Tag: புயல்
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- 42 பலி
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- 42 பலி
நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.
அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
இடா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் சூறாவளி இடா ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது.
சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கனமழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரெயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலை
இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரெயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
யாழில் புயல் மழை – 55 பேர் பாதிப்பு
யாழில் புயல் மழை – 55 பேர் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலவிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணிமுதல் 10 மணி வரை கடும்
காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் தாக்கத்தினால் 17 வீடுகள் பகுதியளவில்
சேதமடைந்துள்ளதோடு மூன்று சிறு தொழில் முயற்சியாளர்கள் குறித்த கடும் காற்று மழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
குறித்த பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சகல பிரதேச செயலகங்கள் ஊடாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவினரால் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோர புயலால் 18 வீடுகள் சேதம்
கோர புயலால் 18 வீடுகள் சேதம்
இலங்கையில் வீசிய கோர புயல் காரணமாக இலங்கை திருகோணமலையில் பதினெட்டு வீடுகள்
சேதமடைந்துள்ளன
மேலும் பயன் தரும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன ,பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த
முகாமைத்துவ அமைச்சு முயன்று வருகிறது
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
தற்போது கடல் பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபட்டிருப்பவர்கள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் நாளை மறுதினம் புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா
கடல் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். காற்று 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் புயல் ஒருவர் பலி – 100.000 பேர் இடப்பெயர்வு
பிலிப்பைன்ஸில் புயல் ஒருவர் பலி – 100.000 பேர் இடப்பெயர்வு
பிலிப்பைன்சில் வீசி வரும் பலத்த புயலினால் இதுவரை ஒருவர் மரணமாகியுள்ள்ளார் ,மேலும் ஒருவர ஒரு
லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப் பெயர்ந்துள்ளனர்
மேலும் 121 மைல் வேகத்தில் வீசி வரும் புயல் காரணமாக பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன
மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் துரிதமாக
இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,உயிரிழப்பு தொடர்பிலான மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை

வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் சில பகுதி – 70 மைல் வேகத்தில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் கடந்த 12 மணித்தியாலத்தில் இடம்பெற்ற கனமழை காரணமாக
பிரிட்டனின் மன்ஸிஸ்டர் உள்ளிட்ட Oldham, Bolton and Rochdale முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது ,தொடர்ந்து பெய்து வரும்
மழையால் சில முக்கிய அருவிகள் நிரம்பி வழிவதாலும் மேலும் வெள்ள
பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,தொடர்ந்து எழுபது மைல் வேகத்தில் புயல் வீசி வருகிறது
மரங்களுக்கு கீழே கார்களை விட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

12 மணி நேரத்தில் சூறாவளி
12 மணி நேரத்தில் சூறாவளி
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து
திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன்,
தொடர்ந்துவரும் 12மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும்
முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை புதன்கிழமை மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களில் சில இடங்களில் 100மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல்,மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 50மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு மிகப்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப் போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படு கின்றது.
அமெரிக்காவில் கடும் புயல் தாக்குதல் – 26 பேர் பலி
அமெரிக்காவில் கடும் புயல் தாக்குதல் – 26 பேர் பலி
மத்திய ம்,ஏரிக்காவில் கடும் புயல் தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி
ஆறு மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் பல ஆயிரம் மக்கள் தமது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்
தொடர்ந்து கடும் மழை புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது
மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன
பிரிட்டனில் 81mph வேகத்தில் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் 81mph வேகத்தில் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் வேகமான புயல் ஒன்று கடக்கிறது ,இவ்வேளை நாட்டின் பல பகுதியிலும் இந்த புயல் வேகம் காணப்படும்
இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்ககை விடுக்க பட்டுள்ளது
மரங்களின் கீழ் வாகனங்களை நிருததீர்கள் ,மேலும் வீட்டு யன்னலைகளை
திறந்து வைக்காது உங்கள் உடாமி ,உடல்களை காப்பாற்றி கொள்ளுங்கள் ,எச்சரிக்கை புயல் கடக்கிறது
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் கடும் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
தற்போது நெடுங்கும் பலமான கற்று வீசி வருகிறது இது 60 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது
இது காங்கேசன் துறை ,பொதுவில் ,கொழும்பு ,காலி ,கம்பந்தோட்டை பகுதிகளை இலக்கு வைத்து நகர்கிறது
இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி வானொலி அவதானிப்பு மையம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது
கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கியாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
கால நிலை சீற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை
கால நிலை சீற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை
ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ
அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக
மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம்
குறைந்த கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும்
நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட
கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்
அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு
அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு
சிலோன் அடம்பன் புயலின் கோர தண்டவத்தில் சிக்கி எண்பது பேர்
இதுவரை பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த புயலானது மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில்
வீசியது ,இதனால் வெள்ள பெருக்கு
ஏற்பட்டது பல்லாயிரம் வீடுகள் அழிக்க பட்டுள்ளது
மேலும் இந்த புயலினால் சுமார் பதின் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு உதவுவதாக அறிவித்துள்ளது
இந்தியா பெங்கால் பகுதியில் 73 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளை இழந்த
மக்கள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்
அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு
பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.
இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக
மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு
மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை
வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்
உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.

வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo
வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo
கடந்த தினம் வவுனியா பகுதியில் பலமாக வீசிய புயல் காரணமாக பத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .
மரங்களின் கீழே நிறுத்தி வைக்க பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன
வீட்டு கூரைகள் காற்றில் அடித்து செல்ல பட்டுள்ளன ,இந்த பேரழிவு தொடர்பில்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமது கடமைகளை துரித படுத்தியுள்ளனர்


லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
அமெரிக்காவில் நேற்று முன்தினம், முன்னைய தினம் இடம்பெற்ற புயலின் கோர தாண்டவத்தில்
லொறிகளை தூக்கி பிரட்டியுள்ளதும் ,வீடுகளை அடித்து உடைத்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்த புயலின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர்
இந்த காட்சிகள் புயலின் வேகத்தை தெளிவாகவே சொல்லி செல்கின்றன
கொரனோ ஒரு புறம் மக்களை வாட்ட மறு புறம் புயல் இவ்வாறு
கதற வைத்துள்ளது குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கொரனோ வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து
வரும் நிலையில் தற்பொழுது கோர புயல் ஒன்றும் அந்த மக்களை தாக்கியுள்ளது
இதில் இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் காற்றில் உடைக்க பட்டுள்ளதுடன் ,வீட்டு கூரைகள் என்பன அடித்து செல்ல பட்டுள்ளன .
மேலும் இந்த காற்றின் கோர தாக்குதலினால் ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்
Kentucky பகுதியில் 60,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர் ,அதேபோல
Mississippi பகுதியில் 40,000 பேர் ,அவ்வாறே Georgia பகுதியில் 30,000.பேர் மின்சாரம் இன்றி தொடர்ந்து தவித்து வருகின்றனர்
இரண்டு நாட்களாக இந்த பேரவலம் தொடர்கிறது
மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன
இவ்வாறு பாதிக்க பட்ட மக்களை விரைந்து மீட்பதில் ,மீட்பு குழுவுக்கு
பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,கொரனோ பீதியே இதற்கு தடையாக உள்ளது
அமெரிக்கா செய்த கொடிய பாவங்களின் அறுவடையையே இந்த பேரழிவுகள்
என மக்கள் பேசு பொருளாக மாறி வருகிறது,பனையால் விழுந்தவனை
மாடேறி மிதித்த கதை போல அமெரிக்கா மக்கள் இப்பொழுது சிக்கியுள்ளனர்

புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்
புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்
இலங்கையை தாக்கிய கோர புயலில் சிக்கி சுமார் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்க பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது ,தொடர்ந்து புயல் தாக்கம் இருக்கும் என தெரிவிக்க படுகிறது

இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
இன்று இலங்கை கரையோரங்களை கடும்புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்கள் விழிப்பாக இருக்கும் படி அவசர வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது ,மரங்களின் கீழும் ,கடற்கரை ஓரங்களிலும் நிற்பது அவதானம் ,என எச்சரிக்கை பட்டுள்ளது
இலங்கையை தாக்கவுள்ள புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதியி தாழமுக்கம் நிலவுதால் இலங்கை கடற்கரை பகுதிகளை புயல் தக்க கூடும் என தெரிவிக்க பட்டுள்ளது ,கடலோர பகுதியில் உள்ள மக்கள் இந்த வேகமான காற்று கடக்கும் பொழுது விழிப்பாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது







