Tag: கொலை
படுகொலை தொடர்பில் இளம் பெண் உள்ளிட்ட மூவர் கைது
படுகொலை தொடர்பில் இளம் பெண் உள்ளிட்ட மூவர் கைது
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளம்பெண் உள்பட 3 பேர் கிளிநொச்சி – இராமநாதபுரம் மாயனூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
படுகொலை தொடர்பில் இளம் பெண் உள்ளிட்ட மூவர் கைது
கடந்த 25ஆம் திகதி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை தடியால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேகநபர் 18 வயதுடையவர் எனவும் அவர்கள் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தகாத உறவின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை
வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை
குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை கடந்து சென்றுள்ளார்.
சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர்.
இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை
முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேநேரம் குடும்ப தலைவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீராவிபிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம்குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை
செய்யப்பட்டு வீட்டின் பின்பாகவுள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த பெண்ணும் த.கீதா (வயது 23), முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த ஆணும் (வயது 23) திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்ப பெண்ணின் இளம் குடும்ப தலைவனை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தினை முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி K.சங்கீத் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தோண்டப்பட்ட குறித்த அகழ்வுப்பணியின் போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸார் விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணியினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21.10.2023 திகதிக்கு பின்னர் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் 23 ஆம் திகதி மகளும் மருமகனும் வசிக்கும்
வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதாகவும் இதனால் சந்தேகம் அடைந்த குறித்த இளம்குடும்ப
பெண்ணின் தாயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு

காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை
காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் இன்று (18) காலை இக்கொலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை
சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்களை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) மாலை கடவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம வீதிக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட
ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடைய மீகஹவத்த மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுதொழில் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரை சுட்டுக்கொலை செய்ய வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பேலியகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலேயே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நாவற்குழி ஐயனார் கோயிலடியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் வீட்டில் கணவனை காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.
குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் கணவரை தேடி தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் “தான்
மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது” என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்,”மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலே இருவரையும் தாக்கினேன்” எனவும் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதுடன் வேறு சில குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவராகவும் கருதப்படுகிறார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மனைவியை கொலை செய்த கணவனின் பகீர் வாக்குமூலம்
உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் சட்ட மருத்துவ அறிக்கை மேற்கொண்டதன் பின்னரே தெரியவரும்.
சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம் சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
எமது விசாரணைகள் நிறைவுற்றதும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்|கைதிகள் யாவரும் கொலை|isreal vs hamas|israel news tamil
இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்|கைதிகள் யாவரும் கொலை|isreal vs hamas|israel news tamil
இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல் ,ரொக்கட் ,தாக்குதல் இஸ்ரேல் எங்கும் ஆபாய ஒலி .
காசாவில் அகதி முகம் அழிப்பு ,பலநூறு மக்கள் மரணம் ,
காசாவில் இஸ்ரேல் வெறி தாக்குதல் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
பிரதமர் மோடியை கொல்ல சதி
பிரதமர் மோடியை கொல்ல சதி
டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம்,
நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து மும்பை காவல் துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடியை கொல்ல சதி
மத்திய பாதுகாப்பு பிரிவு ஒன்றுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும். ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோடியை
படுகொலை செய்வோம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தையும் குண்டுவைத்து தகர்ப்போம். இந்தியாவில் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. நாங்களும் சிலவற்றை வாங்க வேண்டும்.
நீங்கள் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும், நீங்கள் எங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. நீங்கள் பேச விரும்பினால், நாங்கள் கூறியதை
செய்யுங்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரும்பு கம்பியால் அடித்து கொலை
இரும்பு கம்பியால் அடித்து கொலை
குருவிட்ட, கொக்கோவிட்ட பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் வசித்து வந்த குறித்த நபர் கடத்தப்பட்டு, வேறு வீட்டில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
வீ்டு ஒன்றில் வைத்து நபர் ஒருவர் தாக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து குருவிட்ட பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை நேற்று (21) ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து தாக்கப்பட்ட நபரை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், காயமடைந்த நபரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இரும்பு கம்பியால் அடித்து கொலை
தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் பரங்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட பகையே தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவைby நிருபர் காவலன்
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலிby நிருபர் காவலன்
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்by நிருபர் காவலன்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்by நிருபர் காவலன்
காணி தகராறு ஒருவர் கொலை
காணி தகராறு ஒருவர் கொலை
நுவரெலியா மீபிலிமான பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (09) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ராகல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இந்த வீட்டின் உரிமையாளரின் தாயாரிடம் சாரதியாக பணிபுரிந்ததாகவும், தாய் உயிரிழப்பதற்கு முன்னர் அவரின் இறுதி ஆசையாக காணியின் உரிமையை குறித்த சந்தேகநபரின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் கூறி வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் சிறிது காலமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.
காணி தகராறு ஒருவர் கொலை
அதன்படி, சம்பவம் தினம் அன்று சந்தேக நபர் வீட்டுக்கு வந்து வீட்டில் இருந்த பெண்ணையும் உறவினர் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 41 வயதான வீட்டு உரிமையாளரான பெண்ணும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவைby நிருபர் காவலன்
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலிby நிருபர் காவலன்
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்by நிருபர் காவலன்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்by நிருபர் காவலன்
பளையில் ஒருவர் அடித்து கொலை
பளையில் ஒருவர் அடித்து கொலை
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (03) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பளையில் ஒருவர் அடித்து கொலை
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 34 மற்றும் 31 வயதுடைய பளை மற்றும் அரியாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவைby நிருபர் காவலன்
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலிby நிருபர் காவலன்
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்by நிருபர் காவலன்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்by நிருபர் காவலன்
சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்
சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்
மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிப்பது,
இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்களக் காடையர்களும் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்த 23 ஆம் திகதியன்று மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பெளத்த பிக்கு உள்ளிட்ட காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்
அதை அடக்க உதவிக்கு அழைக்கப்பட்ட போலிஸாரும் வந்து, நடந்தேறிய காடைத்தனத்தின் காரணகர்த்தாவான பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்கின்றனர்.
இப்படியான பண்புகள், கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தொடரான இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையும் உருவாக்கி வருகின்றது.
காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமா?
இந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து எமது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டு நிற்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்
மக்களை மிரட்டும் மர்ம கொலைகள்
இலங்கையில் மக்களை மிரட்டும் மர்ம கொலைகள் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
நாள் தோறும் காடுகள் ,ஏரிகள் ,நீர் நிலைகள்,வீதிகளில் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித உடல்கள் மீட்க படுகின்றன .
தொடராக மிதக்கும் இந்த கொலைகளினால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .பாதுகாப்பற்ற நாடக இலங்கை மாறி செல்வதற்கு ,ஆளும் அரசியல்வாதிகளே காரணம் என குற்றம் சுமத்த படுகிறது .
இந்த கொலைகளினால் பின்னால் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாது உள்ளமையே ,இவை பின்புலத்தில் அரசியல் உள்ளதாக பேச படுகிறது .
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவைby நிருபர் காவலன்
- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலிby நிருபர் காவலன்
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்by நிருபர் காவலன்
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்by நிருபர் காவலன்
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
இனி மேல் எமது கட்சியினர் துன்புறுத்தப்பட்டால் நிச்சயமாக வட்டியுடன் சேர்த்து முதலையும் சேர்த்து வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றும் அதே வேளையில் எந்தவொரு சவாலையும் ஏற்றுக் கொள்ளத் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தோ அல்லது தாம் சவால்களில் இருந்து தப்பி ஓடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று (16) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மினுவாங்கொடை தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்,
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி, நாங்கள் மீண்டும் சவால்களுக்கு முகம் கொடுத்து, இதை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்று யோசித்தோம்.
எனது தந்தை ரெஜி ரணதுங்கவிற்கு பக்க பலமாக இருந்த சகலரும் அந்த இடத்தில் கலந்து கொண்டார்கள். 1977 இல் ரெஜி. அவர்களது வீட்டுக்கு தீ வைத்தார்கள்.
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேலை செய்தார்கள். அன்று அவர்களது முதலாவது கட்சியின் கிளைக் கூட்டத்துக்கு 13 பேர் மட்டுமே வந்தனர்.
அவர்களோடு இணைந்து அமைச்சர் மிகவும் பலமான வேலைத் திட்டத்தை ஆரம்பித்தார்கள். மினுவாங்கொடை அன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஆசனமாக இருந்தது.
ரெஜி ரணதுங்க தான் அன்று மினுவாங்கொடை ஆசனத்தை வென்று அதன் மீது தான் நாம். இன்று அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.
உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். நாங்கள் வென்றோம் மினுவாங்கொடை தொகுதியில் நாங்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தோம்.
பின்னர், நாடு முழுவதும் இதே சித்தாந்தம் உருவாக்கப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹாவில் இருந்து 365,000 வாக்குகள் அதிகம் பெற்று கோட்டாபய வெற்றி பெற்றார்.
அதன் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது. கம்பஹாவில் எமக்கு பெரும் அமைப்பு சக்தி இருந்தது. அந்த வலிமையை உடைக்க போராளிகள் விரும்பினர்.
வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது
போராட்டத்தின் பின்னர் மீண்டும் மினுவாங்கொடைக்கு வந்து எரிந்த அலுவலகத்தை புனரமைத்து பணிகளை ஆரம்பித்தேன். வீடுகளை எரித்து, கொலை செய்து எங்களை வீழ்த்த முடியாது.
ஒரு வெற்றிகரமான நபர் அடிமட்டத்தில் இருந்து எழுபவர் தான். நீங்கள் தான் என் பலம். அன்று என் தந்தையின் வீடு தீப்பற்றி எரிந்த போது அவரைப் பாதுகாத்தது போல் மினுவாங்கொடையில் என்னையும் காப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் தான் என் பலம். உங்கள் முடிவுகளின் அடிப்படையில் நான் எடுத்த முடிவு தவறானதில்லை. மக்களுக்கு சேவை செய்யும் போது எந்த சவாலையும் ஏற்க தயாராக இருக்கிறேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாங்களும் சவால்களில் இருந்து தப்பி ஓட மாட்டோம்.
77 இல் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 1994 இல் எதிர்க்கட்சிகளின் வீடுகளுக்கு தீ வைக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை துன்புறுத்தினால் வட்டியுடன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
நாங்கள் இப்போது விளையாட்டில் இருக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்கவை என்னைப் போல் திட்டியவர்கள் எவரும் இல்லை. போராட்டத்துடன் மகிந்த தலைமையிலான அரசாங்கம் வெளியேறியது.
பின்னர் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினார். அதன் பிறகு யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. கட்சியை பிளவுபடுத்தி நாட்டை ஒன்றிணைத்து திரு. ரணில் அவர்களுக்கு ஆதரவளிக்க முன் வந்தோம்.
தற்போது 69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது
கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது
கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐந்து பேர், நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது
சில மாதங்களுக்கு முன்னர், கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தொடர்பான பணத் தகராறு காரணமாக மற்றுமொருவரை இதே போன்று கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்
சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்
பொலன்னறுவை பெலத்தியாவ பகுதியில் இளைய சகோதரனால் கத்தியால் குத்தப்பட்டு மூத்த சகோதரன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கத்தை அடுத்து மூத்த சகோதரனை இளைய சகோதரன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சகோதரனை கொலை செய்த இளைய சகோதரன்
தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ,
முன்னாள் ஐஆர்ஜிசி குத்ஸ் படைத் ,
தளபதி காசிம் சுலைமானியின் மரணம் தொடர்பிலான ,
நீதி விசாரணை விரைவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் முன்னால் ,
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து வர படுகிறது .
ஜனவரி 3, 2020 அன்று, அமெரிக்க இராணுவம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ,
உத்தரவின் பேரில், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு ,
அருகே ட்ரோன் தாக்குதலில் சுலைமானி கொல்ல பட்டார் .
ஈரான் இராணுவ தளபதி கொலை வழக்கும் விசாரணை ஆரம்பம்
மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றிணைக்கவும் ,ஹிஸ்புல்லா ,
ஈராக் ஸியாத் போராளி குழுக்களை வலுப்படுத்துவதில் ,
சுலைமானி தீவிர நகர்வை மேற்கொண்டார் .
இவர் அன்று ஆரம்பித்து வைத்த நடவடிக்கை,
காரணமாகவே ஈரான் இன்று நிமிர்ந்து நிற்கிறது .
மேலும் இவரை விட்டு வைத்தால் தமக்கு ஆபத்து என்பதை கருதிய ,
இஸ்ரேல் ,அமெரிக்கா அனைத்து கூட்டு தாக்குதல் மூலம் அவரை கொன்று வீசியது .
சர்வதேச நாடுகளில் அத்துமீறி பகிரங்கமாக, அமெரிக்கா இஸ்ரேல் நடத்தும் ,
இந்த தாக்குதலை கண்டிக்க துணிவற்றவராக ,தகுதி அற்றவராக ,
ஐநா மன்றம் உள்ளது . .
நீதி பேசும் சர்வதேச நீதிமன்றுகளும் ,ஐநாவும் ,இஸ்ரேல் பொம்மை என்பதையும் ,
ஈரான் ,மியன்மார் ,இலங்கை ,பலஸ்தீஹனம் ,தமிழர் படுகொலைகள்
மூலம் நிரூபணமாகியுள்ளது .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

ஒருவர் சுட்டு கொலை
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூடடில் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
பலியானவர் 33 வயதுடைய இளம் வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவாவில்லை .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை
லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை
லண்டன் கிரிஸ்டல் பலேஸ் பகுதியில் வீடற்ற நபர் ,
ஒருவர் கோரமாக கத்தியால் குற்றி கொலை செய்யப் பட்டுள்ளார் ,.
கல்லீரலில் கத்தி குத்து பலமாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேஏ
பலியாகியுள்ளார் .
வீடற்று வீதி ஓரங்களில் உறங்கி எழுந்த அப்பாவி ,
மனிதனை ,கொடியவர்கள் ,அதே பாகு கார் தரிப்பிடத்தில் ,
கொன்று வீசிய செயல், மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை
குற்ற தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை ,
இதே பகுதியில் வீதி கண்காணிப்பு கமராக்கள் பலது உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .