அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் ,அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு:

  1. 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி, 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது.

அதேபோல், அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.elections.gov.lk) சஞ்சரிப்பதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  1. இத்தேர்தலின் போது குறித்த உள்ளுர் அதிகார சபை அதிகார இடப்பரப்பில் தேருநர்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவிருக்கின்ற அனைத்து அரச அலுவலர்கள்/ ஊழியர்கள், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும்,
  2. இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலர்கள்/ ஊழியர்கள், அஞ்சல் திணைக்கள் அலுவலர்கள்/ ஊழியர்கள், புகையிரதத் திணைக்கள அலுவலர்கள்/ ஊழியர்கள், முப்படைகளின், பொலிஸ் திணைக்களத்தின் முனைப்பான பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புப் படையணியின் அங்கத்தவர்கள், வேட்பாண்மை காரணமாக தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க முடியாதிருக்குமென்று அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலப்பகுதி முடிவடையும் வரை காத்திருக்காமல் தாமதமின்றி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கத் தகைமை பெறுகின்ற அனைவரும் தயவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இத்தேர்தலின் போது அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது அதற்கான தகவல்கள் 2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்பிலிருந்து சரியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

  1. அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சித்து விண்ணப்பதாரரின் ஆளடையாளம் குறித்து உறுதிசெய்துகொண்டு அத்தாட்சிப்படுத்த வேண்டுமென்றும், அத்தாட்சிப்படுத்திய விண்ணப்பங்களை இயன்றளவு விரைவாக குறித்த விண்ணப்பதாரர் தேருநராக பதிவுசெய்து கொண்டுள்ள மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2025.03.12 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்க வேண்டுமென்றும், அத்திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாதென்றும், உரிய திகதி பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்களும் பூரணமற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுமென்றும் அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தயவுடன் அறிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி இரு நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் அஞ்சலுக்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைப்பது மிகவும் உகந்ததென்று கருதப்படுகிறது.
  2. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கு அவசியமான 2024 தேருநர் இடாப்புத் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2024 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்புக்கள் பின்வரும் இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
    i. அனைத்து மாவட்ட செயலகங்கள் (கச்சேரிகள்)
    (சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு)
    ii. அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள்
    (உரிய இடாப்புக்கள்)
    iii. அனைத்து உள்ளூர் அதிகாரசபைகள்
    (ஒவ்வோர் உள்ளூர் அதிகார இடப்பரப்புக்குரிய இடாப்புக்கள்)
    iv. அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள்
    (ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குரிய இடாப்புக்கள்)
  3. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நிகழ்நிலை முறையில் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

தேருநர் இடாப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிட்டிருக்காத விண்ணப்பதாரர்கள் மேற்படி இல. 04 இல் குறிப்பிடப்பட்டுள்ள இடமொன்றிலிருந்து தமது பதிவுக்குரிய தகவலகளைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பப்படினங்களைப் பூரணப்படுத்த வேண்டும்.

9ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

9ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு

9ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு

9ஆவது பாராளுமன்றத்துக்காக இன்று வாக்களிப்பு ,இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி நடைபெறுகின்றது.

பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்

கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் 14ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

அதன்பின்னர், தபால் மூல வாக்களிப்புகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். நிறைவில், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் நடைபெற்றது.இந்தக் காலப்பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும்

சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 764 குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், அவற்றில் 74 குழுக்களின் வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன..

இதற்கமைய 690 குழுக்கள் தேர்தல் களத்தில் போட்டியிட தகுதி பெற்றன. இந்த குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்காளர்கள் இறுதி நேரம் வரையிலும் காத்திருக்காமல், நேரகாலத்துடன் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு

அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கெனவே, அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுபாஷ் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் புதன்கிழமை (13) முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த

குறித்த நபர் வியாழக்கிழமை (14) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அதனையடுத்து சடலத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் சடலத்தை

ஒப்படைத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச் சம்பவத்தினால் இன்றைய தினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் , பிறிதொரு பொலிஸ்

உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு , வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

106 வயது முதியவர் வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

106 வயது முதியவர் வாக்களிப்பு

106 வயது முதியவர் வாக்களிப்பு

106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று(14) செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து,தமது 22 வயதில் திருகோணமலைமலைக்கு வந்து தொடர்நது இங்கே வாழ்ந்து வருவதாகவும்,இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு ,பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக

இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு தேர்தல்கள் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையம், நட்டாங்கண்டல், ஜயன்கன்குளம், மல்லாவி , மாங்குளம், ஒட்டுசுட்டான்,

புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கொக்கிளாய் , வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு ,நாடளாவிய ரீதியில் இன்று காலை (21) 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்தது.

இதில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களித்தனர்.இன்று நள்ளிரவு முதல் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்க படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

அதனை அடுத்து படகுக்காப்பு நாடெங்கும் பலப்படுத்த பட்டுள்ளது .

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்
Posted in இலங்கை செய்திகள்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர் ,தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள் பவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த நிலைமை, நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நிவ்வெளி வாக்களிப்பு நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.

தேயிலை தொழிற்சாலையின் மேல் மாடியில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தமையால், அந்த படிகடிகளில் ஏறமுடியாத வயது முதிந்தவர்கள், பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம் ,வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை புலஸ்திபுர விஜிதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன்ட் 53419, எச்.எம். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலஸ்திபுர பொலிஸ் அதிகாரி ஒருவர் எமது விசாரணையின் போது ரத்னபால பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் மரணம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு ,இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கும் சென்று மக்கள் தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொத்மலை தேர்தல் தொகுதியில் 88,219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 8,500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1,748 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு, மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ,ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று (21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்.ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.