சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்
சுட்டியலினால் வாலிபனின் மண்டை உடைப்பு – லண்டனில் நடந்த பயங்கரம்
கடந்த இருபத்தி ஒன்பதாம் திகதி பிரிட்டன் West Bromwich பகுதியில்
முப்பது வயதுடைய வாலிபர் ஒருவர் மீது மர்ம நபர்கள் திடீர் சுட்டியல் தாக்குதலை நடத்தினர்
இதில் குறித்த வாலிபனின் தலைக்குள் சுத்தியல் புகுந்த நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு தற்போது காப்பற்ற பட்டுளளார்
எனினும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் குறித்த பகுதியில் நீல பட்டியல் கொண்டு அடைத்து
முற்றாக மக்கள் பாவனைக்கு தடை செய்தனர்
இதனால் பல மணிநேரம் அங்கு பதட்டம் ஏற்பட்டது பின்னர் அவை நீக்க பட்டது
தொடர்ந்து மேற்படி அகோர தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்
தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்
மஞ்சூர் அருகே நடந்த திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி
கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மிகவும் எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்ததுடன் கழுத்தில்
மாலையுடனும், மணமகள் பட்டுச்சேலை அணிந்து கொண்டு மாலையுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். திருமண
விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
மணமக்களின் குல வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?
என்று மணமகன் மணப்பெண்ணிடம் 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.
அதன்படி மணமகளிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று மணமகன் கேட்டார். அவர் 2 முறை கேட்டபோதும் மணமகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அப்போது
சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக கொஞ்சம் சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டபடி மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.
உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். அத்துடன் தாலி கட்ட விடாமல்
மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.
அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவர் திருமண பந்தத்தை
முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.
உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்க முயன்றனர். அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோர், மணமேடையில் அமர்ந்து மணமகனை திருமணம் செய்து
கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் கரம் பிடிப்பேன் என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.
அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய
எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார்.
தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றுக்கூறி
மணமகள் மணமேடையில் இருந்து எழும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே
பாலத்தில் வெள்ளம் – பயணிகள் அவதி – படம் உள்ளே
பொதுவாக பாலங்கள் அமைப்பது நீர் உள்ள இடங்களில்; நீர் ஆற்றின்
கீழே செல்ல வாகனங்கள் மேலே செல்வதற்கே. இதற்கு மாறாக நீர் பாலத்தின் மேலே செல்வதற்கு பாலம் ஒன்று கண்டி
மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட இரட்டைப்பாதை தொரகல நீவ்பீககொக் பிரதான பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.
“சங்கிலி” பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்தின் ஊடாக நாளாந்தம்
ஆயிரகணக்கான பொது மக்கள் பயணித்து வருகின்றன. தொhரகல கிராமத்திற்கும் நயாபான
தோட்டத்திற்குமாக இரண்டு அரச போக்குவரத்து சேவைகளும் தனியார்
பஸ்களும் முச்சக்கர வண்டிகளும் தொரகல பிரதேசத்தில் 15.000 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் நீவ்பீகொக்
தோட்டம் ஓல்ட்பீகொக் தோட்டம் நயாப்பன தோட்டம் தொரகல கிராமத்தை சேர்ந்ந மக்களும்; நாளாந்தம் இந்த பாihயை பாவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அன்மை காலங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த பாலத்தின் நிர்மாண பனிகள் சீர் இன்மை
காரணமாக பாலம் பழுதடைந்து குற்றும் குழியுமாக நீர் தேங்கி போக்குவரத்திற்கு பொருத்தமற்று காணப்படுகின்றது.
இதனால் பயணிகளும் பயணிக்கும் வாகனங்களும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இந் நிலையில் இந்த பாலத்தினை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை
லண்டன் Ilford டில் ஒருவர் சுட்டுக்கொலை
கடந்த தினம் இரவு ,
Balfour Road, Ilford, at 10.14மணியளவில் மரம் நபர் நடத்திய
துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் ,
மேற்படி கொலை தொடர்பில் ஸ்கொட்லந் யார்ட் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் முடியை எரித்த காப்பிலி
வடக்கு லண்டனில் பஸ்ஸில் பயணித்த பெண்ணின் முடியை எரித்த காப்பிலி
பிரிட்டன் வடக்கு லண்டன் பகுதியில் பயணிகள் போக்குவரத்து சேவையாக
விளங்கும் 328 பேரூந்தில் பயணித்த இளம் பெண் ஒருவரின் முடியை அதில் பயணித்த நபர் ஒருவ எரித்துள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த புகைப்படத்தினை போலீசார் வெளியிட்டுள்ளனர்
மேலும் பாதிக்க பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் ,எனினும் ஆபத்து இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

மாமியை அடித்து கொன்ற மருமகள்
மாமியை அடித்து கொன்ற மருமகள்
குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக, மருமகளால் தாக்கப்பட்ட மாமியார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின்போது
தாக்குதலுக்கு இலக்கான மாமனார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இச்சம்பவம், நேற்று (01) காலை, நானு-ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மாரிமுத்து கோவிந்தம்மா (வயது 80) என்ற 4 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார் என்றும் இவரது கணவர்
அங்கமுத்து மாரிமுத்து (வயது 85 ), வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மூன்று பிள்ளைகளின் தாயான மருமகள், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைக்கலப்பாக மாறியதாகவும் இதன்போது,
மாமியாரையும் மாமனாரையும், மருமகள சரமாறியாகத் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்த தாயையும் மலசலக்கூடத்தில் காயங்களுடன் காணப்பட்ட
மாமனாரையும் பிரதேசவாசிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு, 1990 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி, மாமியார் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
எனினும் கைது செய்யப்பட்ட மருமகள், தனது மாமி, மாமனாரை, இனந்தெரியாதோர் தாக்கியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
9 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், மேல் மாகாணத்தில்
பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு
எதிர்வரும் 9ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை காலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை,
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பிரதேசங்களிலும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலும்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்
கிளிநொச்சியில் கொரோனா சூழ்நிலையில் கடமைகளை
இலகுபடுத்துவதற்காக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவும் இக்கட்டான நிலையில் கடமைகளை
இலகு படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் உலக வங்கியின்
நிதியில் Covid 19 Emergency response and Health systems preparedness project மூலம் வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பொதுச் சுகாதார
பரிசோதகர்களுக்கு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்
வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்
எந்த ஒரு மாவட்டத்திலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்கு
உட்படுத்த வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும்
சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக
இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகைதந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ், பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை
உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும், இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ
உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தார்.
பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் தவிர்ந்த வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் 5 பேர்
கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடமை நிமிர்த்தம் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களும், அவ்வாகனங்கள் பற்றிய விபரங்களை
குறித்த திணைக்களங்கள் மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துவிட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட வாழைச்சேனைப் பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிகைஅலங்கார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படுவதுடன், சகல சுகாதார விதிமுறைகளைப்
பேணுவதுடன் வரும் வாடிக்கையாளர்களது விபரங்களை பதிவேடொன்றில் பதிந்து கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கருணாகரன் கேட்டுக்கெண்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த நோயாளியின் பிரேத
பரிசோதனையில் அவர் கொவிட் நோய் தொற்றுக்குள்ளானவர் என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு சற்று முன்னர் அறிவித்தது.
உயிரிழந்த நபர் 27 வயது ஆண் ஆவதுடன் பாணந்துறை பிரதேசத்தைச்
சேர்ந்தவர். அத்துடன் இந்த மரணம் தற்கொலை முயற்சியினால் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது 22ஆவது கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவரின்; மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என ஷாக்கான போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என ஷாக்கான போட்டியாளர்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பிரபல பாடகி ஒருவர் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில்
போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா
பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
சுசித்ரா
இந்நிலையில், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். சுசித்ராவின்
என்ட்ரியை பார்த்து சில போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டாலும், பலர் ஷாக் ஆகினர். பாடகி சுசித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்கப்
புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை
3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை
கமல் பட நடிகை ஒருவர் தான் 3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில்
வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாக்சி 420 படத்தில் கமலின் மகளாக நடித்தவர். .
இந்நிலையில், படவாய்ப்புகளுக்காக படுக்கைக்கு வரச் சொல்லி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அப்பேட்டியில் அவர் கூறியதாவது: “3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் அது
குறித்து பேசுவது இல்லை. ஆனால் தற்போது இந்த உலகம் மாறும் என நம்புகிறேன். பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது அதிகம்
விழிப்புணர்வு உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரச் சொல்லிய பிரச்சனையை நானும் சந்தித்துள்ளேன்.
பாத்திமா சனா ஷேக்
பாலியல் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே பட வாய்ப்பு தருவோம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். படுக்கைக்கு
செல்ல மறுத்ததால் பல முறை பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு சிலர் பரிந்துரை
செய்ததால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்ததும் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். பாத்திமா சனா ஷேக்கின் இந்தப் பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன்
தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்
. அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர்
பட்டியலில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 6 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.
வேல்முருகன்
மீதமுள்ள ஆஜித், வேல்முருகன், நிஷா, சோம் சேகர், சுரேஷ் ஆகிய ஐந்து பேரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில்,
இன்று வெளியான புரோமோவில் வேல்முருகனை தவிர்த்து அனைவரும் வீட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் வேல்முருகன் எலிமினேட் ஆனது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்
நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளரான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாளை ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்காவில் டிரம்ப் – ஜோ பைடன் இறுதிகட்ட பிரசாரம்
ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தங்களின் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த காட்சி.
வாஷிங்டன்:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை)ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த
தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில்
தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.
கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்தஆர்வம் காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை
இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாகாணமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் ஜனாதிபதி டிரம்ப்
கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மற்றொரு முக்கிய மாகாணமான மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார்.
இந்தப் பேரணிகளில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டு ஜோ பைடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
ஜோ பைடனின் பிரசார பேரணிகள் மிக சிறிய அளவிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டும் நடந்தன. ஆனால்
ஜனாதிபதி டிரம்பின் பிரசார பேரணிகள் மிக பிரமாண்டமாகவும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றியும் நடைபெற்றன.
இதனிடையே பென்சில்வேனியாவில் ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், நடக்க இருக்கும் இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வாக்குகளை கைப்பற்றி குடியரசு கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “இது மிகவும் சுவாரஸ்யமான செவ்வாய்க்கிழமையாக இருக்கப்போகிறது. நம்மிடம் ஒரு பெரிய சிவப்பு அலை உருவாகியுள்ளது. இது போன்ற எதையும் யாரும் பார்த்ததில்லை” என கூறினார்.
மேலும் அவர் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக அளவு வாக்குகளை பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேபோல் மிச்சிகனில் நடந்த பிரசார பேரணியில் பேசிய ஜோ பைடன் ஜனாதிபதி டிரம்ப் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டை பிளவுபடுத்தியதாவும், எனவே அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்ற மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.
பிரசாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றின் குறிப்பிடத்தக்க சிக்கலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தனது தற்பெருமைக்கு தீனி போடுவதை தவிர மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் சீன் பின்னி கூறும்போது, “இதய நோயால்
பாதிக்கப்பட்டவர் களின் இதயம், வைரசால் சேதம் அடையும் ஆபத்து உள்ளது. மேலும், முந்தைய நோய்கள் இல்லாத கொரோனா
நோயாளிகளுக்கும் இதய சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.
அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி பத்திரிகை நடத்திய ஆய்விலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற கொரோனா நோயாளிகளுக்கு 25-
30 சதவீதம் பேருக்கு இதயத்தில் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்
லண்டனில் – பொலிஸாருக்கு தண்ணி காட்டி ஒன்று கூடிய 300 பேர்
பிரிட்டனில் கடந்த தினம் Halloween நிகழ்வு இடம் பெற்றது ,இதன் பொழுது
சுமார் முன்னூறு பேர் கலந்து கொண்டனர் ,மேற்படி நிகழ்வில் கலந்து
கொண்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மக்கள் ஒன்று கூடவா ,இரண்டு மீட்டர் அருகில் நின்று பேசவோ கூடாது
என புதிய சட்டம் அறிமுக படுத்த பட்டு நடை முறையில் உள்ள
பொழுது இவ்விதம் பெரும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது

பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்
பீதியில் பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள் – காலியான கடைகள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி
பலநூறு பேர் பலியாகி வருகின்றனர்
இதனால் எதிர் வரும் வியாக்கிழமை பிரிட்டனில் பல பாகங்கள்
முழு லொக்கடவுன் அடித்து பூட்டும்
நிலைக்கு செல்கிறது
இதன் காரணமாகி பீதியடைந்த மக்கள் பொருட்களை வாங்கி குவித்து
வருகின்றனர் ,இதனால் பிரபல அங்காடிகளில் பொருட்கள் இன்றி வெறிச்சு
போயுள்ள காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதம் என அறிவிப்பு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துதெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க
திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார
பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ
ஓக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று, கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த WP NF 7666 என்ற இலக்கத்தையுடைய தனியார் பஸ்ஸில் பயணித்தவர்கள்
உடனடியாக தமக்கு அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொள்ளுமாறு, கல்முனை பிராந்திய
தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆர்.ஆரிப் கேட்டுக்கொண்டுள்ளார்.
பயணித்த அனைவரும் தாங்களாகவே தங்கள் குடும்பத்துடன் இம்மாதம் 09ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு
உள்ளாகுமாறும் கேட்டுக்கொண்டுள்ள வைத்திய அதிகாரி, மேற்படி தனியார் பஸ்ஸில் பயணித்தோர் குறித்த விவரங்களைத் தத்தமது
பொதுச் சுகாதார பரிசோதகருக்குத் தெரியப்படுத்தத் தவறும் பட்சத்தில் 0777258376 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் கேட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி பஸ்ஸில் பயணித்த 35 பேரில் 16 பேரே, பொதுச் சுகாதார பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஏனையோரை, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.
இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார்.
இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார்.
இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.
நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் (Department of Immunology and Molecular Medicine and Allergy> Immunology and Cell Biology Unit of
University) பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி
ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பலலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவம் தொடர்பான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்தீம ஜிவன்தர இது தொடர்பாக தெரிவிக்கையில், மினுவங்கொடை
மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட 16 வைரசு மாதிரிகளில் 13 வைரஸ் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவை அனைத்தும் வெவ் வேறு இடங்களில் பெறப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியானவை. B1 42 சார்ஸ் வகைக்கு உட்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவை. B 1, 6 1 4 G வைரஸ் இனத்தைச் சேர்ந்தவை என எண்ணுகின்றோம். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என நம்புகின்றோம்.
B 1, B 2, B 4 ஆகியவற்றில் B 1 னே ( பீ ஒன்றே) ஆரம்பத்தில் ஜரோப்பிய நாடுகளில் அதிகாமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்பொழுது டென்மார்க்கிலும் சுவிடனிலும் காணப்படுகின்றது. மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய வாயப்புகள் அதிகம். இது தொடர்பில் எமக்கு சரியான தெளிவு இன்னும் இல்லை.
பல்வேறு மட்டத்தில் இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொற்று ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறமுடியாது இருப்பினும் விசேடமாக வேறு நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் வெகுவாக பாதிக்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மார்ச் மாதம் தொடக்கம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வைரஸ்கள் காணப்பட்டன. இவை அனைத்திலும் பார்க்க இது வேறுபட்டது. இதற்கு முன்னர் இலங்கையில் இந்த புதிய வைரஸ் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.








