Tag: தாய் மகள் கடத்தல்
தாய் மகள் கடத்தல்
தாய் மகள் கடத்தல்
தாய் மகள் கடத்தல் சம்பவம் ஒன்று தற்பொழுது கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது 8 வயது மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அவரை ஏற்றி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அவரது காருக்குள் ஏறிய மர்ம ஆசாமி காரை வேகமாக ஓட்டி செல்லுமாறு வற்புறுத்தி மிரட்டினார்.
பின் இருக்கையில் இருந்த மகளோ தனக்கு உதவும் படி கூச்சலிட்டுள்ளார் .
இவ்வாறு பதட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிற பகுதியில் , வேறு வழியின்றி துணிகரமாக யோசித்த பெண், திடீரென ஜன்னலைத் திறந்து கூச்சலிட்டுள்ளார்.
இதனை அடுத்து தாய் மகளை காரில் கடத்திச் செல்ல முற்பட்ட ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.
கடந்த இரண்டாம் தேதி இந்த சம்பவம் .பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் இடம் பெற்றுள்ளதாக கறுவா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த விசாரணையில் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெண்கள் பாடசாலை அருகில் தனது மகளை பாடசாலையில் அனுமதித்து விட்டு. அவரை வீடுக்கு ஏற்றி செல்ல முற்பட்ட பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அனுரா ஆட்சியில் தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான கடத்தல் ,கொள்ளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,வீதிகள் சடலங்கள் மீட்பது என்பது தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகங்கள் இடம் பெற்று வருகின்றன.
பாதாள உலக குழுவை திட்டமிட்டு இறக்கி ,மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஆளுகின்ற அனுரா ஆட்சியின் ,ஜேவிபியின் நிழல் பிரிவுகள் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தி நிற்கின்றன.
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன











