Tag: குத்திக் கொலை
பெண் ஒருவர் குத்திக் கொலை
பெண் ஒருவர் குத்திக் கொலை
பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கல பகுதியில் காணி ஒன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் பெண் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக் குத்து தாக்குதலில்
இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர் 48 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடித்த நிலையில் இருந்த பெண். வேறு ஒரு கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் ஆத்திரம் கொண்ட அவர்கள் இவரை குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியவர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
கள்ளத்தொடர்பு காரணமாக கொலை
கள்ளத்தொடர்பு காரணமாகவே இந்த பெண் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான கத்திவிட்டு தாக்குதலும் குத்துச்சம்பவங்களும் கள்ளத்தொடர்புகளால் ஏற்பட்டு வருகிறது.
ஒருவர் வழி மாறி சென்று சென்று விட்டால் அதை விட்டு கடந்து செல்வதை தவிர்த்து அதற்கு மறுத்து ,அவர்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கையில் , இவ்வாறான கூலி குழுக்களை ஈடுபட்டுள்ளது வேதனையை பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவன் குத்திக் கொலை லண்டனில்
மாணவன் குத்திக் கொலை லண்டனில்
மாணவன் குத்திக் கொலை லண்டனில் ,லண்டனில் ப்ளூடூத் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவன் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை முடிந்து வீடு நோக்கி செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த சக மாணவர்களினால் இவர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாகவே இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவனை பறி கொடுத்த பெற்றோர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த வருடத்தில் இடம்பெற்ற முதலாவது மாணவ படுகொலையாக இது காணப்படுகிறது.
குறித்த படுகொலையானது பயத்தையும் பீதியையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவங்கள் தடுத்து நிறுத்த படாவிட்டால் பாடசாலை பாதுகாப்பு பதிலே காணப்படும் என பெற்றோர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர்.
மகனை குத்திக் கொலை செய்த தந்தை
மகனை குத்திக் கொலை செய்த தந்தை
மகனை குத்திக் கொலை செய்த தந்தை ,கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின் மகனே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை
சித்தியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞன் குத்திக் கொலை
மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்த தன்தெனிய தோட்டம் பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதல் உறவு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இந்தக் கொலையைச் செய்துள்ள நிலையில், ஹர்ஷன குமார என்ற 27 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த மோதலில் மற்றுமொருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞன் தனது சித்தியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் நாளை (13) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலைக்கு வழிவகுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் தெலிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


































