Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்
உக்கிரேன் தலை நகர் மீது பெரும் தாக்குதலை நடத்திட குவிக்க படும் ரசியா இராணுவம்
ரசிய நாட்டின் இராணுவம் உக்கிரேன் தலைநகரை அதிரடி தாக்குதல் மூலம் மீட்டிட
தற்பொழுது அதி நவீன ஆயுதங்களுடன் கீவ் நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி குவிக்க பட்டு வருகிறது
ஏவுகணைகள் ,மற்றும் இரசாயன ஆயுதங்கள் என கணிக்க படும் வண்டிகளும் அங்கு குவிக்க பட்டுள்ளது
சில நாட்களுக்குள் உக்கிரேன் தலைநகர் ரசிய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது
உக்கிரேன் தலைநகர் வீழ்ச்சியடைந்தால் உக்கிரேன் முழுவதும் ரசிய இராணுவத்தின்
வசமாவதுடன் உக்கிரேன் இராணுவம் சரண் அடையும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்கலாம்
அவ்வாறான நகர்வை மையப்படுத்தியே ரசியா படைகள் மிக பெரும் அழித்தொழிப்பு தாக்குதலுக்கு தயாராகிய வண்ணம் உள்ளன
- வன்னி மைந்தன் –
ரஷியா சாராயங்களுக்கு அமெரிக்காவிலும் தடை – வோட்கா போச்சே
ரஷியா சாராயங்களுக்கு அமெரிக்காவிலும் தடை – வோட்கா போச்சே
உக்கிரேன் மீது ரசியா தொடர்ந்து வரும் தாக்குதலை அடுத்து அந்த நாட்டின் மீதான
சர்வதேச அளவில் பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதுடன் ,அந்த நாட்டின்
தயாரிப்புகள் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திட தடை விதிக்க பட்டுள்ளது
கனடாவை அடுத்து தற்பொழுது அமெரிக்காவும் ரசியாவின் அதி பிரபலமான வோட்கா,மற்றும் டைமனுக்கும் தடை விதித்துள்ளது குறிப்பிட தக்கது
ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்
ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்
ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்- புதின் எச்சரிக்கை
விளாடிமிர் புதின்
ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா
அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது.
இந்தநிலையில் ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ரஷியா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய வினியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம். ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய
பொருளாதார தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிடும். இதனால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்
ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி
ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி
ரஷிய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக பேஸ்-புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி
பேஸ் புக்
ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பேஸ்-புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷிய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில்
தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் குடிமக்களுக்கு எதிரான நம்பகத்தன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.
பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு
பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு
.450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10
ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்து, சாப்பாட்டு பொதியின் விலை 20 ரூபாவினாலும்,
கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் உயிரிழப்பு
டேவிட் பென்னட் பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதத்தில் உயிரிழப்பு
ஆபரேஷன் செய்துகொண்ட டேவிட் பென்னட்
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் (57), இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. மனித இதய
மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஜனவரி 7-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை
சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பன்றியின் இதயம் பொருத்திய 2 மாதத்தில் டேவிட் பென்னட்
காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
புலிகள் ஆவணங்கள் மீட்பு
புலிகள் ஆவணங்கள் மீட்பு
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகிதத்துக்கிடமான
ஆவணங்கள் சில, நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இப்புத்தகங்கள், விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதில் விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள், நிர்வாகம்
செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் புத்தகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
காணி உரிமையாளர், நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தை பன்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மாட்டு வண்டியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்
நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட
பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச
சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.
நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில்
கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர்,
உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று நகர்ந்து செல்கின்றனர்
பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்
பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு
உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.
-இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,
நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி
நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை.
எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்
யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்
யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்
யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி
யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் தந்தை ஒருவர் தினமும் போதையில் வந்து தாயாரை கொடுமை படுத்தி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார் ,
இந்த சம்பவத்தை பார்வையிட்ட சிறுமி அதில் இருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ,
இவ்விதம் தஞ்சம் அடைந்த 12 வயது சிறுமி நன்னடைத்தை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இப்படியும் சீரழியும் குடும்பங்கள்
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
ஏமன் நாட்டின் வடக்கு பகுதி Hajjah மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு
கொண்டிருந்த சவூதி நாட்டின் உளவு விமானம் ஒன்றை ஏமன் போராளிகள் குழுவினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய படைகள் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்
இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்
இலங்கையில் அதிக வயது கூடிய யானை என்ற பெயரை பெற்று விளங்கி வந்த
Nadugamuwa Raja என்ற யானை வெள்ளவெறியா பகுதியில் பலியாகியுள்ளது ,இந்த
யானையின் உடலை கண்டு தரிசித்து
செல்ல மக்கள் முண்டியடித்த வண்ணம் உள்ளனர் ,இது முறைப்படி அடக்கம் செய்ய படும் என தெரிவிக்க பட்டுள்ளது
ரஷியாவில் 850 மக்டொனல்ஸ் உணவகங்கள் அடித்து பூட்டு
ரஷியாவில்; 850 மக்டொனல்ஸ் உணவகங்கள் அடித்து பூட்டு
அமெரிக்காவின் முதல்தர உணவகமாக விளங்கி வரும் மக்டொனால்ஸ் நிறுவனம்
ரஷியாவில் உள்ள தனது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது
இந்த உணவகங்களில் வேலை புரியும் 62 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளன
ரசியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் மக்களை
அரசுக்கு எதிராக திருப்பி விடும் நோக்கில் இவை அமெரிக்காவின் பின்புலத்தில் ஏற்படுத்த
பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது
ரஷிய ராணுவ தாக்குதலில் 61 மருத்துவமனைகள் அழிப்பு
ரஷிய ராணுவ தாக்குதலில் 61 மருத்துவமனைகள் அழிப்பு
ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 61 மருத்துவமனைகள் அழிந்தன – உக்ரைன் மந்திரி
ரஷிய ராணுவம்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 61 மருத்துவமனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என உக்ரைன் சுகாதாரத்துறை மந்திரி விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ரஷிய படையெடுப்பாளர்கள் ஜெனீவா உடன்படிக்கையை மீறுகிறார்கள். அவர்களால் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவது மற்றும்
மனிதாபிமான பாதைகளை அனுமதிக்காதது குறித்து உக்ரைன் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது என்றார்
நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – நடிகை குமுறல்
நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – நடிகை குமுறல்
நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.
நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்
பூனம் பாண்டே
இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை
செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது
நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.
பூனம் பாண்டே கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும்
அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து
பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்’’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரசியா போர்முனையில் சிரியா இராணுவம் – உளவுத்துறை எச்சரிக்கை
ரசியா போர்முனையில் சிரியா இராணுவம் – உளவுத்துறை எச்சரிக்கை
ரசியா நடத்தி வரும் போரில் புதிதாக ஆட்களை இணைக்கும் பணியில் அது
ஈடுபட்டுள்ளது ,தற்போது தமது நாடு தவிர்ந்து வெளிநாடுகளில் இருந்த்து ஆட்களை திரட்டும் புதிய நகர்வை ஆரம்பித்துள்ளது
இவ்விதம் சிரியா நாட்டை சேர்ந்தவர்களை தமது படைகளில் இணைத்துக்கொள்ளும் புதிய ஒப்பந்தம்
ஏற்படுத்த பட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை இரகசியத்தை வெளியிட்டுள்ளது
ஐரோப்பாவுக்கு காஸ் விநியோகத்தை நிறுத்திய ரசியா – விலை ஏற்றம் -கொந்தளிக்கும் மக்கள்
ஐரோப்பாவுக்கு காஸ் விநியோகத்தை நிறுத்திய ரசியா – விலை ஏற்றம் -கொந்தளிக்கும் மக்கள்
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் 40 வீதம்
எரிவாயுவினை ரசியா ஐரோப்பாவிற்கு விநியோகித்து வந்தது ,தற்போது அவை நிறுத்த
பட்ட நிலையில் அதன் விலை ஏற்றம் சடுதியாக அதிகரித்துள்ளது
குளிர்காலம் நிலவுவதாலும் அதிக மக்கள் எரிவாயுவினை பயன்படுத்தி வருவதாலும்
திடீர் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,இந்த
விலைவாசி உயர்வை அடுத்து ஆளும் ஆட்சிகள் கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் – மக்களை படம் பிடித்த சிங்கள உளவுத்துறை -படங்கள் உள்ளே
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் – மக்களை படம் பிடித்த சிங்கள உளவுத்துறை
இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இலங்கை இனவாத அரசின் அப்பாவி பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் ,வன்முறைகளை சுட்டி காட்டி,
குற்றங்களை உடனடியாக நிறுத்த கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தினை இன்று செவ்வாய்
கிழமை (08:03:2022) மதியம் 01 மணியளவில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைதியான முறையில் கோவிட் விதிகளை பின்பற்றி பிரித்தானிய சட்டவிதிகளுக்கமைய ஏற்பாடு செய்திருந்தனர் .இப்போராட்டத்தில்
.தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் இலங்கை அரசாங்கத்தை நோக்கி
இலங்கையில் இன்றும் எமது கண்களை போன்று பாதுகாப்பாகவும் ,மரியாதையோடும் நடத்த படவேண்டிய தமிழ் பெண்கள் பல சொல்லமுடியாத பல இன்னல்களையும்
,துன்பங்களையும் சிங்களஅரசாலும் ,சிங்கள இராணுவ படைகளாலும் அனுபவித்தவண்ணம் உள்ளர்கள் .அவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களையும் ,சித்திரைவதைகளும் உடனடியாக நிறுத்த வலியுறித்தி கோஷங்களாக
முழங்கினர்.இதில் கலந்து கொண்ட அனைவரும் வன்முறைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பையும் ,பெண்களுக்கான தங்கள் ஆதரவையும் ஆணித்தரமாக தெரிவித்தனர்.இதில் கோஷங்களாக
*தமிழ்ப் பெண்களைக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுங்கள்
*தமிழ் பெண்களை மதித்தல்
*தமிழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள்
*எங்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் தேவை
என தங்கள் கோரிக்கைகளை மொழிந்தனர்









ரசிய இராணுவ ஜெனரல் குண்டு தாக்குதலில் படுகொலை
ரசிய இராணுவ ஜெனரல் குண்டு தாக்குதலில் படுகொலை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதலில் சிக்கி இரண்டு இராணுவ ஜெனரல்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது
உக்கிரேன் கூட்டு நாடுகளின் ஆயுத வழங்குதல் தாக்குதலில் ரசிய படைகள் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன
அதனாலேயே இந்த முக்கிய இரண்டு இராணுவ தாக்குதல் தளபதிகளாக விளங்கிய ஜெனரல்களை இழந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது







