ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்
ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் நயன்தாரா படம்
நயன்தாரா
94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு
செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழில் 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
இதில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூழாங்கல் படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.
நயன்தாரா
ஏற்கனவே இப்படம், இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி
தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி
தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
‘தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி
ரஜினிகாந்த்
சென்னை:
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.
கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் நாளை (25-ந் தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன்பு விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:-
தாதாசாகேப் பால்கே விருது நான் எதிர்பாராதது. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிக்கிறது என்றார்.
டைரக்டர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதே விருதை பாலச்சந்தரும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விருதை பெற்றவர் ஆவார்.
டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.
சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் யுத்தத்திற்கு காரணம்
சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் யுத்தத்திற்கு காரணம்
மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதியின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச
செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள ” போகஸ்வெல” என தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேனவின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ
பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும் பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச் சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு வவுனியா மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபரினால் சமன் பந்துலசேனவின் கோரிக்கை முன்மொழிவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு – வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல்க் கோலத்தை மாற்றி அமைத்து அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது
திட்டமிடப்பட்டுள்ளது என்பதுடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும் இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும் இது அமையும் என்பதால் இந்நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடமாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசின் இவ்வாறான செயல்முறைகளை வன்மையாக கண்டிப்பதுடன் செயல்பாட்டை உடன் நிறுத்துமாறு தங்களை நாடி நிற்கிறோம்.
இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்திற்கு வித்திட்டதாகவும் இன நல்லுறவை பாதிக்கும் விடயமாக அமைந்திருப்பதையும் நினைவுபடுத்துகிறோம். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது
காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று
மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறான இடங்களில் ஒன்றுக் கூடுவதை, கூடியளவு தவிர்த்துக்கொள்ளுவது அவசியம் என்றார்.
மேலும் புதிய தொற்று நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு, சுகாதார அமைச்சு பாரிய அவதானத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு அப்பாற்பட்ட தொற்று பிரழ்வு , நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதென்றார்.
காரில் சென்று திருடி வந்த திருடன் கைது
காரில் சென்று திருடி வந்த திருடன் கைது
இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு
ஓடையில் இருந்து இரு சடலங்கள் மீட்பு
பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தெற்கு கெபில்லவெல- பண்டாரவளை என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இச்சடலங்கள் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன
மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்
மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம்
நாளை முதல் மாகாணங்களுக்குள்ளான ரெயில் சேவைகளுக்காக 133 ரெயில்களை ஈடுபடுத்த ரெயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் ,நாளை முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரெயில் பயணிகளுக்கு மாத்திரமே ரெயில் சேவைகள் இடம்பெறும் என்று ரெயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.;
நாளை கொழும்புக்கு வரும் ரெயில் அளுத்கம, அவிசாவளை ,அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ,பயணத் தடை காரணமாக கடந்த சில மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரெயில் சேவை மாகாணங்களுக்குள் நாளை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான ரெயில் சேவை இடம்பெறாது. மாகாணங்களுக்கு இடையிலான ரெயில்
சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறினார்.
அமெரிக்காவின் ஏவுகணை சோதனை தோல்வி
அமெரிக்காவின் ஏவுகணை சோதனை தோல்வி
அமெரிக்கா புதிதாக நடத்திய கைபிரட் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளது
மேற்படி சோதனை அதன் வேக தொழில் நுட்பத்தில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சீனாவின் புதிய இதே தரத்திலான ஏவுகணைக்கு போட்டியாக நடத்த பட்ட சோதனையே தோல்வியில் முடிவடைந்துள்ளது குறிப்பிட தக்கது
அல்கொய்தா தளபதி படுகொலை அமெரிக்கா அறிவிப்பு
அல்கொய்தா தளபதி படுகொலை அமெரிக்கா அறிவிப்பு
சிரியாவில் அமெரிக்கா உளவு விமானம் நடத்திய விமான தாக்குதலில் சிக்கி அல்கொய்தா அமைப்பின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுள்ளதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது
பல்வேறு பட்ட தாக்குதல்களுக்கு இவர் மூளையாக செயல் பட்டவர் என தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய ஆயுத கூடம் – 15 பேர் மரணம்
வெடித்து சிதறிய ஆயுத கூடம் – 15 பேர் மரணம்
ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெஸ்னோய் கிராமத்தில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை
செய்துகொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை. ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய விசாரணைக்குழுவினர் சென்றுள்ளனர்.
பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்
பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்- இலவச பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பெண்கள்
முக ஸ்டாலின்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினசரி முகாம்கள் நடந்தாலும் கூட, ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த 5 வாரமாக மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தடுப்பூசி இலக்கை நெருங்க முடிவதால் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் மெகா முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வாரமும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வசதிக்கேற்ப சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
வீடுகளுக்கு அருகே முகாம்கள் நடைபெறுவதால் எளிதாக சென்று மக்கள் தடுப்பூசியை செலுத்தி வந்தனர்.
இந்தநிலையில் அசைவ மற்றும் மது பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட முன்வராததால் மெகா சிறப்பு முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.
2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை இந்த சிறப்பு முகாம்கள் மூலம் பயன்பெற ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் நடந்த தடுப்பூசி முகாம்
இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் முதியவர்ளை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தடுப்பூசி கையிருப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை விரைவாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் 1,600 முகாம்களில் தடுப்பூசி போட மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. வார்டுகளுக்கு 4 முகாம்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் முகாம்களும் செயல்படுகின்றன.
மாநகராட்சி பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், தனியார் குடியிருப்பு இடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மெகா முகாம்கள் நடக்கின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.
அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.
அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் இலவச பயணம் எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதை அவர் அன்போடு வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை மாநகரில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் காலையிலேயே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
ஒருசில இடங்களில் ஊழியர்கள் வீதி வீதியாக சென்று தடுப்பூசி போடாதவர்களை அழைத்து வந்தனர்.
இதேபோல புறநகர் பகுதியிலும் தடுப்பூசி போட பொதுமக்களிடையே ஆர்வம் இருந்தது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்தனர்.
விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி.
விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி.
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு
விவேக்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
விவேக்
இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.
அஜித் புகழும் போனி கபூர்
அஜித் புகழும் போனி கபூர்
அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வரும் போனிகபூர், அவரை பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்து பதிவு செய்து இருக்கிறார்.
அவரை தடுக்க முடியாது… அஜித் புகழும் போனி கபூர்
அஜித் – போனி கபூர்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பொங்கல் தினத்தையொட்டி அடுத்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் பைக்
மூலம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் பயணம் செய்து இருந்தார்.
அப்போது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர், தனது
சமூக வலைத்தள பக்கத்தில், அஜித்தின் ஆர்வத்தை தடுக்க முடியாது. ஒவ்வொரு கனவையும் அவர் நனவாக்கி வருகிறார் என்று பதிவு செய்து இருக்கிறார்
வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி
வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி
தனது கணவர் நாகசைதன்யாவை விவகாரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நடிகை சமந்தா, தவறான தகவல்களை பரப்பிய யூடியூப் தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தொடர்ந்த சமந்தா… கோபமடைந்த நீதிபதி
சமந்தா
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.
இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு
ஐதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்.
பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள், பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள்’ என்று கூறினார்.
சமந்தா
நடிகையின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சமந்தா-வின் வழக்கறிஞர் முரளி நீதிமன்றத்தில் கோரியதை அடுத்து இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கறிஞரின் வேண்டுகோளால் கோபமடைந்த கூடுதல் மாவட்ட நீதிபதி, “இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும்” என்று உறுதியாக கூறினார்.
மேலும் “சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தா-வின் வழக்கை, நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும்” என்று கூறியுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்
நாடு முழுவதும் தற்போது அமுல் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
இதனை, கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணு தளபதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
யாழில் -பிசுங்காண் போத்தல்களுடன் வீடு புகுந்து அட்டூழியம்
யாழில் -பிசுங்காண் போத்தல்களுடன் வீடு புகுந்து அட்டூழியம்
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், வன்முறையில் ஈடுபட்டோர் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் வீடொன்றுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டு ஜன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட அந்த இளைஞன் சிலரை அழைத்து இந்த அடாவடியில் ஈடுபட வைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய நீர்வேலியைச் சேர்ந்த இருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கர வண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏனைய 9 பேர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோட்டா அரசாங்கமும் மாபியாவும்- தாக்கிய தம்பி ராசா
கோட்டா அரசாங்கமும் மாபியாவும்- தாக்கிய தம்பி ராசா
இன்று நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் உள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஒன்று கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் மற்றொன்று வர்த்தக மாபியாக்களை நிர்வகிக்கும் அரசாங்கம் என்றார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று நாட்டில் 122 ரூபாய்க்கு சீனி இல்லை. அரிசியின் கட்டுபாட்டு விலை நீக்கியதன் பின்னர், 165 ரூபாய்க்கு கீரி சம்பாவைத் தருகிறோம். 115 ரூபாய்க்கு நாடுவைத் தருகிறோம் என அரசாங்கத்தில் உள்ள வர்த்தகர்கள் கூறினார்கள்.
ஆனால் இன்று கீரி சம்பா 180 ரூபாயாகவும் நாடு 115 ரூபாயாகவும் சம்பா 150 ரூபாய்க்கும்
சென்றுள்ளது. ஆகவே வர்த்தக மாபியாக்களான கறுப்பு சந்தை முதலாளிகளே இன்று
அரசாங்கத்தை நிர்வாகம் செய்கின்றனர்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஊடகங்கள் முன்பாக வந்து அரசாங்கத்தின் தீர்மானங்களை தெரிவித்தாலும் அதில் ஒன்று கூட நடக்காது.
தற்போது வர்த்தக மாபியாக்கள் அரசாங்கத்தின் பணியை செய்யும் அதேவேளை, அரசாங்கம் இந்த மாபியாக்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக எதுவுமே தெரியாத மாதிரி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் உள்ளது என்றார்.
இவ்வாறு இருப்பதற்கு நாட்டில் எதற்கு அரசாங்கம் என கேள்வி எழுப்பிய அவர், இந்த
அரசாங்கமானது வர்த்தக மாபியாக்களுக்கு அடிமையாக வர்த்தக மாபியாக்கள் சொல்வதை
செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்றார்.
மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி தேவை
மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி தேவை
நாடளாவிய ரீதியில் 16 -18 வயதுக்கு இடைப்பட்ட, மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், பெற்றோர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதை குறிப்பிட்டார்.
தடுப்பூசி ஏற்றம் இடம்பெறும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை, சுகாதார வைத்திய அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் ஆகியோரிடம் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி ஏற்றத்திற்கு சீருடை அத்தியாவசியமாக்கப்படவில்லை என்பதுடன், சீருடை உள்ளவர்கள் அதனை அணிந்து செல்ல முடியும்.
இதன்போது அடையாள அட்டை உள்ள மாணவர்கள் அதனை கொண்டுச் செல்ல வேண்டும்.
தங்களது மாணவர்கள் தொடர்பான விபரங்களை அதிபர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்
இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது, கொடூரமாக தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த தகவலை தெரிவிக்கின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதை தனது டுவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதோடு குறித்த அதிகாரி தற்சமயம் பணிநீக்கமும் செய்யப்பட்டிருக்கின்றார்.












