Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
இலங்கையின் 75 வது சுதந்திர தின நிகழ்வில் ,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில்,முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற
சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (VSV) விருதை வழங்கினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது படைகள்.
இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார், இது இலங்கையின் ஆயுதப்படை வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றது.
சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
விஷிஷ்ட சேவா விபூஷணயா பதக்கம் என்பது ஒரு சிறப்பு விருது மற்றும் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள
அதிகாரிகளுக்கும், கடற்படை மற்றும் விமானப்படையில்
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையில் இருக்கும்
அதிகாரிகளுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது.
அவ்வாறான விருதை தமிழ் இன கொலையாளி சவேந்திர சில்வா பெற்று கொண்டுள்ளார் .
இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்
இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்
இலங்கையில் கான்சர் நோயினால் நாள் தோறும் 46 பேர் மரணித்து வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த புதிய புள்ளிவிபர வெளியீட்டு அறிவிப்பு ,
மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது .
போரின் பொழுது பயன் படுத்த பட்ட நச்சு குண்டுகள் ,மற்றும் இயற்கை வேளாண் செய்கையில் இருந்து செயற்கைக்கு மக்கள் மாறியதும் ,
போதைவஸ்து ,குடிநீர் மாற்றங்களினால் இந்த கான்சர் நோயின் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்க படுகிறது .
மக்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக்கட்சியும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளில் ஆட்சிபீடம் ஏறமுடியாது
மக்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக்கட்சியும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளில் ஆட்சிபீடம் ஏறமுடியாது
தேச விடுதலை மக்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக்கட்சியும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளில் ஆட்சிபீடம் ஏறமுடியாது – வேட்பாளர் அமீன் ஹம்ஸாக்
தேச விடுதலை மக்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக்கட்சியும் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சிபீடம் ஏறமுடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புறத்தோட்ட வட்டார வேட்பாளர் அமீன் ஹம்ஸாக் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டார பிரதேச மக்களுடனான சந்திப்பு இன்று (31) புறத்தோட்டத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் தேச விடுதலை மக்கள் கட்சி களமிறங்கியதைக் கண்டு பல கட்சிகள் ஆட்டங்கண்டுள்ளது.
அதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எல்லோரும் படித்த இளம் வேட்பாளர்களாகவும், மக்கள் மத்தியில் நன்மதிப்பையும், ஆதரவுகளையும் பெற்றவர்களாக இருக்கின்றனர். அதனாலேயே அவர்கள் அஞ்சியவர்களாக காணப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் அதிக செல்வாக்குச் செலுத்திவருகின்ற முஸ்லிம் கட்சிகள் எங்கள் வருகையையும், தேச விடுதலை மக்கள் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களையும் கண்டு, இத்தேர்தலில் போட்டியிட
வேண்டாமென பல அழுத்தங்களை நேரடியாகவும், எங்களின் குடும்பத்தாரின் உதவிகளையும் நாடிச் செல்கின்றனர்.
அதுமாத்திரமன்றி தங்களின் கட்சிகளில் இணைந்துகொள்ளுமாறும், தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களின் கட்சியூடாக செய்து தருவதாகவும் அழைப்பு விடுக்கின்றனர்.
அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரம், அறபா வட்டாரம்,
அல்முனீறா வட்டாரம் போன்ற வட்டாரங்களை வெற்றிகொள்வது உறுதியாகிவிட்டது.
அத்துடன் பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச வட்டாரங்களில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளவர்களும் வெற்றிபெறுவது
உறுதியாகிவிட்டது.
குறிப்பாக,
அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளை எந்தக்கட்சி ஆட்சியமைப்பதாக இருந்தாலும் தேசவிடுதலை மக்கள் கட்சியின் ஆதரவின்ற ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாதளவு நாங்கள் இருக்கின்றோம்.
எங்களின் வெற்றி இறைவனின் உதவியால் உறுதியாகிவிட்டது என்றார்.
அபு அலா –
கொழும்பில் ஒருவர் வெட்டி கொலை
அமெரிக்கா அதிகாரி இலங்கை வந்தார்
அமெரிக்கா அதிகாரி இலங்கை வந்தார்
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் விக்ட்டோரிய நூலண்ட் இலங்கை வந்தடைந்தார் .
இலங்கை வந்தடைந்த இவர் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சில் ஈடுபடுவார் என எதிர் பார்க்க படுகிறது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் இடம் பெறும் கால பகுதியை அண்மித்து ,இவ்வாறான அதிகாரிகள் இலங்கை வந்து செல்வது வழமையான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .
இதன் பொழுதே அமெரிக்கா இலங்கையுடன் பேரம் பேச்சில் ஈடுபடுகிறது எனப்படுகிறது .
இலங்கையில் தொடரூந்து பயணங்கள் இரத்து
இலங்கையில் தொடரூந்து பயணங்கள் இரத்து
இலங்கையில் தொடரூந்து பயன்கள் 123 இரத்து செய்ய பட்டுள்ளன .
கடந்த மூன்று நடுகல் இந்த இரத்து இடம்பெற்றுள்ளது .
தொடரூந்து இயக்கம் சாரதிகள் வரவின்மை காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
இவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை அரசு குறைத்து வழங்கிய
காரணத்தினாலேயே பணி புறக்கணிப்பில் ரயில்வே சாரதிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராய படுகின்றன .
இந்த ஆய்வில் இலங்கை சிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் மற்றும்,
போர் குற்றம் தொடர்பிலான விடயங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வையும் இலங்கை ஆளும் அரசு ஏற்படுத்தவில்லை .
இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ,
இலங்கை மிக பெரும் நெருக்கடியை இம்முறை சந்திக்க நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது .
காலிமுக திடல் வீதி பயன் படுத்த தடை
காலிமுக திடல் வீதி பயன் படுத்த தடை
இலங்கையின் காலிமுக திடல் பகுதி வீதியை பயன் படுத்த
தடை விதிப்பது தொடர்பானஅறிவுறுத்தல் மக்களுக்கு வழங்க பட்டுள்ளது .
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ,மக்கள் காலிமுக
திடல் பகுதி வீதிக்கு மாற்றீடான சாலைகளை பயன் படுத்துமாறு வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
மைத்திரி மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாதது கத்தோலிக்க சபைகள்
மைத்திரி மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாதது கத்தோலிக்க சபைகள்
இலங்கையில் தேவலாயங்கள் மீது நடத்த பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மன்னிப்பு கோரினார் .
ஆனால் மைத்திரிபால சிறிசேனாவின் அந்த மன்னிப்பை
ஏற்று கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது .
13 க்கு எதிராக காவிகள் போர்க்கொடி
13 க்கு எதிராக காவிகள் போர்க்கொடி
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்காவினால் 13 வந்தது சட்டத்தை அமூல் படுத்தி,
அதனை நிறைவேற்ற உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கா அறிவித்தார்
ஆனால் ரணிலின் இந்த அறிவிப்புக்கு பவுத்த மத காவிகள்
சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது .
இலங்கையின் பொருளாதாரம்
வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் ,அதனை கட்டி எழுப்பிட ரணில் முயற்சிகளை
மேற்கொண்டு வரும் நிலையில் இந்த போர் கொடியை புத்த மகா சங்கம் கிளப்பி வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு
ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெகிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் நிபோஜன் ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும் திகழ்ந்தார்.
உயிரிழந்த ஊடகவியலாளர் நிபோஜன் அவர்களுடைய
உடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
அரசு ஊழியர் குறைப்பு குறித்த இறுதி முடிவு
அரசு ஊழியர் குறைப்பு குறித்த இறுதி முடிவு
இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், சிறப்பான முறையில் கடமையாற்றாத ஊழியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வு பெறும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலை இந்த நாட்களில் செய்யப்படுகிறது.
திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் ஒவ்வொரு அமைச்சின் செலவினங்களைக்
குறைப்பதற்கான சுற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக மோசடி – மற்றுமொரு தரகர் கைது
சிறுநீரக மோசடி – மற்றுமொரு தரகர் கைது
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பணத்திற்காக ஆட்களின் உடல் உறுப்புகளை பெற்றுக்கொடுக்கும் தரகரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் 02 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்று வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாக பெண் ஒருவர் உட்பட ஐவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (31) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன்,
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை ரூபாய் 300 முதல் 350 வரை குறைவடைந்துள்ளதுடன்,
லீக்ஸ் மற்றும் கெரட் ஆகியவற்றின் மொத்த விலை ரூபாய் 90 முதல் 150 வரை குறைந்துள்ளது
பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை
பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை
இலங்கையில் கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நீக்கிட ,இருபத்தி ஆறாயிரம் ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
இதற்கு அமைய பட்டதாரிகளாக விளங்கும் நபர்களில் இருபத்தி ஆறாயிரம் பேரை ஆசிரியர்களாக நியமிக்க, நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என்கிறார் கல்வி அமைச்சர் சுசில் .
போதை கடத்தல் நடத்தும் பிரான்ஸ் தமிழன் சிக்கிய பெண்
போதை கடத்தல் நடத்தும் பிரான்ஸ் தமிழன் சிக்கிய பெண்
பிரான்சில் உள்ள ரூபன் எந்கன்ற தமிழருடன் இணைந்து போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வந்த சிங்களபெண் டிஸ்கோ கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவரிடம் தொடந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் ,பிரான்சில் உள்ள ரூபன் என்ற போதைவஸ்து தமிழரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன .
சுதந்திரத்தினத்தை புறக்கணிப்போம் கூட்டமைப்பு
சுதந்திரத்தினத்தை புறக்கணிப்போம் கூட்டமைப்பு
இலங்கையின் சுதந்திரத்தினத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது .
இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல் பட்டு ,தமிழர் அரசியல் விடயங்களை குழிதோண்டி புதைத்து வரும் கூட்டமைப்பு ,இவ்விதம் அறிவித்துள்ளது ,தமிழ் மக்கள் மத்தியில் நகைச்சுவையாக பார்க்க படுகிறது .
15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர், மீனவ மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுந்தேகம பிரதேசத்தில் உள்ள நல்லச்சிய நீர்த்தேக்கத்திலிருந்து நீரினை எடுத்துச் செல்லும் கால்வாயில் சைக்கிளில் பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மினிமுதுகம, களுந்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுச் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தகம – கிரிமெடியாவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த 74 வயதுடைய முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுடைய உறவினர் ஒருவரின் மகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நவகத்தேகமவில் இருந்து கல்கமுவ நோக்கி சென்று மீண்டும் நவகத்தேகம நோக்கி மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட போது, ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கி பயணித்த சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் வாகனம் மீது மோதியுள்ளது.
அந்த நோயாளர் காவு வண்டியில் நோயாளி ஒருவர் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவசெரிய நோயாளர் காவு வண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் ஐந்து வயதுடைய மகளும் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
நவகத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



































