இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்

Spread the love

இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத் வற்புறுத்தல்
கங்கனா ரணாவத்


பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளையும்

பெற்றுள்ளார். இவரது சகோதரி ரங்கோலி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

சமீபத்தில் மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காக சென்ற சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து

டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. ரீமா காக்தி என்ற பெண் இயக்குனர் ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்றார். டுவிட்டருக்கும் புகார்கள் அனுப்பினர்.

கங்கனா ரணாவத்

இதைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் ரங்கோலியின் கணக்கை முடக்கியது. இதனால் ஆத்திரமான கங்கனா ரணாவத் சகோதரிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

. அதில் பேசி இருப்பதாவது: எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார்.

எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை. அவர் மீது பாராகானும், ரீமாவும் தவறான குற்றச்சாட்டை சுமத்தி

உள்ளனர். இந்தியாவில் டுவிட்டர் தளத்தை முடக்கிவிட்டு நமது நாட்டுக்கு சொந்தமாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      Leave a Reply