Posted in இலங்கை செய்திகள்

புலி கட்சி உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல்

புலி கட்சி உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல்

வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில்

முன்னாள் போராளியொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியும், சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின்

தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று (10) இரவு உட்புகுந்த

மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன்

அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னாள் போராளி மீதான தாக்குதல் தொடர்பாக அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், நோயாளர் காவுவண்டி

மூலம் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வவுனியாவில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி வன்னி பகுதி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் முன்னாள் போராளிகள்,

மாவீரர் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊடாக மனிதாபிமான சேவைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது

      பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது

      மகிந்தா ஆட்சி காலத்தில் அரச அதிகாரியை மரத்தில் கட்டி வைத்து

      அடித்த சண்டியர் மேர்வின் சில்வாவின் மகன் பணம் கேட்டு நபர் ஒருவரை

      மிரட்டிய குற்றச் சாட்டில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்

      அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தறிகெட்டு இவ்வாறான அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          தீயில் எரிந்த 24 வீடுகள் – கண்ணீரில் குடும்பம்

          தீயில் எரிந்த 24 வீடுகள் – கண்ணீரில் குடும்பம்

          லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்று (10)

          இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

          தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக

          சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

          வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை

          அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

          அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து

          தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3

          மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

          இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு தேதம் ஏற்பட்டுள்ளன.

          இத் தீவிபத்து காரணமாக பலரது அத்தியவசிய ஆவணங்கள்

          உடுதுனிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

          இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர்

          தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம், உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

          இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

          இத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் இது தொடர்பான

          விசாரணைகளையும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை

          அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

              பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

              பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்களது

              தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 27 நபர்கள் கடந்த தினங்களில் மத்திய நிலையத்தை விட்டு வெளியேறினர்.

              அதன்படி, 2020 ஆகஸ்ட் 08 ஆம் திகதி 08 நபர்களும், ஆகஸ்ட் 09 ஆம் திகதி 09

              நபர்களும், நேற்றைய தினம் 10 நபர்களும் (2020 ஆகஸ்ட் 10) இவ்வாரு

              பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

              இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களை

              ப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை

              வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களும் கடற்படையால் வழங்கப்பட்டன.

              தற்போதைய நிலவரப்படி, 70 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல்

              மையத்தில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

              பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
              பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
                  Posted in இலங்கை செய்திகள்

                  பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

                  பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

                  புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த

                  ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன்

                  தனது கடைமைகளை சற்றுமுன்னர் ஆரம்பித்தார்.

                  இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

                      இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

                      கொவிட் தொற்று நோயாளர்கள் 27 பேர் இன்று காலை வரையில் அடையாளம்

                      காணப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                      இந்த 27 பேரில் 23 பேர் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில்

                      தங்கியிருந்தவர்கள் ஆவர். ஏனைய 4 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த பின்னர் தியத்தலாவ இராணுவ

                      வைத்தியசாலை, முதலாவது கெமுணு படையணி மற்றும் ஈடன் றிசோட் ஆகிய தினிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                      இதற்கமைவாக இன்று (11) காலை அளவில் கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு

                      மத்திய நிலையத்துடன் தொடர்புபட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 629 ஆகும்.

                      புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் – 508

                      பணியாளர்கள் எண்ணிக்கை – 67

                      அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் – 05

                      குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் – 48

                      வெலிக்கடை சிறைச்சாலை கொவிட் 19 தொற்று கைதியுடன் தொடர்புட்ட நபர் – 1

                      மொத்தம் – 629

                          Posted in இலங்கை செய்திகள்

                          கைதிகளை பார்வையிட வர விதிதக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

                          கைதிகளை பார்வையிட வர விதிதக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

                          சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிட வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த

                          தடை எதிர்வரும் சனிக்கிழமை முதல் நீக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                          சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க எமது செய்திப்பிரிவிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

                          உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கைதிகளை பார்வையிட

                          வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                          ஒரு கைதியை சந்திக்க ஒருவருக்கு வாரத்தில் ஒருமுறை மா்திரமே அனுமதி

                          வழங்கப்படும் எனவும் உணவுப் பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோர விபத்தில் தாய் மகள் பலி

                              தொம்பே, மல்வான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

                              மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த

                              முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                              சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் அவருடைய

                              மகளும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்

                                  28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்

                                  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு

                                  கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                  ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.

                                  அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள்,

                                  நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) மாலை வெளியிடப்படும்.

                                  அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள்

                                  கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும்

                                  குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

                                  அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி,

                                  சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய

                                  அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

                                  ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப

                                  தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்

                                  ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள

                                  மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?

                                      காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?

                                      இலங்கை அளுத்மாவத்தை பகுதியில் காருக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்


                                      இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                                      42 வயது நபர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் உடனடியாக தெரிவிக்கப் படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      இது கொலையா ? அல்லது இயற்கையை மரணமா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு – இராணுவம் குவிப்பு

                                      திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு – இராணுவம் குவிப்பு

                                      இலங்கை திருகோணமலை சேருவளை பகுதியில் புத்தர் சிலை அடித்து நொறுக்க பட்டது

                                      மேற்படி சம்பவத்தை புரிந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர்


                                      அமைதியை குழப்பி இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில்

                                      மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கருத படுகிறது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      ஆற்றில் மிதந்த மனித தலை -கண்ணீரில் குடும்பம்

                                      ஆற்றில் மிதந்த மனித தலை -கண்ணீரில் குடும்பம்

                                      அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே

                                      மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் தலை மாத்திரம் நேற்று (09) மாலை கிராம மக்களின் உதவியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

                                      கடந்த சனிக்கிழமை (8) வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக வயல்வெளிகளுடன் இணைந்த வழுக்கைமடு நீர்க்கால்வாய் அருகில் சென்றுள்ளார்.

                                      பின்னர் தனது உடுதுணிகளை நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார்.இவ்வேளை

                                      குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளது.

                                      இவ்வாறு இழுத்தச்சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின்

                                      உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல் சென்றவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

                                      பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது.பின்னர் மீட்கப்பட்ட தலை

                                      கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றன.

                                      இவ்வாறு இடம்பெற்ற விசாரணை அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என சடலமாக மீட்கப்பட்டவரை சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.

                                      சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிவானின் உத்தரவிற்காக சடலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

                                      ஆற்றில் மிதந்த மனித தலை
                                      ஆற்றில் மிதந்த மனித தலை
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு

                                      அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு

                                      இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேணல் ரைவிஸ் கொஸ் அவர்கள்

                                      பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான

                                      லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் உடனான சந்திப்பு கடந்த 07ம் திகதி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

                                      இந்த நல்லுறவு கலந்துரையாடலில் இரு நாடுகளிடையே மேம்படுத்த வேண்டி முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக

                                      கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு இலங்கையில் கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதில் இலங்கை இராணுவம் மற்றும்

                                      பங்குதாரர்களின் பங்களிப்பை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி பாராட்டினார்.

                                      இந் நல்லெண்ண சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றி கொள்ளப்பட்டது.

                                      அமெரிக்க தூதரக பாதுகாப்பு
                                      அமெரிக்க தூதரக பாதுகாப்பு
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

                                      கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

                                      கட்டார் மற்றும் ஜப்பானில் இருந்து 176 இலங்கையர்கள் இன்று (10) காலை நாட்டிற்கு வந்துள்ளனர்.

                                      அவுஸ்திரேலியாவில் இருந்து 286 இலங்கையர்களுடன் விசேட விமானம் நேற்று இரவு மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது

                                      இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

                                      மேலும் நாட்டில் பதிவான கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

                                      நேற்றைய தினம் (09) புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று.

                                      அவர்களில் ஒருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தவர்., மற்ற இருவர் சேனகபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

                                      மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்த வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2579.

                                      COVID-19 பரம்பலின் தரவுகள்

                                      புதுப்பிக்கப்பட்டது 2020-08-10 11:07:07

                                      2844
                                      உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                                      254
                                      சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                      0
                                      புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                      2579
                                      குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                                      11
                                      இறப்பு எண்ணிக்கை

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் இன்றைய காலநிலை

                                      இலங்கையில் இன்றைய காலநிலை

                                      நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                                      மழை நிலைமை:
                                      புத்தளத்திலிருந்து கொழும்பு, காலிமற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மழையோ

                                      அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                      காற்று :
                                      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது

                                      மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                                      காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்

                                      மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது

                                      அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச்

                                      சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                      கடல் நிலை:
                                      காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான

                                      கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

                                      நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                                      பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது

                                      கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                      கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது

                                      196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது

                                      2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான 196உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது..

                                      இந்த வர்த்ததமானி அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

                                      196 உறுப்பினர்களையும் 1981 இன் முதலாம் இலக்க நாடாளுமன்ற சட்டத்தின் 62 ஆவது சரத்திற்கு அமைய தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                      29 உறுப்பினர்கள் தேசிய பட்டியலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                                      இலங்கையில் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

                                      நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து

                                      ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

                                      நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல

                                      ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.

                                      இதன் கீழ், 200 மாணவர்களுக்குக் குறைவாகக் கொண்ட பாடசாலைகளின் நடவடிக்கைகள் வழமை போன்று ஐந்து

                                      நாட்களும் நடைபெறும். 200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.


                                      தரம் ஐந்து மாணவர்கள் ஐந்து தினங்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

                                      தரம் ஒன்று முதல் தரம் நான்கு வரையான மாணவர்கள் வாரத்தில் சில நாட்கள் மாத்திரம் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும்.


                                      திங்கட்கிழமை தரம் ஒன்று மாணவர்களும், செவ்வாய்க்கிழமை தரம் இரண்டு மாணவர்களும், புதன்கிழமை தரம் மூன்று

                                      மாணவர்களும் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். தரம் நான்கு மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும்.

                                      இதேவேளை, தரம் ஆறு மாணவர்கள் திங்கட்கிழமையும், தரம் ஏழு மாணவர்கள் செவ்வாய்க்கிழமையும், தரம் எட்டு மாணவர்கள் புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தரம் ஒன்பது மாணவர்கள் வியாழன் மற்றும்

                                      வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டும். தரம் பத்து முதல் தரம் 13 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்ல முடியும்.


                                      ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண முடியுமாயின் சகல மாணவர்களும் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்குச் செல்லலாம்.

                                      கொவிட்-19 நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தும் வரை இந்த நடைமுறை

                                      அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.

                                      இதேவேளை நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், தொடர்ந்தும் சகலரும் சுகாதார வழிமுறைகளை உரிய வகையில்

                                      பின்பற்ற வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார். விசேடமாக சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கை மத்தியவங்கி 450 மில்லியன் பணம் அச்சடிப்பு

                                      இலங்கை மத்தியவங்கி 450 மில்லியன் பணம் அச்சடிப்பு

                                      இலங்கை மத்திய வங்கியினால் இந்த வருடம் சுமார் 450 மில்லியன்

                                      பணம் அச்சடிக்க பட்டுள்ளது .


                                      இலங்கையின் பொருளாதாரம் பலத்த சரிவில் உள்ள நிலையில்

                                      இவ்விதம் அச்சு பதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      வெளிநாட்டு பெண்ணை கற்பழித்தவர் கைது

                                      வெளிநாட்டு பெண்ணை கற்பழித்தவர் கைது

                                      இலங்கை அத்துருக்கிரிய பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவரை

                                      பாலியல் வல்லுறவுக்கு உடைபடுத்திய நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்

                                      பாதிக்க பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படியில் இந்த கைது இடம்பெற்றுளளது

                                      தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்

                                      14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்

                                      இலங்கையின் 14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ சற்று

                                      முன்னர் சத்தியப்பிரமாணம்; செய்து கொண்டார்.

                                      களனி ரஜமஹா விஹாரையில் தற்போது நடைபெறும் (இன்று (09) நிகழ்வில் ,

                                      .ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

                                      மஹிந்
                                      மஹிந்