Tag: உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு,யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யால்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்அதிக வெப்பமான காலநிலை
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும்.
மூளை செயல் இழந்து மயக்கம்
அதேவேளை குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும். மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரணமாக உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
வெப்பத்தின் பேராபத்தான நிலை
எனவே, எம்மை வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
” ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும்.
வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும்.
கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்
Featured
மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு
மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு ஒன்று விழுந்ததில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலிய காட்மோர் தோட்டத்தில் வசிக்கும் அந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11 வயது மாணவனே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் இன்று (04) பிற்பகல் 1.30 மணி அளவில் கழிவறைக்குச் செல்ல வந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.
பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு மாணவனின் உடல் மீது உருண்டுவந்து விழுந்ததில் மாணவன் கழிவறை சுவரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் பாடசாலையின் ஆசிரியர்களும் அயலவர்களும் ஒன்றிணைந்து காயமடைந்த மாணவனை அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேயிலை தோட்டம் ஒன்றின் அபிவிருத்தி நோக்கத்திற்காக குறித்த கொங்கிரீட் அமைப்பு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
Featured
STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு
STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு
மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஜா-எல வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளரான 42 வயதான டொன் சுஜித் என்ற உக்குவா என்பவர் உயிரிழந்தார்.
STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த நபர், இது தொடர்பான கொலைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட உக்குவா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘வெல்லே சாரங்கா’ என்ற குற்றவாளியின் சகோதரியின் கணவர் என்பது பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு
பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு
பாதுக்க, துன்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இஸ்ரேல் இரு அதிகாரிகள் பலி எகிறிய உயிரிழப்பு
இஸ்ரேல் இரு அதிகாரிகள் பலி எகிறிய உயிரிழப்பு
இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையில் இடம்பெற்ற
மோதலில் சிக்கி இரு இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
தொடரும் எதிரியின் தாக்குதலினால் தற்போது உயிரிழப்பு எகிறியுள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு
கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு
கார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார், அதனையடுத்து அவரை வீட்டார்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு
மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது.
திங்கட்கிழமை (04) முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது.
இதனால் மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.
கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு
இந் நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி
- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை
- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது
தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு
தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு
தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி
- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை
- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு
யாழின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (21) மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு
மீட்கப்பட்ட சடலம் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியதுby நிருபர் காவலன்
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகராby நிருபர் காவலன்
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்by நிருபர் காவலன்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறதுby நிருபர் காவலன்
- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடிby நிருபர் காவலன்
முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு
முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இன்று (10) காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
25 வயது இளைஞனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
லியான்ஜியாங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலின் லியான்ஜியாங்கைச் சேர்ந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு
தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில்,
25 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
பேருந்து புனே நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நள்ளிரவுக்குப் வேளை ,
மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து.
அதன் போது டீசல் டேங்க் தீப்பிடித்து பேரூந்து எரிந்து கருகியது
பேருந்தில் சுமார் 30-35 பேர் இருந்தனர். இருபத்தைந்து பேர் இறந்துள்ளனர் ,
மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள ..
Overlay6
இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு
இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு
இந்தியா மணிப்பூர் பகுதியில் இன குழுக்களுக்கு இடையில்,
இடம்பெற்று வரும் தொடர் கலவரத்தில்
ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .
ஒரு மாதமாக தொடரும் வன் முறையில் சிக்கி எண்பது பேர்,
பலியாகியும் நாற்பதாயிரம் பேர்
அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
பெரும் சொத்தழிவும் ஏற்பட்டுள்ளது .
மக்கள் கலவரத்தை தடுக்க மறந்து அரசியல்வாதிகள் ,
உறக்கத்தில் உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு
திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு
திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி ,
28 பேர் உயிரிழந்தனர் .
உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி வெள்ளிக்கிழமை ,
தாமதமாக முடிவுக்கு வந்ததாக உள்ளூர் மீட்பு அதிகாரிககள்
தெரிவித்துள்ளனர் .
திபெத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ,
நிங்சி நகரில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் ,
தற்போது நிறுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
இதே போன்று ஆப்கானிஸ்தானில் அதிக சினோ காரணமாக,
குளிரில் விறைத்து 78 பேர் உயிர் பிரிந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
லண்டன் சரே பகுதியில் நாய் கடித்து நபர் ஒருவர் உயிர் பிரிந்துள்ளார் .
இவ்வாறு உயிர் பிரிந்தவர் 28 வயதுடையவர என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இவ்வாறான சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .



















































