Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை

பெறுபவர்களில் 65 ஆயிரத்து 689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால்

இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 47,63,609
பிரேசில் – 27,08,876
இந்தியா – 16,95,988
ரஷியா – 8,45,443
தென் ஆப்பிரிக்கா – 5,03,290
மெக்சிகோ – 4,24,637
பெரு – 4,14,735
சிலி – 3,57,658
ஸ்பெயின் – 3,35,602
ஈரான் – 3,06,752
கொலம்பியா – 3,06,181
இங்கிலாந்து – 3,03,952

      Posted in இலங்கை செய்திகள்

      மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

      மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

      கொரோனா வைரஸ் தொற்று நாடுபூராகவும் 2 ஆயிரத்தி 700 ஐ தாண்டியிருக்கின்ற நிலையில் கொரானா தொற்றினை

      உறுதிப்படுத்தும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5 ஆயிரத்தி 546

      மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம்

      அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

      இதுவரை மேற்கொள்ளப்பட்ட 5546 பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் 317 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்வாறு

      உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பரிசோதனை மாதிரிகள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவையென அவர் மேலும் தெரிவித்தார்.

      இதுதவிர இப்போதனா வைத்தியசாலையில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்ட நோயாளர்களில் மார்ச் மாதம் 13 ஆந் திகதி தொடக்கம் 31 வரையான காலப்பகுதியில் 31 நோயளர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

      மேலும் ஏப்ரல் மாதத்தில் 79 நோயாளர்களில் 2 பேருக்கும், மே மாதத்தில் 70 நோயாளர்களில் 23 பேருக்கும், ஜூன் மாதத்தில் 16 பேரில் ஒருவருமாக மொத்தம் 32 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 19 நோயாளர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ்

      12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ்

      ராஜாங்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற தான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்களில்

      12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக

      சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

      நிகழ்வில் பங்கேற்ற 139 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளா்கள்.

      இன்று இதுவரை ஒருவர் மாத்திரமே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்.

      கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 174 பேருக்கு பிசீஆர்

      பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு எவருக்கும் நோய்த் தொற்று

      ஏற்படவில்லை என்பது இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய வளாகத்தில் ஏற்பட்ட

      நோய்த்தொற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

          இலங்கையில் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

          கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

          நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய

          தினம் குறித்த நிலையத்தில் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இதுவரை கந்தகாடு

          புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

          மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடும் என

          எதிர்ப்பார்ப்பதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

          அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக

          அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக

          குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

          தற்போது, 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

              Posted in உலக செய்திகள்

              டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-பேர் பலி

              டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-பேர் பலி

              டெல்லியில் ஒரே நாளில் 2,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தைக் கடந்துள்ளது.

              டெல்லியை துரத்தும் கொரோனா: 3200-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை
              வெப்ப நிலையை பரிசோதிக்கும் ஊழியர்
              புதுடெல்லி:

              சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

              இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

              நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.20 லட்சத்தை தாண்டியுள்ளது.

              இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,033 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,04,864 ஆக

              அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 48 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.

              மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

                  வெலிகடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

                  வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதியொருவர்

                  கொவிட் 19 வைரசு தொற்று நோயாளி என்ற ரீதியில் அடையாளங்

                  காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

                  இந்த கைதி கந்தகாடுவில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில்

                  இருந்து ஜூன் மாதம் 27 ஆம் திகதியன்று வெலிக்கடை விளக்க மறியல் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டார்.

                  இந்த அடையாளங்காணப்பட்ட நோயாளி மற்றும் இவருடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பிசிஆர் பரிசோதனை மற்றும்

                  தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன் இந்த பரிசேதனைகளுக்காக

                  விளக்கமறியல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை வந்த பாகிஸ்தானியர் மூவருக்கு கொரோனா

                      இலங்கை வந்த பாகிஸ்தானியர் மூவருக்கு கொரோனா

                      இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                      அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரித்துள்ளது.

                      பாகிஸ்தானில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

                      தற்போது வரை 1678 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

                      இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 826 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

                      இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in உலக செய்திகள்

                          மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு

                          மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு

                          மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,257 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு

                          அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

                          மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு
                          கொரோனா வைரஸ்
                          மும்பை:

                          கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

                          இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. இங்கு

                          நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

                          இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்

                          கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

                          கடந்த 48 மணி நேரத்தில் 181 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,610 ஆக

                          அதிகரித்துள்ளது. தற்போது 73 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

                          கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி

                              இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி

                              இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

                              நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர்.

                              அதன்படி, இதுவரை இலங்கையில் 1991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                              நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவின் மும்பையில்

                              இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                              அதேபோல் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 22 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

                              ஐ.டி.எச், வெலிகந்த, காத்தான்குடி, ஹோமாகம மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று

                              வந்த தொற்றாளர்கள் சிலரே இவ்வாறு குணமடைந்து வௌியேறியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

                              அதன்படி, இதுவரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.

                              மேலும் 432 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

                                  Posted in உலக செய்திகள்

                                  தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

                                  தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

                                  தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

                                  தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் – மாவட்ட வாரியாக விவரம்
                                  கோப்பு படம்

                                  தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்

                                  கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.

                                  இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர்

                                  . இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

                                  ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

                                  வருகிறது. உடலில் ஏற்கனவே எந்த நோய்களும் இல்லாமல் பூரண நலத்துடன் இருந்தவர்கள் பலரும் கொரோனா வைரசுக்கு பலியாகி வருகின்றனர்.

                                  இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில்

                                  கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

                                  இந்த மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 645 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

                                  மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

                                  செங்கல்பட்டு – 57
                                  சென்னை – 645
                                  கோவை – 1
                                  கடலூர் – 5
                                  திண்டுக்கல் – 4
                                  ஈரோடு – 1
                                  கள்ளக்குறிச்சி – 1
                                  காஞ்சிபுரம் – 14
                                  கன்னியாகுமரி – 1
                                  கிருஷ்ணகிரி – 2
                                  மதுரை – 9
                                  நாமக்கல் – 1
                                  புதுக்கோட்டை – 2
                                  ராமநாதபுரம் – 3
                                  ராணிப்பேட்டை – 2
                                  சேலம் – 1
                                  சிவகங்கை – 1
                                  தஞ்சாவூர் – 1
                                  தேனி – 2
                                  திருவள்ளூர் – 44
                                  திருவண்ணாமலை – 7
                                  தூத்துக்குடி – 4
                                  திருநெல்வேலி – 5
                                  திருச்சி – 3
                                  வேலூர் – 3
                                  விழுப்புரம் – 12
                                  விருதுநகர் – 1
                                  விமானநிலைய கண்காணிப்பு
                                  வெளி நாடு – 1

                                  மொத்தம் – 833

                                      Posted in உலக செய்திகள்

                                      கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்

                                      கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்

                                      உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

                                      கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்
                                      கோப்பு படம்
                                      ஜெனிவா:

                                      சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

                                      வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

                                      இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள்

                                      கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

                                      இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது.

                                      தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேருக்க்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                      வைரஸ் பரவியவர்களில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

                                      கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.

                                      ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

                                      வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

                                      அமெரிக்கா – 10,02,929
                                      பிரேசில் – 5,79,226
                                      ரஷியா – 3,44,416
                                      இந்தியா – 2,37,196
                                      பெரு – 1,45,320
                                      சிலி – 2,05,397
                                      இத்தாலி – 1,83,426
                                      ஈரான் – 1,66,427
                                      ஜெர்மனி – 1,75,300
                                      துருக்கி – 1,61,533
                                      மெக்சிகோ – 1,40,118
                                      சவுதி அரேபியா – 1,05,175

                                          Posted in உலக செய்திகள்

                                          50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

                                          50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

                                          பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.

                                          50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்
                                          கொரோனாவால் உறவினரை இழந்த நபர்
                                          ரியோ டி ஜெனிரோ:

                                          சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

                                          இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

                                          இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

                                          இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 89 லட்சத்து 13 ஆயிரத்து 524 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                          வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37 லட்சத்து 8 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 503 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

                                          கொரோனாவில் இருந்து 47 லட்சம் 37 ஆயிரத்து 951 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம்

                                          முழுவதும் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                          இதற்கிடையில், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்

                                          இரண்டாவது இடத்தில் பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

                                          பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ

                                          தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில்

                                          31 ஆயிரத்து 571 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                          மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் அங்கு 968 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவுக்கு

                                          பலியானோர் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.

                                          கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

                                          அமெரிக்கா – 1,21,980
                                          பிரேசில் – 50,058
                                          இங்கிலாந்து – 42,589
                                          ஸ்பெயின் – 28,322
                                          இத்தாலி – 34,610
                                          மெக்சிகோ – 20,781
                                          பிரான்ஸ் – 29,633
                                          இந்தியா – 12,948.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              14,966 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறல்

                                              14,966 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறல்

                                              கொரோனா தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 153 பேர் தமது வீடுகளுக்கு திரும்பவிருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்

                                              முப்படையினரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் 40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3970 பேர்

                                              தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

                                              இதுவரையில் 14,966 Nர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறியிருப்பதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              இலங்கையில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

                                              இலங்கையில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

                                              இலங்கையில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                              மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாட்டில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                                              இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகியதாக இனம் காணப்பட்ட 22 பேரில் 18 பேர்

                                              டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

                                              அத்துடன் ஏனையவர்களுள் கட்டாரில் இருந்து வருகை தந்த இருவர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும்

                                              ரஷ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                              இதுவரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                  Posted in உலக செய்திகள்

                                                  2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – கண்டு பிடித்த தமிழர்

                                                  2 ரூபாய்க்கு கொரோனா மருந்து – கண்டு பிடித்த தமிழர்

                                                  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா

                                                  வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும்

                                                  பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

                                                  இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காணொலிக்காட்சி மூலம் விசாரித்தனர்.

                                                  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் கண்டுபிடித்துள்ள ‘பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ்’ மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில்

                                                  நுழையவிடாமல் தடுக்கும். இந்த மருந்தின் விலை ரூ.2-க்கு குறைவானது தான். இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா

                                                  அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும். இந்த மருந்து ஏழை மக்களுக்கு பயனளிக்கும்’ என்று வாதிட்டார்.

                                                  இதையடுத்து நீதிபதிகள், ‘கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர்

                                                  மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை

                                                  பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

                                                      Posted in உலக செய்திகள்

                                                      மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

                                                      மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

                                                      பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

                                                      பிரேசிலை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு
                                                      பரிசோதனை செய்யும் டாக்டர்

                                                      கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்

                                                      எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

                                                      இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு

                                                      உள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.42 லட்சத்தைக் கடந்துள்ளது.

                                                      பிரேசிலில் கொரோனாவுக்கு 1,185 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது.

                                                      மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

                                                          Posted in உலக செய்திகள்

                                                          தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா

                                                          தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா

                                                          தமிழகத்தில் இன்றும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.

                                                          இன்று மேலும் 17 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.

                                                          இது தொடர்பாக தமிழக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,; தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                          அதில் 9 பேர் கத்தாரில் இருந்தும், 3 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டில்லியில் இருந்தும், 22 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும்,

                                                          ஒருவர் ஹரியானாவில் இருந்தும், 6 பேர் டில்லியில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் தொற்று உறுதியானவர்களின்

                                                          எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து

                                                          வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 17, 527 ஆக அதிகரித்துள்ளது. 15,413 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              இலங்கையில் 30 பேருக்கு கொரோனா தொற்று

                                                              இலங்கையில் 30 பேருக்கு கொரோனா தொற்று

                                                              இலங்கையில் மேலும் 30 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                              அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.

                                                              இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 823 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                              இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 849 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  கொரோனா நோயால் 1020 பேர் பாதிப்பு

                                                                  கொரோனா நோயால் 1020 பேர் பாதிப்பு

                                                                  இலங்கையில் கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

                                                                  இன்றைய தினத்தில் (2020.05.19) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 28 பதிய நோயாளர்கள்;

                                                                  பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

                                                                  இந்த நோயாளர்கள் 28 பேரும் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படை அங்கத்தவர்கள்.

                                                                  இன்றைய தினத்தில் இதுவரையில் இலங்கையில் பதிவான கொரேனா

                                                                  வைரசு நோயாளர்களில் 569 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                                                                  இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 442 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

                                                                  நேற்றைய தினத்தில் (2020.05.18) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின்

                                                                  எண்ணிக்கை 960 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங் காணப்பட்ட

                                                                  நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்றும் சுகாதார சேவைகள்

                                                                  பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

                                                                      Posted in மருத்துவம்

                                                                      கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

                                                                      கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

                                                                      கர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன்? என்பது குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

                                                                      கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் ?
                                                                      கர்ப்பிணி


                                                                      கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும்

                                                                        மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.

                                                                        தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை

                                                                        பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

                                                                        500 பேருக்கு பரிசோதனை

                                                                        மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள்

                                                                        அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான

                                                                        பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

                                                                          கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள

                                                                          59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை

                                                                          போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும்

                                                                          500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

                                                                          கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும்

                                                                          கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

                                                                          ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

                                                                          அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து

                                                                            கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

                                                                            கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும்

                                                                            பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம்

                                                                            பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து

                                                                            நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

                                                                            தனிமைப்படுத்தவும்

                                                                            கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

                                                                            அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு

                                                                            இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

                                                                            ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                                                                            கொரோனா
                                                                            கொரோனா