கஞ்சாத்தோட்டம் அழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கை

இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கை

இலங்கையில் சட்டரீதியாக கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதலீட்டாளர் ஒருவரதும், முதலீட்டுச் சபையினதும் பங்களிப்புடன், பரீட்சார்த்தமாக கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No posts found.
கொத்து றொட்டியில் பழுதடைந்த இறைச்சி
Posted in இலங்கை செய்திகள்

கொத்து றொட்டியில் பழுதடைந்த இறைச்சி

கொத்து றொட்டியில் பழுதடைந்த இறைச்சி

கடந்த 09ம் திகதி ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய ஒருவர், பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து றொட்டி காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் குழு குறித்த கடையினை பரிசோதித்தது.

பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்ட நிலையில் உணவகத்திற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பு.ஆறுமுகதாசனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் கடை சீல் வைக்கப்பட்டது.

கொத்து றொட்டியில் பழுதடைந்த இறைச்சி

இன்றையதினம் (26) வழக்கு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உணவக உரிமையாளரிற்கு எதிராக சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 45,000 ரூபாய் தண்டம் விதித்தது.

அத்துடன் கடையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடையினை மீள திறக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்றிரவு (25) இனந்தெரியாத குழு வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பல் தப்பிச் சென்ற நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள்
தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும்
தெரிவிக்கையில்,

“யுத்தம் முடிவடைந்துள்ள எங்களின் பிரதேசத்தில் யுத்தம் நடைபெறுவதை போன்று இராணுவ
மயமாக்கல் காணப்படுகின்றது. வீதிகள், அரச நிலங்கள் என எல்லா இடங்களிலும் அவர்கள்
இருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது

அவ்வாறு இருந்துகொண்டு இராணுவ முகாம்களில் அவசர அவசரமாக புத்தரின் சிலைகள் மற்றும்
பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இராணுவ மயமாக்கல் பௌத்த
மயமாக்கலாக மாறியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் மீறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரனை கைது செய்துள்ளனர். தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டதை
ஜனநாயக ரீதியில் போராடிய பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதென்றால் சட்டம்,
பல்லிண மக்கள் அற்ற நாடாகதான் இந்த நாட்டை பார்க்க வேண்டியுள்ளது.

ஓர் இனம் இன்னுமோர் இனத்தையும், ஒரு மதம் இன்னுமொரு மதத்தையும் அடக்கி ஆளும்
வகையிலேயே ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.

இவ்வாறாக இராணுவ மயமாக்கல் மூலம் பெளத்த மயமாக்கலையும், மகாவலி அதிகார சபையின்
மூலம் இனப்பரம்பலை வடக்கு, கிழக்கில் திணிப்பதையும், தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு,
கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அரசாங்கமும்,
ஜனாதிபதியும் இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்

தூதுவர் ஜூலி சுங் - ஆளுநர் செந்தில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

தூதுவர் ஜூலி சுங் – ஆளுநர் செந்தில் சந்திப்பு

தூதுவர் ஜூலி சுங் – ஆளுநர் செந்தில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதற்கும் மாகாணத்தின் பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் கலந்துரையாடப்பட்டது என்று ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார்.

பாடசாலைகளுக்கு விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால் இவ்வாறு இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர் மீது தாக்குதல் 17 மாணவர்கள் கைது

ஆசிரியர் மீது தாக்குதல் 17 மாணவர்கள் கைது

புத்தளம் – தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை

பதின்ம வயது சிசிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறைறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். அவர் கடமையிலிருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று நேற்று தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

மேலும், இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பளித்தார்

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்

மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்

ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மூடப்படும் ஆடைத் தொழிற்சாலைகள்

இந்நிலை நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் கூட பாதிப்பதாகவும், குறித்த ஆடைத் தொழிற்சாலைகள்மூடப்பட்டால்,அங்கு பணிபுரியும் மக்களின் தொழிலுக்கு என்ன நடக்கும் என நினைத்துப் பார்க்கமுடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய போதேஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு

தையிட்டி விகாரை இரகசியமாக திறந்துவைப்பு

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் குண்டுதாரிகள் பாதுகாப்பு தீவிரம்

வவுனியாவில் குண்டுதாரிகள் பாதுகாப்பு தீவிரம்

வவுனியா நகரப்பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா – இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றைய தினம் சென்ற இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இந்த பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.

வவுனியாவில் குண்டுதாரிகள் பாதுகாப்பு தீவிரம்

குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா பொலிஸாரால் எமக்கு வழங்கப்படவில்லை என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தகவல் காரணமாக நகரப் பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

No posts found.
ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா மற்றும் ஜப்பான் – இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய காலை உணவு சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கலந்து கொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்தார்.

ஜப்பானில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இதன்போது நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மீண்டும் எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளை சந்தித்த சிறீதரன் எம்.பி

மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளை சந்தித்த சிறீதரன் எம்.பி

இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்

பிரதானிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான கலந்துரையாடல், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதானிகளை சந்தித்த சிறீதரன் எம்.பி

வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரண அறிக்கையை, கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பித்த சிறீதரன் எம்.பி,

அவ் அறிக்கையின் பிரதிகளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் என்பவற்றுக்கு தனித்தனியே அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அவ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, ஆணைக்குழுவின் பிரதானிகளால் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, தனியாருக்கோ, மத நிறுவனங்களுக்கோ சொந்தமான காணிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களை

முன்னெடுக்கின்ற போது, பொலிஸ் முறைப்பாடு செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் கையாளும் பட்சத்தில், இதுவிடயமாக தமது

நிறுவனம் சார்ந்து மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர், நீதிபதி ரோகினி மாரசிங்க சுட்டிக்காட்டியதாக சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF ஆதரவு| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

கடன் மறுசீரமைப்பு காலக்கெடு

கடன் மறுசீரமைப்பு காலக்கெடு

கடன் வேலைத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் அளவில் ​உள்நாட்டு, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மே 11 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டம்பர் மாதம் நடத்தப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூவர், பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மசஹிரோ நொசாகி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தோண்டப்படும் தினேஷ் ஷாப்டரின் உடல்
Posted in இலங்கை செய்திகள்

தோண்டப்படும் தினேஷ் ஷாப்டரின் உடல்

தோண்டப்படும் தினேஷ் ஷாப்டரின் உடல்

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று (25) முற்பகல் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் நீதிமன்ற விசேட வைத்தியர்கள் குழுவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட

கோரிக்கைக்கு அமைவாக அவரது உடல் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

ஷாப்டரின் சடலம் புதைக்கப்பட்டுள்ள பொரளை மயானத்திற்கு பொரளை பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

சிலாபம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (24) மாலை தமது செல்லப்பிராணிகளை நீராட்டுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சிலாபம் – மைக்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்

14 பேரின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

14 பேரின் சடலங்கள் மீட்பு

14 பேரின் சடலங்கள் மீட்பு

இந்திமத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது

இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை மீட்டனர். கப்பலின் பல்வேறு இடங்களில் இருந்து மேலும் 12 பணியாளர்களின் உடல்களை மீட்டுள்ளன,

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியரை கொலை செய்த யாசகர்

வைத்தியரை கொலை செய்த யாசகர்

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியரை கொலை செய்த யாசகர்

சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், 38 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து

பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.