Posted in இலங்கை செய்திகள்

நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து

நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து

நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை

உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களுள் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும் இவர்களின் அறியாமை

மற்றுமொருவருக்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு மாநாகர சபை

எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பயணங்களை வரையறுத்து தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வீடுகளில் தனிமைப்படுத்தலுக்காக ஈடுப்படுத்தப்படும் நபர்களின் தனிமைப்படுத்தல் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் விசேட வைத்தியர் தெளிவுப்படுத்தினார்.

வயதானோர் மற்றும் தொற்றா நோய் உள்ளவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் தமது

தேவைகளுக்காக வெளியே செல்வது பொருத்தமானது என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.

யாராவது நபர் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டால் அந்த வீட்டில் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது முக்கியமான விடயமாகும் என்றும் கூறினார்.

இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் குடும்பங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய சரியான சுகாதார நடைமுறை பற்றியும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Posted in உலக செய்திகள்

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்

தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.54 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 13.33 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் அதிக அளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 78,19,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை ஒரு

கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

தும்பர சிறைச்சாலையில் எழுவருக்கு தொற்று

தும்பர சிறைச்சாலையில் எழுவருக்கு தொற்று

போகம்பறை தும்பர சிறைச்சாலையிலும் பழைய போகம்பறை சிறைச்சாலையிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு

கைதிகளுக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தும்பர சிறைச்சாலையில் ஆறு பேரும் போகம்பறை பழைய சிறைச்சாலையில் ஒருவருமே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக, போகம்பறை சிறைச்சாலைக்கு அனுப்பி

வைக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி எழுவரையும் கொரோனா சிகிச்சை மய்யங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,

சிறைச்சாலையில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – தற்போது மூன்றாவது எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா – தற்போது மூன்றாவது எச்சரிக்கை

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி

வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், முதலாவது பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் கழிந்த பின்னர், இரண்டாவது பரிசோதனை நடத்தாமல்,

அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் போவதாக அவர் கூறினார்.

இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாதவர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.

தற்போதைய தொற்றுப் பரம்பல் நாளுக்கு நாள் மாறி வருவதால், மக்களின் வாழ்க்கை முறையை பேணும் வழிமுறைகள் கருதி சுகாதார அமைச்சு நான்காவது எச்சரிக்கை மட்டத்தை பிரகடனம்

செய்துள்ளது. தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம் என சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா தெரிவித்தார்.

இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது. சில இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில்

இருந்தாலும், ஏனைய பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்க்கையையும், தொழில்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்

முல்லேரியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரட்ன கருத்து வெளியிடுகையில், இங்குள்ள பீசீஆர் கருவிகள் பழுது பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இங்கு நாளாந்தாம் சுமார் ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா – இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

இலங்கையில் பதிவான 30 ஆவது கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானவரின் மரணம் சற்று முன்னர் இடம்பெற்றதாக

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அவர்கள் உறுதி செய்தார்.

நேற்றைய (05) தினம் மரணமான இந்த நோயாளி அங்கொட தேசிய தொற்று

நோயில் பிரிவில்; சிகிச்சை பெற்றுவந்த 23 வயதுடைய முகத்துவாரம், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த ஆண் நபராவார்.

இந்த மரணத்திற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நீரிழிவு நோய் பிரச்சினையுடன் கொவிட்19 வைரசு தொற்றும் ஏற்பட்டதாகும்.

Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு

பிரான்சில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 828 பலி – 60,486பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்

கொரனோவில் சிக்கி 828 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 60,486 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து 4,331 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது


அவ்வாறு ஏனினின் எதிர் வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு

ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

மக்களே எச்சரிக்கை உங்களை நீங்களே பாது காத்து கொள்ளுங்கள்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரோனாவில் சிக்கி ஒரே நாளில் 355 பலி – 23,287 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 355 பேர் பலியாகியுள்ளனர்

,மேலும் 23,287 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

எதிர்வரும் நான்கு வாரத்திற்கு முழு அடித்து பூட்டு நிகழ்வுகள் இடம்பெற

கூடும் என்பதுடன் ஊரடங்கு சட்டம் அமூல் அப்துத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

வத்தளையில் 115க்கு கொரோனா

வத்தளையில் 115க்கு கொரோனா

வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணம்

இலங்கையில் நேற்று மேலும் ஒரு கொரோனா தொற்று நோயாளி மரணமாகியுள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் (30) உயிரிழந்த நோயாளியின் PCR பரிசோதனை அறிக்கைக்கு

அமைவாக கொவிட் 19 தொற்று நோயாளி என்பது சற்று முன்னர் தொற்று நோயியல் பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது..

உயிரிழந்த இவர் 54 வயது பெண் ஆவார்.

கடந்த 29 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்பட்ட நோய்களினால் அவதிப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இது இலங்கையில் பதிவான 20ஆவது கொவிட் 19 தொற்று நோயாளியின் மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதி செய்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகளுக்கு கொரோனா.

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 13 அதிகாரிகளுக்கு கொரோனா.

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை, குறித்த பிரிவின் உயர் அதிகாரியொருவர் லங்காதீப இணையத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.

அதன் பின்னர் அவருடன் தொடர்புகளை பேணிய ஏனைய 20 அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த பி.சி.ஆர். சோதனை முடிவுகளில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை

காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை

கொரோனா தொற்றாளர்களுக்காக, காலி மாவட்டத்தில் 3 வைத்தியசாலைகள்

ஒதுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஹிக்கடுவ- ஆரச்சிகந்த வைத்தியசாலை, அம்பலாங்கொட,

கரந்தெனிய ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு

சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையின் பின்னர், இதுவரை காலி மாவட்டத்தில்

4,837 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

பிரான்சில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

பிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு
கொரோனா பரிசோதனை

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்

முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ஸ்பெயினைப் பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு

உள்ளது. இதனால் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 38 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அந்நாட்டில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து

761 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று 17 பணியாளர்களுடன் இந்தியாவில் இருந்து கொழும்பு’

துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலில் கடமையில் ஈடுபட்ட 7 பேர் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புபட்ட 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர் , சம்பந்தப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று

நோயாளர்களா என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உறுதி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இறுதி கொரோனா நோயாளர் குணமடையும் வரையில் பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை

கடைப்பிடிப்பது கட்டாயமாகுமென்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

நாம் மேற்கொண்ட சிறந்த சேவையின் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடிந்நது. இது தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையுண்டு.

தற்பொழுது சிலர் நினைக்கின்றனர் இந்த தொற்றினால் நாட்டிற்கு பிரச்சினை இல்லை என்றும், இன்னும் சிலர் தொற்று ஏற்பட்டால்

அதனை இராணுவத்தினர் கட்டுப்படுத்திவிடுவர் என்றும் நினைக்கக் கூடும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் மக்கள்

பல சிரமங்களை எதிர்கொண்டனர். அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது என்றும் இராணுவ தளபதி கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும் ஐக்கிய அரபு

இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் தொற்று

உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 3 ஆயிரத்து 208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Posted in மருத்துவம்

கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?

கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க

எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்வென்று அறிந்து கொள்ளலாம்.

கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?
கொரோனா தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


சாதாரண நோய் அறிகுறிகள் தென்பட்டாலே பயமடைந்துவிடுவது பொதுவாக மனிதர்களின் இயல்பு. அந்த பயம் எல்லைமீறி மனக்குழப்பம் உருவாகும்போது அது பீதியாக மாறிவிடும்.

மனிதர்களுக்கு பீதி உருவாகிவிட்டால் அவர்கள் பதற்றமடைந்து நிலைதடுமாறிவிடுவார்கள். இல்லாததை எல்லாம் தனக்கு இருப்பதாக கருதிக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய்

விடுவார்கள். அதன் மூலம் அவர்கள் மனநலமும், உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகிவிடும். அப்படிப்பட்ட

பீதியான சூழ்நிலையை உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வைரஸ் வரலாற்றை ஆராய்ந்தால் அதன் தாக்குதல் உலகில் ஏதாவது ஒருபகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம் நவீன மருத்துவத்தின் மூலம் அவைகளை

கட்டு்ப்படு்த்தியிருக்கவே செய்கிறோம். இன்னொருபுறம் பார்த்தால் சாதாரண சளிக்காய்ச்சலுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பாதிக்கப் படுகிறார்கள். அதில் மூன்று லட்சம் முதல் 6

லட்சம் பேர் ஆண்டுக்கு மரணமடைகிறார்கள். மட்டுமின்றி புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோயாலும் பெருமளவு மரணம் ஏற்படத்தான் செய்கிறது.

இ்ந்த நிலையில் கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி? என்ற கேள்வி எழுகிறது. உலக சுகாதார அமைப்பு, ‘சர்வதேச அவசர நிலையாக’ இதனை அறிவித்தது இதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

‘இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான்’ இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் அதை நினைத்து

பீதியடைய வேண்டியதில்லை. அதே நேரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், நிமோனியா போன்றவை சில நாட்களுக்கு மேல்

நீடித்து மூச்சுத்திணறலாக மாறினால் மட்டும்தான் உடனே கவனிக்கவேண்டும். நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றாகும்.

வைரஸ் நோய்கள் சுவாச உறுப்புகள் தொடர்புடையதாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். நாம் பேசும்போது உமிழ்நீர்

பிசிறுகள் வெளிப்படும். அதனை டிராப்லெட் (droplet) என்போம். ஒருவர் மூலம் இன்னொருவருக்கு ‘டிராப்லெட் இன்பெக்‌ஷன்’ ஏற்படாமல் இருக்க மூக்கு, வாய் பாதுகாப்பு அவசியம்.

பேசும்போதும், தும்மும்போதும் கவனம் தேவை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதையும் தவிர்க்கலாம்.

பொதுவாக வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை எதிர்க்கும். அதையும் மீறி அந்த வைரஸ் கிருமிகள் உடலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை

அறிய முன்பெல்லாம் சில நாட்கள் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ‘பி.சி.ஆர்’ என்ற நவீன பரிசோதனைமுறை

எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் மூலம் உடனே கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடித்தால்கூட அது 100-ல் 2

பேருக்குதான் அதிக பாதிப்பை உருவாக்கும். இதன் தாக்குதலை முறியடிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.

வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

வைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக்க மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளும் மாஸ்க் அணிவது வழக்கத்தில் உள்ளது. இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மூன்று அடுக்குகளை

கொண்ட மாஸ்க்குகள் மட்டுமே முழுமையான பாதுகாப்பு அளிக்கும். எல்லாவித மாஸ்க்குகளும் முழுபாதுகாப்பு அளிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.

நோயாளி மட்டும் மாஸ்க் அணிந்தால் போதாது. அவரை பராமரிப்பவரும், அவரை சந்திக்க செல்பவர்களும் மாஸ்க் அணிவது அவசியம்.

வீட்டில் வைரஸ் தாக்கிய நோயாளிகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல், டிஸ்யூ, பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை

பொது இடங்களில் போடக்கூடாது. பாதுகாப்பானமுறையில் அப்புறப்படுத்தவேண்டும். நோயாளிகளை பராமரிப்பவர்கள் அதன் பின்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவேண்டும்.

லேசான சுடுநீரில் உப்புகலந்து அவ்வப்போது வாயை கொப்பளிப்பது வைரஸ் உடலுக்குள் பரவுவதை ஓரளவு தடுக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். உணவில் உப்பை குறைப்பது சுவாசப் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை

குறைக்கும். ஊறுகாய், உப்பில் ஊறவைத்த இதர உணவுப் பொருட்கள், டின்னில் அடைத்துவைத்திருக்கும் பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.

பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை தவிர்த்திடவேண்டும்.

மனிதர்கள் எச்சில் துப்பும்போது அதில் 10 முதல் 12 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கும். நோயாளிகள் இருக்கும்

அறையில் உள்ள உலோகங்களிலும் வைரஸ் காணப்படும். அதனால் அவைகளை தொட்டாலும் உடனே கைகளை நன்றாக கழுவவேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அத்தியாவசியம் இருந்தால் மட்டும் சந்திக்கசெல்லுங்கள். நோயாளி களிடம் இருந்து நோய் பரவுவதை அதன் மூலம் தடுக்கமுடியும்.

அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் அதன் மூலம் தடுக்கலாம்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பும்- பின்பும் கைகளை நன்றாக கழுவுவதோடு, கைகளில் ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு உடனே

துடைப்பதும் அவசியம். அதுபோல் கழிவறைக்கு போகும் முன்பும்- பின்பும் கைகளை சோப்பிட்டு கழுவி நன்றாக துடைத்திடவேண்டும்.

வளர்ப்பு பிராணிகளிடம் கவனமாக இருங்கள். நெருங்கிப்பழகவேண்டாம். அதுபோல் பொதுவாகனங்களில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

பாதுகாப்பான, சூடான உணவுகளை மட்டும் உண்ணுங்கள். அசைவ உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது நல்லது. முடிந்த

அளவு வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விடப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.

வைரஸ் நோய்களை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவுகின்றன. அவைகளை அப்படியே நம்பி பீதி அடையவேண்டாம். அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை அலட்சியம்

செய்யவேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மாறாக சுய மருத்துவம் மேற்கொள்ளும் எண்ணத்தில் மருந்துகடைகளில் (டாக்டரின் பரிந்துரையின்றி) மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.

எந்த வைரஸ் நோயும் தாக்காத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த பாதுகாப்பு நடைமுறைகளை

கடைப்பிடியுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். அதே நேரத்தில் எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள்.

Posted in உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.70 கோடியைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.70 கோடியை தாண்டியது
சிகிச்சை பெறும் நோயாளிகள்
ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு

மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.70 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8.82 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 60,930 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ்

தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 1.91 கோடியைக் கடந்துள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட திட்டம்

அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே கொரோனா தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின்

பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம் – நிபுணர்கள் கவலை
கொரோனா வைரஸ் பரிசோதனை
வாஷிங்டன்:

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டிவிட்டது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். தடுப்பூசியை

பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும், இது தனது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்புகிறார். அங்குள்ள

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனையை எட்டி உள்ளது.

இதற்கிடையே தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும்

மூன்றாவது கட்ட சோதனை முடிவதற்கு முன்பே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

எனவே அக்டோபர் மாதத்திலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு, மாகாண கவர்னர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், கொரோனா தடுப்பூசியை வினியோகிப்பதற்காக மெக்கசன் கார்ப்பரேஷன் நிறுவனம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், தடுப்பூசியை

சுகாதார துறை, ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்வதற்கான அனுமதி கோரி அந்த நிறுவனத்திடம் இருந்து மாநிலங்களுக்கு விரைவில் விண்ணப்பங்கள் வரும் என்றும், அதற்கு தயாராக

இருக்குமாறும் கூறி உள்ளார். மேலும் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து நவம்பர் 1-ந் தேதிக்குள் முழு அளவில் மக்களுக்கு

தடுப்பூசியை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் இரு முறை போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, அறிவியல் ரீதியான நடைமுறைகளை முடிக்கும் முன்பே, ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசியை அமெரிக்க அரசு மக்களின்

பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள். மூன்றாவது கட்ட

பரிசோதனையை நடத்தாமலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்றால், அந்த மருந்தின் செயல்பாடு பற்றிய

முழு தகவலும் எப்படி தெரியும்? என்று பிலடெல்பியா குழந்தைகள் நல ஆஸ்பத்திரி டாக்டர் பால் ஆப்பிட் கேள்வி எழுப்பி உள்ளார்.

தடுப்பு மருந்து வேலை செய்யுமா? முழு அளவில் பாதுகாப்பானதுதானா? என்பது தெரியும் முன்பே அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இருப்பது மிகுந்த கவலை

அளிப்பதாக பேய்லர் பல்கலைக்கழக துணை வேந்தர் பீட்டர் ஹோட்டஸ் தெரிவித்து இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதை ‘அக்டோபர் ஆச்சரியம்‘ என்றுதான் கூற

வேண்டும் என்று மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம் கூறி உள்ளார்.

என்றாலும் இதுவரை நடத்தப்பட்ட 2 கட்ட பரிசோதனைகளின் மூலம், பெரிய அளவில் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும்

எழவில்லை என்றும், தேவையான நோய் தடுப்பு சக்தியை தடுப்பூசி வழங்கி இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறி இருப்பதாக மருத்துவ இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

சனோபி மற்றும் கிளாஸ்கோஸ்மித்லைன் மருந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், மனிதர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் ஆரம்பகட்ட

பரிசோதனையின் முடிவு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும், அடுத்ததாக தடுப்பூசியை அமெரிக்காவில் 11 இடங்களில் 440

பேருக்கு செலுத்தி பரிசோதிக்க தீர்மானித்து இருப்பதாகவும், அதன் முடிவு டிசம்பர் மாத தொடக்கத்தில் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் வைரஸ் -கேப்பாப்புலவில் 18 பேருக்கு கொரோனா

வேகமாக பரவும் வைரஸ் -கேப்பாப்புலவில் 18 பேருக்கு கொரோனா

கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தவர்களில் 18 பேருக்கு

கொரொனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைந்த 257 பேர் கடந்த 09ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்

பரிசோதனையின் போது 21ஆம் திகதியன்று 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து

அவர்கள் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும் ஒரு தொகுதி பேருக்கு தெற்கின் மில்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட

பிசிஆர்.பரிசோதனையின் போது, 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – புதிதாக 08 நோயாளர்கள் பாதிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் இன்று காலை 6.00 மணி வரையில் 08 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில,; இந்த எட்டு பேரில் ஒருவர்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவரென்று அடையகளங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 07 பேரும் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர் முப்படையினரால் நடத்தப்படும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்வர்கள்.

இதற்கமைவாக கந்தக்காடு போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்றைய தினம் வரை

கொவிட் 19 தொற்று நோயாளர் எண்ணிக்கை 601 என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்று வருகின்ற கைதிகள் – 482
பணியாளர் சபையின் உறுப்பினர்கள் -66


அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் -05
குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் 44
வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட் 19 வைரஸ் நோயாளர் -01


கொவிட் 19 தொற்று நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை -601

இன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்து வந்த 07 பேர் முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்றைய தினம் டோஹாவில் இருந்து 13பேரும் சென்னையில் இருந்து 29 பேரும் ஜப்பானில் இருந்து ஒருவரும்

இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்வுள்ளனர்.

இன்றைய தினம் (03) இராணுவத்தினால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 55 பேர்

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக புனானி மத்திய நிலையத்pல் 52 பேரும் ஹோட்டல் ஜெட்வினில் ஒருவரும் கற்பிட்டி ருவல மத்தியத்தில் இருவருமாக இவ்வாறு வீடு திரும்புகின்றனர்.

இதுவரையில் (03.08.2020) 29,121 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

முப்படையினாரால் நடத்தப்படும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 2294 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய (02) தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,210 ஆகும். இலங்கையில் இதுவரையில் 162,090 பேருக்கு பி.சி.ஆர் பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை இன்றைய தினம் (03) காலை 6.00 மணியளவில் 75 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து

சென்றுள்ளனர். இவர்களுள்ள 06 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடடிற்கு வந்த பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

இருந்தவர்கள். ஏனைய 69 பேரும் உள்நாட்டில் அடையாங்காணப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

      மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

      மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

      நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

      மனிதர்களின் உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி?


      கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒரு இடத்தை தொட்டால், அந்த இடத்தை மற்றொருவர் தொடும் போது அவருக்கு நோய்க்கிருமி பரவுகிறது. அப்படி உடலின் வெளிப்புறத்தில் பரவிய

      கொரோனா வைரஸ் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றின் மூலம் தொண்டை குழாய் வழியாக உடலுக்குள் செல்கிறது.

      அந்த வைரஸ் மூக்கும், வாயும் சேரும் இடத்தில் சில நாட்கள் தங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அறிகுறிதான்

      தொண்டை வலி. தொண்டை வலி வந்தவுடன் உரிய சிகிச்சை மூலம் வைரசை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் அது மூச்சுக்குழாய் வழியாக உடலுக்குள் சென்று விடும்.

      உடலுக்குள் சென்ற வைரஸ் எப்படி நம் உடலில் உள்ள ஒவ்வொரு நோய் எதிர்ப்பு உயிர் அணுக்களையும் (செல்) பல கோணங்களில்

      மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

      தாக்கி அழித்து முக்கிய உடல் உறுப்புகளை எப்படி செயல் இழக்கச் செய்து கொல்கிறது என்பது பற்றி ‘பிராண்டியர்ஸ் இன் பப்ளிக்

      ஹெல்த்’ என்ற அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த இதழில் கூறியிருப்பதாவது:-

      மனிதர்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு நம் உடலில் ஏராளமான நோய் எதிர்ப்பு உயிர் அணுக்கள் உள்ளன. ஆனால் அந்த உயிர் அணுக்களை கொரோனா வைரஸ்

      புதுமையான முறையில் அழிக்கிறது. அதற்கு ‘சைட்டோகைன் புயல்’ என்று பெயர்.

      நம் உடலில் நன்மை விளைவிக்கும் ஒரு உயிர் அணுவை மற்றொரு நல்ல உயிர் அணு அழிப்பதுதான் சைட்டோகைன் புயல் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

      உடலில் நோய்களை எதிர்த்து போராடும் அதிகப்படியான ‘லிம்போ சைட்ஸ்’ மற்றும் ‘நியூட்ரோபைல்ஸ்’ என்று அழைக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களை ஒன்றோடொன்று தாக்கிக் கொள்ள

      கொரோனா வைரஸ் தூண்டுகிறது. இதனால் அவை அழிந்து போய் விடுகின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

      ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்துகிறது.

      அடுத்து சைட்டோகைன் புயல் என்ற நிகழ்வு உடலில் அதிகப்படியான காய்ச்சலை உருவாக்கி ரத்த அணுக்களில் கசிவை ஏற்படுத்தி ரத்தத்தை உறையச் செய்கிறது. இதுதவிர குறைந்த ரத்த

      அழுத்தத்தை உண்டாக்கி ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, ரத்தத்தில் அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

      மேலும் கொரோனா வைரஸ் ரத்த வெள்ளை அணுக்களை தவறாக வழிநடத்தி ஆரோக்கியமான திசுக்களை தாக்கி வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் நுரையீரல், இதயம், குடல், கல்லீரல்,

      மனித உடல் உறுப்புகளை கொரோனா வைரஸ் செயல் இழக்கச் செய்வது எப்படி

      சிறுநீரகம், பிறப்பு உறுப்புகள் செயல் இழந்து விடுகின்றன. இப்படி பல உடல் உறுப்புகளை செயல் இழக்கச் செய்து நுரையீரலின்

      செயலை கொரோனா வைரஸ் முடக்கி விடுகிறது. இதனால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

      இது எதனால் ஏற்படுகிறது என்றால் கொரோனா வைரஸ் கொன்ற உயிர் அணுக்கள், புரதங்களின் கழிவுகள் ஆகியவை நுரையீரலில்

      தேங்கி விடுவதால் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் இழந்து விடுகிறது. எனவே தான் கொரோனா பாதிப்பினால்

      உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மூச்சுச் திணறி இறக்கிறார்கள்.

      கொரோனா வைரசை அழிக்க மருந்து இல்லாத காரணத்தினால் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் அதை எதிர்த்து போரிடுவதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. அதாவது கொரோனா வைரஸ்

      பாதிப்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகளை அதி தீவிரமாக கண்காணித்து செயல்பட வைப்பதின் மூலமே இறப்பு விகிதத்தை

      குறைக்க முடியும். இது எப்படி சாத்தியமென்றால், கல்லீரலில் உள்ள ரத்தத்தை செயற்கை முறையில் எப்படி சுத்திகரிக்கிறோமோ

      அல்லது சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிசிஸ் முறையை எப்படி பயன்படுத்துகிறோமோ

      அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயற்கையாக செயல்பட வைத்து இறப்பை தடுக்க முடியும்.

      கொரோனா தாக்கத்தினால் நுரையீரல் செயலிழந்து விட்டால், அதற்கு மாற்றாக தொண்டை குழாய் வழியாக செயற்கை சுவாச

      எந்திரத்தை(வென்டிலேட்டர்) இணைக்காமல் செயற்கை காற்று குழாய் மூலமாக இளஞ்சூடான ஈரப்பதமிக்க ஆக்சிஜனை மூக்கு

      வழியாக செலுத்தினால் உயிர் பிழைக்க வைக்க முடியும். இதனால்தான், கொரோனா வைரஸ் உடல் உறுப்புகளை தாக்கி

      செயல் இழக்கும் அளவுக்கு அதை வளர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

      கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

      ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். இதன் மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் மோசமடைவதை தடுக்கலாம்.