Tag: இலங்கை
வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு
வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு
பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியில் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கும் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இராணுவ ட்ரக் வண்டியில் இரண்டு இராணுவத்தினர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகந்த புனானி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஹிங்குராங்கொட இராணுவ முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், ட்ரக் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்
இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்
இலங்கையில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒழுத்து எயிட்ஸ் நோயானது அதிகரித்து
செல்வதாக கவலை வெளியிட பட்டுள்ளது
கடந்த ஆண்டுகளை விட சமீப காலங்களில் இதன் பாதிப்பு அதிகரித்து செல்கின்றது ,முறையற்ற
பாலியல் உறவு மற்றும் ,அதன் செயல்பாடுகள் தொடர்பிலேயே இந்த நோயானது பரவி வருவதாக
தெரிவிக்க படுகிறது
யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்
யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து
சிதறியுள்ளது ,எனினும் இதனால சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது ,உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை
மேற்படி தொடர் வெடிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது
இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு
இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன , திருமண
மன்படங்களில் 200க்கு குறைவானவர்களே அனுமதிக்க படுவார் ,மேலும் உணவகங்களில் உள்ளே
100 உள்ளானவர்கள் மட்டும் அமர வேண்டும்
தவிர வீடுகளை விட்டு தேவையின்றி வீதிகளில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை பட்டுள்ளது
,மீறுவோர் காவல்துறையால் கைது செய்ய படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
மக்களே விழிப்பாக இருங்கள்
பரவும் நோயில் இருந்து உங்களை காப்பற்றி கொள்ளுங்கள்
மோடியை சந்திக்க பறந்தார் – நிதியமைச்சர் பசில்
மோடியை சந்திக்க பறந்தார் -நிதியமைச்சர் பசில்
இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிட இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா
விரைந்துள்ளார்
இந்த சந்திப்பில் இலங்கை தொடர்பான அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச
உள்ளார் என
தெரிவிக்க படுகிறது
தீயில் எரிந்து சிறுமி மரணம்
தீயில் எரிந்து சிறுமி மரணம்
இலங்கை வெலிகம பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி
இறந்துள்ளார்
இந்த வீடு தீ பற்றல் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சம்பவமா என்பது தொடபில் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
நாடெங்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை
சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 டிசம்பர்01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு
மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது அடுத்த சில நாட்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் குறிப்பாகபிற்பகலில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பிரதானமாக வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
பிரிட்டனில் பிறந்த இலங்கையை சேர்ந்த சிங்கள பெண்மணி ஒருவர் நிறுவனம் ஒன்றின்
நிறைவேற்று சர்வ வல்லமை பொருந்திய முதன்மை அதிகாரியாக விளங்குகிறார் ,அதாவது CEO
அவுஸ்ரேலியாவில் பணியாற்றுமிவர் உலக ஆசிய பணக்கார பட்டியலில் அதிக பணத்தினை
பெற்று கொள்ளும் பெண்மணியாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
இவரது ஆண்டு வருமானம் 16 மில்லியன் டாலராக உள்ளது
அறிவார்ந்த நிலையில் எமது சமூகமும் இது போல பயணிக்க வேண்டும் என்பதே நமது எண்ண
கருத்தாகும் ,இவரை போல நீங்களும் முன்னேறலாம் .
எடுத்து கொண்ட விடயத்தில் உரிய கவனத்தைச செலுத்தி வெற்றி காணுங்கள்
வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை
வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை
இலங்கையில் கடந்த இரு நாட்களில் இருபது காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவத்தினால் சில வீடுகள் சேதமாகியுள்ளன , நாள் தோறும் இந்த எரிவாயுவை பயன்
படுத்தும் மக்களே மிக எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்ட படுகிறது
சிலிண்டரில் எரிவாயு கசிவே இந்த வெடிப்பிற்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்
முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது
இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
தடை செய்ய படுகின்றன.
அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது
கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்
கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்
யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதி கடலப்குதியில் உருக்குலைந்த நிலையில் மனித சடலம் ஒன்று
மீட்க பட்டுள்ளது
இவ்வாரு சில நாட்களுக்கு முன்னரும் மூன்று சடலங்கள் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிட தக்கது
தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்
தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர்
தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக
மீட்கப்பட்ட சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அமிர்தகழி ஆனந்தன் வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய தியாகராஜா பத்திராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.
குறித்த நபர் நடக்க முடியாத நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தனக்கு வாழ்கை
வெறுத்து போயுள்ளது என கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சம்பவதினமான இன்று காலை 9
மணியளவில் சமையலறை பகுதியில் தனக்கு தானே மண்எண்ணெயை ஊற்றி தீயிட்டு
தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது
விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று
பொலிஸாரினால் , சுற்றிவளைக்க பட்டது ,இதன் போது மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்
கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது ,அரசு தெரிவிக்கும் இந்த மரணங்களை விட இறப்பு விகிதம்
இரட்டிப்பாக உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
புலிகள் உடைத்த உலக உளவுத்துறை -video
தமிழீழத்தில் தமிழ் மக்களின் விடியலுக்காக சிங்கள அரசு புரிந்த கோர தாக்குதல் இவ்வேளை
இங்கு சர்வதேச உளவு வேலைகள் என்பன தொடர்பில் உடைக்க படும் உண்மைகள்
காணொளியை இப்போதாவது பார்த்துக்கோ
,இப்பொழுதாவது இவை வெளிவந்துள்ளது
முஸ்லீம்களை புலிகளுக்கு எதிராக சிங்களம் திருப்பியது எப்படி ,தமிழா மறக்காது இந்த
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்
- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது
- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்
- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு
- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு
- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
யாழில் தேவாலயம் அடித்து நொறுக்கு – நபர் கைது
யாழில் தேவாலயம் அடித்து நொறுக்கு – நபர் கைது
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
,இவரது தாக்குதலில் ஆலயம் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது
விரைந்து வந்த போலீசாரை போதையில்நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க
படுகிறது
உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்
உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல உணவாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த
பிரதான சமையல்காரர் மாடியில் இருந்து வீழ்ந்து பலியாகியுள்ளார் ,இவரது மரணம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
பெந்தோட்டையிலிருந்து காலிமற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான
கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்,
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில்
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
விபச்சாரத்தை சட்டமாக்க நடவடிக்கை
விபச்சாரத்தை சட்டமாக்க நடவடிக்கை
இலங்கையில் விபச்சாரத்தை சட்டமாக்க ஆளும் கட்சி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
,பாலியல் வழக்குகளில் சிக்கி அப்பாவி பெண்கள் சிறைகளில் சிக்கி தவிக்கின்ற நிலையிலும்
,அவர்கள் குடும்பம் நின்மதியாக வாழும் நிலைக்கு எடுத்து செல்லவும் ,உல்லாச பயணிகள்
தங்கும் கொட்டல்கள் வருமானத்தை அதிகரிக்கவும் இதனை சட்டமாக வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் நிலவை வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவாட்டங்களுக்கு மண்சரிவு
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும்
குருநாகல் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது




















