சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்

சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில்

சிறைச்சாலை வைத்திய சாலையில் ரணில் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக

தற்பொழுது சிறை வைத்தியசாலையில் ரணில்

தற்பொழுது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் புரிந்த மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இரத்த அழுத்தத்தின் காரணமாக

அதனை அடுத்து அங்கு மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தின் காரணமாகவே தற்போது அவர் வைத்தியசாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு இதுவாக காணப்படுகிறது.

இந்த விடயம் தற்பொழுது இலங்கையில் சலசலப்பை பரபரப்பை ஏற்படுத்தி இருக்க நிலையில் இது ஒரு கபட அரசியல் என்பதாக பேச படுகிறது .

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள் ,வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழு

விசேட சோதனை 13பெண்கள் கைது
விசேட சோதனை 13பெண்கள் கைதுவிசேட சோதனை 13பெண்கள் கைது

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு

கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ வார்டில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை

விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த வார்டில் உள்ள கைதிகளில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்டில் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி , வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெசாக் பண்டிகை நடவடிக்கையை அடுத்து ,தற்பொழுது இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கைதிகளின் உறவுகள் தொடந்தும் அந்த உறவுகளை நேரே சந்தித்து அவர்களுக்கு உரிய உணவுகளை, அளித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்டு இருக்கின்றன.

ஆண்டுதோறும் வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்வதும் அதற்கு உரிய வகையில் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை அடுத்து கைதிகளினுடைய உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

தமிழரசியல் கட்சிகளையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ,தமிழ் கைதிகளின் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்து வரும் 12 மற்றும் 13 ஆம் நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை எடுத்து கைதிகளின் உறவுகள் மகிழ்ச்சியில் இணைந்திருக்கின்றன.

ஆண்டு தோறும் இந்த வெசாக் இவ்விதமான நிகழ்வினால் குற்றங்கள் செய்து சிறையில் வசிக்கும் கைதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்றம் பெறுகிறது .

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்
Posted in இலங்கை செய்திகள்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இன்று (27) நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் நேற்று (26) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், இருவர் காலி – கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மோதலில் காயமடைந்த ஏனைய இரண்டு கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹுங்கல்ல ‘லொக்கு பெட்டி’ மற்றும் ‘கரந்தெனிய சுத்தா’ ஆகிய பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களின் உறுப்பினர்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக சிறைச்சாலை உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து ,யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, விபத்துக்கு உள்ளான சம்பவம் திங்கட்கிழமை (13) இடம்பெற்றுள்ளது .

ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது , நாரந்தனை

பகுதியில் வைத்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால் , பின்னால் பயணித்த சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து அதில் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

சிறைச்சாலை பேருந்து விபத்து

அதனையடுத்து, சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு , சிறைச்சாலைக்கு கொண்டு

செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .

யாழில் இவ்வாறான பேரூந்து விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,சாரதிகள் அலட்சிய போக்கின் வெளிப்பாடே என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்து .

இந்த பேரூந்து விபத்துகளினால் நாள்தோறும் பல மக்கள் பலியாகி தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல்

சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல்

சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும்

தந்திரோபாயப் படை’ அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும், ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டங்களை மதித்து நடக்கும் பிரஜைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (ஜனவரி 26) தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் சிறைச்சாலை நடைமுறையில் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ என்ற கருத்தாக்கம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை வீரர்கள் 194 பேர் சிறைச்சாலை சேவையில் இணைவு

பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறுவோரின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’யில் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வில் ஜெனரல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்னவை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வரவேற்றார்.

‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறும் 194 பேரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேலும் உரையாற்றுகையில் “இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் 500 வீரர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 194 படைவீரர்கள் தமது பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

“ஊழல் மற்றும் தவறான நடத்தைகளை முறியடிக்கவும், மேலும் வெளிப்படையான அணுகுமுறையில் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் இவர்கள் துணை நிற்பார்கள் என இந்த நடவடிக்கையின் நோக்கத்தை அவர் விளக்கினார்.

புதிதாக வெளியேறிய இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “உங்கள் உள்ளார்ந்த ஒழுக்கம், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் அனைவரும் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெற்றுள்ளீர்கள், எனவே சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் மனிதாபிமான அணுகுமுறையுடன் உங்கள் பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

“இந்தக் கைதிகள், அவர்களின் சிறைக் காலத்தை முடித்து மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னராக பயனுள்ள நபர்களாக மாற்றுவதில் உங்கள் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது” என அவர் வலியுறுத்தினார்.

வெகு விமர்சையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளருக்கு ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ படையின் உத்தியோகபூர்வ சின்னம் வழங்கப்பட்டதுடன், பயிற்சி மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் காட்சிகள், அணிவகுப்பு மற்றும் நான்கு மாத பயிற்சியின் போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் துசித உடுவர, சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம் மற்றும் சேவைகள்) சுனில் கொடித்துவக்கு, சிறைச்சாலைகள் ஆணையாளர் (தொழில்துறை மற்றும் அபிவிருத்தி) மாலின் லியனகே, சிறைச்சாலைகள் பயிற்சி பணிப்பாளர் சேனக பல்லேதன்ன, SPEAT படையின் கட்டளை அதிகாரி சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகர் பிரசாத் பிரேமதிலக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவரின் மீது வீசப்பட்டிருந்த

09 கைப்பேசிகள் மற்றும் 18 சிம் அட்டைகள் மற்றும் புகையிலை பெக்கெட்

ஒன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.