Tag: இலங்கை
உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகர் அருகில் வெடிக்கும் குண்டுகள் – நெருங்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலைநகரை நோக்கிய ரசிய படைகள் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளன ,ஏவுகணைகளினால் அந்த பகுதி நிறைந்த வண்ணம் உள்ளது
தலைநகரை ஆக்கிரமித்தால் உகிரேனை தமது கடடு பாட்டுக்குள் வீழ்ச்சியுற வைக்க முடியும் என்பது ரசியா இராணுவத்தின் திட்டமிடல்களில் ஒன்று
அதனை மைய படுத்தியே இந்த அதிரடி தாக்குதல்களை ரசிய இராணுவத்தின் விசேட படைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
பெரும் பேரழிவுகளை குறித்த பகுதி சந்தித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மேலும் ரசிய போர் விமானங்கள் தலைநகர் மேலால் பறந்த வண்ணம் உள்ளது
கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
.கிளிநொச்சி – பளை A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினார்.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அவசர வேண்டுதல்
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அவசர வேண்டுதல்
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய
நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 அவசர தொலைபேசி இலக்கமான +90
534 456 94 98, நிலையான தொலைபேசி இலக்கமான +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான slemb.ankara@mfa.gov.lk ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
வெளிநாட்டு அமைச்சு
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று
காதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
மீண்டும் கொவிட் தொற்றுப்பரம்பல் எமது நாட்டில் அதிகமாகி
கொவிட் 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினர் பாரிய பங்களிப்புக்களை இரவு பகல் பாராது வழங்கி செயற்பட்டு வருகின்றனர். இதனால் ஏனைய மாகாணங்களைவிட எமது மாகாணம் சிறந்து விளங்கியதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.
மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் இன்று (23) திருகோணமலை மாகாணப் பணிமையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பு மருந்துளை பொதுமக்களு க்கு வழங்கும் செயற்பாட்டிலும் எமது மாகாணமே சிறந்து விளங்குவதாகுவும், ஏனை நாடுகளைவிட எமது நாட்டலுள்ள மக்கள் இத்தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் கொவிட் தொற்றுப் பரம்பல் எமது நாட்டில் அதிகமாகி வருவதை நாம் அறிவோம். இதை முற்று முழுதாக ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும், அதற்கான வழிவகைகளையும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் ஆட்கொள்ளி நோயான கொரோனா நோயை எமது மாகாணத்தில் மாத்திரமல்லாமல் எமது நாட்டிலிருந்து விரட்டியடிக்க ஒருமித்து செயற்படுவோம் என்றார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சகாதார சேவைகள் பணிமனையில் நிலவுகின்ற குறைபாடுகள் குறித்தும் அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் கேட்டறிந்துகொண்டார். இதில் வைத்தியர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சு
நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை
நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை
இந்தோனேசியாவின் கரையோர வலையத்துக்கு அருகாமையில் இன்று (25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 6.2 ரிக்டர் அளவை கொண்டதாக பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உணரப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை இடை நிறுத்தம்
கொழும்பு பங்குச் இடை நிறுத்தம்
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று காலை 11.17 மணியளவில் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
S&P SL20 சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 5%க்கும் அதிகமாக சரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 423.28 புள்ளிகளும், S&P SL20 சுட்டெண் 208.96 புள்ளிகளும் குறைந்தன
யாழில் நகைகள் திருட்டு
யாழில் நகைகள் திருட்டு
கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை
கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சாவகச்சேரி, நெல்லியடி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த மூவர் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளதாகவும்
கொடுத்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் என
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்
இரு பஸ்கள் மோதி விபத்து- 23 பேர் காயம்
இரு பஸ்கள் மோதி விபத்து; 23 பேர் காயம்
ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸூம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஆண்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த யாருக்கும்
காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்,
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின், பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஆடைத் தொழிற்சாலை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, கட்டுவான் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஒருவரை கைது செய்ததுடன்,
ஆயிரம் லீட்டர் கோடா மற்றும் 20 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
தெல்லிப்பளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய
தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை பொலிஸாருடன் இணைந்து நேற்று (22) முற்றுகையிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபரை, தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மீட்கப்பட்ட பொருள்களை சான்று
பொருள்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு
டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும், நான்கு பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் மாசி மாதம் வரையான காலப்பகுதியில் 75 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதியில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனை மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதாயின் உள்ளூராட்சி மன்றங்கள், நிறுவனங்கள் மற்றும் கிராமிய சங்கங்களின் ஒத்துழைப்பு சுகாதார துறைக்கு மிகவும் அவசியமாக இருப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு
உரப் பிரச்சினை காரணமாக குறைந்த அளவிலான அறுவடையைப் பெற்ற விவசாயிகளுக்கு
நட்டஈடு வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கமைய அவர்களுகான நட்டஈட்டுத் தொகையை கட்டாயமாக வழங்க
அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
யாழில் சிசுக்களை வைத்து கூலிக்கு பிச்சை எடுத்த கும்பல் கைது
யாழ்., சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுகின்றார் என்று அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைதுநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்துக்குள் இரண்டு எரிபொருள் கப்பல்கள்
கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் டொலர் பற்றாக்குறையால் மூன்று நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இந்த கப்பல்களிலுள்ள எரிபொருளை உடனடி ஒழுங்கு முறையின் கீழ் அரசாங்கம் இறக்குமதி செய்த போதிலும், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள்
கிடைக்காததால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு டீசல் கப்பலும் பெற்றோல் கப்பலொன்றும் தொடர்ந்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டால், எரிபொருளுக்கான நிறுத்தக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது பத்து நாட்களுக்கு மாத்திரமே பெற்றோலும் 7 நாட்களுக்கும் மட்டுமே டீசலும் கையிருப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொலை
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக்
கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள்.
இதன் மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.”
- இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி. பற்றி பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு படுகொலைகள், அட்டூழியங்கள் புரிந்தார் என்பதும் தெரியும்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி. குண்டர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார். அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா? என்பதற்குப்
பதில் கூறவேண்டும். இறுதிப் போரின்போது பிரபாகரனின் சடலம் எனக் காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள். இலங்கை முழுவதும் பவனியாகக் கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த விடயங்கள்
தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்துக்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது?
அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, பிரபாகரன் ஒரு போர் வீரன்; கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதைக் கூறுகின்றார். படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர், பிரபாகரனின் கழுத்தில்
இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். ஆயுதங்கள் இல்லாமல்தான் எதிரியிடம் மண்டியிடுவதையே சரணடைதல் என்பார்கள்.
அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோம் என ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம்? யார் புதைத்தது? என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலைக் கரைத்துவிட்டோம், எறிந்துவிட்டோம் என்றார்கள்.
பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காகக் கருணாவையும், தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் இறப்பு விசாரணை நடைபெறவில்லை?
ஹெலி மூலம் கருணாவைக் கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட மருத்துவ அதிகாரியைக் கூட்டிச்சென்று இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை? இந்தியாவுக்கு ஒரு நீதிமன்றச் சான்றிதழை வழங்கியுள்ளீர்கள்.
அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால் ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை?
பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார், சடலத்தை எடுத்தோம், புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.
பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார்” – என்றார்
சிறுவனை கற்பழித்த பிக்கு கைது
சிறுவனை கற்பழித்த பிக்கு கைது
வட்டவளை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வந்த பிக்கு ஒருவர் 13 வயது
சிறுவன் ஒருவரை பாலியல் உறவு புரிந்துள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் பிக்கு கைது செய்ய பட்டுள்ளார்
ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் இரண்டு சிங்களவர் வீதி விபத்தில் மரணம்
ருமேனியாவில் பணி புரிந்து வந்த இலங்கையை சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர்
,சம்பவ தினம் அன்று இரண்டு சிங்களவர்களும் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த
பொழுது வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்தது பாத சாரிகள் மீது மோதியது
இதன் போது சம்பவ இடத்தில இருவரும் பலியாகினர் ,குறித்த விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேனில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வருமாறு அழைப்பு
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில்
உக்கிரேனில் தங்கியுள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அறிவித்துள்ளது
மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வர
அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறு வேண்ட பட்டுள்ளது
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
ஒருவர் வெட்டி படுகொலை – கண்ணீரில் குடும்பம்
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் நேற்று (20) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொரட்டுவை கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளன.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னாரில் பறந்த ட்ரோன்
மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை, சட்டத்தின் முன் நிறுத்த
நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின்
விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானச் செயல்பாடுகள் (ட்ரோன்) தண்டனைக்குறிய குற்றமாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்குள் நடத்தப்படும் அனைத்து ஆளில்லா விமான
நடவடிக்கைகளுக்கும் (ட்ரோன்) சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில்
ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட
ஓட்டோவும் இரத்தோட்டைப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரத்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்






