எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

Spread the love

தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல் ஈரான் இராணுவ தளபதி ஈராக்கில் வைத்து அமெரிக்காவால் படுகொலை செய்யப் பட்டார் ,


அதன் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளன .

இதனை அடுத்து தமது இராணுவ தளபதி சுலைமானி படுகொலைக்கு தகுந்த பதிலடியை அவர் நிர்வகித்த புரட்சி படைகள் நடத்தினர் .

ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்காவின் பிரதான பாதுகாப்பு பலம் பொருந்திய , பலமான இராணுவ

தளங்களை தெரிவு செய்து அங்கு தமது பழி தீர்க்கும் வெறியை ஈரான் நடத்தியுள்ளது .

தங்கள் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகியும் 200 பேர்வரை

படுகாயமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன .

ஆனால் இதுவரை ஈரான் கூறிய இந்த கூட்டல் சேத கணக்கை அமெரிக்கா தலைமையோ அன்றி அமெரிக்கா இராணுவத்தின் இராணுவ தலைமையகமான

பென்டோகேனோ தெரிவிக்கவில்லை .
அமெரிக்கா மீது தமது பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்திய நிலையில் ,அடுத்து இஸ்ரேல் இரண்டாவது

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

இலக்காக உள்ளதாகவும் ,அதன் மீதும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .

நாம் அமெரிக்கா போல் அல்ல எம் மீது குண்டுகள் வீழ்ந்தால்,எம் மக்களோ, படையினரோ பாதிக்க பட்டால்

ஈரான் சுக்கு நூறாகும் என இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெத்தன்யாகு சற்று முன்னர் அறிவித்துள்ளார் .

தாம் அமெரிக்காவின் முடிவுகளையும் ,நகர்வுகளையும் கவனித்த வண்ணம் உள்ளோம், அதன் பின்னர் எமது

நகர்வுகள் நிகழ்வுக்கு ஏற்ப நகர்த்த படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

தாமோ போரை விரும்பவில்லை ,எமது பயங்கரவாதிகளை தகக்கினோம் என ஈரான் அறிவித்துள்ளது ,அமெரிக்காவை இப்பொழுது ஈரான் பயங்கரவாதிகள் என்றே அழைக்கிறது .

உலக சண்டியருக்கு ஈரான் கொடுத்துள்ள இந்த அடி உறைப்பான ஒன்று தான் ,ஆனால் அமெரிக்கா அதிபரின்

காலில் இப்பொழுது பந்து உள்ளது ,அவரே புகுந்து விளையாட வேண்டும் .

போரா ..?சமாதானமா ..? இதுவரை அவரிடம் இருந்து பதில்கள் வரவில்லை ,


ஈராக்கில் உள்ள பிற நாட்டு படைகள் யுத்தம் மூண்டால் அங்கிருந்து முடிச்சுக்களை கட்ட தயராகி வருகின்றன .

இவ்வாறு அமெரிக்காவோ ,இஸ்ரேலோ பதிலடியை நடத்தினால் ஈராக்கில் இருந்து அமெரிக்கா நேச நாட்டு

எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

படைகள் விலக நேரிடும் ,அமெரிக்கா தனித்து விடப்படும் என்றே நோக்க படுகிறது .

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பை கிளப்புகின்றன ,ஏவுகணை போர் நின்றாலும் மத்திய கிழக்கு கடல்வழியாக

பயணிப்பதற்கு எண்ணெய் நிறுவன கப்பல்கள் அஞ்சுகின்றன .

அதனால் அந்த கப்பல்களின் வாடகை அதிகரித்துள்ளதால் ,உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது

மேலும் சவூதி ,இஸ்ரேல்,ஈரானின் தாக்குதல் வெறிக்குள் சிக்கி உள்ளன .அடி வாங்கிய அமெரிக்கா தனது பலத்தை

காண்பிக்காது மவுனமாகுமா ..? இல்லை பதிலடியை அள்ளி வழங்குமா ..?

இந்த கேள்வியை இப்பொழுது எங்கும் வெடித்து பறக்கிறது ,இஸ்ரேல்,பிரிட்டன் ,அமெரிக்கா மூன்று நாடுகளும் கூட்டாக பெரும் தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளன ,அவை

நிறைவேற்ற பட்டால் ,அவர்க்ளின் ஒன்றிணைந்த தாக்குதலை ஈரான் எதிர் கொள்ளுமா ..?

அவ்வாறான பலம் அதற்கு உள்ளதா …? ஏன் எனின் சிரியாவில் ஈரானின் நிலைகள் மீது இஸ்ரேல் துல்லியமாக

தாக்கியது ,ஈரானின் விமானத்தை கூட சுட்டு வீழ்த்தியது ,இவ்வாறான கசப்பான அனுபவங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது .

இதனை இஸ்ரேல் ஒரு பரீட்ச்சார்த்த நடவடிக்கையாக அதனை செய்திருந்தது .

அதில் கற்று கொண்ட பாடங்களால் ,ஈரானின் தாக்குத்தல் எல்லை எதுவரை செல்லும் என்பதை அறிந்து

வைத்துள்ள நிலையில் இஸ்ரேல் அதிபர் கூறிய கருத்து ஈரான் சுக்கு நூறாகும் என்பது சாலம் பொருந்தும் போல் உள்ளது .

எனினும் அதனையும் தாண்டி இதுவரை ஈரான் வெளியில் அறியமுடியாத முக்கிய ஆயுதங்களை வைத்திருப்பதாகவும்

அதனை இறுதியில் அது பாவிக்க முனையலாம் எனவும் அது பெரும் அழிவை அந்த பகுதியில் ஏற்படுத்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் அதிபரின் , சுக்கு நூறு என்பது, ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டை சரணடைய வைக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க முடியும்

பலமுறை இஸ்ரேல் ,ஈரானின் அணு உலைகளை தாக்க , முனைந்து தோல்வியில் முடிந்தது ,இப்பொழுது அதனை செய்து முடிக்க இஸ்ரேல்,அமெரிக்கா முயல கூடும் .

அதற்கான கள முனையை திட்டமிட்டே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உருவாக்கி இருந்தார் .
அப்படியானால் அவர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஈரான் சிக்கியுள்ளதா ..?

நமது கணிப்பு சரி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக ஈரானை தாக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply