Tag: பராசூட்டில்
Posted in இலங்கை செய்திகள்
பராசூட்டில் பறந்தவர் மரத்தில் தொங்கினார்
Author: நலன் விரும்பி Published Date: 13/01/2022 Leave a Comment on பராசூட்டில் பறந்தவர் மரத்தில் தொங்கினார்
பராசூட்டில் பறந்தவர் மரத்தில் தொங்கினார்
கலஹா, லுல்கந்துர பகுதியில் பராசூட்டில் பறந்த வெளிநாட்டு பிரஜை விபத்தில் காயமடைந்துள்ளார்.
35 வயதான ரஷ்ய பிரஜையொருவரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், ரெலிமங்கொட பிரதேசத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையில் சுமார் 30 அடி உயரமுள்ள மரமொன்றில் பராசூட் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







