Tag: கைது
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது ,பம்பலப்பிட்டி காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஒருவழிப்பாதையான இவற்றில் அதிக சத்தத்துடன் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் கூட கட்டுக்கடங்காத வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, முன் சக்கரத்தை உயர்த்தி பின் சக்கரத்தில் மாத்திரம் பயணித்து ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி இன்று (05) அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவிற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது ,ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்புப் பிரிவு
களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸுக்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேக நபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
காணி மோசடி செய்து விற்பனை
காணி மோசடி செய்து விற்பனை
காணி மோசடி செய்து விற்பனை வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.
அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன், மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார்.
மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.
காணி உரிமையாளர்
இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் .
ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணை குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மோசடிகளை தடுக்க உத்தரவு
இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது ,நீதிபதி இவ்விதம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி கைது
புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பெருகி வரும் குற்றங்கள் மற்றும் மக்கள் முன்பாக நீதியை நிலை கட்டவேண்டிய நீதிபதியே வ்வாறு லஞ்சம் பெற்று கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன .
அனால் தற்போது நீதிகளும் லஞ்சம் பெற்று கொள்கிறார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த செயல்பாடானது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது .
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் பயணித்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியே பொலிசாரிடம் சிக்கினார் .
பொலிஸ் அதிகாரி சிக்கியது எப்படி ..?
பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைவஸ்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார் ,அபோலித்து வீதி சோதனையில் காத்திருந்த காவல்துறையினர் அவரை நிறுத்திய பொழுது ,நிறுத்தாமல் துரத்திய பொழுதே சகா காவல்துறையிடம் சிக்கி கொண்டார் .
இந்த காவல்துறை அதிகாரி நீண்டகாலமாக ஐஸ் போதை பொருளுக்கு அடிமையான நிலையில் தனது வாகனத்தில் போதை பொருள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
அடுத்தே இன்று சகா போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார் .
இலங்கையில் அதிகரிக்கும் போதைவஸ்து கலாச்சாரம்
இலங்கையில் அதிகரிக்கும் செல்லும் போதைவஸ்து கலாச்சாரம் காரணமாக அதிக குற்றங்கள் நாடெங்கும் நடக்கிறது .
கடத்தல் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,வெட்டு ,கொத்து ,விவகாரத்து ,போன்ற சம்பவங்கள் இந்த போதைக்கு ஆண் பெண்கள் அடிமையான நிலையில் ஏற்படுவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம், சுமத்தி வருகின்றனர் .
மக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகளும் ஐஸ் போதைவஸ்த்துக்கு அடிமையாகி செல்வதில் இருந்து இலங்கை போதைவஸ்துக்கு நீண்ட நெடுங்காலமாக சிக்கியுள்ளதை எடுத்து காட்டுகிறது .
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது ,கொலை குற்றம் சுமத்த பட்ட மரண தண்டனை கைதியே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .
கள்ள காதல் கொலை
கள்ள காதல் காரணமாக நபரை துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த கொலை குற்ற சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் .
நீதிமன்றில் கொலை குற்ற சாட்டில் பாரப்படுத்த பட்ட இவருக்கு மரணதண்டனை வழங்க பட்டு இருந்தது .
வீதி சோதனையில் சிக்கிய கைதி
இதனை அடுத்தே போலீசார் நடத்திய வீதி சோதனையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
தனது அடையாள அட்டைகளில் மாற்றங்களை செய்து வசித்து வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளார் .
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது ,ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுக்கிறது .
காசா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன காசா மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை தாக்கி இராணுவ வண்டிகளில் அழைத்து சென்றுள்ளது .
இவ்வாறு தமது குடும்ப உறவுகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளனர் .
195 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாலஸ்தீனம் காசா காவல் தெய்வங்களான காமாஸ் போராளிகள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்களை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முதன்மையாக வைத்தனர் .
அதனால் திட்டமிட்டு வேண்டும் என்றே அப்பாவி மக்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை புரிந்து வருகிறது .
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ,சிறுவர்கள் ,முதியவர்கள் உள்ளடக்க பட்டுள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தால் அப்பவி பாலஸ்தீன மக்கள் அடக்கி ஒடுக்க பட்டு படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
ஆனால் அந்த மக்கள் மரணத்தை கண்டுகொள்ளாது மேற்குலக நாடுகள் உறங்கி கொண்டுள்ளன என்பதே நிகழ்கால நிகழ்வுகள் காண்பித்துள்ளன .
- வன்னி மைந்தன் –
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் ,சவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே சிறை கைதிகள் தப்பி ஓடியுள்ள்ளனர் .
திருட்டு குற்ற சாட்டுக்கள் அடைப்படையில் பொலிஸாரால் கைது செய்ய பட்டு ,யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைத்து வைக்க பட்டவர்களே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .
இவ்வாறு சிறையில் இருந்து தப்பித்தவர்களை தேடிய போலீசார் ,மீள அவர்களை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் .
அவ்வாறு தப்பித்த கைதிகளுக்கு மேலதிக சிறை தண்டனையும் ,குற்ற பணமும் அறவிட பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது
ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர்கள் காலித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது
கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது
வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயது மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது
விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது
20 விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவி செய்த சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது
மது விருந்து நடாத்திய மாணவ மாணவிகள் கைது
வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்து நடத்திய பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிமடை பொலிஸார் குறித்த கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
பழைய கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பாடசாலை மாணவிகளை பொலிஸார் கைது செய்தனர்.
அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுவை இந்த மாணவர்கள் அருந்தியதாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில், அவர்கள் தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி கைவிடப்பட்ட கட்டிடத்தில் கூடி மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பல் பூட்டை உடைத்து கட்டிடத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு
இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு
இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது ,அடி கொடுத்த நாடு ,
தக்குதல் முறியடிப்பு என தகவல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது
சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
குறித்த நபர் கொழும்பு 07, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவர் வைத்தியராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை மோசடி டொக்டர் கைது
சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மக்களை அழைத்துள்ளார்.
சந்தேகநபர் 9 பேரிடம் இருந்து 7 லட்சத்து 65 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், அவருக்கு பணம் வழங்கிய நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கொழும்பு இல 5 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த மோசடிக்கு உதவிய அவரது மனைவி, விசாரணை அதிகாரிகளை தவிர்த்து தலைமறைவாகி இருப்பதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் கைது
கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் கைது
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது
பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது
குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை ஒடுக்கும் விசேட நடவடிக்கைக்கு அமைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பொரளை பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினர் கெசல்வத்த தினுகவின் நெருங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கஞ்சிபானை இம்ரானின் குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கோடா ரிஸ்வான்’ என அழைக்கப்படும் அஹமட் ஜிப்ரி அஹமட் றிஸ்வான் என்ற சந்தேக நபர் 6,400 மில்லிகிராம் ஹெரோயினுடன் மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், காஜிமா வத்தை மைதானத்திற்கு அருகில் 6,620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த புகுடு கண்ணாவின் உதவியாளரான முனவீர ஆராச்சிலகே சுசந்த என்ற சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது
உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் இன்று சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் ஆவார்.
உக்ரைன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள், இந்த நாட்டை விட்டு அனுப்பியவர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.
இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .
இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது
இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தப்பட்ட கப்பல் மீட்பு 35 ஆயுத தாரிகள் கைது
கடத்தப்பட்ட கப்பல் மீட்பு 35 ஆயுத தாரிகள் கைது
கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு ,35 ஆயுத தாரிகள் கைது .
இந்தியா கடற்படை அதிரடி நடவடிக்கை ,சோமாலியா கடல் கொள்ளையர்கள் சிக்கினர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி









































