர் வாகன சமிக்ஞை நடவடிக்கைகளை பொலிஸாரே கையாண்டனர்.

    தானியங்கி வீதி சமிக்ஞை செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட வீதி வாகன நடவடிக்கைளுக்கு பொலிஸாரின் பங்களிப்பு இருக்க

    மாட்டாது. இந்த உத்தேச திட்ட நடைமுறை தொடர்பான விடயங்களை பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

    Posted in சினிமா

    காதலில் விழுந்த லட்சுமி மேனன்

    காதலில் விழுந்த லட்சுமி மேனன்

    சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய லட்சுமி மேனன், தான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

    காதலில் விழுந்த லட்சுமி மேனன்
    லட்சுமி மேனன்
    சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து

    பிரபலமானார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு

    சில ஆண்டுகள் முழுக்கு போட்டார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த வருகிறார்.

    சமீபத்தில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அவர் உடனடியாக மறுப்பு

    தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்நிகழ்ச்சி குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

    லட்சுமி மேனனின் இன்ஸ்டாகிராம் பதிவு

    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன், அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்

    ஒருவர், நீங்கள் சிங்கிளா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என பதிலளித்த லட்சுமி மேனன், கூடவே ஹார்டின் சிம்பலையும் பதிவிட்டுள்ளார்.

    அதே போல, திருமணத்தை பற்றி என்ன நினைக்கிறீங்க? என மற்றொரு ரசிகர் கேட்க, அது ஒரு மிகைப்படுத்தப்பட்டது என்று

    அவர் பதிலளித்துள்ளார். தற்போது நடிகை லட்சுமிமேனன் தான் சிங்கிளாக இல்லை என கூறி இருப்பதால், அவரது காதலர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    Posted in சினிமா

    விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்

    விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்

    விஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார்கள்.

    விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்
    விஜய் சேதுபதி


    இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை

    உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும்,

    விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.

    விஜய் சேதுபதி

    நேற்று மோசன் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வந்தனர்.

    இந்நிலையில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக, we stand with vijay Sethupathi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா

    தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா

    சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள

    இவ்வேளை ,ஏவுகணைகள் டாங்கிகள் ,விமனக்கல் , போன்ற

    முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா அவிற்பனை செய்ய உள்ளது

    இதற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது ,மேற்படி மில்லியன் டொலர்

    ஆயுத விற்பனை விவகாரம் சீனாவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

    சீனாவை அடக்கவும் ,சீண்டவுமே அமெரிக்கா இவ்விதமான வலிந்து

    தாக்குதல் உத்தி செயல் பாடாக இவ்விதமான நகர்வில் ஈடுபட்டு வருகிறது கவனிக்க தக்கது

    Posted in உலக செய்திகள்

    சிரியாவில் இருந்து உடனடியாக இராணுவத்தை விலக்க துருக்கிக்கு ஐரோப்பா – அழுத்தம்

    சிரியாவில் இருந்து உடனடியாக இராணுவத்தை விலக்க துருக்கிக்கு ஐரோப்பா – அழுத்தம்

    துருக்கி நாட்டு இராணுவம் சிரியாவின் வடக்கு பகுதியில் குவிக்க

    பட்டுள்ளன ,இதனால் அந்த மண்ணில் பெரும் போரும் , பதட்டமும் அதிகரித்துள்ளது

    இதனை அடுத்து தற்பொழுது அங்கிருந்து உடனடியாக துருக்கி

    இராணுவத்தை விலக்க வேண்டும் என ஐரோப்ப கடும் அழுத்தம் கொடுத்துள்ளது

    இதனை அடுத்து துருக்கி எல்லை பகுதி நோக்கி படிப்படியாக

    துருக்கிய இராணுவம் விலக்க படவுள்ளதா தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    வரும் வாரம் லண்டனில் முக்கிய சிட்டிகள் அடித்து பூட்ட உத்தேசம் – அதிக நோயாளர்களாக கணிப்பு

    வரும் வாரம் லண்டனில் முக்கிய சிட்டிகள் அடித்து பூட்ட உத்தேசம் – அதிக நோயாளர்களாக கணிப்பு

    பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரம் தற்போது அதிக நோயாளர்கள் கொண்ட ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

    இதனை அடுத்து எதிர் வரும் வாரம் முதல் முக்கிய பாதிப்பு கூடியசிட்டிகள் அடித்து பூட்ட படவுள்ளன

    இவ்வேளை உணவகங்கள் ,பார்கள் ,மற்றும் பலசரக்கு கடைகள் என்பன

    அடித்து பூட்ட படவுள்ளன ,அவை எந்த சிட்டி என எதிர் வரும் வாரம் முதல் என லண்டன் மேயர் சாஜிக்கான் அதிரடியாக அறிவித்துள்ளார்

    பிரிட்டனில் மூன்று மாநகரங்கள் அதிக சிவப்பு எச்சரிக்கைக்கு உள்ளாக்க

    பட்ட நிலையில் தற்பொழுது சாஜிகானின் இந்த முடிவானது அதிர்ச்சியை

    ஏற்படுத்தியுள்ளது ,எனினும் மாணவர்களை பாடசாலைக்கு தொடர்ந்து

    அனுப்பும் படி அரசு ,கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது ,இது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு

    இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு

    இன்று (13) நண்பகல் வரையில் திவுலப்பிட்டிய COVID 19 கொவிட்

    கொத்தணியில் பதிவாகியுள்ள தொற்றுக்குள்ளானோரின்

    எண்ணிக்கை 1446 என்று தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

    வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று புதிதாக 49 பேர் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

    COVID-19 பரம்பலின் தரவுகள்
    புதுப்பிக்கப்பட்டது 2020-10-13 13:46:11

    4893
    உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

    1552
    சிகிச்சை பெறும் நோயாளிகள்

    49
    புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

    3328
    குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

    13
    இறப்பு எண்ணிக்கை.

    Posted in இலங்கை செய்திகள்

    பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ,அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்

    பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ,அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்

    தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு

    அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

    வரி நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று இரவு முதல் டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100

    ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும்.

    இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்களை சதொச நிறுவனத்தில் கொள்வனவு

    செய்யும் போது ஒரு கிலோ பருப்பை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட கம்பனி மற்றும் சிலாபம் பெருந்தோட்ட கம்பனி என்பன கொழும்பு

    நகரத்திற்கான தேங்காய் வழங்களை அதிகரித்துள்ளன. எனவே நுகர்வோருக்கு சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான

    விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது