Posted in இலங்கை செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இன்று முதல் மீளத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக

மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.

மருத்துவ பீடங்களின் இறுதி வருட பரீட்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. கடந்த காலங்களில் இணையத் தளத்தைப்

பயன்படுத்தி மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. தடைகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் இணையத் தள கற்கைகளில்

பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார். விடுதிகளில் இதுவரை ஓர் அறையில் ஒருவர் தங்குவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர் அந்த வரையறையில்லாமல் வழமைபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என, களனி

பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, விடுதி வசதியை பெற்றுக்கொண்டுள்ள மாணவர்கள் நாளை

மாலை 5 மணிக்கு முன்னராக விடுதிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் கூட்டமைப்புக்கு எதிராக வெற்றி பெற்றவர்களை – பல படுத்துவதில் கோட்டா தீவிரம்

      யாழில் கூட்டமைப்புக்கு எதிராக வெற்றி பெற்றவர்களை – பல படுத்துவதில் கோட்டா தீவிரம்

      இலங்கையில் நடந்து முடிந்த ஒன்பதவது பாராளுமன்ற தேர்தல் பெரும் சல சலப்புக்களை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது

      தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க

      பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் எதை செய்தாலும் தமிழ் மக்கள்

      தம்மை ஏற்று கொள்வார்கள் என கருத்தியது ,ஆனால் இம்முறை அவர்களது எண்ண கருவில் பலத்த அடி வீழ்ந்துள்ளது

      இதுவே கூட்டமைப்பு தோற்று போனதும் ,அதற்கு அதன் தலைவர் சம்பந்தர்

      மற்றும் சுமந்திரன் தேசிய இழிவு பேச்சுக்கள் முக்கிய காரணமாக அமைந்தன

      இதனாலேயே யாழில் ஐந்து ஆசனங்களை பறிகொடுக்கும் நிலைக்கு

      கூட்டமைப்பு சென்றது ,மேலும் புலிகளினால் உருவாக்க பட்ட கட்சியை இல்லாது அழிக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட ,

      அதற்கு ஒப்புதல் வாக்கு மூலாம் அளிப்பது போன்று இம்முறை புதிதாக

      வென்ற அணிகளை பலம்பெற செய்து வெல்ல வைக்கும் அனைத்து நகர்வுகளில் ஆளும் கோட்டா ,மகிந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது

      இவர்கள் மூலாம் அபிவிருத்தி பணிகளை அவர்கள் முன்னெடுத்து செல்ல

      தயராகி வருகின்றனர் ,இது ஒரு முறையில் சரியான நகர்வும் என கூறலாம் ,மக்கள் அதனை வரவேற்கின்றனர்

          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 494 பேரில் சிலருக்கு கொரனோ

          வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 494 பேரில் சிலருக்கு கொரனோ

          இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்த சுமார் 496 பேர் இலங்கை வந்தடைந்தனர்

          இலங்கை எயார்லைங்க நிறுவனத்தின் விமானம் ஊடாக ஓமான் ,கட்டர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் பணி புரிந்தவர்களே இவ்விதம் இலங்கை வந்தனர்

          இவ்வாறு வந்தவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர்

          இதில் மூவர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் இரகசியாமாக கொலை செய்ய படும் முக்கிய புள்ளிகள்

              இலங்கையில் இரகசியாமாக கொலை செய்ய படும் முக்கிய புள்ளிகள்

              இலங்கையில் சகோதர்கள் ஆட்சியில் தமிழர்கள் சத்தமின்றி படுகொலை செய்ய படும் நிகழ்வுகள் அதிகரித்து செல்கின்றன

              ஆளும் அரச ஆட்சியை சேர்ந்த விசேட நிழல் டிவிஷன் ஒன்றினால் இவர்கள் அனைவரும் விபத்து மற்றும் ,தற்கொலை என்ற

              போர்வையில் மிக இரகசிமான முறையில் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

              தூக்கில் தொங்குதல் ,நீர் அருவிகளில் சடலங்கள் மிதத்தல் ,மற்றும் விபத்து என்பனவற்றின் ஊடாக இந்த படுகொலைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

              கடந்த 12 வாரங்களில் மட்டும் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட நபர்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


              இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவித்தடத்தில் ஆளும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக உள்ளதும் ,அவர்கள்

              முக்கிய நபர்களுக்கு எதிராக செயல் படுவதில் இருந்தவர்கள் என்பதாக உள்ளது

              அவ்வாறனவர்கள் இவ்விதம் ஓசை படாமல் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,இந்த விடையத்தை மருத்துவ மனைக்குள் இருக்கும்

              முக்கிய பிரதே பரிசோதனை செய்யும் சிலர் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது

              எனினும் இதனைவழமை போன்று சிங்கள அரசு மறுத்தாலும் ஆச்சர்ய படுவதற்கு ஏதும் இல்லை

              Posted in இலங்கை செய்திகள்

              அரசியலமைப்பு சீர்த்திருத்தம் செப்டெம்பர் மாதத்தில்

              அரசியலமைப்பு சீர்த்திருத்தம் செப்டெம்பர் மாதத்தில்

              நாட்டிற்கு நேயமுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர்

              மாதம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

              உத்தேச அரசியலமைப்பை செப்டெம்பர் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக

              அவர் கூறினார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்

              ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

              இதேவேளை அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திலுள்ள பொருத்தமற்ற

              விடயங்களை திருத்தியமைத்து 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது

              தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி

              சட்டத்தரணி அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆடை ஏற்றுமதியை மீண்டும் வழமைக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை.

                  ஆடை ஏற்றுமதியை மீண்டும் வழமைக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை.

                  கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த சுற்றுலா ஏற்றுமதி மற்றும் நிர்மாண நிலையங்களை முறையாக

                  முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா தொழிற்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

                  இலங்கை முதலீட்டு சபையின் கட்டுநாயக்க வலய அலுவலகத்தை பார்வையிட்ட பொழுதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

                  தடைப்பட்டுள்ள ஆடை ஏற்றுமதியை முறையாக முன்னெடுப்பது தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை

                      அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை

                      தனியார் கட்டிடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டிடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய

                      ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

                      இதன் பிரகாரம், அமைச்சர்களும், அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார்

                      கட்டிடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டிடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்

                          சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
                          Posted in இலங்கை செய்திகள்

                          50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை

                          50 கிலோ மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும் – மக்களுக்கு எச்சரிக்கை

                          நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல்

                          திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          எனினும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்

                          மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள்

                          சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                          வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய

                          மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வரை

                          அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. என்றும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              நல்லூர் ஆலயத்திற்கு மக்கள் செல்ல தடை – கோட்டாவின் ஆட்டம் ஆரம்பம்

                              நல்லூர் ஆலயத்திற்கு மக்கள் செல்ல தடை – கோட்டாவின் ஆட்டம் ஆரம்பம்

                              வடக்கில் தமிழர்களின் மிக புகழ் பெற்ற வணக்க தளமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிகு நல்லூர் கந்தன் திருவிழா நடை பெறவுள்ளது

                              இந்த திருவிழாவில் இம்முறை மக்கள் ஒன்று திரண்டு கலந்து கொள்ள தடை விதிக்க பட்டுள்ளது


                              அத்து மீறி நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அறிவித்துள்ளனர்

                              இதனால் இம்முறை நல்லூர் கந்தன் சோகை இழந்து காணப்படுவதுடன் ,அதன் பண வரவும் வீழ்ச்சியடையும் என தெரிவிக்க படுகிறது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  தலைவர் பதவியை விட்டு கொடுக்க அடம் பிடிக்கும் ரணில்

                                  தலைவர் பதவியை விட்டு கொடுக்க அடம் பிடிக்கும் ரணில்

                                  இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியை சந்தித்தது ,


                                  இந்த நிலையில் அதன் கட்சி கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது

                                  இதன் பொழுது புதிய தலைவர் ஒருவர் தேர்த்தெடுக்க படுவார் என எதிர் பார்க்கக் பட்டது

                                  ஆனாலும் தனது பதவியை விட்டு கொடுக்க மறுத்து வருகின்றார் ரணில்

                                  விக்கிரமசிங்கா ,ஒருமுறை இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக வந்து

                                  விட வேண்டும் என ரணில் துடிக்கின்றார் ,ஆனால் அதுவோ அவரது குள்ள

                                  நரித்தனத்தால் மக்கள் செல்வாக்கு இழந்து பல்லு பிடுங்கிய

                                  பாம்பாக ரணில் மாற்றம் பெற்றுள்ளார்

                                  இன்று நடந்த கூட்டத்தில் முடிவுகள் ஏதுமின்றி வழமை போல கூட்டம் கலைந்து சென்றுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் கொரனோ தொற்று எணிக்கை 2,890 ஆக உயர்வு

                                  இலங்கையில் கொரனோ தொற்று எணிக்கை 2,890 ஆக உயர்வு

                                  இலங்கையில் இதுவரை கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை
                                  சுமார் 2,890 ஆக உயர்ந்துள்ளது

                                  மேலும் வரும் காலங்களில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                                  தேர்தலுக்காக இதன் பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து அறிவித்த

                                  அரசு அதன் பின்னர் அதன் பாதிப்பை தற்போது திடீரென அதிகரித்து அறிவித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      சஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது

                                      சஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது

                                      தேசிய பட்டியல் தொடர்பில் மனோ கணேசன்
                                      தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும்தான் எங்கள்

                                      இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும்.

                                      இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருக்கும் சஜித்

                                      பிரமதாசவை, சிங்கள மக்கள் மத்தியில், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராக காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணை போக முடியாது.

                                      சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள

                                      மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படி

                                      சொல்லியே ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரசாங்க கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன. ஆகவே

                                      சஜித் பிரேமதாசவையும், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும், பலவீனமான தலைவராகவும் சித்தரித்து,

                                      ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசாங்கம் மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இவற்றை நாம் உணர்ந்தோம்.

                                      இந்த தொலைநோக்கு பார்வையினாலேயே, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வு

                                      தன்மையுடன் முடிவெடுத்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்க கூடாது என நாம் முடிவு செய்தோம். இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து

                                      இனங்களையும் அணைத்து செல்லும் ஒரேயொரு சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவையும், ரணில்

                                      விக்கிரமசிங்கவை போன்று, சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமானவராக காட்டும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் துணை போக முடியாது என தீர்மானித்தோம்.

                                      ஆகவே இது தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு நாம் வழங்கினோம். இந்த நிதானமான பொறுப்பு வாய்ந்த தொலைநோக்கு கொண்ட எமது நிலைபாட்டை எமது

                                      வாக்காளர்கள், சிவில், சமூக பிரதிநிதிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை தலைமை பிரதானிகள், தமிழ் சமூக ஊடக முன்னோடிகள்

                                      உள்ளிட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்துக்கொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன் தெரிவு

                                      செய்யப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                      இந்த முன்னணி விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                                      தமது முன்னாள் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையின் பிடிவாதம் காரணமாக , புதிய ஒரு கட்சியை அமைத்த, சில

                                      நாட்களுக்கு உள்ளேயே, தேர்தலை சந்திக்க வேண்டி ஏற்பட்டதால், மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற கூடிய பலரை

                                      கொழும்பில் கட்சி தலைமையகத்தில் தங்கியிருந்து தேர்தல் பணி செய்யுமாறு தாம் பணித்துள்ளதாக, சஜித் பிரேமதாச தமிழ்,

                                      முஸ்லிம் பங்காளி கட்சிகளிடமும், ஜாதிக ஹெல உறுமயவிடமும் விளக்கி கூறினார். நாம் எதிர்பார்த்த பத்து தேசிய பட்டியல்

                                      கிடைத்து இருக்குமாயின் இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்காது எனவும் கூறியிருந்தார்.

                                      நமது கட்சிக்கு உரிய தேசிய பட்டியலை தேடி பெறுவது என்பதில் நாம் மிகவும் அக்கறையுடன் இருந்தோம். ஆகவே நாம் அமைதியாக இருக்கவில்லை. அது தொடர்பில் எமது குரலை நாம் உரக்க

                                      எழுப்பினோம். எனினும் முடிவு எடுக்கும் போது நாம் நிதானமாக முடிவுகளை எடுத்தோம். எமது தேசிய கூட்டணியை

                                      உடைத்துக்கொண்டு நாம் சென்றால் அரசாங்கம் மகிழ்வடையும். அதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஐக்கிய மக்கள் சக்தி என்ற

                                      எமது தேசிய கூட்டணி உடையுமானால், அது இரண்டு நாட்களுக்கு தலைப்பு செய்திகளாக இருக்கும். பின், இந்நாட்டில் வாழும் தமிழ்

                                      பேசும் மக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே தேசிய நம்பிக்கையும் இழந்து, நாம் மேலும் பலவீனமடைவோம்.

                                      ஏற்கனவே வடக்கில், கிழக்கில் இந்த அரசாங்கம் தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனடைய செய்துள்ளது. அங்கே ஊடுருவி உள்ளது.

                                      இந்நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து நாம் உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற இந்த தேசிய

                                      கூட்டணியையும் நாம் சிதைக்கவும், பலவீனமடையமும் விட முடியாது. ஆகவேதான் எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளேயும், தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் கலந்து பேசி இந்த முடிவுகளை எடுத்தோம்.

                                      தேசிய பட்டியல் என்பது வேறு. நமது மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் எம்பீக்கள் தெரிவு செய்யப்படுவது என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.

                                      இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் இன்னமும் சற்று அதிகமாக சிந்தித்து

                                      வாக்களித்திருந்தால், கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் அதிகமாக வாக்களித்து இருந்தால், இந்த மாவட்டங்களில் தமிழ்

                                      எம்பீக்கள் மேலதிகமாக உருவாக வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், மக்கள் வாக்களிக்காமல் தவறு செய்து விட்டார்கள்.

                                      இரத்தினபுரியில் மொத்த தமிழ் வாக்காளர் தொகை சுமார் 75 ஆயிரம். ஆனால், எமது வேட்பாளர் சந்திரகுமாருக்கு சுமார் 36

                                      ஆயிரம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள். இன்னமும் சுமார் 9 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்திருந்தால், சந்திரகுமார் அங்கே தமிழ் எம்பியாக உருவாகி இருப்பார். கேகாலை மாவட்டத்தில்

                                      மொத்த தமிழ் வாக்கு 40 ஆயிரம். எமது வேட்பாளர் பரணீதரன், சுமார் 23 ஆயிரம் வாக்குகளை பெற்றார். அங்கே இன்னமும் 5

                                      ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தால் அவர் அங்கே தமிழ் எம்பீயாக வெற்றி பெற்று இருப்பார்.

                                      இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது தொலைபேசி சின்னத்துக்கு எதிரான அணிகளில் போட்டியிட்ட

                                      தமிழ் வேட்பாளர்கள் என்ற போலி நபர்களில் ஒருவர்கூட அவ்வந்த மாவட்டங்களில், இருநூறு (200) விருப்பு வாக்குகள் கூட

                                      பெறவில்லை. பணம் வாக்கிக்கொண்டு எம்மை அழிக்க வேண்டும் என கெட்ட எண்ணத்தோடு மட்டும் செயற்பட்ட இவர்கள்

                                      படுதோல்வி அடைந்துள்ளார்கள். ஆனாலும், தேர்தல் காலங்களில் இவர்கள் செய்த பொய், புரட்டு போலி பிரசாரங்கள் மக்களை அதைரியப்படுத்தின. ஆகவே இவர்கள்தான், இரத்தினபுரி,

                                      கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறாமைக்கு மூலக்காரணங்கள் ஆகும்.

                                      அதேவேளையில், தேர்தல் காலங்களில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, எமக்கு ஆதரவாக ஒரு ஊடகங்களில் எழுதாத, சமூக ஊடகங்களில் பதிவு போடாத, தேர்தல் நிதி இல்லாமல் நாம்

                                      பட்ட எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, எமக்கு எந்தவித உதவியும் செய்யாத, அதையும் மீறி சென்று எமக்கு உபத்திரவம்

                                      செய்வதற்காக, எமக்கு எதிரான அணி அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, போலி

                                      வேட்பாளார்களாக போட்டியிட்டு, எமக்கு எதிராக பொய் பிரசாரங்களை செய்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த,

                                      சோரம்போன அரசியல் வியாபாரிகள், இன்று வெட்கமில்லாமல் “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை

                                      எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் எமக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

                                      கூக்குரலிடுகிறார்கள். நிறுவனரீதியான பாரம்பரியமற்ற, சில சுயாதீன ஊடகங்களிலும் இத்தகைய பல போலிகள் ஒளிந்து

                                      தேர்தல் கால வியாபாரம் செய்து பணம் தேடியுள்ளார்கள். இத்தகைய சோரம்போன போலி நபர்களுக்கு நாம் எமது

                                      வெற்றிகளின் மூலம் மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுத்துள்ளோம். இனியும் இத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      போலீஸ் இராணுவம் சுற்றிவளைப்பு – 38 பேர் கைது

                                      போலீஸ் இராணுவம் சுற்றிவளைப்பு – 38 பேர் கைது

                                      இலங்கை மோதன உயன குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் இராணுவத்தினர்

                                      மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில்
                                      அறுபத்தி ஒரு பேர் கைது செய்ய பட்டுளள்னர்

                                      இவர்கள் அனைவரும் போவதிவஸ்து பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது

                                      கைதானவர்கள் உரிய முறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஓகஸ்ட் 20ஆம் திகதி

                                          9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஓகஸ்ட் 20ஆம் திகதி

                                          புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 175 பேர் இதுவரை ஒன்லைன் மூலம் பாராளுமன்றத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

                                          இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

                                          அன்றை தினம் பிற்பகல் 3 மணிக்கு முதலாவது அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின்

                                          கொள்கைக் பிரகடன உரையை அவர் நிகழ்த்தவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.

                                          20 ஆம் திகதி காலை 9.30இற்கு புதிய பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து

                                          பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

                                          சத்தியப்பிரமாண கொள்கையின் பின்னர் பிரதி சபாநாயகர் குழுக்களின் பிரதித் தலைவரகள்; தெரிவு இடம்பெறவுள்ளது.

                                          அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

                                          சபை அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி வருகைதரும்போது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர்

                                          நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராhளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள்.

                                          இதன்போது ஜனாதிபதி தலைமையில் கொடி ஏற்றிவைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. படைக்கலசேவிதர், பிரதிப்

                                          படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட

                                          குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி

                                          அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார் என பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              கொரனோவால் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் விடுவிப்பு.

                                              கொரனோவால் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் விடுவிப்பு.

                                              டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில்

                                              தனிமைப்படுத்தப்பட்டிருந்த 154 பேர் இன்று (15) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

                                              அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், அவர்களது சொந்த இடங்களான கம்பஹா, கொழும்பு,

                                              கண்டி, கேகாலை, திருகோணமலை, களுத்துறை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

                                              குறித்த பயணிகளிற்கான பி.சீ.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று

                                              பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

                                              கொரோனா நோய் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

                                              அந்த வகையில் கடந்த 3ஆம் திகதி டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு

                                              அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விற்பனை செய்யப்படவில்லை – அரசு அறிவிப்பு

                                              ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விற்பனை செய்யப்படவில்லை – அரசு அறிவிப்பு

                                              நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை விற்பனை

                                              செய்ய முயன்றாலும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான

                                              செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்று அமைச்சர் பிரசன்ன

                                              ரணதுங்க தெரிவித்துள்ளார்.

                                              நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

                                              ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்கும் நிலையை

                                              மாற்றியமைப்பதே சமகால அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் கூறினார்.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  லஞ்ச ஊழலில் ஈடுபட்ட 15 சிறை அதிகாரிகள் பணி நீக்கம்

                                                  லஞ்ச ஊழலில் ஈடுபட்ட 15 சிறை அதிகாரிகள் பணி நீக்கம்

                                                  கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை பல்வேறு ஊழல்

                                                  நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அதிகாரிகள் பணி நீக்கம்

                                                  செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                                                  கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

                                                  மேலும் குறித்த 15 சிறை அதிகாரிகளும் மஹர, மெகசின், பூஸ்ஸ, கொழும்பு,

                                                  வெலிகடா, காலி, நீர்கொழும்பு, வாரியபொல மற்றும் அங்குனுகொல

                                                  பெலஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                  இதேவேளை, பூஸ்ஸ சிறைச்சாலையை சேர்ந்த 10 அதிகாரிகளும் நீர்கொழும்பு

                                                  சிறைச்சாலையை சேர்ந்த 9 அதிகாரிகளும் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை- சந்திரிக்கா

                                                      ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை- சந்திரிக்கா

                                                      ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

                                                      ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                                                      இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

                                                      எங்கே என நான் தேடி வருகிறேன். கடந்த ஆண்டு சிறிசேன இதை அழித்துவிட்டார்.

                                                      ராஜபக்ஷவின் அரசியலை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அவர் சக்திமிக்க தலைவராவார்.

                                                      ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எண்ணி வருத்தம் அடைகின்றேன். அழுவதா

                                                      சிரிப்பதா என்று தெரியவில்லை. சிறிசேன மோசமான முறையில் கட்சியை

                                                      அழித்துவிட்டார். இப்போது கேவலமான முறையில் சில அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

                                                      எமது கட்சியின் தலைவருக்கு எதுவும் இல்லை. செயலாளருக்கு பத்திக்

                                                      அமைச்சு அதன்கீழ் நிறுவனங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை- அரசியல்வாதி கைது

                                                          பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை- அரசியல்வாதி கைது

                                                          திருகோணமலை பன்குளம் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் வைத்தியருக்கு

                                                          பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                                          இச்சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

                                                          இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எனவும் தற்பொழுது

                                                          திருகோணமலை சோனகவாடி பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                                          சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

                                                          மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரியாய் சந்தியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் தனக்கு பாலியல்

                                                          தொந்தரவு கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                                          இம்முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை ,அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

                                                          குறித்த சந்தேகநபரை இன்று (14) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம்

                                                          தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                          எவ்வாறாயினும், குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது

                                                          செய்யப்பட்டதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தூர இடங்களில் இருந்து வருகை தந்த வைத்தியர்களினால் இடமாற்றம்

                                                          பெறுவதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          150,000 வேலைவாய்ப்பு – கோட்டா அதிரடி உத்தரவு

                                                          150,000 வேலைவாய்ப்பு – கோட்டா அதிரடி உத்தரவு

                                                          பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

                                                          ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

                                                          அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (16) ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வௌியிடப்படவுள்ளது.

                                                          தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமக்கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல்

                                                          ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

                                                          நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி தனக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                          தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர், பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வினவ முடியும்.

                                                          தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர்

                                                          மாதம் 01 ஆம் திகதி முதல் அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியினால் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.