என்னை அழைப்பாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா

உந்தன் கவி படிக்கையில
உள்ளம் வியக்குதடி
உன்னை தினம் பார்த்திடவே
உள்ளம் துடிக்குதடி

நீ எழுதி வைத்த கவிதையதை
நித்தம் புரட்டி படிக்கையில
சத்தம் இன்றி கிடக்குதடி – மனம்
சாதனை போல பேசுதடி

பன்மையில் பகிரும் மொழியதனில்
பாசம் வந்து கொட்டுதடி
ஒருமையில் பேசும் சங்கதியில்
ஓடி மனம் துள்ளுதடி

என்னை என்னடி செய்தாயோ – என்னை
ஏனோ சிறை வைத்தாயோ
உன்னை மறக்க முடியாமல்
உள்ளத்தை ஏனோ வைத்தாயோ

பேசா பேசும் பேரழகே
பேரொளி எனக்கு காட்டாயோ
பக்கம் வந்து பார்த்திடவே
பாவை என்னை அழைக்காயோ ..?

ஆக்கம் -13-05-2025
வன்னி மைந்தன்