துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் கைது துப்பாக்கியுடன்

ஒருவர் கைது துப்பாக்கியுடன்

ஒருவர் கைது துப்பாக்கியுடன் ,கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் அதிகாரி

கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) இரவு முன்னெடுத்த விசேட

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சந்திவௌி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் குத்திக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் குத்திக் கொலை

பெண் ஒருவர் குத்திக் கொலை

பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கல பகுதியில் காணி ஒன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் பெண் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக் குத்து தாக்குதலில்

இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர் 48 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடித்த நிலையில் இருந்த பெண். வேறு ஒரு கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் ஆத்திரம் கொண்ட அவர்கள் இவரை குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

கள்ளத்தொடர்பு காரணமாக கொலை

கள்ளத்தொடர்பு காரணமாகவே இந்த பெண் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான கத்திவிட்டு தாக்குதலும் குத்துச்சம்பவங்களும் கள்ளத்தொடர்புகளால் ஏற்பட்டு வருகிறது.

ஒருவர் வழி மாறி சென்று சென்று விட்டால் அதை விட்டு கடந்து செல்வதை தவிர்த்து அதற்கு மறுத்து ,அவர்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கையில் , இவ்வாறான கூலி குழுக்களை ஈடுபட்டுள்ளது வேதனையை பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் அடித்து கொலை

ஒருவர் அடித்து கொலை

ஒருவர் அடித்து கொலை ,திஹாகொடவில் மத்தியஸ்த சபை விசாரணையில் 73 வயதான ஒருவர் தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டார்

திஹாகொட பெத்தங்கஹவத்த விகாரையில் நேற்று (25) இடம்பெற்ற சமரச சபை விசாரணையின் போது 73 வயதுடைய நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகராறைத் தீர்ப்பதற்காக வரவழைக்கப்பட்ட இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உடல் தகராறு ஏற்பட்டது.

இந்த சர்ச்சை முதலில் திஹாகொட பொலிஸ் நிலையத்தினால் சமரச சபைக்கு அனுப்பப்பட்டது.

மோதலின் போது, ​​ஒருவர் காயமடைந்து, முதலில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் திஹாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் துப்பாக்கியுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் துப்பாக்கியுடன் கைது

ஒருவர் துப்பாக்கியுடன் கைது

ஒருவர் துப்பாக்கியுடன் கைது,பொல் திகமா காவல்துறை பகுதியில் நபர் ஓருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .

பொலிசாரேவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த பட்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நாட்டில் துப்பாக்கி சூடு காரணமாக பலர் பிழையாகி வருகின்றார் ,அவ்வாறன சூழல் இந்த துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

வீடியோ

உள்ளத்தில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ,தற்போது இவர் நீதிமன்றில் பாற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அரசின் அனுமதி இன்றி ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் கைதுசெ செய்யப்படுவார்கள் என்ற நிலை காணப்படுகின்றது .

இவ்வாறன ன் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது ,மக்கள் உயிர்பலிகள் தடுக்க பட இவ்வாறான சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் நிலைப்பாடாக உள்ளமை குறிப்பிட தக்கது .

ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் படுகொலை

ஒருவர் படுகொலை

ஒருவர் படுகொலை விற்பனை நிலையம் ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி அதன் உரிமையாளரைக் கொலை செய்துள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதகல பிரதேசத்தில் நேற்று (18) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

எல்பிட்டிய மேல் நவதகல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் விற்பனை நிலையத்திற்கு குடிபோதையில் வந்த நபரே இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் நவதகல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவராவார்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை ,இலங்கை பாலப்பட்டி பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வாகனத்தில் சாரதி ஒருவர் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரைச் சென்று பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்,.

மலச்சாலை உரிமையாளர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் வர்த்தகர் வெட்டி கொலை

மிகப்பெரும் வர்த்தகராக விளங்கிவரும் இவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள் யார் என்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகனத்தில் தனியாக பயணித்த பொழுது இவரது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான கொலையின் பின்புறத்தில் யார் உள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தொடராக இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .

மக்களுடன் மிக நல்லுறவோடு பழகி வந்த நல்ல மனிதர் எனவும் ,அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

அவ்வாறான மலர் சாலை உரிமையாளர் மீது தலையில்வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகாரணகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இந்த படுகொலைக்கு உடனடியாக இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுகின்றது .

இலங்கை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது .

போதைவஸ்து கூலி குழுக்களினால் இவ்வாறான கொலைகள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் இப்பொழுது எழுப்பப்படுகின்றது.

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பெண்வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ,யாழ்ப்பாணம் பருத்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கி இருந்த பொன்னியல் நோய் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

பெண் வைத்தியர் சடலமாக மீட்க பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடும் மன அழுத்தம் காரணமாக அதிகளவு மயக்க மருந்தை உடலில் செலுத்தியதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனிப்பட்ட நபர் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக வழங்கப்பட்டது.அதனால் இவர் வேறு வழியின்றி இவ்வாறான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வழியாக இருக்கின்றன.

முப்பது வயதுடைய இளம் மருத்துவரை இவ்வாறு பலியாகி உள்ளார் .

கனவுகளை சுமந்து மருத்துவராகி

பெற்றவர்களின் கனவுகளை சுமந்து மருத்துவராகி தனது கடமையை பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர் அதிக மன உளைச்சல் மேலதிகாரியினால் வழங்க பட்டதன் காரணமாக தற்கொலைக்கு சென்றுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் பல மருத்துவர்களின் அடக்கு முறையினால் பல தாதிகள் மருத்துவர்கள் சொல்லென இடர்களை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது .

தனிநபர் பழிவாங்குதல்

நிறைவேற்ற பணிப்பாளராக மருத்துவமனைகள் இருக்கும் அதிகாரிகளினால் கீழ் நிலையில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தாதிகள் மீது கடும் தாக்குதல் தனிநபர் பழிவாங்குதல் மற்றும் சொல்லென இடர்களை அவர்கள் சந்தித்து வருவதாக அங்கு பணி புரிகின்ற பலர் இவ்விதம் குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

இலங்கையில் கடந்த தினம் கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

இவ்வாறு கத்தி குத்துக்கு உள்ளானவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்

கத்தியால் குத்திய நபர் படுகொலை செய்ய பட்ட நபராது கைபேசியை திருடிய

நிலையில் அது தொடர்பாக அவரது இரு மகனுடன் சென்று விசாரிக்க சென்ற பொழுது அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

கத்தியால் கோரமாக குத்தி படுகொலையை புரிந்து விட்டு கொலை குற்றவாளி தப்பி

ஓடியுள்ளார் ,இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளியை கைது செய்யும் நோக்குடன் விசேட காவல்துறையினர் செயலாற்றி வருகின்றனர்

இலங்கையில் நாள் தோறும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி போல எகிறிய வண்ணம் உள்ளது

மக்கள் மத்தியில் இவ்விதமான கொடூர குற்றவியல் மனோ நிலையை இவ்வாறான படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைய பெறுகிறது

கடந்த சில காலங்களாக நீர் நிலைகளில் படுகொலை செய்யப்பட்டு வீச பட்ட

நிலையில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன ,அதுபோலவே இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளை

தடுக்க போலீசார் தவறி வருகின்றனர் ,மேலும் இந்த படுகொலை குற்ற செயல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் மக்கள் தவறி வருகின்றனர்

திருட பட்ட ஒரு கைபேசியை திருடன் என்கின்ற முறையில் வன்முறையோடு திருடியவர் வீடு சென்று விசாரிக்க சென்ற போதே

வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த திருட்டு பழிக்குற்றத்தில் இருந்து தப்பிக்க திடீர் கத்தி குத்து படுகொலை தாக்குதலை நடத்தியுள்ளார்

வாய் தர்க்கம் முற்றிய நிலையில் அதனை சமாதான முறையில் அணுகிட தவறியதன் விளைவே அப்பாவி உயிர் ஒன்று படு கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளது


அறிவார்ந்த நிலையில் பிரச்சனைகளை கையாள மறுத்ததன் விளைவே இந்த கத்தி குத்து படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

  • வன்னி மைந்தன் –
    Posted in இலங்கை செய்திகள்

    முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

    முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

    இலங்கை டவடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் கிராம பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர்,

    அவ் வீட்டிலிருந்தவரை கோரமாக தாக்கி படு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட கை கலப்பு இந்த கொலையில் முடிவடைந்துள்ளது

    குறித்த சம்பவத்தில், உயிரிழந்தவர் அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

    சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

    முல்லைத்தீவு அளம்பில் கிராம பகுதியில் இடம் பெற்ற இந்த அடித்து கொன்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது
    செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

    முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தில் அத்துமீறி வீடு புகுந்து குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

    முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை

    குறித்த நபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யும் வேட்டையில் விசேட காவல்துறை அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்

    இலங்கை நாட்டில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்களினால் தினம் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

    பெருகி வரும் இவ்விதமான குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

    பெருகிவரும் இவ்வாறான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செய்யல் பட வேண்டும் என சமூக நல ஆரவாளர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்

    முல்லைத்தீவு ஆகுதியில் இவ்விதமான கொலைகள் அதற்க்கு முன்னரும் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    இலங்கையில் இந்தியாவை போன்று மக்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பங்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்டது ,போதைவஸ்து மற்றும் வன்ம செயல்பாடுகளினால் இந்த படுகொலை களம் திறக்க பட்டு வருகிறது

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை

      கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை

      அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக்

      கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

      சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

      குறித்த இரு குடும்பங்களுக்கும் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும்

      நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

      இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

      இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

      சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட
      கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.