Tag: crashes
எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்
தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல் ஈரான் இராணுவ தளபதி ஈராக்கில் வைத்து அமெரிக்காவால் படுகொலை செய்யப் பட்டார் ,
அதன் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளன .
இதனை அடுத்து தமது இராணுவ தளபதி சுலைமானி படுகொலைக்கு தகுந்த பதிலடியை அவர் நிர்வகித்த புரட்சி படைகள் நடத்தினர் .
ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்காவின் பிரதான பாதுகாப்பு பலம் பொருந்திய , பலமான இராணுவ
தளங்களை தெரிவு செய்து அங்கு தமது பழி தீர்க்கும் வெறியை ஈரான் நடத்தியுள்ளது .
தங்கள் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகியும் 200 பேர்வரை
படுகாயமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன .
ஆனால் இதுவரை ஈரான் கூறிய இந்த கூட்டல் சேத கணக்கை அமெரிக்கா தலைமையோ அன்றி அமெரிக்கா இராணுவத்தின் இராணுவ தலைமையகமான
பென்டோகேனோ தெரிவிக்கவில்லை .
அமெரிக்கா மீது தமது பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்திய நிலையில் ,அடுத்து இஸ்ரேல் இரண்டாவது
எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்
இலக்காக உள்ளதாகவும் ,அதன் மீதும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .
நாம் அமெரிக்கா போல் அல்ல எம் மீது குண்டுகள் வீழ்ந்தால்,எம் மக்களோ, படையினரோ பாதிக்க பட்டால்
ஈரான் சுக்கு நூறாகும் என இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெத்தன்யாகு சற்று முன்னர் அறிவித்துள்ளார் .
தாம் அமெரிக்காவின் முடிவுகளையும் ,நகர்வுகளையும் கவனித்த வண்ணம் உள்ளோம், அதன் பின்னர் எமது
நகர்வுகள் நிகழ்வுக்கு ஏற்ப நகர்த்த படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
தாமோ போரை விரும்பவில்லை ,எமது பயங்கரவாதிகளை தகக்கினோம் என ஈரான் அறிவித்துள்ளது ,அமெரிக்காவை இப்பொழுது ஈரான் பயங்கரவாதிகள் என்றே அழைக்கிறது .
உலக சண்டியருக்கு ஈரான் கொடுத்துள்ள இந்த அடி உறைப்பான ஒன்று தான் ,ஆனால் அமெரிக்கா அதிபரின்
காலில் இப்பொழுது பந்து உள்ளது ,அவரே புகுந்து விளையாட வேண்டும் .
போரா ..?சமாதானமா ..? இதுவரை அவரிடம் இருந்து பதில்கள் வரவில்லை ,
ஈராக்கில் உள்ள பிற நாட்டு படைகள் யுத்தம் மூண்டால் அங்கிருந்து முடிச்சுக்களை கட்ட தயராகி வருகின்றன .
இவ்வாறு அமெரிக்காவோ ,இஸ்ரேலோ பதிலடியை நடத்தினால் ஈராக்கில் இருந்து அமெரிக்கா நேச நாட்டு
எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்
படைகள் விலக நேரிடும் ,அமெரிக்கா தனித்து விடப்படும் என்றே நோக்க படுகிறது .
நிமிடங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பை கிளப்புகின்றன ,ஏவுகணை போர் நின்றாலும் மத்திய கிழக்கு கடல்வழியாக
பயணிப்பதற்கு எண்ணெய் நிறுவன கப்பல்கள் அஞ்சுகின்றன .
அதனால் அந்த கப்பல்களின் வாடகை அதிகரித்துள்ளதால் ,உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது
மேலும் சவூதி ,இஸ்ரேல்,ஈரானின் தாக்குதல் வெறிக்குள் சிக்கி உள்ளன .அடி வாங்கிய அமெரிக்கா தனது பலத்தை
காண்பிக்காது மவுனமாகுமா ..? இல்லை பதிலடியை அள்ளி வழங்குமா ..?
இந்த கேள்வியை இப்பொழுது எங்கும் வெடித்து பறக்கிறது ,இஸ்ரேல்,பிரிட்டன் ,அமெரிக்கா மூன்று நாடுகளும் கூட்டாக பெரும் தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளன ,அவை
நிறைவேற்ற பட்டால் ,அவர்க்ளின் ஒன்றிணைந்த தாக்குதலை ஈரான் எதிர் கொள்ளுமா ..?
அவ்வாறான பலம் அதற்கு உள்ளதா …? ஏன் எனின் சிரியாவில் ஈரானின் நிலைகள் மீது இஸ்ரேல் துல்லியமாக
தாக்கியது ,ஈரானின் விமானத்தை கூட சுட்டு வீழ்த்தியது ,இவ்வாறான கசப்பான அனுபவங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது .
இதனை இஸ்ரேல் ஒரு பரீட்ச்சார்த்த நடவடிக்கையாக அதனை செய்திருந்தது .
அதில் கற்று கொண்ட பாடங்களால் ,ஈரானின் தாக்குத்தல் எல்லை எதுவரை செல்லும் என்பதை அறிந்து
வைத்துள்ள நிலையில் இஸ்ரேல் அதிபர் கூறிய கருத்து ஈரான் சுக்கு நூறாகும் என்பது சாலம் பொருந்தும் போல் உள்ளது .
எனினும் அதனையும் தாண்டி இதுவரை ஈரான் வெளியில் அறியமுடியாத முக்கிய ஆயுதங்களை வைத்திருப்பதாகவும்
அதனை இறுதியில் அது பாவிக்க முனையலாம் எனவும் அது பெரும் அழிவை அந்த பகுதியில் ஏற்படுத்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் அதிபரின் , சுக்கு நூறு என்பது, ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டை சரணடைய வைக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க முடியும்
பலமுறை இஸ்ரேல் ,ஈரானின் அணு உலைகளை தாக்க , முனைந்து தோல்வியில் முடிந்தது ,இப்பொழுது அதனை செய்து முடிக்க இஸ்ரேல்,அமெரிக்கா முயல கூடும் .
அதற்கான கள முனையை திட்டமிட்டே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உருவாக்கி இருந்தார் .
அப்படியானால் அவர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஈரான் சிக்கியுள்ளதா ..?
நமது கணிப்பு சரி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக ஈரானை தாக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது .
- வன்னி மைந்தன் –
வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
ஈரான் – நாட்டின் தலைநகர் டகரான் அருகில் உக்கிரேனிய நாட்டுக்கு சொந்தமான Boeing 737 எயார் பஸ் விமானம் 168
பயணிகள் மற்றும் 9 சிப்பந்திகளுடன் விமானம் பயணித்தது .
இந்த விமானம் ஈரானின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சில மணி நிமிடங்களில் கட்டு பாட்டறை தொடர்பு துண்டிக்க பிட்டு வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
திட்டமிட்ட படி புறப்பட வேண்டிய இந்த விமானம் தாமதமாக புறப் பட்டுள்ளது ,அதற்கு காரணம் என்ன ..?
இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டு சென்றுள்ள ஈரான் அதனை பிரித்து மேய்கிறது ,அதில் உள்ள டாட்டாக்களை அது அழித்து விட கூடிய அபாயம் உள்ளதாம் .
ஆனால் அதனை தம்மிடம் தரும்படி உக்கிரேன் கேட்க்கின்ற பொழுதும் இதுவரை அந்த கறுப்பு பெட்டியை ஈரான் வழங்க மறுத்து வருகிறது .
இது ஏன் ..?
ஈரானின் மக்கள் அதிகம் பயணித்துள்ள இந்த விமானத்தை ஈரான் ஏவிய ஏவுகணைகள் தான் வீழ்த்தியதா ..? அப்படி
என்றால் உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்ததை அவசர பட்டு ரசியா அதிபர் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துளளார் ,இதன் நோக்கம் என்ன …?
வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
இத்தனை அசுர வேகத்தில் ரசியா அதிபர் தான் ஆக்கிரமித்துள்ள உக்கிரேன் நாட்டு பகையாளி நாட்டுக்கு ஆதரவாக ஈரானை கண்டித்துள்ளது ஏன் ..?
இவ்வாறான பல மர்ம முடிச்சுக்கள் இந்த பயணிகள் விமானத்தை சுற்றி நடக்கின்றன ,சர்வதேச அரசியல் போருக்குள் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
மலேசியா ,கொலண்ட் விமானங்களை போன்றே இந்த விமானத்தின் நிலையும் செல்ல கூடும் என நம்ப படுகிறது .
இந்த விமானம் ஒரு வீட்டின் மேலே வீழ்ந்து நொறுங்கியுள்ளது வெளிவரும் காட்சிகள் ஊடாக அவதானிக்க முடிகிறது
பல நாடுகள் போட்டி போட்டு இந்த விமான விபத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .
ஈரானை சுற்றி படர்ந்துள்ள மேற்குலகின் போர் பிடி மேலும் வலுத்துள்ளது .
கள முனையும் அதன் நகர்வுகளும் ஈரானை இத்தோடு அழித்து விட வேண்டும் என்ற இஸ்ரேல்,அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன .
அவர்களின் விருப்பம் இந்த விமான விபத்துதான் தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது .
இந்த பெரும் பதட்டம் மத்திய கிழக்கில் ஏற்பட காரணமாக அமைந்தவர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் .
அப்படியானால் அவரால் ஆரம்பிக்க பட்ட இந்த ஆட்டம் அவராலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேண்டிய நிலை,சூழல் ஏற்பட்டுள்ளது .
நகர்ந்து செல்லும் இறுக்கமான ,பதட்டமான நகர்வுகள் போர் ஒன்றை தோற்றுவிக்கும் பெரும் வாய்ப்பய் அதிகரித்துள்ளது
வீழ்ந்த விமானத்தின் கறுப்பு பெட்டியை கொடுக் மறுக்கும் ஈரான்
அமெரிக்கா ஈரானை தாக்கினால் ,அதன் அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் கூடங்கள் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கினால் ஈரான் என்ன சும்மா விடுமா ..?
இவ்வாறே கேள்விகளுடன் நகர்கிறது நிமிடங்கள் .தொடர்ந்து தொடரும் பதட்டம் முற்று பெறும் நிமிடங்கள் எவை ..?
ஈராக்கிய அமெரிக்கா இராணுவ இலக்குகளை ஈரானின் 22 ஏவுகணைகள் தாக்கும் வரை அமெரிக்காவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்ன செய்தன ..? கொறட்டை விட்டு தூங்கினவா ..?
அவர்கள் ராடாரில் இந்த ஏவுகணை வருகை எச்சரிக்கை விடுக்க படவில்லையா ..?
அப்படியானால் ஈரானிடம் அமெரிக்கா தோற்று விட்டதா ..?
ஈரான் கூறிய அமெரிக்காவின் பலவீனமான பகுதிகளில் இதுவும் ஒன்றா ..?
அப்படியானால் அமெரிக்காவை நம்பியுள்ள டசின் கணக்கான நாடுகள் நிலை, மத்திய கிழக்கில் என்ன ஆகும் …?
தற்போது திடுக்கிடும் அமெரிக்காவை மிரள வைக்கும் அந்த செய்தி ஈரான் ஏவிய 22 ஏவுகணைகளில் சுமார் அரை டன் எடையுள்ள அதாவது ஐநூறு கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள்
வெடித்து சிதறியாதல் அமெரிக்காவின் போர் விமானங்கள் ள் ,உளவு விமானங்கள் ,படையினர் அழித்துள்ளனர் ,
சுமார் 80இராணுவம் பலியாகியும் 200 பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அரச சேவை செய்தி தெரிவித்துள்ளது
இவ்வாறான கேள்விகளுடன் முடிவுறுகிறது எமது இந்த செய்தி பதிவு …!
- வன்னி மைந்தன் –
சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி video
சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி
ஈரான் பகுதியில் பறந்து கொண்டிருந்த Boeing-737 என்ற உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்துள்ளது ,ஈரான் ஏவிய ஏவுகணையால் இது வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப
படுகிறது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது .
இவ்வேளையே இந்த விமானமும் வீழ்ந்துள்ளது .
இதற்கு பதிலடியாக உக்கிரேன்ன் ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது இந்த விமானத்தில் 168 பயணிகள் மற்றும் ,ஒன்பது விமான சிப்பந்திகள் பயணம் செய்துள்ளனர்
இந்த விமானம் வீழ்ந்ததா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில் தாம் விசாரணைங்களை மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது ,
இது ஈரன் சுட்டு வீழ்த்தி இருந்தால் அதுவே பெரும் விளைவுகளை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது
இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் ,மற்றும் இஸ்ரேலியர்கள் அதிகம் பயணித்திருந்தார்கள் அதுவே ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும் என எதிர்பார்க்க படுகிறது
வீழ்ந்த விமானத்தில் 32 வெளிநாட்டவர்கள் இருந்துள்ளனர் ,இதில் சிலரை தாம் காப்பாற்றியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது
விமானம் தீ பற்றிய படியே வீழ்ந்தது எனவும் அது தெரிவித்துள்ளது
இந்த விபத்து ஈரானின் தலைநகர் அருகில் இடம்பெற்றுள்ளது
இந்த கீழ் உள்ள காணொளியில் ஏவுகணைவிமானத்தை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது
விமானம் வீழ்ந்து நொறுங்க முன்னர் ஏவுகணை தாக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளனவாம்
இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் வீழ்ந்துள்ளதாக சற்று முன்னர் உக்கிரேன் அறிவித்துள்ளது






