Tag: இலங்கை
இலங்கையில் பரவும் புதிய நோய்
இலங்கையில் பரவும் புதிய நோய்
மலேரியா ஒழிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் இரத்த மாதிரிகள் கடந்த ஆண்டு முதல் சோதிக்கப்படாததால், இலங்கையில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக, தேசிய மலேரியா ஒழிப்பு பிரசார இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இந்த ஆண்டின் 9 மாதங்களில் 15 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 30 நோயாளிகளில், 10 பேர் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மலேரியா நோய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் இரத்தப் பரிசோதனை இல்லாமல் சமூகமயமாக்கப்பட்டால், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, அவர்களின் இரத்த மாதிரிகளை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்
பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள்
பாடசாலைக்கு வந்த யானைகள்
மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் பாடசாலையை சுற்றி உள்ள வேலியை உடைத்து பாடசாலையில் உள்ள வாழைத்தோட்டத்தை அழித்துவிட்டன.
இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடரும் நிலையில், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்பியை வெட்டி கொன்ற அண்ணா
தம்பியை வெட்டி கொன்ற அண்ணா
குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் நேற்று (12) இரவு பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் களுதாவளை- திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இக்கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரனும் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனுக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!
பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!
ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்…” என தனது ஒரேயொரு பிள்ளையை இழந்த தந்தை தெரிவித்துள்ளார்.
பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த தினம் 11 வயதுடைய அஷேன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்ததாவது…
மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன். மகன் விரைவாக வந்தார். பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன்
கூறினார். நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று
அழைத்த போது மகன் கதைக்க வில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று
பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற
முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார். என்றார்.
சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது
புலி வருகுது புலி வருகுது -முல்லையில் வெடி குண்டுகள் மீட்பு
புலி வருகுது புலி வருகுது -முல்லையில் வெடி குண்டுகள் மீட்பு
முல்லைத்தீவின் இருவேறு இடங்களில் இருந்து, நேற்று (12) வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அளம்பில் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணி ஒன்றில் இருந்து, துப்பாக்கி ரவைகள், கனரக துப்பாக்கி ரவைகள், எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருள்கள் தொடர்பில், நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முள்ளியவளை – கேப்பாபிலவு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்
வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்
நோர்வூட்- ஸ்டொக்கம் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் இன்று (13) காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 19 பேரும் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐவர் மாத்திரம் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தேயிலை மலையிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை கழுகொன்று கலைத்ததன் காரணமாக, குளவிகள் கலைந்து, தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்
பொது வாக்கெடுப்பு நடத்து- முழங்கிய சிவாஜிலிங்கம்
இலங்கையில் ஐநாவின் கீழ் பொதுஜென வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் பாராளும்னற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன ,அவை பெரும் பாண்மை இனத்தவர்களினால் அடக்க பட்டு ,அழிக்க பட்டு அவர்கள் உரிமைகள் பறிக்க பட்டு நிர்கதியாக உள்ளனர்
இவ்வேளையில் இந்த கொலைக்கு தீர்வு காண மறுக்கும் ஐநா அதனை செய்திட வேண்டும் என்பதே இவரதும் ,தமிழர்களின் ஏகோபித்த கருத்து என்பது குறிப்பிட தக்கது
இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது
இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது
இலங்கை திருகோணமலையில் இருந்து கடல்வழியாக நியுசுலாந்திற்கு செல்ல முயன்ற அறுபத்தி மூன்று பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கடல் வழியாக வெளி நாயடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி அந்த பணத்தை மகிந்த மகன் கொள்ளையடித்து வருகினார்
இவர் தான் இந்த முகவர்களின் பிரதான முகவர் என தெரியாது பலர் பல லட்சணங்களை வழங்கி மோசம் போகின்றனர்
காவல்துறையால் கைது செய்ய பட்டவர்கள் சிறையில் அடைக்க பட்டால் அவர்களை வெளியில் விடுதவதற்கும் ஈவேரா டீல் பேசி பணத்தை கொள்ளையடிக்கிறார்
இதனை தெரியாது அப்பாவி தமிழர்கள் ஏமாந்து போகின்றமை வருந்த தக்கது
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் கொரோனாவுக்கு 23 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் இருபத்தி மூன்று பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பலர் பாதிக்க பட்டுள்ளனர்
நோயினை கட்டு படுத்த பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் இந்த மரணங்களை தடுக்க முடியாது சிங்கள அரசு தினறி வருகிறது
வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்
வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்
கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்
கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கும் இடையில் வெட்டித் துண்டாக்கிய பூசகர் துண்டாக்கிய கையை வாய்க்காலுக்குள் எறிந்துள்ளார்.
கை துண்டாடப்பட்ட நிலையில் 57 வயதான முதியவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது
ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது
பொய் சொல்லிட்டார் எனக்கூறி தன்னுடைய ஐந்து வயதான மகளின் வாயில் சூடுவைத்து, கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாயை சுற்றியும் தொடைப்பகுதியிலும் கடுமையான சூட்டுக்காயங்களுக்கு உள்ளான அச்சிறுமி, அக்கராயன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கோபமடைந்த அத்தாய், கையிலிருந்த பீங்கானை சூடாக்கி, ஐந்து வயதான மகளின் வாயைச் சுற்றியும், தொடைகளிலும் இவ்வாறு சூடு வைத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்தே சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு பொலிஸாரினால் அச்சிறுமி மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
சீமெந்து, மா விலை அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் அரசினால் சீமெந்து மூடையின் விலையை 93 ரூபாவால் மற்றும் மாவின் விலையும் அதிகரித்துளளது
மா விலை அதிகரிப்பை அடுத்து பாண் ,மற்றும் இதர மாவினால் உருவாக்க படும் பொருட்களும் அதிகரிக்க படலாம் என மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் கையளிப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு புதிதாக வீடொன்று அமைக்கப்பட்டு, நேற்று (10) இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் றாயன் அவர்களின் நிதி உதவியில், இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன், இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட இரணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுரியபண்டார மற்றும் சமூக செயற்பாட்டாளர் றாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வருகை தந்த கிராமத்தவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,560 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை
விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.
பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி
பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி
அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தி நிற்கும் சிறுவர் படுகொலைகள்: சிறீதரன் எம்.பியின் பேச்சால் நாடளுமன்றில் கூச்சல் குழப்பம்!
கடந்த வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர்.01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமான அன்றைய நாள், இலங்கை அரசால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் செல்வன்.பிரபாகரன் பாலச்சந்திரன் அவர்களது 25 ஆவது அகவை நாளாகும்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்த இனவாத அரசின் கோர முகத்தை இந்த உலகுக்கு எண்பித்த ஆகப்பெரும் போர்க்குற்றச் சாட்சியமாய் இசைப்பிரியாவின் இறுதிக் கணங்களும், பாலச்சந்திரனின் படுகொலையும் அமைந்திருந்தது.
சுற்றிவர மண்மூட்டைகளால் சூழப்பட்ட ஓர் மரப்பலகையில், கையில் ஒரு பிஸ்கட் பக்கற்றும், கையருகே ஓர் நீர்க்குவளையுமாக, எந்தச் சலனமுமற்று எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தையும், அதே
பாலச்சந்திரன் மேலாடையற்ற மார்பில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளத்தோடு, உயிர்பிரிந்த நிலையில் தரையில்க் கிடந்த புகைப்படத்தையும் சனல்.4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கணங்கள், உலகப் பரப்பெங்கும் வாழும் இதயமுள்ள ஒவ்வொரு மனிதர்களையும் இனம், மொழி, மதம் கடந்து இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவராக, தமிழர்கள் தம் நெஞ்சில் வைத்துப் பூசித்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் என்ற ஒற்றைக் காரணமே, பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரனை கோரமாகப் படுகொலைசெய்த இந்த இனவெறி அரசின்
உயிர்ப்பலிப் பசிக்குப் போதுமானதாக இருந்தது. காலம்காலமாக ஆட்சிக்குவந்த அத்தனை சிங்கள அதிகார பீடங்களும் தமிழர்கள் மீதான அதிகபட்ச அதிகார வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராகவும்,
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்த அப்போதைய ஆட்சிக் காலத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து ஈழத்தமிழர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்ட
இன அழிப்பிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்களுள் ஒன்றாய் அமைந்த பாலச்சந்திரனின் சாவு, ஒட்டுமொத்த தமிழர்களின் இதய ஓரங்களிலும் இன்னமும் ரணமாய் வலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பிலான பிரகடனத்தை ஏற்று, 1991 ஆம் ஆண்டு இலங்கை அதில்
கைச்சாத்திட்டுள்ள போதும், இந்த நாட்டில் தமிழ்ச் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ற சொற்பிரயோகத்துக்கு எந்த அவசியமுமற்று, அவர்களுக்கான உயிர்வாழும் உரிமை கூட பௌத்த சிங்கள பேரினவாதிகளால் வலிந்து பறிக்கப்பட்டு வருவதை இவ்விடத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட எண்ணுக்கணக்கற்ற சிறுவர்கள், ஆவணப்படுத்தப்படாத படுகொலைச் சம்பவங்கள், கணக்கிடப்படாத இழப்புக்களைக் கொண்ட படுகொலைகள் நீங்கலாக 1974 ஜனவரி 10 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை முதல் 2008 டிசம்பர் 20
வட்டக்கச்சி குண்டுவெடிப்பு வரையான, ஆவணப்படுத்தப்பட்ட 95 படுகொலைச் சம்பவங்களில் மட்டும் கைக் குழந்தைகள் தொடக்கம் 18 வயது வரையான 1929 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றுள் மிக முக்கியமாக நவாலிப் படுகொலை உள்ளிட்ட, அரச படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவங்களைக் குறிப்பிடலாம். 1995 ஜீலை 9, பலாலி மற்றும் அளவெட்டிப் பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்த்
தாக்குதல்களால் நிலைகுலைந்து, உடுத்த உடைகளுடன் உயிரைக் கையில்பிடித்தபடி, நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள்,
வயோதிபர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மீது புக்காரா விமானங்கள் ஈவிரக்கமின்றி வீசிச் சென்ற 13 குண்டுகளால், 147 பேர் கொல்லப்பட்டதோடு, 360 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இதன்போது கொல்லப்பட்டவர்களுள் 46 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
1995 செம்ரெம்பர் 22 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தார்கள்.
1996 செப்ரெம்பர் 7 ஆம் திகதி, யாஃசுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவியான செல்வி.கிருஷாந்தி குமாரசாமி அவர்கள், செம்மணி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதோடு, அவரைத் தேடிச்சென்ற
தாயார் திருமதி.இராசம்மா குமாரசாமி, அயலவர் திரு.கிருபாமூர்த்தி, சகோதரன் செல்வன் குமாரசாமி பிரணவன் ஆகியோரையும் இராணுவத்தினர் படுகொலை செய்து செம்மணி வயல் வெளியில் புதைத்திருந்தனர்.
அக்காலப்பகுதியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட 600 இற்கும் அதிகமான யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அதே செம்மணி வயல் வெளியில் புதைக்கப்பட்டமையும் இந்த நாட்டில் நடைபெற்ற படுகொலைகளுக்கான சாட்சியங்களே!.
2006 ஓகஸ்ட் 14, முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் சிறுவர் இல்லம், நலன்புரி நிலையம், குடியிருப்புக்கள் என்பன அமைந்திருந்த பகுதியில், அதிலும் குறிப்பாக அநாதரவான குழந்தைகளின் காப்பகமான செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை இலக்குவைத்து, மிகப்
பயங்கரமாக 16 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவிகள், செஞசோலைச் சிறுவர் இல்லச் சிறுமிகள் உள்ளிட்ட 17 – 19 வயதிற்கு இடைப்பட்ட 61 பேர்
கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, 120 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.
2007 கார்த்திகை 27, தமிழ்த் தேசிய மாவீரர் தினமான அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயங்கன்குளம் பகுதியில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
குழந்தைகள், சிறுவர்கள் என்ற எந்த பேதமுமற்று, அடிப்படை மனிதநேயச் சிந்தனைகூட இல்லாது, சர்வதேச நியமங்கள் அனைத்தையும் மீறி, தமிழர்கள் என்ற இனவெறிச் சிந்தனையின்
வெளிப்பாட்டால், பௌத்த, சிங்கள பேரினவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட பாலச்சந்திரன் உள்ளிட்ட அத்தனை சிறுவர்களையும் நான் இந்த இடத்தில் நினைவுகூருகிறேன்.
இதற்கு அப்பால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
எம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில்
- விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,
- மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,
- யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,
- கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,
- மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,
- அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,
- நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,
- விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,
- வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,
- சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,
- வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,
- அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,
- மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,
- புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்கள் அனைத்தும் இலங்கை அரசின் கோர முகத்தை எண்பிக்கும் சாட்சியங்களாக, ராஜபக்சக்களின் கறைபடிந்த கரங்களின் விம்பங்களாக கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை, அவர்களின் வாழ்வியல் வலிசொல்லும் வடுக்களாக நெஞ்சப் பசுமைகளில் என்றுமே நிலைத்திருக்கும்.
இந்த நினைவுகளுக்கும், இலங்கை நாட்டின் சுதேசிய இனமான தமிழ்த்தேசிய இனம் காலம்காலமாக சிந்தி வரும் கண்ணீருக்கும், காரணமானவர்கள் கரிசனையற்றுக் கண்மூடி இருந்தாலும் காலமாவது பதில் சொல்லட்டும்.
விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு
விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு
விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசாக்களும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும்.
அத்துடன் எந்தவித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலைய ஊழியரை அடித்த இருவர் கைது
எரிபொருள் நிலைய ஊழியரை அடித்த இருவர் கைது
மீகொடை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (06) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், முகக்கவசம் அணியாது எரிபொருள் நிரம்புமாறு கோரியுள்ளார்.
இதன்போது, முகக்கவசம் அணியுமாறு கூறிய எரிபொருள் நிலைய ஊழியரிடம் கோப்பட்ட சந்தேக நபர், அங்கிருந்து சென்று மற்றுமொரு நபரை அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை இருவரும் சேர்ந்து கடுமையான முறையில் தாக்கியமை அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அத்துடன், அவர்களில் ஒருவர் ஊழியரை தரையில் அடித்து தாக்கியதுடன், அதனை தடுத்த மற்றுமொரு ஊழியரையும் அவர்கள் தாக்கியமை அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, 24 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஊழியர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்வானிலைமற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 ஒக்டோபர் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.






