செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in Uncategorized

யாழில் வயிற்றிற்குள் துணியை வைத்து தைத்ததால் பெண் ஒருவர் பலி

யாழில் வயிற்றிற்குள் துணியை வைத்து தைத்ததால் பெண் ஒருவர் பலி

நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திர சிகிச்சை

மேற்கொண்ட மருத்துவ குழு உள்ளிட்ட விவரம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்தார்.

பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

அதனால் நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10 ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.

மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.

அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், தனியார் மருத்துவமனை பணிப்பாளர், மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை இன்று மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

பெண்ணின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவாவிடம் இன்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது.

தொடர்ந்து இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்துக்குச் சென்ற நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.

உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவை வரும் ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதிவான் மன்றில் முன்வைக்கவேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

    ரணில் மைத்திரி
    Posted in இலங்கை செய்திகள்

    முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை

    முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்

    அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில்

    தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

    தாக்குதலை தவிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தீவிரவாதிகளுக்கு எதிராக கனிவான நிலைப்பாட்டை பிரதமர் கொண்டிருந்தார் என அந்த

    ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    எனவே தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.

    தற்கொலை செய்து கொண்ட நபர், தமக்கு நீதி கிடைக்காததன் காரணமாக கடும் மன

    அழுத்தத்துக்கு ஆளாகி, தமது பிள்ளைகளையும் தனித்துவிட்டு அவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டுள்ளதாக பேராயர் மேலும் குறிப்பிட்டார்.

      Posted in இலங்கை செய்திகள்

      கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

      கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு

      வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின்

      விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

      இம்மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், அரச அல்லது தனியார்

      காணிகளில் இடம்பெறும் நிர்மாணங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக தங்கியிருப்போரின் விவரங்கள் திரட்டப்படும்.

      தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இந்த 3 நாட்களுக்குள் உங்களின் பிரதேசத்துக்கு வருகை தரும் பொலிஸ் அதிகாரிகள் வழங்கும் படிவத்தைப் பெற்று, தற்காலிகமாக உங்கள் வசிப்பிடத்தில் காணப்படும் நபர்களின்

      விவரங்களைக் குறிப்பிட்டு அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அந்த அதிகாரிகளிடம்

      ஒப்படைக்குமாறு அல்லது அருகாமையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரானாவுக்கு 11 பேர் மரணம்

        இலங்கையில் கொரானாவுக்கு 11 பேர் மரணம்

        இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

        தினம் 11 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          கொழும்பு நகரில் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை

          கொழும்பு நகரில் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை

          தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு கொழும்பு நகரில் இன்று (14) முதல் மூன்று

          தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக

          பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

          தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, குற்றச்செயல்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தை

          ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் தேசிய பாதுகாப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

            Posted in இலங்கை செய்திகள்

            வர்த்தகர் நுவரெலியாவில் சடலமாக மீட்பு

            வர்த்தகர் நுவரெலியாவில் சடலமாக மீட்பு

            நுவரெலியா -பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட “டேப்பன்டைல்” வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று, (13) மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

            இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நீர்கொழும்பு குணரத்தின மாவத்த 50 ஏக்கர் கிராமம் பகுதியை சேர்ந்த சத்துருவான் ஹப்புகாமி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இவர் வர்த்தகர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

            பட்டிப்பொல நகரில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள உலக முடிவு பகுதிக்கு செல்லும் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

            தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

            சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோசணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு

            செல்லப்படும் எனவும் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்த நபர் பயணித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.

              பாடசாலை மதிலை
              Posted in இலங்கை செய்திகள்

              பாடசாலை மதிலை திறந்து வைத்தார் – சிறிதரன் எம்பி photo

              பாடசாலை மதிலை திறந்து வைத்தார் – சிறிதரன் எம்பி

              வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் மதிலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

              உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.


              நாடாளுமன்ற உறுப்பினரின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த மதில் அமைக்கப்பட்டது.


              பாடசாலையின் முதல்வர் பங்கயற்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற

              உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்

              சிவமோகன் கரைச்சி கோட்டக் கல்வி அலுவலர் தர்மரத்தினம் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்

              சிறீஸ்குமார் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்

                பராசூட்டில்
                Posted in இலங்கை செய்திகள்

                பராசூட்டில் பறந்தவர் மரத்தில் தொங்கினார்

                பராசூட்டில் பறந்தவர் மரத்தில் தொங்கினார்

                கலஹா, லுல்கந்துர பகுதியில் பராசூட்டில் பறந்த வெளிநாட்டு பிரஜை விபத்தில் காயமடைந்துள்ளார்.

                35 வயதான ரஷ்ய பிரஜையொருவரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                குறித்த நபர், ரெலிமங்கொட பிரதேசத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையில் சுமார் 30 அடி உயரமுள்ள மரமொன்றில் பராசூட் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                சம்பவத்தில் காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                  கணவனை கட்டி வைத்து
                  Posted in இலங்கை செய்திகள்

                  கணவனை கட்டி வைத்து மனைவியிடம் கொள்ளை

                  கணவனை கட்டி வைத்து மனைவியிடம் கொள்ளை

                  மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அவ்வீட்டிலிருந்து ஆண் ஒருவரை கட்டிவைத்துவிட்டு

                  அவரின் மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.

                  காதில் இருந்த தோடுகள், தங்க சங்கிலி உட்பட இரண்டரை பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

                  அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை நேற்று (12) புதன்கிழமை கைது செய்துள்ளதுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

                  கொள்ளையடிப்பதற்காக, பயன்படுத்திய கோடரி ,கத்தி 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.

                  விசாணையில் அவர்கள் வழங்கிய தகவலுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின்

                  ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று புதன்கிழமை ஓட்டுமாவடி, கிரான் பிரதேச

                  செயலக பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

                  இதில் 31,34,29 மற்றும் 31 வயதுடையவர்கள் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது 4

                  பேரும் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடித்துவருகின்றனர். அதற்காக காரொன்றையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

                  கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை பினாஸ்கம்பனி ஒன்றில் ஒரு இலச்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட

                  விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

                    கொரானா
                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்

                    இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்

                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 14 பேர்

                    பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

                      சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

                      அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் 2021 ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட

                      359 வழக்குகளுக்கு நீதிமன்றங்களினால் 15 இலட்சத்தி 43 ஆயிரம் ரூபாய் அபராதம்

                      விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்துள்ளார்.

                      நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 522 வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

                      இதில் 428 வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

                      பயணத்தடை மற்றும் கொவிட் -19 காலப்பகுதியில் கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோரின் முறைப்பாட்டையடுத்து அம்பாறை, தெஹியத்தக்கண்டி,

                      பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

                        டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

                        மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம்,

                        கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.

                        மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற சுகாதார அதிகாரிகளின் அறிக்கையை அடுத்தே இந்த

                        சமூக நலத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

                        இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் சுமார் 105 சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து 900

                        க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

                        இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொது கட்டளைத் தளபதிகள், படைத்

                        தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்களித்துள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

                        Posted in Uncategorized

                        காதலியை கற்பழித்த 4 பேர் – யாழில் நடந்த பயங்கரம்

                        காதலியை கற்பழித்த 4 பேர் – யாழில் நடந்த பயங்கரம்

                        தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18

                        வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

                        நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் (11) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

                        குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                        தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

                        இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

                        அந்நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞன், யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக

                        இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும், அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

                        இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

                        அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

                        அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு, ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக, வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

                        அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி, உறவு கொண்டுள்ளார். பின்னர் தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

                        இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்து உள்ளனர்.

                        பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் யுவதியிடம் இருந்த 40

                        ஆயிரம் ரூபாய் பணம், நகைகள், தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

                        சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி

                        என்பதனால் முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

                        பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

                        அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றைய தினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

                        அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

                        இதேவேளை , கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில

                        இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கஞ்சாவுடன் பிக்கு கைது

                          கஞ்சாவுடன் பிக்கு கைது

                          இலங்கையில் மொட்டை பிக்குகளின் அடாவடி அதிகரித்து செல்கிறது ,இவ்விதம் சம்பவங்கள்

                          இடம்பெற்று கொண்டிருக்க போதையில் போலீசாருடன் தர்க்கம் புரிந்த பிக்கு ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்ய பட்டுள்ளார்

                          மத விதிகளை மீறி இவர் இவ்விதம் போதையில் உலவியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா

                            அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா

                            கொழும்பில் டியூக் வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 
                            
                            உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்க படுகிறது 
                            
                            இவ்விதம் நோயின் தொற்றுக்கு உள்ளானவர்கள் தலைமை அப்டுத்த பட்டுள்ளனர் 
                              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                              Posted in இலங்கை செய்திகள்

                              இரு குழு மோதலில் – ஒருவர் பலி

                              இரு குழு மோதலில் – ஒருவர் பலி

                              இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                              நிவிதிகல – கிரிமடுவ கோட்டத்தின் கீழ் பகுதியில் நேற்று (11) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளது.

                              இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒருவரைத் தள்ளும் போது தவறி விழுந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              உயிரிழந்தவர் கீழ் நிவித்திகல, கிரிமடுவ லைம பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                              சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                              இவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

                                Posted in இலங்கை செய்திகள்

                                முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

                                முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

                                இலங்கை முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற


                                வாலிபர்கள் இருவரை இராணுவத்தினர் கைது செய்தனர்

                                இவர்களினால் கடத்தி செல்ல பட்ட 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வெலிக்கடை சிறைச்சாலை மோதல்

                                  வெலிக்கடை சிறைச்சாலை மோதல்

                                  கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற

                                  துப்பாக்கிச்சூட்டில் கைதிகள்உயிரிழந்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(12) அறிவிக்கப்படவுள்ளது.

                                  கடந்த 6ஆம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில், இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

                                  நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன

                                  ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

                                  இந்தப் சம்பவம் தொடர்பில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ்

                                  பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

                                    பெண்ணை காணவில்லை
                                    Posted in Uncategorized

                                    15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

                                    15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

                                    இலங்கை மகரகம பகுதியில் கடந்தஏழாம் திகதி முதல் பதின் ஐந்து வயதுடைய அழகிய பெண்

                                    ஒருவர் காணாமல் போயுள்ளார்
                                    இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                    இவர் கடத்த பட்டாரா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளுக்கு சென்றாரா என்பது

                                    தொடர்பில் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      இராணுவ முகாமிற்குள் குண்டு
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு

                                      பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு

                                      இலங்கை பொரளை Borella All Saints’ Church premises தேவாலய பகுதியில் கைவிட ப்பட்ட நிலையில்

                                      கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                      குறித்த குண்டை வெடிக்க செய்திடும் முகமாக நபர் ஒருவர் அங்கு எடுத்து வந்திருந்ததாக

                                      இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

                                      கைது செய்வ பட்ட நபரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது