Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

தீ கொண்டு எழுவாய் …!

தீ கொண்டு எழுவாய் …!

கறுப்பு தார் வீதியிலே
கடுகதி வேகத்திலே …
ஓடும் வண்டிகளின்
ஓல சத்தம் கேட்கிறது ….

நாளும் நால் உயிர் பலிகள்
நாள் தோறும் நடக்கையில..
கண் மூடி உறங்கும்
காவல்துறை நினைக்கையில….

வாள் தீட்டி ஆளும் தலை
வலியோடு வெட்டிடவே ….
ஆள் நெஞ்சு துடிக்கிறது
அங்கமெலாம் கொதிக்கிறது …..

பிரியும் உயிர் தடுத்திடவே
பிடரி அடி கொடுத்திடவே …
சாலைகளின் விதிமுறையை
சாலை காப்பு தடுக்கலையே ….

கையூட்டு கை நிறைய
கண்ணெதிரே உயிர் பிரிய …
வாய் பார்த்து நிற்கின்ற
வக்கற்ற அரசு இது …..

கொதிக்கின்ற கோபத்திலே
கொழுத்திடுவோம் வா மனிதா…
ஆட்சி தலை உடைத்தெறிந்து – நல்
ஆட்சியை நட்டிடுவோம் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -20/04/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் தவிக்க விட்டாய் …?

ஏன் தவிக்க விட்டாய் …?

நேற்றெங்கள் தோட்டத்து பூவானவள்
நெஞ்சுக்குள் நிற்கின்ற விழியானவள்
அன்புக்கும் பண்புக்கும் உயிரானவள்
அகிலத்தின் நோயதில் பலியானவள் …..

வீம்புக்கு என்றுமே செல்லாதவள்
விடுதலை போருக்கு உயிரானவள் – உடல்
தாங்கிட இன்று முடியலையே – பக்கம்
தங்கிட கூட முடியலையே …

வேருக்கு நீர் வீட்ட குலமகளே
வேணடுறோம் மீள வா மகளே …
அறத்திலே நின்ற பெரு மகளே
அழுகிறோம் விழியை துடை மகளே ….

என்றுன்னை இனி நாங்கள் பார்த்துடுவோம்..?
எப்படி உன்னோடு கூடிடுவோம் …?
தீ வந்து உன் உடலை தீண்டிடவோ ..?
தீ தின்ன உன்னை நாம் பார்த்திடவோ ..?

அழுகிறோம் எம் விழி துடைப்பாயா ..?
ஆறுதல் தந்திடா வாராயா ..?
வேருக்கு நீர் விட்ட பெருமகளே
வேணடுறோம் மீள வந்திடுவாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -15-04-2020

புலி முக்கியஸ்தர் மனைவி
புலி முக்கியஸ்தர் மனைவி
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      கறுப்பு நாள் …

      கறுப்பு நாள் …

      நிலம் பிடித்து குழியெடுத்து
      நீண்டு போரு செய்தாய் …
      நிலம் பிடித்த படம் பிடித்து
      நிகழ்ச்சிகளை செய்தாய் …

      அடம் பிடித்து அபகரித்து
      ஆக்கினைகள் தந்தாய் …
      அகதியாக்கி அவர் விரட்டி
      ஆடி நன்று மகிழ்ந்தாய் ….

      படை திரட்டி போரெடுத்து
      பாதகங்கள் செய்தாய் ….
      பாவியராம் தமிழ் அழித்து
      பாடி தானே நின்றாய் …..

      உயிர் குடித்த வெறியடங்கா
      உயிர் நின்ற உடல் தின்றாய் ..
      உலகம் எல்லாம் உனை இழிக்க
      உன் வதைகள் பகர்ந்தாய் ….

      புத்தன் அவன் தர்மத்தை
      புத்தியில காணோம் ….
      யுத்த முனை புத்தகத்தை
      யுத்தியிலே கண்டோம் ….

      இலங்கையது ஒரு நாடு
      என்று தானே சொன்னோம் ….
      இல்லை என்றால் இரு நாடு
      என்று தானே பகிர்ந்தோம் …

      கொன்று விட்டு வாசல் வந்து
      கொடு வாக்கு என்றால் …
      தந்திடவா போகிறார்கள்
      தமிழர் தானே சொல்லு …?

      ஒரு மதமே உன் மதமே
      உலகில் முதல் என்றால் …
      உலக மகா சாந்தியினை
      உலகில் எங்கே காண்பாய் …?

      இன்று உந்தன் இனம் மகிழும்
      இலங்கை ஒரு நாடாம் …?
      இனிமையான சுதந்திரத்து
      இன்ப பொங்கல் நாளாம் …..

      அடிமையாகி வாழும் தமிழ்
      அவர் கறுப்பு நாளாம் ….
      அகில தமிழ் உனை வெறுக்கும்
      அகம் இழந்த நாளாம் ……

      இனம் அழித்த உன்னுடனே
      இன்று தமிழ் வாழுமோ ..?
      இனி வரும் காலமதில்
      இணைந்து கூடி ஆளுமா …?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -02-02-2020

      கறுப்பு நாள்
      கறுப்பு நாள்
          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          என்னை மன்னித்து விடு …!

          என்னை மன்னித்து விடு …!

          காத்திருந்த காலமெல்லாம்


          காணமல் போகுதடி …


          நேற்றிருந்த நினைவெல்லலாம்


          நினைவிழந்து சாகுதடி ….

          காணொளியில்

          முழுமையாக காணலாம்

          https://www.youtube.com/watch?v=NvveBj5QzLo
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே

              உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே …!

              ஓடி வந்தெங்கள் உயிர் தின்ற கடலே
              ஒரு பதில் சொல்லாமல் உள் வந்த தென்ன ..?
              தேடி பொருள் தேட மடி தந்த கடலே
              தேய் கூலி இழக்கத்தான் சேதங்கள் தந்தாயோ …?

              பேரலை உருட்டி எம் பெரு வீடு உடைத்தாயே
              ஆழ்ந்து உறங்கியார் அவர் வந்து தின்றாயே ….
              உயிர் தின்ற கடலே உன் கோபம் என்ன …?
              உடைந்து உடல் வாழ துயர் தந்ததென்ன …?

              ஆடி பாடிய அழகான ஊருக்குள்
              ஆழி பேரலையே அவை வந்ததென்ன …?
              நேற்றெந்தன் பிள்ளைக்கு நான் செய்த பண்டங்கள்
              இன்று படைக்கத்தான் எமனாக வந்தாயோ …?

              கத்தி வாய் குழற கை தட்டும் கடலே
              கடும் கோபம் உன் மேலே என் செய்வான் நானோ ..?
              உன்னை தாய் என்றார் உதடுகள் சாகட்டும்
              உன்னரு வாழ நான் வர மாட்டேனே ….!

              வன்னி மைந்தன் – ( ஜெகன் )
              ஆக்கம் -24/12/2019
              23-12-2018 இந்தோனேசிய சுனாமி பேரழிவை 281 பேர் பலி தாக்கத்தை எண்ணி
              கலங்கிய போது

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              பகை வெல்ல வழி என்ன …?

              பகை வெல்ல வழி என்ன …?

              வென்றவர் உலகில் நூறு
              வெளி வந்தவர் உலகில் நூறு
              உலகாண்டவர் கோடியில் நூறு
              உதை வாங்கியர் கோடியில் நூறு ….

              சிந்தை செய்தார் நூறு -அட
              சிகரம் தொட்டார் நூறு ….
              விந்தை செய்தார் நூறு
              வீழ்ந்து மடிந்தார் நூறு ….

              எந்தையார் நாடு ஏனோ ..?
              எமன் காலில் வீழ்ந்த கேடு ..?
              முந்தையர் வீழ்ந்த செயலும் -உன்
              மூளையில் ஏறல் பாரு ….

              முப்படை செய்தும் என்ன
              முடிவில் ஏதும் இல்ல ….
              இப்பகை கொன்று வெல்ல
              இன்று வழி என்ன சொல்ல ..?

              • வன்னி மைந்தன்
                ஆக்கம் -06-12-2019
              வெல்ல வழி
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  அரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்! VIDEO

                  அரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்! VIDEO

                  அரசியல் பாம்பு -அரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்! VIDEO சாம் பிரதீபன் கவிதைகள் ஓடிவாங்க பாருங்க பகிருங்கள்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  எங்கள் தலைவன் பிறந்த நாள் ..!

                  எங்கள் தலைவன் பிறந்த நாள் ..!

                  எழுவான் திசையில் வருவான் வருவான்
                  எழுந்தே ஆடும் ஈழம் தருவான் …
                  ஓயா வலியை ஒரு நாள் துடைப்பான்
                  ஓடும் பகைவன் கால்தடம் அழிப்பான் ….

                  வீர மண்ணே தேடுதண்ணே
                  வீரம் கொண்டிட வாடுதண்ணை ..
                  சோழ காற்று புயலாய் வருவாய்
                  சோகம் துடைக்க நீயும் எழுவாய் ….

                  வீர புலியே விண்வெளி விழியே
                  விடுதலை ஒன்றே தீர்வுக்கு வழியே …
                  ஓயாத அலையாய் ஓடி வருவாய்
                  ஓயா அவலம் பகைக்கு தருவாய் ….

                  நீ எங்கள் சாமி அண்ணை
                  நித்தம் வணங்கிறோம் நாங்கள் உன்னை …
                  எவன் வருவான் உன்னை போல ..?
                  எங்கள் தமிழன் மனங்கள் வெல்ல …?

                  • வன்னி மைந்தன்
                    ஆக்கம் -26-11-2019
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  இனம் அழித்தான் – இனம் அழியும் …!

                  இனம் அழித்தான் – இனம் அழியும் …!

                  ஆழ வந்தான் கோட்டா
                  அடிமையான தோட்டா ..
                  கொன்றவனும் ஆழ்வதோ -ஒரு
                  கொடியின் கீழ் வாழ்வதோ? –

                  வான் ஆண்ட தமிழினம்
                  வால் ஆட்டி போவதோ..?
                  ஏகே தாங்கிய கைகளோ
                  ஏந்தி பூ கொடுப்பதோ…?

                  வரலாறு மாறாது
                  வழி தடம் அழியாது…
                  ஒரு நாள் எழுவோமே
                  ஓங்கி அடி தருவோமே . ..

                  வரலாற்று பிழை எல்லாம்
                  வலியோடு துடைப்போமே ….
                  நாளை. வருவாரே
                  நம்பும் ஈழம் தருவாரே….

                  அழுதார் கண் எல்லாம்
                  அன்று ஆடி மகிழும் -…
                  ஆடி திரிந்தார் உடல் எல்லாம்
                  அரை துண்டாய் கிழியும் …!

                  • வன்னி மைந்தன் ( ஜெகன் )
                    ஆக்கம் -18-1-2019

                  கோட்டபாய பதவி ஏற்ற -ஆட்சி எண்ணிய பொழுது ..!

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  இரண்டாய் சிதறும் இலங்கை …!

                  இரண்டாய்  சிதறும்  இலங்கை …!

                  கால் நடந்த சாலை  எல்லாம்
                  கசங்கிய உடல்கள் …
                  காதோரம் கேட்கிறது
                  கதறல் குரல்கள் …..

                  கொன்றவனும் வந்து விட்டான்
                  கொடும் ஆட்சியிலே ஏறிவிட்டான் ..
                  நிம்மதியை இழந்து விட்டோம்
                  நிர்கதியாகி விட்டோம் ….

                  ஆண்டுகளாய்  ஆண்டு நின்றார்
                  ஆறாத வலிகள் தந்தார் …
                  என் தவறு செய்து நின்றோம் ..?
                  ஏனிந்த வலிகள் தந்தார் …?

                  உன் போல வாழ்வொன்றை
                  உரிமையோடு தந்து விட்டால் …
                  ஒன்று பட்டு வாழ்ந்திடவே
                  ஒருபோதும் மறுத்ததில்லை …

                  சிங்கள நாடென்றால்
                  சிதறுமடா  நாடு இரண்டு …
                  வருங்காலம் பகிருமடா – சிங்களம்
                  வலியோடு ஓடுமடா ….!

                  – வன்னி மைந்தன்  ( ஜெகன் )
                  ஆக்கம்  -18-1-2019

                  கோட்டபாய பதவி ஏற்ற -ஆட்சி எண்ணிய பொழுது ..!

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  தேடி வரும் துப்பாக்கி …!

                  தேடி வரும் துப்பாக்கி …!

                  பங்கு சந்தை போல
                  பாயுது ந்தன் ஆசை ….
                  தேடும் திசை தெரியா
                  போடு தென்ன ஓசை …?

                  ஆழ கடல் போல
                  ஆடுதென்ன மனமோ ..?
                  தேவை என்ன தினமோ ..?
                  தேறி இன்று எழுமோ …?

                  வாடும் பயிர் போல
                  வாடி ஏன் நின்றாய் …?
                  ஓடி கால் நடப்பாய்
                  ஒளி வானாய் மிதப்பாய் ….

                  சோர்ந்த மனம் எறிவாய்
                  சோதனை சுகம் சுமப்பாய் ….
                  ஆடும் அலை மேலே
                  ஆடி வரும் படகாய் …

                  ஓடி கரை சேர்வாய்
                  ஓயாது உழைப்பாய் …
                  தேறும் உந்தன் இலக்கு -உனை
                  தேடும் அந்த துவக்கு ….

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  தமிழ் நாடே அழிக …!

                  தமிழ் நாடே அழிக …!

                  ஆழ குழி நீ இருந்து
                  அழுத குரல் கேட்கலையோ ..?
                  நீதி சொல்லும் மாந்தர் எல்லாம்
                  நினைவே உன்னே மீட்கலையே ….

                  நாலு நாள் உள்ளுக்குள்ளே – சுஜித்
                  நாவறண்டு நீ கிடந்தாய் …
                  நாம் தமிழர் ஆட்சியதாம்
                  நம்பி வந்து மீட்கலையே …..

                  தேய் பிறையாய் நாள் கழிய
                  தேகமதில் உயிர் பிரிய …..
                  பாலகனே நீ மறைந்தாய்
                  பாதகரே கொன்றனரே ….

                  ஐந்தடியில் நீ இருக்க
                  ஐ விரல்கள் மீட்கலையே ….
                  எண்பதடி நீ கழிய
                  ஏறிவந்தார் பிடிக்கலையே …

                  ஒப்புக்கு அழுது நின்றார்
                  ஓடி செய்தி சொல்லி வந்தார் ..
                  குழியினுள்ளே நீ தவிக்க
                  குரல் உயர்த்தி பேசி நின்றார் ….

                  பாலகனே உன் வலியை
                  பாதகர் புரியலையே ….
                  நோகும் உந்தன் உடல் மீட்க
                  நொந்து விழி சிவக்கலையே ….

                  என்ன இது தமிழ் நாடு
                  ஏனிந்த சூடு காடு ….?
                  எரிந்து இன்று சாம்பலாக …
                  ஏ மனமே சாபமிடு ….!

                  • வன்னி மைந்தன் ( ஜெகன் )
                    ஆக்கம் -29-10-2019
                    25-10-219 தமிழகம் ,திருச்சியில் ,ஆழ்துளை குழியில் வீழ்ந்து சாவடைந்த பாலகன் சுஜித் மரண தவிப்பின் ,எதிரொலியை ,,அவன் பாதத்தில் சமர்ப்பணம் ஆக்குகிறேன்
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  சீமான் ….!

                  சீமான் ….!

                  தலைவன் முன்னே நின்று
                  தலைமை தாங்கிறான் …
                  தமிழன் என்று கூவியே
                  தரணி எழுப்பிறான் ….

                  வாடி வீழ்ந்த மக்கள் கண்டு
                  வாடி துடிக்கிறான் ….
                  வள்ளல் ஆட்சி தந்திட
                  வாக்கு கேட்க்கிறான் …..

                  உலகம் எல்லாம் உன்னை கண்டு
                  உறக்கம் தொலைக்குது ….
                  உறங்கியவர் கட்சி எல்லாம்
                  உடு புடவை இழக்குது ….

                  பிணங்கள் கண்டு எழுந்தவனே
                  பிரளயத்தை தந்தவனே …
                  புலிகள் ஆண்ட ஆட்சி போல
                  புலிகள் ஆட்சி தந்திடுவாய்

                  நாம் தமிழர் ஆளும் காலம்
                  நம்பி நீயும் தந்திடுவாய் …
                  நாங்கள் வாழும் புலம் பெயரை
                  நம்பி எறிய வைத்திடுவாய் …

                  உள்ளுக்குள்ளே வலிகள் தாங்கி
                  உலவுகிறோம் இங்கே …
                  உணர்வுடனே நடக்கும் காலம்
                  உரிமையோடு தந்திடுவாய் …

                  எழுந்து வந்த ஈழம் இன்று
                  எதிரிகளின் காலிலே ..
                  என்று நாங்கள் எழுந்திடுவோம்
                  எம்மினத்தின் தலைவனே ….?

                  சீமான்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  சிரிப்பவர் சிரிக்கலாம் ..!

                  சிரிப்பவர் சிரிக்கலாம் ..!

                  தங்கு தடையின்றி
                  தடை வந்து வீழ்ந்தாலும் ..
                  சொந்த வீடின்றி
                  செகிசின்றி அலைந்தாலும் …

                  எடுத்த முயற்சியை
                  எடுத்தெறிந்து போகேன் …
                  அடுத்தவர் கண்ணில்
                  அகப்பட்டும் அழியேன் … (சிரிப்பவர்)

                  இழிந்தின்று உரைக்கின்ற
                  இழிவான நாக்கெல்லாம் …
                  மகிழ்ந்தன்று உரைக்கின்ற
                  மகிழ்வான காலம் வரும் …

                  எடுத்தின்று பேசும்
                  எள்ளி நகையாடும் ….
                  முடிந்தவரை இன்று
                  முக்கி நன்றே பேசும் ….

                  அடுத்தவர் பேச்சுக்கு
                  ஆப்படிக்கும் காலம்
                  தாப்பாடு போட்டு
                  தாழ்வாரம் தட்டும் …..

                  ஒப்புக்கு அழுதவரே
                  ஓடி அலைகின்ற …
                  காலமது தேடி வரும்
                  கனத்து வாய் சிரிக்கும் ….

                  ஏகாந்த பெருவெளியும்
                  எழுந்து நடக்கும் ….
                  ஒடிந்தாடும் இலைகளும்
                  ஓடி வணங்கும் …

                  ஆகுமா இதுவென்று
                  அலட்டி திரிந்தவர்
                  ஆகும் இதுவென்று
                  அன்று உரைக்கும் ….

                  முடிவு தெரிந்து முன்னேறு
                  முடியும் உன்னால் முன்னேறு …
                  பாரை உந்தன் வசமாக்கு
                  பங்கு சந்தை முதலாக்கு…!

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  எல்லாம் நீயே

                  எல்லாம் நீயே

                  உன்னழகை எனக்கு மட்டும்
                  உயிரே நீ தரவேண்டும்
                  என் விரலை தந்து விட்டேன்
                  எடுத்து நீ வருட வேண்டும்

                  செந்தமிழும் உன்னை வந்து
                  செவ்வந்தியே கொஞ்ச வேண்டும்
                  செவ்விதழ்கள் இரண்டை மட்டும்
                  சேர்த்தெனக்கு தரவேண்டும்

                  ஆள் இல்லா உலகத்திலே
                  அடியே குடி புகுவோமா .?
                  அங்கு மட்டும் இல்லறத்தை
                  அப்படியே ருசிப்போமோ …?

                  நீயும் நானும் தனிமையில
                  நிமிடங்களை தொலைக்க வேண்டும்
                  கற்பனையில் கண்டவற்றை
                  காட்சிகளாய் தீட்ட வேண்டும்

                  உன் மடியை எனக்கு மட்டும்
                  உறங்க நீ தரவேண்டும்
                  உலகத்தில் நீ மட்டும்
                  உயிரோடு இருக்க வேண்டும் …..!

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் -26-10-2020

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    இப்போ புரிந்தாயா …?

                    இப்போ புரிந்தாயா …?

                    கல்லாகி மனதுடைத்து
                    கதை பேசி போனவளே
                    சொல்லால சுவர் கட்டி
                    சொல்லமால் போனவளே ….

                    அறுவடைக்கு வர முன்னே
                    அருவாளை கை பிடித்து
                    வேரோடு அறுத்தென்னை
                    வேலியில் எறிந்தவளே …

                    அழகு நிலை என்று
                    அன்றெண்ணி நடந்தவளே
                    அது கலைந்து இன்றொழுக
                    அழு தென்ன கண்டவளே …?

                    தொப்பை முன் வைத்து
                    தொங்கி தசை விழுபவளே
                    வீங்கிய உடல் தாங்கி
                    வீங்கி போறவளே

                    நான் சொன்ன காதலன்று
                    நக்கலாய் போனதுவோ ..?
                    இப்போ தப்பி விட்டேன்
                    இதயத்தில் மகிழ்ந்து விட்டேன்

                    உன்னை தழுவிடவே
                    உடலால முடியாது
                    அரை ஏக்கர் காணியில
                    அடி வீடு போதாது

                    உன் நக்கல் தப்பாச்சு
                    உயிர் பிரியும் முன் வம்பாச்சு
                    இப்படித்தான் வாழ்விருக்கு
                    இன்றுனக்கு புரிந்தாச்சு ..

                    கடவுள் பதி வைத்த
                    கால கணக்கினிலே
                    வாலிபம் கரையுமடி
                    வாழ்வு சொல்லுதடி

                    ஏவுகணை போல
                    எடுத்தெறிந்து சொல்லடிகள்
                    தாக்கி உனை யழிக்க
                    தாரகையே என் செய்வாய் …?

                    வெந்த விழி நீரில்
                    வெள்ளம் தரை கழுவ
                    களைத்து போனவளே
                    கால சூழல் இது தான் ….!

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் -23-10-2020

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    ஒரு நாள் என்னை தேடுவாய் …!

                    ஒரு நாள் என்னை தேடுவாய் …!

                    சாலையிலே போகையில – உன்
                    சேலை நுனி தேடுறேன் …
                    வாட விட்டு போனவளே
                    வாழ்க்கை ஒன்றை தேடுறேன் …

                    ஆடி காற்றாய் ஓடி வந்தாய்
                    ஆசை ஊற்றி ஆடி மறைந்தாய் …
                    தோகை மயிலே – உன்
                    தேவை என்ன சொல்லு …?

                    வாங்கி வருவேனே
                    வாழ்க்கை தருவேனே ..
                    உள்ளத்திலே ஒன்றை எண்ணி
                    உறவை இழிப்பதென்ன …?

                    வீதி ஆடவரை
                    விழியில் வைத்தவளே …
                    வாழ்வு தேறாது
                    வலிகள் ஓயாது ….

                    அழகு தேய்ந்து
                    அடி உடலும் நலிந்து …
                    அழுது களைப்பாய்
                    அவதி உறுவாய் ……

                    தேயும் கனவே – என்
                    தேவை அறிவாய் …
                    வாடி சாயையிலே
                    வலிகள் புரிவாய் …!

                    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                    ஆக்கம் -11/09/2019

                    ஒரு நாள் என்னை தேடுவாய்
                    ஒரு நாள் என்னை தேடுவாய்
                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    ஏன் இறைவா பறித்தாய் …?

                    ஏன் இறைவா பறித்தாய் …?

                    முரசுமோட்டை மண்ணே
                    முன் விழுந்த கண்ணே ..
                    விழியில் நீரும் வடிய – உளம்
                    விலகிறாயே ஓடிய..

                    அழுது மனம் கதற
                    ஆறடி புதைகிறாயே தனிய…
                    இது தான் விதியோ ..
                    இறைவன் சதியோ …?

                    பிறந்தவர் எல்லாம்
                    இறப்பது விதியோ …?
                    இறைவா உன் படைப்பில்
                    இது என்ன சரியோ ..?

                    எழுந்து நடந்த பேரழகை
                    ஏனிறைவா பூட்டி வைத்தாய் ..?
                    அழுது புலம்பி நாம் கதற
                    ஆண்டவனே ஏனோ வைத்தாய் ..?

                    உடனிருந்து சிரித்தாய்
                    உணவு தந்து மகிழ்ந்தாய் …
                    பேரழகே இன்றென்ன
                    பேச்சின்றி வீழ்ந்தாய் ..?

                    எழுந்திட மாட்டாயா ..
                    ஏன் அழுதோம் பார்க்காயா …
                    நாம் அழுதால் இனைந்தழுவாய்
                    நாம் அழுதோம் ஏன் உறைந்தாய் ..?

                    உயிரில் வலி தந்து
                    உறவே சென்றாயோ ..?
                    உன் நினைவை உளம் புதைத்து
                    உறவே மறைந்தாயே ..!

                    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                    ஆக்கம் -25/08/2019
                    முரசுமோட்டை , சோதரி சிவா அவர்களது மரண துயர் அறிந்த பொழுது …அவர் பாதம் இதனை சமர்ப்பிக்கிறேன் ..!

                    ஏன் இறைவா பறித்தாய்
                    ஏன் இறைவா பறித்தாய்
                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        கண்ணீர் அஞ்சலி ….!

                        கண்ணீர் அஞ்சலி ….!

                        ஓடி வரும் காற்றடித்து
                        ஒடிந்து விழும் இலைபோல
                        மனமுடைந்து போனதையா – விழி
                        மாரி மழை ஆனதையா ….

                        கால் ஊன்றி நடைபயின்ற
                        காலமதில் அருகிருந்து …
                        நேசம் தந்து நின்றவரே
                        நெஞ்சமது வெம்புதையா ….

                        கட்டி முத்தம் தந்து அன்று
                        கதைகள் பல சொல்லி நன்று
                        வாங்கி தந்த மிட்டாய்கள்
                        வாயிலின்றும் சுவைக்குதையா ….

                        கைபேசி மணியடிக்க
                        கலகலத்து பேசி நின்றாய்
                        இன்றும் உந்தன் சிரிப்பொலிகள்
                        இரு செவியில் ஒலிக்குதையா ….

                        பேரன்பு கொண்டவரே
                        பெரும் துயரை தந்து இன்று
                        எம்மை விட்டு போனதென்ன
                        ஏங்கவைத்து சென்றதென்ன …?

                        வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                        ஆக்கம் -16/08/2019( 00447536707793)
                        18-08-2019 அன்று தாத்தாவின் மரண துயரில் …..அவர் பாதம் ..என் கண்ணீர் சமர்ப்பணம்

                        கண்ணீர் அஞ்சலி
                        கண்ணீர் அஞ்சலி

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            என்னோடு வாழ்ந்திட வா ….!

                            என்னோடு வாழ்ந்திட வா ….!

                            அலைபோல மனதாட
                            அதில் வந்து நீ கூட …
                            உன்னை மனம் தேடுதே
                            உறவாட வாடுதே ….

                            மஞ்சள் வெய்யில் ஆனவளே
                            மாரி குளிர் போன்றவளே ….
                            உன் பிரிவு வாட்டுதே
                            உருகி விழி கொட்டுதே …..

                            நீ சொன்ன வார்த்தைகளோ
                            நினைவில் ஓடி வர …
                            தன்னம் தனி தவிக்கிறேனே
                            தாமைரையா ஆடுறனே ….

                            உன்னை காணும் நாள்
                            ஊறி வருமோ ..?
                            ஊன்றி எழும் காலம்
                            ஊர் கூடி வருமோ …?

                            தூது வந்த காற்று
                            சேதி சொல்லுதே – நீ
                            தூங்கவில்லை என்று
                            தூது சொல்லுதே ….

                            கவலை என்ன மானே
                            கண்கள் துடைப்பாய் ….
                            கட்டி தழுவும் நேரம்
                            கண்ணால் சிரிப்பாய் ….

                            தோளில் மாலை சூடி
                            தேரில் வருவோம் ….
                            தென்றலுடன் கூடி
                            தேறி எழுவோம் ….

                            ஒன்று படு மானே
                            வென்று நிமிர் தேனே …
                            கன்றுடனே நாமே
                            காலமதை ஆள்வோம் ….!

                            வன்னி மைந்தன் – ( ஜெகன் )
                            ஆக்கம் -16/08/2019

                            என்னோடு வாழ்ந்திட வா
                            என்னோடு வாழ்ந்திட வா