Posted in சினிமா

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது தலைவி

படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கங்கனா

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல முன்னணி நடிகர்கள்

, நடிகைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    Posted in சினிமா

    ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிய பிரபல நடிகை

    ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிய பிரபல நடிகை

    ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல நடிகை, தனது அறக்கட்டளையின் மூலம் உதவி உள்ளார்.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு

    மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின்

    பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார். தனது அறக்கட்டளையின் மூலம் ஏழை மக்களுக்கு நேற்று மும்பையில் அவர் உணவு வழங்கினார்.

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    இது குறித்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியிருப்பதாவது: “பசித்தவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் அமைதி தொடங்குகிறது என்று அன்னை தெரசா கூறினார்.

    அதன்படி இந்த கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை நான் கவுரமாக கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்

      Posted in சினிமா

      மக்களை காப்பாத்துங்க முதல்வரே – மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்

      மக்களை காப்பாத்துங்க முதல்வரே – மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள்

      கொரோனா காலத்திலிருந்து தமிழக மக்களை காப்பாற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

      தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்

      கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார். 1996-ல் திமுக 172 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது.

      அதன் பின் 25 ஆண்டுகளுக்கு பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக, தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது, ஸ்டாலின்

      அவர்களுடைய இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, தாத்தாவிற்கு ஏற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.

      சிவக்குமார்

      முதல்வர் அவர்களுக்கு முதலிலே எனது வேண்டுகோள். கொரோனா காலத்திலிருந்து நம் மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும், காலையிலிருந்து மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

      ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா, ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தா, வெண்டிலேட்டர் இல்லை. இந்த காலத்திலிருந்து மக்களை காப்பாத்துங்க. மேலும் தமிழ் மொழி,

      விவசாயம், உழவர் சந்தை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

        Posted in சினிமா

        ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

        ஆண்ட்ரியாவுக்கு கொரோனா

        தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர்.

        நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

        இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

        ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

        இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: “

        கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி.

        தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்

          Posted in சினிமா

          இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் – சமந்தா

          இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் – சமந்தா

          தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சமீபத்திய பேட்டியில் கொரோனா குறித்து கூறியதாவது:

          “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும்.

          கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள்.

          அந்த வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

          கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது.

          இதைச் செய்தால் கொரோனாவை ஜெயித்து விடலாம் – சமந்தா

          கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி

          கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் கொரோனாவை ஜெயித்து விடலாம். நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். அதை தாண்டி வருவோம்’’ என்றார்.

            Posted in சினிமா

            அக்‌ஷரா ஹாசனின் கவர்ச்சி

            அக்‌ஷரா ஹாசனின் கவர்ச்சி

            கமலின் 2வது மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனின் புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.

            அக்‌ஷரா ஹாசனின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்
            அக்ஷரா ஹாசன்


            கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் என்னும் இந்தி படத்தில் அறிமுகமானார்.

            தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். தந்தை கமலுக்காக தேர்தலில் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்டார்.

            அக்ஷரா ஹாசன்

            இந்நிலையில் அக்‌ஷரா ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை

            வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

              Posted in சினிமா

              தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்

              தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்

              கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா

              ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த

              நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

              அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

              பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்

                Posted in சினிமா

                திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்

                திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்

                தமிழ் சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷாவின் திருமணம் குறித்த தகவலை பிரபல நடிகை வெளியிட்டுள்ளார்.

                திரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை வெளியிட்ட தகவல்
                திரிஷா


                சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.

                இவர் மே 4-ந்தேதியான நேற்று தனது 38ஆவது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியிருக்கிறார். அவருக்கு அவரது சினிமா நண்பர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள்.

                இந்நிலையில் திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ள நடிகை சார்மி, திரிஷாவின் திருமணம் குறித்தும்

                ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், திரிஷா பேச்சுலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

                திரிஷா சார்மி

                இதன்மூலம் திரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை அவர்

                மறைமுகமாக இப்படி தெரிவித்துள்ளார். நடிகை சார்மியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

                Posted in சினிமா

                காதல் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? – நடிகை ரகுல் பிரீத் சிங்

                காதல் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? – நடிகை ரகுல் பிரீத் சிங்

                நடிகை ரகுல் பிரீத் சிங், தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

                காதல் விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? – நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம்
                ரகுல் பிரீத் சிங்


                தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2,

                சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவதும் உண்டு.

                இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், தன்னைப்பற்றி காதல் கிசுகிசுக்கள் தற்போது வராததால் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக

                இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களுடன் இணைத்து என்னைப்பற்றி பலதரப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வெளியாகின. அவை அனைத்துமே பொய்யான செய்திகள் என்பதால் அவற்றுக்கு நான் பதில் கொடுக்கவில்லை.

                ரகுல் பிரீத் சிங்

                அந்த சமயத்தில் நான் அமைதியாக இருந்ததால், ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் மாயமாகி விட்டன. இப்போது என்னைப் பற்றி காதல் செய்திகள் வருவதில்லை.

                இது நிம்மதியை தருவதாக தெரிவித்துள்ள ரகுல் பிரீத் சிங், இதுவரை தான் யாருடனும் காதலில் விழுந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

                  Posted in சினிமா

                  கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி

                  கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி

                  தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

                  தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை, கிண்டலடித்து பதிவிட்டு வந்தனர். இதற்கு நடிகை பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

                  நெட்டிசன் ஒருவர், “மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு தான” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், “பெரிய சிஐடி… ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன

                  பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

                  கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி

                  மற்றொருவர், “மேடம் இன்னும் 5 வருஷத்துல சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் பட வாய்ப்பு பெறுவதற்காக தான் இப்படி டுவிட் செய்து கொண்டிருக்கிறார், எனக் குறிப்பிட்டிருந்தார்.

                  இதற்கு பதிலளித்த பிரியா, “ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம்

                  தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி டுவிட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு யுக்தி இல்ல” என பதிலடி கொடுத்திருக்கிறார். பிரியா பவானி சங்கரின் இந்த டுவிட்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன.

                    Posted in சினிமா

                    தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா

                    தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா

                    இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா தீபிகா படுகோனேவின் தந்தை, தாய், தங்கை என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                    தீபிகா படுகோனேவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா
                    குடும்பத்தினருடன் தீபிகா படுகோனே


                    இந்தி திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா

                    படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள். பிரகாஷ் படுகோனே பெங்களூருவில் வசித்து வருகிறார்.

                    பிரகாஷ் படுகோனே தற்போது கொரானோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

                    பெற்று வருகிறார். மேலும் பிரகாஷ் அவரது மனைவி உஜ்ஜாலா, இளைய மகள் அனிஷா ஆகியோருக்கும் பரிசோதனை செய்ததில் கொரானோ தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது.

                    தந்தையுடன் தீபிகா படுகோனே

                    அவர்கள் தங்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால், பிரகாஷுக்கு

                    உடல் வெப்பநிலை குறையாத காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

                      Posted in சினிமா

                      நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா

                      நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா

                      தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

                      தற்போது தென்னிந்திய மொழிகளில், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. இதுவரை அவர் தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி உள்ளன.

                      சமீபத்தில் அல்லு அர்ஜுடன் நடித்த தெலுங்கு படமும் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே.

                      பூஜா ஹெக்டே, நயன்தாரா

                      இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கினாராம்.

                      தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 65’ படம், தெலுங்கில் 2

                      படங்கள் என்று 5 படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

                        Posted in சினிமா

                        சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை

                        சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை

                        தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.

                        சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
                        சித்ரா


                        பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

                        அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

                        சித்ரா

                        இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர் தங்களின் போலீஸ் குடியிருப்பில்

                        அவரது பிறந்த நாளை கொண்டாடினர். சித்ரா போட்டோவுக்கு முன்னால் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்தும் கேக் வெட்டியும் பிறந்த நாளை கொண்டாடினர்.

                        சித்ரா

                        அப்போது சித்ராவின் தந்தை சித்ராவின் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்டு கலங்கினார். காண்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

                          Posted in சினிமா

                          தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதி.

                          தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதி.

                          கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

                          தேர்தலில் தோற்றாலும்… எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்- சுருதிஹாசன்
                          கமல்ஹாசன், சுருதிஹாசன்


                          தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார்.

                          கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

                          சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தோல்வி அடைந்தாலும், அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்துள்ளார் என்று அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

                          சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு

                          இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் வைத்திருக்கும் (கட்சியின் சின்னம்) புகைப்படத்தை

                          வெளியிட்டு, அதில் ‘என்னுடைய தந்தையை நினைத்து எப்போதும் நான் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளா

                            Posted in சினிமா

                            கருக்கலைப்பு செய்தநடிகை இலியானா

                            கருக்கலைப்பு செய்தநடிகை இலியானா

                            நடிகை இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

                            கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா
                            இலியானா


                            தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக

                            இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர்.

                            இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும்

                            கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

                            இந்நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

                            இலியானா

                            இதற்கு விளக்கம் அளித்து நடிகை இலியானா கூறியதாவது: “நான் கர்ப்பமாக இருந்தேன். கருக்கலைப்பு செய்தேன் என்று வெளியான தகவல்கள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

                            நான் தற்கொலைக்கு முயன்று பிறகு உயிர்பிழைத்ததாக எனது வேலைக்காரி சொன்னார் என்றும்

                            தகவல் வெளியானது. எனக்கு வேலைக்காரியே இல்லை. நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவும் இல்லை. இப்போது உயிருடன்தான் இருக்கிறேன்” என்றார்

                              Posted in சினிமா

                              மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்

                              மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்

                              கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை பியாவின் சகோதரர் மரணமடைந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள் டுவிட்டரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்

                              கொரோனா பாதிப்பு… மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்
                              பியா பாஜ்பாய்


                              ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து அஜித்தின் ஏகன், வெங்கட்பிரபு

                              இயக்கிய கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

                              கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர்

                              இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

                              பியா பாஜ்பாயின் டுவிட்டர் பதிவு

                              ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது.

                              சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. அவருக்கு ரசிகர்கள் டுவிட்டரில் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

                                Posted in சினிமா

                                லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா

                                லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா

                                பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கொரோனா தடுப்பூசிக்கு நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார்.

                                லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா
                                பிரியங்கா சோப்ரா


                                கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. .

                                ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

                                கொரோனாவின் 2வது அலையை எதிர்த்து போராட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஒரு கோடி ரூபாயை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கினார்.

                                இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார். கிவ் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து இந்த பணியில் இறங்கி உள்ளார்.

                                பிரியங்கா சோப்ரா

                                கடந்த 24 மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி குவிந்துள்ளது. இந்த பணம் பெங்களூர் மற்றும் மும்பைக்கு ஆக்சிஜன் வாங்க பயன்படுத்தப்படும் என்று பிரியங்கா குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது.

                                  Posted in சினிமா

                                  ரம்யா க்கு அறுவை சிகிச்சை

                                  ரம்யா க்கு அறுவை சிகிச்சை

                                  குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

                                  ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை
                                  ரம்யா பாண்டியன்


                                  ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

                                  இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

                                  ரம்யா பாண்டியன் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
                                  ரம்யா பாண்டியன்

                                  இதனை அடுத்து ரம்யா பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள்

                                  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                    Posted in சினிமா

                                    வயது குறைவான வரை திருமணம் செய்யும் அனுஷ்கா

                                    வயது குறைவான வரை திருமணம் செய்யும் அனுஷ்கா

                                    தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது.

                                    வயது குறைவான வரை திருமணம் செய்யும் அனுஷ்கா… தீயாய் பரவும் தகவல்
                                    அனுஷ்கா


                                    ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.

                                    பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல்

                                    பரவியது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ்

                                    கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார்.

                                    அனுஷ்கா

                                    சமீபத்தில் அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது எனக்கு தெரியவில்லை. திருமணம் முடிவானதும் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்றார்.

                                    இந்த நிலையில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும்

                                    தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அனுஷ்கா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

                                      Posted in சினிமா

                                      கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி

                                      கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி

                                      கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு

                                      சிகிச்சை பெற்று வந்த நடிகை சமீரா ரெட்டி குணமடைந்துள்ளார்.

                                      கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
                                      சமீரா ரெட்டி


                                      வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை,

                                      அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர

                                      மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

                                      சமீரா ரெட்டி

                                      சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்

                                      படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமீரா ரெட்டி, தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.