Posted in சினிமா

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியை வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘டாக்டர்’ படம் வெளியானது

. இதையடுத்து அவரது நடிப்பில் ‘டான்’, ‘அயலான்’ படங்கள் வெளிவர தயாராகி வருகிறது.

இந்நிலையில் , சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படமான SK20 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், SK20 படத்தை

பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்வுடன்

சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இப்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Posted in சினிமா

    ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா

    ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள்.

    ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன்
    விக்னேஷ் சிவன் – நயன்தாரா


    இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின்

    வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா

    மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.

    நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.

    அந்த வகையில் தற்போது புத்தாண்டை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

      Posted in சினிமா

      சிம்புவுடன் இணையும் நடிகை

      சிம்புவுடன் இணையும் நடிகை

      சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய புதிய அப்டேட்டை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

      இறுதி கட்டத்தில் சிம்புவுடன் இணையும் நடிகை
      சிம்பு – சிட்தி இட்னானி


      மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல

      வெற்றி படங்களை இயக்கிய கவுதம் மேனன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

      இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்

      இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் மற்றொரு கதாநாயகியாக சிட்தி இட்னானி இணைந்திருக்கிறார்.

      பாவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிட்தி இட்னானியை படக்குழுவினர் இன்று வரவேற்பு போஸ்டர்

      ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிம்பு, சிட்தி இட்னானி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜனவரி 3 ஆம் தேதி முதல் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

        Posted in சினிமா

        முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்

        முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்


        முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

        முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்
        விஜய்


        விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

        இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

        அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை

        கவர்ந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்

        . செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

          Posted in சினிமா

          கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை

          கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை

          தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

          கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகையின் புகைப்படம்
          கணவருடன் ஸ்ரேயா


          தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி,

          விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி,

          தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய

          தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.

          அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும்

          வீடியோக்களை ஸ்ரேயா வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி

          இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.

            Posted in சினிமா

            மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி

            மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி

            சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று நடிகை சாய் பல்லவி படம் பார்த்து இருக்கிறார்.

            மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி – அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
            சாய் பல்லவி


            பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து

            அனைவரையும் கவர்ந்தார். இவர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில்

            நல்ல வரவேற்பை பெற்ற ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

            சாய் பல்லவி

            இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ஹைதராபாத்தில்

            உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் மாறு வேஷத்தில் படத்தை கண்டு ரசித்துள்ளார்.

            யாரும் அடையாளம் காணமுடியாதபடி மாறுவேஷத்தில் சாய் பல்லவி திரையரங்கில் படம் பார்த்த

            வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

              Posted in சினிமா

              பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி

              பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி

              சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

              வாவ்… வாட்ட மூவி… பிரபல திரைப்படத்தை பாராட்டிய ரஜினி
              ரஜினிகாந்த்


              இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை கதையை வைத்து எடுக்கபட்ட திரைப்படம் 83. இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பங்கஜ் திரிபாதி, ஜீவா

              போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து எதிர்பார்ப்பு அதிகரித்து

              வந்தது. அதன்பிறகு இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து அனைவரையும் அந்த படத்தை பற்றி முணுமுணுக்க வைத்தது.

              இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் அவர்களுடைய வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

              அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் ரஜினிகாந்த் 83 படம் குறித்து அவருடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

              அதில் அவர் கூறியிருப்பது, வாவ் வாட்ட மூவி, அற்புதமான திரைப்படம் படத்தில் பணியாற்றிய

              அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.

                Posted in சினிமா

                இந்த நடிகை – இந்த அவதாரம் எடுத்தார்

                இந்த நடிகை – இந்த அவதாரம் எடுத்தார்

                தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியின் வரிசையில் இருக்கும் நடிகையின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

                ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அடுத்த பரிணாமம்
                ஷ்ரத்தா ஸ்ரீநாத்


                விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ’கலியுகம்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.

                இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்.

                இப்படத்தில் நடிகர் கிஷோருடன் புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் ப்ரமோத் சுந்தர்

                இயக்கி, கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

                போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி

                வரும் ‘கலியுகம்’ திரைப்படம் இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறதால் இத்திரைபடத்தின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

                  Posted in சினிமா

                  பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

                  பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

                  கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.

                  பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

                  தமிழ் சினிமாவில் சங்க நடிகருடன் ரிப்பன் கட்டி வந்த நடிகைக்கு, தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தேடி வந்ததாம். நடிகையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தாராம். தான் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், திடீரென்று சம்பளத்தை உயர்த்தினாராம்.

                  நடிகை சம்பளத்தை உயர்த்திய நேரம், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம். இதனால் ஓரிரு படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தாராம். தற்போது பல இளம்

                  நடிகைகள் குறைந்த சம்பளத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகையும் தனது சம்பளத்தை

                  குறைக்க முடிவு செய்து இருக்கிறாராம். இனிமேலாவது நடிகைக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று பொருத்து இருந்துதான் பார்க்கணும்.

                    Posted in சினிமா

                    பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை

                    பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை

                    தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை பாலிவுட்டில் தடம் பதிக்க தயாராகவுள்ளார்.

                    பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
                    அமலா பால்


                    மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அமலாபால். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில்

                    ஒருவராக உருவெடுத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியுலகில் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக இணைந்து அனைவரின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

                    பிறகு மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்தார்.

                    தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள ’அதோ அந்த பறவை போல’ மற்றும் ’கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

                    அமலா பால்

                    இதனைதொடர்ந்து முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. 1980களில் பிரபலமான பாலிவுட்

                    நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.

                    மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில்

                    உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

                      Posted in சினிமா

                      சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை

                      சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை

                      சன்னி லியோன் நடனம் ஆடிய பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

                      மூன்று நாட்களுக்குள் பாடலை நீக்கவில்லை என்றால்…சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை
                      சன்னி லியோன்

                      கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை

                      சன்னி லியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நடனம்

                      இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

                      இந்நிலையில் சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு

                      கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

                      நரோட்டம் மிஸ்ரா

                      இதையடுத்து அந்த பாடலை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளது.

                      Posted in சினிமா

                      காதலரை பிரிந்தார் சுஷ்மிதா சென்

                      காதலரை பிரிந்தார் சுஷ்மிதா சென்

                      பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்த நடிகை சுஷ்மிதா சென், காதலரை பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.

                      காதலரை பிரிந்தார் சுஷ்மிதா சென்

                      தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ‘ரட்சகன்’ படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படத்தில்

                      ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஆர்யா-2’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

                      சுஷ்மிதா சென்னுக்கு 45 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தன்னைவிட 16 வயது குறைந்த

                      ரோஹ்மன் சால் என்ற விளம்பர பட நடிகரை 3 வருடமாக சுஷ்மிதா காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.

                      காதலருடன் சுஷ்மிதா சென்

                      இந்த நிலையில் காதல் முறிந்து விட்டதாக சுஷ்மிதா சென் அறிவித்து உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ரோஹ்மனுடனான எனது

                      காதல் உறவு முறிந்துவிட்டது. ஆனாலும் நண்பர்களாக இருப்போம், அன்பு தொடரும். நீண்டகால உறவு முடிவுக்கு வந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.

                        Posted in சினிமா

                        ஆபாச நடனம் – பிரபல கவர்ச்சி நடிகைக்கு சிக்கல்

                        ஆபாச நடனம் – பிரபல கவர்ச்சி நடிகைக்கு சிக்கல்

                        சன்னி லியோன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாது என எச்சரித்து வருகின்றனர்.

                        இந்துக்களை புண்படுத்தும் வகையில் ஆபாச நடனம் – பிரபல கவர்ச்சி நடிகைக்கு சிக்கல்
                        சன்னி லியோன்

                        பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ஒன்று இந்து மதத்தை அவமதிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

                        1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி

                        லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை தடை செய்யக்கோரி பலரும் கண்டனம்

                        தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-

                        கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நடனம் இந்துக்களின்

                        மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோனும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அவர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.

                        இவ்வாறு சந்த் நாவல் கிரி மக்ராஜ் எச்சரித்துள்ளார்.

                        Posted in சினிமா

                        விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு

                        விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு

                        முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு… காரணம் தெரியுமா?
                        விஜய் – யுவன் சங்கர் ராஜா


                        விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா

                        ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

                        இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.

                          Posted in சினிமா

                          அதை நம்பாதீங்க கதறும் நடிகை

                          அதை நம்பாதீங்க கதறும் நடிகை

                          சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

                          யாரும் நம்ப வேண்டாம்… அபர்ணா பாலமுரளி கோபம்
                          அபர்ணா பாலமுரளி


                          சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வந்தார். 8 தோட்டாக்கள் படத்திலும்

                          நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு

                          ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

                          அபர்ணா பாலமுரளி

                          இதனால் நடிகர்- நடிகைகள் பலரும் அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க தொடங்கினர். ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவுகள்

                          வெளியிட்டனர். உடல்நிலை வதந்திக்கு அபர்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது “நான் நலமாக இருக்கிறேன். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். உடல்நிலை பற்றி பரவி

                          வரும் தகவல் உண்மையல்ல, அதை யாரும் நம்ப வேண்டாம்” என்று கோபமாக தெரிவித்து உள்ளார்.

                            Posted in சினிமா

                            பதிலடி கொடுத்த சமந்தா… பதிவை நீக்கிய ரசிகர்

                            பதிலடி கொடுத்த சமந்தா… பதிவை நீக்கிய ரசிகர்

                            தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

                            பதிலடி கொடுத்த சமந்தா… பதிவை நீக்கிய ரசிகர்
                            சமந்தா


                            அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக குத்தாட்ட நடனம் ஆடி இருப்பது சர்ச்சையை

                            ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

                            கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனாலும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. யூ-டியூப்பில் அதிகமானோர் பார்த்துள்ளனர். படம் வெற்றி பெறுவதற்கு இந்த

                            பாடலும் காரணம் என்கின்றனர். இந்த நிலையில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியதை வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

                            சமந்தா

                            ‘‘விவாகரத்து செய்து வாழ்க்கையை கெடுத்து கொண்ட குத்தாட்ட நடிகை சமந்தா, ஜென்டில்மேனிடம் இருந்து ரூ.50 கோடியை வரியில்லாமல் திருடிக்கொண்டார்” என்று அவர்

                            கூறியுள்ளார். நாக சைதன்யாவை ஜென்டில்மேன் என்று குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்ய

                            சமந்தா ரூ.50 கோடி பெற்றதாக அந்த ரசிகர் விமர்சித்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

                            சமந்தா
                            சமந்தாவின் பதிவு

                            அந்த விமர்சனத்தை பார்த்த சமந்தா ‘‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்” என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவதூறு செய்தவர் மீது கோபப்படாமல் கனிவான

                            முறையில் சமந்தா பதில் சொன்னது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் சமந்தாவின் பதிலுக்கு அந்த ரசிகர் தன்னுடைய பதிவை நீக்கி விட்டார்.

                              Posted in சினிமா

                              ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்

                              ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்

                              முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.

                              ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
                              விக்னேஷ் சிவன் – நயன்தாரா


                              நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இந்தியா

                              சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆஸ்கார் பட்டியலில்

                              இடம்பெற்றுள்ள படங்கள் பட்டியல் ஆஸ்கார் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்று இருந்தது.

                              ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27-ந் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்

                              நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருதுக்கு 15 படங்கள் இறுதி செய்யப்பட்டு அதில் ஒரு படத்துக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும்.

                              இந்த நிலையில், ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதி பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெறவில்லை.

                              இதன் மூலம் ஆஸ்கார் போட்டியிலிருந்து கூழாங்கல் திரைப்படம் வெளியேறி உள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

                              ‘இந்த பட்டியலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இருப்பினும் இவ்வளவு தூய்மையான சினிமாவை கொடுத்ததற்காக பி.எஸ்.வினோத்ராஜ்-க்கு நான் நன்றி கூறுகிறேன்.

                                Posted in சினிமா

                                மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

                                மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

                                மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

                                மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை?
                                மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ


                                சீனா நிறுவனமான சியோமி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில்

                                வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

                                இந்நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் மாஸ்டர் பட

                                தயாரிப்பாளர் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அடையாறில்

                                உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                                  Posted in சினிமா

                                  பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சங்கரின் மகள்

                                  பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சங்கரின் மகள்

                                  பிரம்மாண்ட படங்களை இயக்கி இருக்கும் சங்கரின் மகள் அதிதி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

                                  கார்த்தியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சங்கரின் மகள்
                                  அதிதி சங்கர்


                                  நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும் வசூல் மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

                                  நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார்.

                                  சிம்பு

                                  இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி

                                  சங்கர் நடிக்க இருக்கிறார். இவர் தற்போது கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப் பகுதியில் இருக்கிறது.

                                  Posted in சினிமா

                                  ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகளை நீக்கிய படக்குழு

                                  ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகளை நீக்கிய படக்குழு

                                  தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.

                                  ராஷ்மிகாவின் ஆபாச காட்சிகளை நீக்கிய படக்குழுவினர்
                                  ராஷ்மிகா மந்தனா


                                  தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 2 இந்தி படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும்

                                  நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படம்

                                  சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

                                  இந்த படத்தில் எல்லை மீறிய சில ஆபாச காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. சாமி சாமி பாடலில் பாவாடையுடன் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக நடனம் ஆடுவதும், அல்லு அர்ஜுனுடன்

                                  காருக்குள் நெருக்கமாக அமர்ந்து காதல் செய்யும் காட்சியும், வசனமும் ஆபாசமாக இருப்பதாகவும், இந்த காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின.

                                  ராஷ்மிகா மந்தனா
                                  புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா

                                  இதனால் பலரும் குழந்தைகளுடன் குடும்பத்தோடு படம் பார்க்க வருவதை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படத்தில் இருந்து படக்குழுவினர் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.