Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை
விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை
தமிழ் தெலுங்கு என படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை விமானத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ
ஈஷா ரெப்பா
தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி
நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது. கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி
புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை
டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை
தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை
எல்லி அவுரம்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார்.
சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பலரும் எதிர்ப்பார்த்திருக்கும் இப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை இணைந்திருக்கும் தகவலை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரை தனுஷ் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை எல்லி அவுரம் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருள்ளார். இதன்மூலம் இப்படத்தில் இவர் நடித்து வருவது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்
வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்
ரஜினியின் 169-வது படத்திற்கு 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் இருக்கும் பெயர் குறித்து இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
வைரலாகும் ரஜினி 169-வது படத்தின் பெயர்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின்
டாக்டர் படங்களை டைரக்டு செய்துள்ளார். விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். ரஜினி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடமும்,
நகைச்சுவை வேடத்துக்கு வடிவேலுவிடமும் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராயும், சந்திரமுகி படத்தில் வடிவேலுவும் நடித்து இருந்தனர்.
ரஜினியின் 169-வது படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில்
பெயர் வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருக்கிறது
என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர்
இதனை உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
பல பெண்களுடன் உறவு -சிக்கிய நடிகர் மன்னிப்பு கேட்டார்
பல பெண்களுடன் உறவு -சிக்கிய நடிகர் மன்னிப்பு கேட்டார்
மலையாள நடிகர் விநாயகனின் சமீபத்திய சர்ச்சைக்குறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர் விநாயகன்
விநாயகன்
மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அப்போது அவர் பேசியது, கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து
கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று
என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன் என்றார்.
விநாயகனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை பார்வதி உள்ளிட்ட நடிகைகளும், பெண்கள் அமைப்பினரும் கண்டித்தனர். எதிர்ப்பு வலுத்ததால்
விநாயகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து முகநூலில் வெளியிட்ட பதிவில், ”நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துகளை தெரிவித்து விட்டேன்.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.
மீண்டும் நடிக்க வரும் நடிகை லைலா
மீண்டும் நடிக்க வரும் நடிகை லைலா
கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தில் 16 ஆண்டு கால இடைவெளிக்கு பின் லைலா மீண்டும் நடித்து வருகிறார்.
16 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் களம் இறங்கிய லைலா
லைலா
தமிழ் திரையுலகில் நடிகை லைலா கள்ளழகர் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். பின்னர், கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும் பரமசிவன், சூர்யா உடன்
நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே, விக்ரம் உடன் தில் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றார்.
கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது சிரிப்புக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்த காலமும் உண்டு. இதன்பின்பு
ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விட்டார். இதனால், நடிப்பு பக்கம் அவர் தலை காட்டவில்லை.
மீண்டும் நடிக்க வரும் நடிகை லைலா
இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் படத்தில் நடிகை லைலா நடிக்கிறார் என தகவல்
வெளிவந்துள்ளது. அவர் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தும் முடித்து விட்டார்.
லைலா நடிப்பதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரன் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டன. வேறு சில படவேலைகளில் இருந்த
சிம்ரன், இந்த படத்திற்கு தேதி கொடுக்க இயலவில்லை. அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு லைலா சரியாக பொருந்துவார் என படதயாரிப்பாளர்கள்
உணர்ந்தனர் என்று படப்பிடிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், 16
ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வரும் நடிகை லைலாவை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தொகுப்பாளரை அறைந்த நடிகர்: ஆஸ்கார் விருது விழாவில் பரபரப்பு
தொகுப்பாளரை அறைந்த நடிகர்: ஆஸ்கார் விருது விழாவில் பரபரப்பு
2022-ம் ஆண்டு ஆஸ்கார் விருது விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை விழாவில்
பங்கேற்று விருது வென்ற நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.
அதுபோலவே ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர், ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில்ஸ்மித் வென்றுள்ளார். அப்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ்
ராக், வில் ஸ்மித்தின் மனைவியின் சிகையலங்காரம் பற்றி அனைவர் முன்பும் கேலி செய்துக்கொண்டிருந்தார்.
தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்.
விருதை வழங்கும்போது, பிங்கெட் ஸ்மித்தின் மொட்டையடிக்கப்பட்ட தலையைப் ராக் கூறி கிண்டல் செய்தார். சமீப காலங்களில், முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியாவுடன் பிங்கெட் போராடிக் கொண்டிருப்பதாக கூறினார்.
ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைக்கு ஏறி வந்தார். அப்போது, தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின்
கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு கீழே இறங்கிச் சென்றார்.
இந்த காட்சியை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பீஸ்ட் – கே.ஜி.எப் மோதல் – யாஷ் விளக்கம்
.பீஸ்ட் – கே.ஜி.எப் மோதல் – யாஷ் விளக்கம்
கே.ஜி.எப்-2′ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுக்கு என் படம் பிடிக்கும் என்று நடிகர் யாஷ் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
பீஸ்ட் – கே.ஜி.எப் மோதல் – யாஷ் விளக்கம்
யாஷ்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘கே.ஜி.எப்-2’ திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. டிரைலர் வெளியீட்டிற்காக
பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடித்தி டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். அந்த டிரைலர் வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு படக்குழு பதில் அளிக்கும் நிகழ்வு நடந்தது.
இதில் பத்திரிக்கையாளர் ஒருவர் பீஸ்ட் படத்தையும் கே.ஜி.எப் படத்தையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு நடிகர் யாஷ் அவர்கள் அளித்த பதில், இது எலக்ஷன் கிடையாது, கே.ஜி.எப் vs பீஸ்ட் என்று முடிவு செய்ய. எலக்ஷனில் ஒரு வாக்கு
தான் இருக்கு அது யார்கிட்ட செல்ல வேண்டும் என்று சண்டை போட வேண்டும். இது சினிமா ரசிகர்கள் பீஸ்ட் படத்தையும் பார்க்கலாம் என்னுடைய படத்தையும்
பார்க்கலாம். பீஸ்ட் படம் வெளியாவது அவர் ரசிகர்களுக்கும் பண்டிகை தான். நான் நிறைய பார்க்கிறேன் பீஸ்ட் vs கே.ஜி.எப் என்று பேசுகிறார்கள், அது சரியானது இல்லை.
நான் நம்புகிறேன் இந்த உலகம் சினிமாவுக்காக இயங்குகிறது. அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் என் படம் பிடிக்கும்.
எல்லோரும் என் படத்தை பார்க்கட்டும் நானும் பீஸ்ட் படத்தை பார்க்கிறேன் என்று பதிலளித்தார்.
புதிய தோற்றத்தில் இந்துஜா.. வைரலாகும் புகைப்படங்கள்
புதிய தோற்றத்தில் இந்துஜா.. வைரலாகும் புகைப்படங்கள்
தீவிர உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை இந்துஜா கடைப்பிடித்து மெலிந்த தேகம் கொண்ட நடிகையாக மாறியிருக்கிறார்.
புதிய தோற்றத்தில் இந்துஜா.. வைரலாகும் புகைப்படங்கள்
இந்துஜா
‘மேயாத மான்’ படத்தில் அடாவடி தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தவர் இந்துஜா. ‘மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் வாட்ட சாட்டமான
உடல்வாகு கொண்டவர். அவரது உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், எடையை குறைத்தால் இன்னும் அழகாக தெரியலாம் என்றும் அவரது நண்பர்கள் ஆலோசனை
வழங்கினர். இதையடுத்து, தீவிர உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை இந்துஜா கடைப்பிடிக்க தொடங்கினார். இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.
தற்போது மெலிந்த தேகம் கொண்ட நடிகையாக இந்துஜா மாறியிருக்கிறார். உடல் எடை குறைந்த தனது புகைப்படங்களையும் சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்துஜா
பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். ‘என்ன அழகு… எத்தனை அழகு…’ என்றும், ‘அடுத்த கீர்த்தி சுரேஷ்’ என்றும் கருத்துகளை
பதிவிடுகிறார்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் குளிர்ந்து போன இந்துஜா, முகமலர்ச்சியுடன் காணப்படுகிறார்
மன வலியோடு பிரிந்தோம் – சோனியா அகர்வால்
மன வலியோடு பிரிந்தோம் – சோனியா அகர்வால்
கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனியா அகர்வால் மன வலியோடு பிரிந்தோம் என்று கூறியிருக்கிறார்.
சோனியா அகர்வால்
செல்வராகவன் – சோனியா அகர்வால்
தமிழில் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தொடர்ந்து கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ
காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, வானம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சோனியா அகர்வாலுக்கும், இயக்குனர் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்து 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2010-ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இத்தனை வருடமும் விவாகரத்து குறித்து கருத்து சொல்லாமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது முதல் தடவையாக செல்வராகவனை பிரிந்த காரணம் பற்றி பேசி இருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றியபோது அவரது கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. என்னையும் அவருக்கு
பிடித்தது. இதனால் காதலிக்க ஆரம்பித்தோம். பின்னர் திருமணமும் செய்து கொண்டோம்.
அதன்பிறகு சில விஷயங்களில் உடன்படாத மனநிலை உள்ளிட்ட சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்தோம். திருமணம் செய்து கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருந்தோம்.
ஆனால் விவாகரத்து செய்யும்போது மன வலியோடு பிரிந்தோம்’’ என்றார்.
தமிழே தாயே…. முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்
தமிழே தாயே…. முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்
பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.ஏ.ஆர்.ரகுமான்பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும்
ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில்
வெளியிட்டு இருக்கிறார்கள்.
‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில்
எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால்
பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.
‘மூப்பில்லா தமிழே தாயே’ இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை
முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ்
மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.
பிகினி உடையில் நடனமாடும் சன்னி லியோன்
பிகினி உடையில் நடனமாடும் சன்னி லியோன்
நடிகை சன்னி லியோன் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிகினி உடையில் நடனமாடும் சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ
சன்னி லியோன்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம்
ஆடினார். தற்போது தமிழ், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ச ன்னி லியோன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக
வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் சன்னி லியோன் பிகினி உடையில் கவர்ச்சியாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும்
வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் லைக்குகளை குவிந்து வருகின்றனர்.
விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்
விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்
முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஆபாச வார்த்தைகளால் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்
விஜய் – அஜித்
விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வதும், பிறகு அமைதியாகி விடுவதும் வழக்கம். சில மாதங்களாக ரசிகர்களின் மோதல்கள்
இல்லாமல் இருந்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதலாக மாறி வருகிறது.
விஜய் – அஜித்
விஜய் ரசிகர்கள் #Aids_Patient_Ajith என்ற ஹேஷ்டேக்கில் அஜித் புகைப்படங்களை கேவலமாக சித்தரித்தும், அஜித் ரசிகர்கள் #RIPJosephVijay என்ற ஹேஷ்டேக்கில்
விஜய்யின் புகைப்படங்களை சித்தரித்தும், வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும் இருவரின் கண்ணீர் அஞ்சலி புகைப்படங்களை உருவாக்கி பதிவு செய்து வருகிறார்கள்.
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், உடற்பயிற்சி செய்யும் வீடியோவிற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
எமி ஜாக்சன்
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்
ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருந்தார். இந்நிலையில் அவர் உடற்பயிற்சி
செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் ரத்த கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
விஜய்
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு,
ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய், பீஸ்ட்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. இந்நிலையில் சட்டையில் ரத்த
கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படமும், கோடாரியுடன் இருக்கும் விஜய் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் பீஸ்ட் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
.மெக்சிகோவில் வலம் வரும் திரிஷா
.மெக்சிகோவில் வலம் வரும் திரிஷா
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
மெக்சிகோவில் ஜாலியாக வலம் வரும் திரிஷா
திரிஷா
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார்.
தற்போது வரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. தனது 20 வருட திரைப்பயணத்தை சமீபத்தில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா.
தற்போது திரிஷா மெக்சிகோ சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்.
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
மீரா மிதுன்
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீரா மிதுன்
மீரா மிதுன்
மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
.பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.
பாலிவுட்டில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து
இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.
ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு
திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய அடுத்த படம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கவிருக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இது. இந்த படத்திற்கு ’ ஓ சாதிசால்’ என்று
பெயரிடப்பட்டுள்ளது, இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு, இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்
கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
கதாநாயகனான புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமாளி புகழ்
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி
இருக்கிறார். சந்தானத்துடன் சபாபதி, அருண் விஜய்யின் யானை, உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாகவும், பின்பு தனியார் தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பை
சரியாக பயன்படுத்தி கடின உழைப்பினால் முன்னேறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமாவில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் தோன்றி அனைவரையும் கவர்ந்து வந்த புகழ், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். மிஸ்டர் சூ கீப்பர் (Mr Zoo
Keeper) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை புகழ் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்
கவர்ச்சி உடையில் தமன்னா
கவர்ச்சி உடையில் தமன்னா
தங்கம் போன்று மின்னும் நிறம் கொண்ட அழகிகளில் ஒருவரான நடிகை தமன்னா வித்யாசமான கவர்ச்சி உடையில் வலம் வந்தார்.
வித்யாசமான கவர்ச்சிகாட்டும் உடையில் தமன்னா
தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 5 படங்களிலும், இந்தியில் மூன்று படங்களிலும்
நடித்து கொண்டிருக்கிறார். சிம்ரனுக்கு அடுத்தபடியாக ‘இடுப்பழகி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
ஹோலி பண்டிகையையொட்டி தமன்னாவுக்கு புதிய உடை அணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அழுக்கு படிந்த, கிழிந்த மற்றும் பாதங்களை முழுவதுமாக மூடக்கூடிய
வகையில் வித்தியாசமான ஒரு பேண்ட் மற்றும் கவர்ச்சிகரமான உடை அணிந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
‘ஹோலி பண்டிகையை கொண்டாட வேறு நல்ல உடை இல்லையா?’, ‘இப்படியா கவர்ச்சியாக உடை அணிந்து வருவதா?’ என்று வசை பாடுகிறார்கள். ‘கண்ணாடி
போன்ற இந்த உடை உங்களுக்கு கச்சிதமாக இருக்கிறது’, என்று தமன்னாவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து பதிவிடுகிறார்கள்
கார் விபத்தில் நடிகை மரணம்
கார் விபத்தில் நடிகை மரணம்
.தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் காயத்ரி. படங்களில் நடிப்பதை தாண்டி வெப் சீரியஸ், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எல்லோரும் கொண்டாட காயத்ரியும் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகை
கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது படு பயங்கர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
கார் மருத்துவமனை முன் வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோத அந்த பெண்ணும், நடிகை காயத்ரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரை
ஓட்டிவந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் காயத்ரியின் நண்பர் கார் வேகமாக ஓட்டியதே விபத்தின் காரணம்
என கூறப்படுகிறது. 26 வயதான நடிகையின் இந்த மரணம் தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது






