Tag: srilanka
இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்
இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்
இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிய வண்ண கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது
இந்த கப்பலில் சுமார் 37500 மெட்ரிக் தொன் டீசல் உள்ளதாகவும் விரைவில்
இவை நாடெங்கும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது
நீர் இன்றி தவிக்கும் கொழும்பின் பல பகுதிகள்
.நீர் இன்றி தவிக்கும் கொழும்பின் பல பகுதிகள்
இலங்கை கொழும்பின் பல கிராம பகுதிகள் நீர் ஒன்றி துவைத்து அவருகிறது ,14
மணித்தியாலம் நீர் வெட்டு இடம்பெறும் என அறிவிக்க பட்ட நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மின்சாரம் இன்றி மக்கள் தவித்து அவரும் நிலையில் தற்பொழுது நீரும் இன்றி மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ரசியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
.புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை- புதினை கடுமையாக தாக்கிய ஜோ பைடன்
ரஷியா-உக்ரைன் போருக்கு இடையே இன்று அமெரிக்கா பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரஷிய அதிபர் புதினையும் மிக கடுமையாக தாக்கி பேசினார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-
ரஷிய அதிபர் புதின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நியாயமில்லாதவை. அவரது செயல்பாடுகள் உலகை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ரஷியா நடத்தி வரும் போர் மிகவும் தவறானது.
புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். இதனால் உலகுக்கு மாபெரும் ஆபத்தும், அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மக்கள் பக்கம் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சண்டையில் அமெரிக்கா நேரடியாக ரஷியாவுடன் மோதல் போக்கை கடை பிடிக்காது. உக்ரைனுக்குள் சென்று ரஷிய படைகளை எதிர்த்து போராடும் திட்டம் எதுவுமில்லை. அதே சமயத்தில் நேட்டோ நாடுகளுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும்.
புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் நிச்சயம் ஜனநாயகம் வெற்றி பெறும்.
புதின் உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ஏராளமான பீரங்கிகளை நிறுத்தலாம். கீவ் நகருக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் உக்ரைன் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது.
இந்த உலகம் சுதந்திரமாக இயங்குவதை முடக்க புதின் முயற்சி செய்கிறார். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்காது.
உக்ரைன் நாட்டுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும். அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேட்டோ நாடுகளின் ஒரு இஞ்ச் இடத்தை கூட யாராலும் அபகரிக்க முடியாது.
உக்ரைன் நாட்டு மக்கள் உண்மையான வீரத்துடன் போராடி வருகிறார்கள். புதின் அவர்களை வெல்லலாம். ஆனால் இதற்கு ரஷியா நீண்ட நாட்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.
புதின் உக்ரைன் போரை தவறாக கணித்து விட்டார். அவரது கணிப்பு நிச்சயம் நிறைவேறாது. அவரது முடிவால் ரஷிய பொருளாதாரம் வரலாறு வகையில் பலவீனம் அடையும் என்பது உறுதி.
ரஷியாவால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகில் அமைதியை ஏற்படுத்தவே இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் அமெரிக்கா உறுப்பினராக இருக்கிறது. நேட்டோ அமைப்பு தனது கடமைகளை செய்யும்.
இதன் காரணமாக உக்ரைன் மீண்டும் வலிமை பெறும். புதின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வலிமை உண்டாகும். அதே சமயத்தில் ரஷிய பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும்.
உக்ரைன் விடுதலை பெற நேட்டோ முழு அளவில் உதவி செய்யும். தொடர்ந்து உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். மனிதாபிமான அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ராணுவ அடிப்படையிலும் அனைத்து உதவிகளும் தொடர்ந்து செய்யப்படும்.
விமானம் பறக்க தடை
ரஷியா விமானங்கள் அமெரிக்க வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப் படுகிறது. ரஷியா இனியாவது தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரஷியாவின் நியாயமற்ற செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தவறுக்கு மேல் தவறு செய்வதால் புதின் தனிமைப்படுத்தப்படுகிறார்.
அமெரிக்கா மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ரஷியா நிச்சயம் பலவீனம் அடையும்.
அமெரிக்காவும், அதன் கூட்டு நாடுகளும் ரஷியா மீது சக்தி வாய்ந்த பொருளாதார தடைகளை விதித்து வருகின் றன. ரஷியாவின் பண பரிமாற்றத்தை சர்வதேச அளவில் நாங்கள் முடக்கி உள்ளோம். ரஷியாவின் வங்கி நடவடிக்கைகள் விரை வில் முடங்கும்.
வாழ்நாள் முழுக்க நாம் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
இவ்வாறு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார்.
அவரது பேச்சுக்கு அமெரிக்கா பாராளுமன்ற இருசபை உறுப்பினர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு
.இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு
இலங்கை விமானப்படை அதன் 71 ஆவது நிறைவாண்டை இன்று கொண்டாடுகின்றது.
இலங்கை விமானப்படை இன்று அதன் 71 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. இலங்கை றோயல் விமானப்படையாக 1951ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதி ஆரம்பித்த இந்தப் படையின் முதலாவது விமானப் படைத் தளபதி
குறூப் கப்டன் ஜீ.சி.பிளே-ஓன் ஆவார். முதலாவது இலங்கை விமானப் படைத் தளபதியாக வைஸ் மார்ஷல் ஜீ.ஆர்.அமரசேகர 1962ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
1972ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படையாக பெயர் மாற்றப்பட்டது. இரண்டு வகையான பத்து விமானங்களுடனும் ஆயிரத்து 200 படை
வீரர்களுடனும் விமானப்படை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 18 விமானப் படைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய திறன்விருத்தி மற்றும் ஜனாதிபதி உறுதிகள் பலவற்றையும் விமானப்படை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரத்மலானையில் உள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையம் அதன் 84 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. நாட்டின் சிவில் விமான சேவை
நடவடிக்கை 1930 ஆண்டுகளில் ஆரம்பமானது. அப்போதைய ஆளுனரான சேர் அன்றூ கெல்டொக்கொட் தலைமையில் 1938ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி இரத்மலானை விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் கொழும்புக்கும்
மும்பைக்கும் இடையிலான விமான அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 84 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு வைபவம் கடந்த
திங்கட்கிழமை இடம்பெற்றது. விமான நிலைய மற்றும் விமான சேவைகளுக்கான இலங்கை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜென்தல் ஜீ.ஏ.சந்திரசிறி இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்
நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு
நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு
பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம்
விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது.
இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத்
திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரவு அளவிலான விவசாயிகளுக்கும் இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது
மனைவியை குத்திக் கொன்ற கணவன்
மனைவியை குத்திக் கொன்ற கணவன்
தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி
பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில்
கலந்துரையாட வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் நிறைவடைந்த போது பிரச்சினை இல்லாத நாட்டை கையளித்ததாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் உணவு உண்ணவும், விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடவும் முடிந்தது என்று தெரிவித்த அவர், சில பிரச்சினைகள் இருந்தபோதிலும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றார்.
அரசாங்கத்தை குறை கூறுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் நாட்டை முன்னேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவதற்கு இந்தத் தருணமே பொருத்தமானது என சுட்டிக்காட்டினார்.
54 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பழக்கமுடையவர் எனவும் குறிப்பிட்டார்.
ரஷ்யா மோதல்- இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு
ரஷ்யா மோதல்- இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கு பாதிப்பு
இலங்கையில் இருந்து தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலையினால் இலங்கை
தேயிலை தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா வருடமொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 மில்லியன் கிலோகிராம் தேயிலையை கொள்வனவு செய்கின்றது. அத்துடன், கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு
மில்லியன் கிலோகிராமுக்கு மேல் ரஷ்யாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
போர் தொடங்குவதற்கு முன்பே ரஷ்யா கோரிய தேயிலையை அனுப்பியுள்ளதாக கூறிய அந்த அதிகாரி, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும்
அதிகரித்தால் புதிய கொள்வனவு கோரிக்கைகள் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.
உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவ சிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ
உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவசிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் இராணுவ தாக்குதலில் சில பலநூறு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்
ரசியா படைகளிற்கு எதிராக மக்களும் போராடிய வண்ணம் உள்ளனர் ,இவ்வாறான
நிலையில் ரஷியா படைகள் பயணித்த வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அதில்
உள்ள சிப்பாய்களை மக்கள் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்
தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்
இலங்கை குருவிட்ட பகுதியில் குப்பை பகுதியில் இறந்த நிலையி கண்டெடுக்க பட்ட
தந்தையின் சடலம் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையில் ,குறித்த நபரை
தாக்கி கொன்று குப்பையில் வீசிய குற்ற சாட்டில் அவரது மகன் கைது செய்ய பட்டுள்ளார்
தனது கணவரின் மரணத்தில் சநதேகம் உள்ளதாக மனைவி தெரிவித்த நிலையில்
போலீசார் மேற்கொண்ட விசாரணையின் பொழுதே இந்த விடயம் ஆரம்பிக்க பட்டுள்ளது
கிராம மக்களை மிரட்டி வந்த மர்ம கொள்ளையர்கள் கைது
கிராம மக்களை மிரட்டி வந்த மர்ம கொள்ளையர்கள் கைது
இலங்கை கொலன்னாவ பகுதியில் உள்ள கிராமங்களில் மக்களை மிரட்டடி
கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழுவை சேந்த மூவர் இரகசிய போலீசாரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம் – வெடித்தது சர்ச்சை
கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற
தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 32 வருடங்ஙகளாக கிளிநொச்சி நிர்வாக சேவை பரப்பிற்கு உட்பட்டு நிர்வாகம் கல்வி சுகாதாரம் போக்குவரத்து சமூக சேவைகள் அனைத்தும் கிளிநொச்சி
நிர்வாகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய எல்லை மறுசீரமைப்பின் போது குறித்த கிராமம் முல்லைத்தீவு எல்லைக்குள் கொண்டு
செல்லப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து காணப்பட்டனர். குறித்த குழப்பங்களை
இனங்கண்டு தீர்வு காண வழிகாட்டும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை மக்கள் அழைத்து கலந்துரையாடினர்.
இதன் போது குறித்த அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தி எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அரச அதிபர் ஊடாக அனுப்பி வைப்பதற்கும் பாராளுமன்றத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதற்கும் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா கட்சியின் அமைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி
நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி
இலங்கையில் நாளை முதல் ஐந்து மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று
இலங்கை மின்சார வாரியம் அறிவித்துள்ளது
இதனால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கையின் பல பாகங்கள் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது
எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்
எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் எரிபொருள் தட்டு பட்டது ஏற்பட்டுள்ள நிலையில் இன்று டீசல்
கிடைக்காவிடின் நாளை முதல் பயணிகள் பேரூந்துகள் போக்குவரத்து தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆளும் அரசின் ஆட்சி காலத்தில் இலங்கை வரலாறுயுகாணாத பெரும் சீழிவை
சந்தித்து வருகிறது ,இதனால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்
இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்
இலங்கையோ உதைபந்தாட்ட வீரரான டக்சன் புஸ்லாஸ் அவரது வீட்டில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
இவரது மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இதுவரை இவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை
அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு
அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு
இலங்கை Norton Bridge. தேயிலை தோட்ட பகுதியில் அடிகாயங்களுடன் பாதிக்க பட்டு இறந்த நிலையில் புலியின் சடலம் ஒன்று மீட்க பட்டுளள்து
குறித்த புலியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்
- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி
- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்
எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
இலங்கை தலை மன்னார் கடல்பகுதியில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டனர் என்ற
குற்ற சாட்டில் தமிழகத்தை சேர்ந்த
எட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது
இவர்கள் வைத்திருந்த மீன்களையும் இராணுவம் சுருட்டி சென்றுள்ளது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் மேல் மாகாணத்தில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது
1,084 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களில் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்து 556 பேரும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 352 பேரும் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது
- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி
மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி
“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிபொருளில் புஸ்ஸல்லாவ குளோபல் நிறுவனத்தினால் 20.02.2022 ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டதின் ஊடாக மலையகத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு மடிக்கணணி வழங்குதலில்
முதல் கணணியினை புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2017 கலை பிரிவில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைகழகத்தில் “கல்வியியல் சிறப்பு கற்கைநெறிக்கு” தெரிவாகி கல்வி பயிலும் பட்டப்பயில் மாணவி பெருந்தோட்ட தொழிலாழியின்
பி;ள்ளை விஜயன் கௌசல்யா அவர்களுக்கு அதன் ஏற்பாட்டாளர் ஊடகவியளாளர் பா.திருஞானம் அவர்களினால் இன்று (27) வழங்கி வைக்கபட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்திற்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உப செயலாளர் பி.சிறிகாந் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்த வர்த்தகர்
எஸ்.சுரேஷ் அவர்கள் ஒரு கணணியையும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் ஒரு கணணியையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
இந்த இரு கணணிகளில் ஒரு கணணி மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றயது புஸ்ஸல்லாவை இலக்கம் 460/8/1 அமைந்துள்ள குளோபல் நிறுவனத்தில் பல்கலைகழக மாணவர்கள் பாவிக்க கூடிய வகையில் பிரின்டர் உட்பட இன்டர்நெட்
வசதியடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பல்கலைகழக மாணவர்கள் இலவசமாக நேரில் வந்து விடுமுறை காலங்களில் பாவிக்கலாம்.
மேலும் இந்த செயற்திட்டத்தில் இணைந்து மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு மடிக்கணணிகளை வழங்கி உதவ கூடியவர்கள் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்ளபடுவதோடு. மடிக்கணிகள் தேவையான மலையகத்தை சேர்ந்த பல்கலைகழக
பெருந்தோட்ட பட்டப்பயில் மாணவர்கள் “குளோபல்” இல 460/8/1 நுவரெலியா வீதி புஸ்ஸல்லாவ என்ற விலாசத்திற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். எமக்கு கணணிகள் கிடைப்பதற்கு ஏற்பவும் மாணவர்களின் பாட அவசியப்பாட்டுக்கு அமைய வழங்கப்படும்.
குறிப்பாக மலையத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள பட்டப்பயில் மாணவர்களில் பலர் பொருளாதா சிக்கல்கள் காரணமாக பலர் தங்கள் கல்வியினை இடை நிருத்தி வருகின்றனர். மலையகத்தின் சனத்தொகைக்கு ஏற்ப 1750 மாணவர்கள்
பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இருந்தும் தற்போது சுமார் 450 மாணவர்களே தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவர்களிலும் பொருளாதார பிரச்சனை காரணமாக யாரும் இடை விலகள் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த “கல்விக்கு கரம் கொடுப்போம்” செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
உக்கிரேன் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதற்கு
பதிலடி தரும் வகையில் உக்கிரேனும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது
இரு தரப்பு மோதல்களில் ரசியாவை சேர்ந்த ஆயிரம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்
மேலும் ஏழு விமானங்கள் மற்றும் 8 உலங்குவானூர்திகள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது







