வெனிசுவேலா அதிபர் கைது உலகை மிரட்டும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

வெனிசுவேலா அதிபர் கைது உலகை மிரட்டும் அமெரிக்கா

வெனிசுவேலா அதிபர் கைது உலகை மிரட்டும் அமெரிக்கா

வெனிசுவேலா அதிபர் கைது உலகை மிரட்டும் அமெரிக்கா செயல் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

ஒரு நாட்டுக்குள் நுழைந்து

அமெரிக்க வெனிசுலா தாக்குதலில் பிரிட்டன் ஈடுபடவில்லை
அமெரிக்க வெனிசுலா தாக்குதலில் பிரிட்டன் ஈடுபடவில்லைஅமெரிக்க வெனிசுலா தாக்குதலில் பிரிட்டன் ஈடுபடவில்லை

ஒரு நாட்டுக்குள் நுழைந்து அந்த நாட்டு அதிபரை கைது செய்து அவரை அமெரிக்கா சட்ட்டத்தின் முன்

நிறுத்தி படுகொலை வரைக்கும் சென்றுள்ள அமெரிக்கவின் செயல் அரச பயங்கரவாதத்தை காண்பிக்கிறது .

ஒரு நாட்டின் ஜனநாயக மக்கள் கொள்கையை மறுதலித்து அமெரிக்கா புரிந்துள்ள இந்த செயலானது மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்

அந்த நாட்டின் எண்ணையை அபகரிக்கும் நோக்கில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் செய்துள்ள இந்த செயல் மிக பெரும் அதிர்ச்சியை உலக மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது .

இது அமெரிக்காவிற்கு எதிராக உலக மக்களை திசை திரும்ப வைக்கும் ஒரு செயலாக பார்க்க படுகிறது .

பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்

பொறுப்பேற்றார் பொலிஸ்மா அதிபர்

பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் ,புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வை

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ்

அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

ஒழுக்கமான பொலிஸ் துறை

ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இதன்போது தெரிவித்தார்.

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை ,தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் அஜர்பைஜானுக்கு விஜயம்
Posted in உலக செய்திகள்

ஈரான் அதிபர் அஜர்பைஜானுக்கு விஜயம்

ஈரான் அதிபர் அஜர்பைஜானுக்கு விஜயம்

ஈரான் அதிபர் அஜர்பைஜானுக்கு விஜயம் செய்கிறார்

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், வரும் நாட்களில் அஜர்பைஜானுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அஜர்பைஜானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று APA தெரிவித்துள்ளது.

உயர்மட்ட விஜயம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் எங்கே ,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நிஜாம் காரியப்பர், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை,

நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய காரியப்பர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும்போது தென்னகோன் சமாதான நீதிபதி முன் கையொப்பமிட்டு சத்தியப்பிரமாணம் செய்ய

வேண்டியிருப்பதால், இந்த மனுவின் மூலம் அவர் இருக்கும் இடத்தை தீர்மானிக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

“தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல்

செய்யும்போது உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும். சமாதான நீதிபதி முன் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட வேண்டும். அவர் சமாதான நீதிபதி முன் மனுவில் கையொப்பமிட வேண்டும்.

அந்த ஆவணம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. சமாதான நீதிபதியைக் கண்டு பிடித்தால், தப்பிச் சென்ற ஐஜிபியைக் கண்டுபிடிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்த வழியில் சிந்திக்க வேண்டும் என்று கூறிய எம்.பி நிஜாம் காரியப்பர், “எங்கள் சிஐடிக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.

கடந்த வாரம், தென்னக்கோன் தன்னைக் கைது செய்வதற்கான மாத்தறை நீதவானின் உத்தரவை இடைநிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.

இருப்பினும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.

சிரிய அதிபர் அசாத் குடும்பம் மாஸ்கோவில் புகலிடம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சிரிய அதிபர் அசாத் குடும்பம் மாஸ்கோவில் புகலிடம்

சிரிய அதிபர் அசாத் குடும்பம் மாஸ்கோவில் புகலிடம்

சிரிய அதிபர் அசாத் குடும்பம் மாஸ்கோவில் புகலிடம் ,பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய அதிபர் அசாத், குடும்பம் மாஸ்கோவில், புகலிடம் வழங்கப்பட்டது: அறிக்கை பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய அதிபர் பஷர்

அல்-அசாத் மற்றும் குடும்பத்தினர் மாஸ்கோவில் தரையிறங்கி தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ரஷ்ய அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் குடும்பத்தினர் மாஸ்கோவில் தரையிறங்கி தஞ்சம் பெற்றுள்ளனர் என்று ரஷ்ய

அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது, இஸ்லாமியர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அவரது நாட்டைக் கைப்பற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு.

“அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மாஸ்கோவிற்கு வந்துவிட்டனர்” என்று கிரெம்ளின் வட்டாரம் TASS மற்றும் Ria Novosti செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தது. “மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பகுதிக்கு அசாத்தின் மர்மமான இருப்பிடத்தை ஊகிக்கும் விமான கண்காணிப்பாளர்களுடன் சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்டது.

கிளர்ச்சியாளர்களால் தலைநகர் கைப்பற்றப்பட்ட நேரத்தில் டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து சிரியன் ஏர் விமானம் புறப்பட்டது என்று ஃப்ளைட்ராடார் இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

விமானம் ஆரம்பத்தில் சிரியாவின் கடலோரப் பகுதியை நோக்கிப் பறந்தது, இது அசாத்தின் அலாவைட் பிரிவின் கோட்டையாகும், ஆனால் பின்னர்

திடீரென யு-டர்ன் செய்து வரைபடத்தில் இருந்து மறைவதற்கு முன்பு சில நிமிடங்கள் எதிர் திசையில் பறந்தது.

விமானத்தின் பாதையில் திடீர் மாற்றம் மற்றும் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனது, அது சுட்டு வீழ்த்தப்பட்டதையோ அல்லது அதன் டிரான்ஸ்பாண்டரை அணைத்துவிட்டதையோ குறிக்கலாம்.

அந்தபடம் காட்டிய அதிபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அந்தபடம் காட்டிய அதிபர் கைது

அந்தபடம் காட்டிய அதிபர் கைது

அந்தபடம் காட்டிய அதிபர் கைது ,தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு, தன்னுடைய கையடக்க தொலைபேசியின் ஊடாக ஆபாச படங்களை காண்பித்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் 3 சிறுமிகள் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில்; குறித்த மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்

இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டி வந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்புக்கு போக முடியாது என பெற்றோரிடம்

தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்ட போது சிறுமி அதிபரின் இந்த ஈனச் செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ தினம் பெற்றோர் 119 ம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான

சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை பொலிஸார் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர்

தாய்லாந்து சென்றார் விக்கிலீக்ஸ் அதிபர் , தனி ஒருவனாக இருந்து அமெரிக்காவை ஆட்டிப் படைத்த விக்கிலீஷின் அதிபர் சிறப்பு விமான மூலம் தாய்லாந்துக்கு பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது .

தனியார் சிறப்பு விமானத்தை பயன்படுத்தி அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கு பயணம் செய்த இவர் சீனா அல்லது ரஷ்யாவுடன் சென்று இந்த சரணடைய கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஒரு நிகழ்ச்சி நிரல் அடிப்படையிலேயே இவர் தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினுடைய ஆவணங்கள் 2,50,000

அமெரிக்காவினுடைய ஆவணங்கள் 2,50,000 ஆவணங்கள் மீள வழங்கப்பட்ட நிலையில் அவர் மன்னிக்கப்பட்டு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாய்லாந்துக்கு சென்றுள்ள இவரை அமெரிக்காவினுடைய உளவுத்துறைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும்.

தற்பொழுது அமெரிக்கா குழுவில் விக்கிலீக்ஸ் தைப்பார் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவர் தாய்லாந்த பகுதியில் வைத்து போட்டு தள்ளக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

தனி ஒருவனாக இருந்து அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் ஆதரவு நாடுகளை ஆட்டிய இவர் மிகப்பெரும் சாதனையாளனாகவே பார்க்கப்படுகின்றது .

அமெரிக்காவினுடைய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து அந்த ஆவணங்களை திருடி நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ரகசிய விடையன தொடர்பாக அம்பலப்படுத்தி இருந்தார் .

அதில் இலங்கையில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு படுகொலை தொடர்பான விடயங்களும் அதில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்கள் அவர் காத்திருந்தார் புயல் கிளப்பியிருக்கும் என்பதுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரங்களுக்கும் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் .

ஆனால் அதற்குள்ளாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பெரும் ஆவணங்கள் வெர்லியாவது தடுக்கப்பட்டு அவை முறியடிக்கப்பட்டது .

தற்பொழுது இவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் பல்வேறுபட்ட ஆவணங்களை எடுத்து தொகுத்து வழங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படலாம்.

பதட்டம் நிலவுகிறது

என்பதால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது , ரஷ்யாவிடம் சென்று சேர்வாரா அல்லது அதற்கு முன்னதாக இவர் இடையில் வழி மறுத்து படுகொலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்களே ,தற்போது உன்னிப்பாக உலக நாடுகள் கண்காணிக்க பட்டு வருகின்றன .

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா இடம்பெற்றுள்ளது .வவுனியா மருக்காரம்பளை அ , த ,க, பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி ஓய்வு பெறும் பணி சிறப்புற இடம்பெற்றுள்ளது .

55 தாவது வயதில் சுய விருப்ப ஓய்வு பெறும் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அவர்களது சேவையை பாராட்டி ,மருக்காரம்பளை பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கௌரவித்தனர். .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி 1990 ஆம் ஆண்டு முதல் ,பாடசாலை அதிபராக பணி புரிந்து வருகிறார் .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அதிபராக விளங்கிய பாடசாலைகள் யாவும் ,அதன் கல்வித்தரம் மற்றும் ,மாணவர்கள் கல்வியல் உயர்வு நிலையில் மிக பெரும் பங்காற்றினார் .

அவ்விதமான சிறந்த சேவை பண்பை கொண்ட அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடை வைபவம், கடந்த தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது .

சுயவிருப்ப ஓய்வு

தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவதாக ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி தெரிவித்துள்ளார் .

தமது பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரிவை எண்ணி, ஆசிரியர்கள் மாணவர்கள் கண்ணீரில் தவழ்ந்தனர் .

சக ஆசிரியர்களை தனது சகோதர ,சகோரிகளாக கருதி அவர்கள் மீது அன்பு செலுத்தி ,பிரியமுடன் நடந்து கொள்வார் என அங்கு பணியாற்றிய சில ஆசிரியர்கள் நமக்கு தெரிவித்தனர் .

அன்பும் அறமும் ஓங்கும் நிலை கொண்ட மிக நேர்த்தியான சேவையை செய்து ,தமது பாடசாலையை முதன்மை நிலைக்கு எடுத்து செல்ல ,முக்கிய தூணாக விளங்கியவர் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்துள்ளனர் .

நாட்டுக்கு ஒரு தலைவன் போல தமது பாடசாலையின் முழு வளர்ச்சியிலும், பெரும் பங்காற்றியவர் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்து நெகிழ்ந்தனர் .

வறுமையின் கீழ் தவிக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான தனிமனித உதவிகளை புரிந்து ,அவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்திய அதிபர் ,திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடையை ,மகிழ்வோடும் ,துயரத்தோடும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஏற்று கொண்டனர் .

கனமான துயரோடு கண்ணீரால் மலர் தூவி ,விடை பெற்ற வேளையதை விழிகள் இன்னும் மறக்கவில்லை எனவும் ,காலத்தால் அழியாத சாதனையின் நாயகியாய் ,எமது பாடசாலையில் தடம் பதித்து கடக்கிறார் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் .

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
லஞ்ச் ஷீட்​டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

லஞ்ச் ஷீட்​டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்

லஞ்ச் ஷீட்​டை உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்

நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டி மகா வித்தியாலயத்தின் அதிபர், சில மாணவர்களை லஞ்ச் ஷீட்​டை மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு

வற்புறுத்திய சம்பவத்தை அடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அவர் இடமாற்றம்

செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு வசதியாக அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

விழுந்து மண்ணை கும்பிட்டு பதவியேற்ற அதிபர்

விழுந்து மண்ணை கும்பிட்டு பதவியேற்ற அதிபர்

புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக சின்னப்பா நாகேந்திரராசா, 03.01.2022 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தான் கல்விக்கற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர் பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியிருந்தார்.சுற்றிநின்றோர் மெய்சிலிர்த்த நேரமிது.

தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, முத்துஐயன்கட்டு வலதுகரை ம.வி போன்றவற்றின் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் .

சிறந்த கலை இலக்கிய செயற்பாட்டாளர் என்பதுடன் செம்மொழிக்குரலோன், பண்டாரவன்னியன் விருது மற்றும் கம்பீரக்குரலோன் போன்ற இன்னுமின்னும் பற்பல விருதுகளையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ

சிரியா அதிபர் ,மனைவிக்கு கொரனோ

சிரியாவின் ஆளும் அசாத் மற்றும் அவரது மனைவி கஸ்மா ஆகியோருக்கு

நடத்த பட்ட கொரனோ சோதனையில் இருவருக்கும் கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Home » அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை அதிபருக்கு தர்ம அடி

பாடசாலை அதிபருக்கு தர்ம அடி

இலங்கை பொகவந்தலாவ, டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் மீது மர்ம நபர்கள் குழு ஒன்று இடீர் தாக்குதலை நடத்தியது

இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை போலீசார் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு கொலை மிரட்டல் பொலிஸில் முறைப்பாடு

வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு கொலை மிரட்டல் பொலிஸில் முறைப்பாடு

வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் தனக்கு

தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்து வவுனியா சைவப்பிரகாச

மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரி இன்று (24.01) இரவு 8.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில்

முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த தனியார் கல்லூரியின் இயக்குனர் இன்று இரவு 7.30 மணியளவில் தொலைபேசி மூலம் எனக்கு தொடர்பு

கொண்டு உன்னை இல்லாமல் செய்வேன் , பாடசாலையிலிருந்து நீக்குவேன் போன்ற பல்வேறு

விடயங்களை தெரிவித்து அச்சுறுத்தல் விடுத்தாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் பொலிஸ்

முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு கொலை மிரட்டல் பொலிஸில் முறைப்பாடு

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியொருவர் இரத்தப் பரிசோதனைக்காக

இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.

பாடசாலையின் அதிபரின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப் பொருட்களின்

ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார் என அரச தகவல்

திணைக்கள ஊடகத்தில் NEWS.LK (https://tamil.news.lk/fetures/item/33185-2019-11-28-05-08-21) இல்

செய்தி வெளியாகியிருந்த நிலையில்,

குறித்த மாணவி தனது தனியார் கல்லூரியின் மாணவியெனவும் எமது கல்லூரியூடாகவே தொழிநுட்ப

அறிவினை பெற்று இரத்தப் பரிசோனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான

தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்தார் என குறித்த தனியார் கல்லூரியின்

இயக்குனர் தெரிவித்திருந்திருந்தார்.

இந் நிலையிலேயே வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின்

இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு

அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

நிருபர் வெடியரசன்

வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு
வவுனியா மகளிர் கல்லூரி அதிபருக்கு