Posted in Uncategorized

இலங்கை சுவிஸ் விமான சேவைகள் மீள ஆரம்பம்

இலங்கை சுவிஸ் விமான சேவைகள் மீள ஆரம்பம்

இலங்கைக்கும் சுவிஸர்லாந்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது

நிகழ்கால கொரனோ நிலைகளை அடுத்து இடம்பெற்ற இந்த தடைகள் தற்போது தளர்த்த பட்டு

மட்டு படுத்த பட்ட சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    ஈரானிய எண்ணெய் கப்பல் லெபனான் வந்தடைந்தது

    ஈரானிய எண்ணெய் கப்பல் லெபனான் வந்தடைந்தது

    ஈரானின் பாரிய எண்ணெய் கப்பல் ஒன்று லெபனானுக்கு வந்தடைந்துள்ளது ,அமெரிக்கா மற்றும்

    இஸ்ரேல் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த கப்பல் அங்கு வந்தடைந்துள்ளது

    இந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தாம் செயல் படுவோம் என்பதை ஈரான் மீளவும் எடுத்து

    கூறியுள்ளதை இது எடுத்துரைக்கிறது என்பதை எடுத்து இயம்புகிறது

      Posted in Uncategorized

      மக்களை சுட்டு கொன்ற கொலையாளி கைது

      மக்களை சுட்டு கொன்ற கொலையாளி கைது

      அமெரிக்காவில் நான்கு பேரை சுட்டு கொன்றை கொலை குற்ற சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

      இவ்வாறு கைதானவர் தொட விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        Posted in சினிமா

        ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா

        ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா

        தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா, ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்க உள்ளாராம்.

        ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா
        ஜோதிகா, ஆர்யா, விஷால்
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடித்துள்ளார்.

        கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

        இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

        அதேபோல் விஷாலின் ‘எனிமி’, சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ ஆகிய படங்களும் ஆயுதபூஜை விடுமுறையில் வெளியாக உள்ளது. தற்போது இப்படங்களுக்கு போட்டியாக ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படமும் களமிறங்கி உள்ளது.

        Posted in சினிமா

        ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

        ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

        திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே குழுவினர் இணைந்திருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

        ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
        தர்ஷா குப்தா – ரிச்சர்ட்


        தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை

        இயக்கி இருக்கிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

        சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

        ருத்ர தாண்டவம்

        இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தை அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

        Posted in சினிமா

        எந்த வீட்ல தான் சண்டை இல்ல- விஜய் தந்தை பேட்டி .

        எந்த வீட்ல தான் சண்டை இல்ல- விஜய் தந்தை பேட்டி .

        நான் கடவுள் இல்லை படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

        எந்த வீட்ல தான் சண்டை இல்ல… விஜய் உடனான பிரச்சனை குறித்து மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்


        விஜய் – எஸ். ஏ.சந்திரசேகர்
        எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்திவீரன் சரவண

        ன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நான் கடவுள் இல்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குனர்கள்

        ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

        விஜய்

        எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவில் விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி இருந்தேன். அது இரு நாட்களில் வேற மாதிரி பேசுகிறார்கள்

        ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை

        போடுவது இல்லையா… சில நாட்களில் அது கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம் என்றார்

        Posted in Uncategorized

        லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி.

        லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி.

        லாட்டரி வியாபாரி ஸ்மிஜா தன்னிடம் மீதம் இருந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு விற்பனை செய்தார்.

        கடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண்

        கேரள மாநிலம் கொச்சியை அடுத்த சுனங்கம் வேலியை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்தது.

        இந்த நிலையில், குலுக்கல் நடைபெற்ற அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்தது. அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு ஸ்மிஜா விற்பனை செய்தார்.

        அதில் ஒரு சீட்டை கீழ்மாடு என்ற இடத்தை சேர்ந்த சந்திரன் என்பவரை போனில் தொடர்பு

        கொண்டு கடனுக்கு அந்த சீட்டை விற்றார். அதற்கு அத்தாட்சியாக அந்த சீட்டை செல்போன் மூலம் படம் பிடித்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினார்.

        இந்த நிலையில் ஸ்மிஜா கடனாக சந்திரனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பம்பர் பரிசு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த சீட்டை எடுத்துக்கொண்டு நேராக சந்திரன் வீட்டிற்கு சென்ற

        ஸ்மிஜா ரூ.6 கோடி பரிசு விழுந்த சீட்டை சந்திரனிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த லாட்டரி சீட்டுக்கான பணம் 200-ஐ பெற்று கொண்டார். பரிசு விழுந்த சீட்டை வாக்கு மாறாமல் கொடுத்த ஸ்மிஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்

        Posted in Uncategorized

        ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பிரான்சில் சுட்டுக் கொலை

        ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் பிரான்சில் சுட்டுக் கொலை

        ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

        பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை
        பிரான்ஸ் அதிபர் மெக்ரான்

        சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில்

        நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

        அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

        இந்நிலையில், பிரான்ஸ் அதிரடிப் படையினர் சகாராவில் நடத்திய அதிரடி தாக்குதலில் ஷராவி கொல்லப்பட்டதாக

        அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இது மிகப் பெரிய வெற்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        ஊடக பணிப்பாளராக லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு


        ஊடக பணிப்பாளராக லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு

        இலங்கை இராணுவத்தின் கவச வாகன படையணியைச் சேர்ந்த லெப்டினன் கேர்ணல் நளின்

        ஹேரத் பாதுகாப்பு அமைச்சின் கடமை நிறைவேற்று புதிய ஊடக பணிப்பாளராக அமைச்சிலுள்ள

        தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர், 15) கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

          Posted in Uncategorized

          திலீபன் நினைவேந்தல்; நினைவு கூர தடை

          திலீபன் நினைவேந்தல்; நினைவு கூர தடை

          தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நினைகூருவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், நேற்று புதன்கிழமை (15) தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

          மட்டக்களப்பு மாநகரசபை மேஜர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய 4 பேருக்கு எதிராகவே தடையுத்தரவு பிறப்பித்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

          மேற்படி நால்வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 15ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதிவரை மேற்கொள்ள

          உள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொ.ப.கஜநாயக்கா மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

          இவ்வாறான நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு இருப்பதனால் மற்றும் நாட்டில் தற்போது கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ளதன்

          காரணமாகக் இந்த நோய் தொற்று கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார நடவடிக்கையினை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க அவசியம் இருப்பதனால் இவ்வாறான நினைவு கூறல் நடவடிக்கையை நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை பிரசுரிக்குமாறு மன்றுக்கு அறிக்கை செய்தனர்

          இதன் பிரகாரம் பொலிஸாரினால் மன்றுக்கு கோப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பொலிஸார் குறித்த இடத்தில் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில் மேற்கொள்ள

          தீர்மானித்திருக்கும் மேற்படி நடவடிக்கையினை தடுத்து நிறுத்தும் பொருட்டு தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு ஏதுக்கள் இருப்பது மன்று திருப்திபடுவதனால் 1979ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க

          குற்றவியல் நடைமுறைச்சட்டகோவையின் பிரிவு (106)1 கீழ் பொலிஸார் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பித்து கட்டளைபிறப்பித்துள்ளது.

          இந்த நீதிமன்ற தடை உத்தரவுனை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

          Posted in Uncategorized

          கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்- தகரும் தடை

          கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்- தகரும் தடை

          தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி

          செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை (17) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

          ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 ஜனாதிபதி செயலணி நாளை கூடவிருக்கிறது. அக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.

          செயலணியின் கடந்த கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் நினைவூட்டினார்.

            Posted in இலங்கை செய்திகள்

            டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

            டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

            கல்முனை மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

            ஜனவரி மாதம் தொடக்கம் இது வரை 217 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்கானப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

            கொரோனா தொற்று தாக்கத்திலும் கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை

            முன்னெடுப்பதற்காக சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

            அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கு நோய் வேகமாக பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

            டெங்கு நுளம்பு பரவுவதற்கு வசதியாக வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

            என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

              Posted in Uncategorized

              உலக அளவில் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 22.66 கோடி

              உலக அளவில் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 22.66 கோடி

              உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது.

              தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

              டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

              உலகம் முழுவதும் இதுவரை 226,659,107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4,662,831 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 203,339,045 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 18,657,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

              இவர்களில் 18,554,702 பேர் லேசான தொற்று அறிகுறிகளுடனும், 102,529 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

              Posted in Uncategorized

              கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு

              கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு

              காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

              கொரோனா பரவலை தடுக்க தனிமனித இடைவெளி 6 அடி போதாது- புதிய ஆய்வு முடிவு
              கொரோனா வைரஸ்

              உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும்

              என்றும் தொடர்ந்து மருத்துவ சமூகம் வலியுறுத்தி உள்ளது. இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்

              தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளனர். அதேசமயம் வைரசின் தன்மை தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

              அவ்வகையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மூடப்பட்ட அறைகளில் காற்றில் மிதந்து வரும் வைரசில் இருந்து பாதுகாக்க, இரு நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் (ஆறரை அடி) இடைவெளி போதுமானதாக இருக்காது என தெரியவந்துள்ளது.

              காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை மற்றும் திரவத்துளி உமிழ்வு முறை ஆகிய மூன்று காரணிகளை ஆய்வு

              செய்து, அதன் முடிவுகளை ‘நிலையான நகரங்கள் மற்றும் சமூகம்’ என்ற ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர். ஒருவரிடம் இருந்து வெளியேற்றப்பட்ட வைரஸ் உள்ள திரவத்துளிகள்

              மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க, தனிமனித இடைவெளி மட்டும் அல்லாமல், மூக்கு மற்றும் வாயை முறையாக மறைத்தல், போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

              Posted in உலக செய்திகள்

              உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த்

              உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த்

              தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.

              உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த் அறிவிப்பு
              விஜயகாந்த்
              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

              சென்னை:

              9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

              தேமுதிக

              இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

              • 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்.
              • போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
              • மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2000 செலுத்தி மனு பெறலாம்.

              இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

              Posted in சினிமா

              நடிகை காஜல் கர்ப்பம்

              நடிகை காஜல் கர்ப்பம்

              தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

              நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்?
              காஜல் அகர்வால்


              தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

              தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர உமா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

              காஜல் அகர்வால்

              இந்நிலையில், 36 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம் வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து

              தெரிவித்து வருகிறார்கள். மேலும் காஜல் அகர்வால் தற்போது சினிமாவில் இருந்து தற்காலிக

              ஓய்வு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் காஜல் அகர்வால் தரப்பில் இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

              Posted in சினிமா

              அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்

              அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்

              வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக ஜாவேத் அக்தர் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

              அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை
              கங்கனா ரணாவத்


              நடிகை கங்கனா ரணாவத் மீது, ‘டிவி’ பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாகக் கூறியதாக, திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து

              செய்யக் கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.

              இந்த நிலையில், கங்கனா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் வழக்கறிஞர் திரைப்பட

              விளம்பரத்திற்காக கங்கனா சென்றபோது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

              கங்கனா ரணாவத்

              இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றம் சாட்டினார்.

              இதையடுத்து, அடுத்தமுறை வழக்கு விசாரணைக்கு, கங்கனா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

                Posted in Uncategorized

                தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

                தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

                இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத்

                தழுவிக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான இன்று கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசியக்

                கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது…

                தியாகதீபம் திலீபனின்
                தியாகதீபம் திலீபனின்
                தியாகதீபம் திலீபனின்
                  Posted in Uncategorized

                  குழந்தை பிரசவித்த தாய் கொரோனாவுக்கு பலி!

                  குழந்தை பிரசவித்த தாய் கொரோனாவுக்கு பலி!

                  யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண், குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

                  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார்.

                  அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

                  செப்டெம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

                  அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்துள்ளது.

                  தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று (15) அவர் உயிரிழந்துள்ளார் என இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

                  சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

                    Posted in Uncategorized

                    பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதில் அரசாங்கம் கவனம்

                    பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதில் அரசாங்கம் கவனம்

                    சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது

                    தொடர்பில் இன்று (15) சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

                    இதற்கமைவாக நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

                    இந்த பாடசாலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

                    இதன்படி, பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது

                    பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை வகுக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

                    அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

                    தடுப்பூசி ஏற்றப்படாத பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவோருக்கும் விரைவில் தடுப்பு ஊசி ஏற்றப்படும் என அவர் குறிப்பிட்டார்.