Tag: கங்கனா ரணாவத்
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு
எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா
வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு
துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.
கங்கனா ரனாவத்
இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.
நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா ரணாவத் ஆவேசம்
வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா ரணாவத் ஆவேசம்
வேளாண் சட்டங்கள் ரத்து என்ற பிரதமரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சர்வாதிகாரமே தீர்வு – வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா ரணாவத் ஆவேசம்
கங்கனா ரணாவத்,
மும்பை:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.
எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, டெல்லி
எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்வாதிகாரமே தீர்வு என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சோகம், அவமானம் மற்றும் முற்றிலும் நியாயமற்றது என பதிவிட்டுள்ளார்.
மேலும், தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டார்கள். பாராளுமன்றத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, இதுவும் ஒரு ஜிகாதி தேசம்தான்… இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
அவரது அடுத்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, லத்தி
(குச்சி)தான் ஒரே தீர்வு, சர்வாதிகாரம்தான் ஒரே தீர்மானம். பிறந்தநாள் வாழ்த்துகள் மேடம் என கூறியுள்ளார்.
அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்
அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்
வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக ஜாவேத் அக்தர் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
அவதூறு வழக்கில் கங்கனா ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை
கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் மீது, ‘டிவி’ பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாகக் கூறியதாக, திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து
செய்யக் கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில், கங்கனா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் வழக்கறிஞர் திரைப்பட
விளம்பரத்திற்காக கங்கனா சென்றபோது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கங்கனா ரணாவத்
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, அடுத்தமுறை வழக்கு விசாரணைக்கு, கங்கனா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை… கண்கலங்கிய கங்கனா ரணாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பட விழாவில் விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை என்று பேசி இருக்கிறார்.
விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை… கண்கலங்கிய கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ’தலைவி’ படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை’ என்று கூறி கண் கலங்கினார்.
இயக்குனர் விஜய் – கங்கனா ரணாவத்
’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்று அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் நடிகை கங்கனா
ரணாவத்திற்கு ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ மற்றும் ‘பங்கா’ படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்
இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத் வற்புறுத்தல்
கங்கனா ரணாவத்
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளையும்
பெற்றுள்ளார். இவரது சகோதரி ரங்கோலி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
சமீபத்தில் மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காக சென்ற சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து
டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. ரீமா காக்தி என்ற பெண் இயக்குனர் ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்றார். டுவிட்டருக்கும் புகார்கள் அனுப்பினர்.
கங்கனா ரணாவத்
இதைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் ரங்கோலியின் கணக்கை முடக்கியது. இதனால் ஆத்திரமான கங்கனா ரணாவத் சகோதரிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
. அதில் பேசி இருப்பதாவது: எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார்.
எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை. அவர் மீது பாராகானும், ரீமாவும் தவறான குற்றச்சாட்டை சுமத்தி
உள்ளனர். இந்தியாவில் டுவிட்டர் தளத்தை முடக்கிவிட்டு நமது நாட்டுக்கு சொந்தமாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






