பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி ,கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது

கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட

அலதெனிய பொலிஸார் வேனையும் குழுவினரையும் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரில் ஒருவர் இந்த மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரான சந்தேக நபர், தனது நண்பர்களுடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வேனை பயன்படுத்தி இந்த பாடசாலை மாணவியை கடத்த வந்துள்ளார்.

காதல் உறவு

பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் மாணவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு பல முறை சென்றுள்ள நிலையில் இந்த காதல் உறவு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் திருமணமானவர் என தெரியவந்ததையடுத்து மாணவி அவரை கைவிட்டுச் சென்றதுடன் சந்தேக நபரின் அழுத்தத்தினால் மாணவியின் பெற்றோர், அவரை குலுகம்மான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளனர்.

அங்கிருந்தவாறு பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாணவியின் தவறான முடிவால் தவிக்கும் குடும்பம்

மாணவியின் தவறான முடிவால் தவிக்கும் குடும்பம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில், சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு தவறான முடிவினை எடுத்துள்ளார்.

வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள், அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

வரலாற்றில் முதற் தடவையாக சாதனை படைத்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதற் தடவையாக சாதனை படைத்த மாணவி

வரலாற்றில் முதற் தடவையாக சாதனை படைத்த மாணவி

யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரிஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு

புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ். இந்து மகளிர்

கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

வரலாற்றில் முதற் தடவையாக சாதனை படைத்த மாணவி

அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று எங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை

சேர்த்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

பரிட்சையில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி கருத்து தெரிவிக்கையில், தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று

பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ

மாடியிலிருந்து விழுந்த மற்றுமொரு மாணவி
Posted in இலங்கை செய்திகள்

உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி

உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலேவத்த பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தன் உயிரை மாய்த்து உயிரிழந்து உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (17) பாடசாலை சென்று வீடு திரும்பிய குறித்த மாணவி உயிரிழந்த நிலையில் தனது அறையில் கிடந்ததை அவருடைய தந்தையார் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாணவியின் மரணம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்
Posted in இலங்கை செய்திகள்

மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்

மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்

இலங்கையில் 17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை ,சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என அச்சுறுத்திய ,சிங்கள சிப்பாய்
ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

மாணவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய ,
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர் .

23 வயதாகும் மின்னேரிய இராணுவ முகாமில் கடமையாற்றும்,
இராணுவ சிப்பாயே இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார் .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

No posts found.
மாணவி மண்டை உடைத்த டீச்சர் - சிறையில் அடைத்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில், மூன்று சிறுமிகளும் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

முன்னதாக இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு விசாரணை, மீண்டும் மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் நேற்று (18) அழைக்கப்பட்டு, சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

நடைபெற்ற இவ் அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீதவான், முதலியார், ஆராய்ச்சி மற்றும் இவ் வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில், இச் சிறுமிகள் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த 11.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை, தலைமன்னார் கிராம பகுதியில் சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வேனில் சொக்கிலேற் மற்றும் பிஸ்கட் விற்பனைக்காக சென்றதாகக் கூறப்படும் இருவர், மூன்று சிறுமிகளுக்கு சொக்கிலேற் தருவதாக அழைத்து அவர்களை கடத்த முற்பட்டதையடுத்து, இவர்களை அக்கிராம மக்கள் பிடித்து, தலைமன்னார் பொலிஸில் ஒப்படைத்திருந்திருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், அர்ஜுன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இந்த இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு

விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக

மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    மாணவிக்கு ஆசிரியர் புரிந்த செயல்

    வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதான மாணவி ஒருவரை

    துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியரான வவுனியா நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நேற்று

    (08) மாலை சந்தேகத்தின் பேரில் செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்த குறித்த ஆசிரியர் முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த உள்ளதாக சம்பவம் தொடர்பில்

    மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.