முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்
முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ,ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று (21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா







